India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்கழி மாத ராசி பலன்கள் 2021: எந்த ராசிக்காரர்களுக்கு யோகங்கள் தேடி வரும்

Google Oneindia Tamil News

சென்னை: மார்கழி மாதம் தனுர் மாதம். தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். இந்த மாதம் மூன்று கிரகங்கள் இடப்பெயர்ச்சி அடைகின்றன. புதன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மகர ராசியில் சனியோடு இருக்கும் சுக்கிரன் வக்கிரம் அடைகிறார். 15ஆம் தேதி தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். நவகிரகங்களின் கூட்டணியால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

நவகிரகங்களில் அரசன் ஆகிய சூரியன், குருகுலவாசம் செய்யும் நேரம் என்பதால் அந்நாளில் அரசர்கள் உட்பட சத்திரியர்கள் யாரும் போர்த் தொழிலில் ஈடுபட மாட்டார்கள். பக்தி மார்க்கத்திற்கு வழிகாட்டும் மாதமாக மார்கழியைக் கருதினார்கள். பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபட வேண்டிய காலமாக மார்கழியைக் கொண்டிருந்தார்கள் இந்த ஒரு மாதமாவது இறைவனின் மேல் நமது முழு சிந்தனையையும் செலுத்த வேண்டும் என்ற காரணத்தினால்தான் மார்கழியில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகளைத் தவிர்த்தார்கள் நம் முன்னோர்கள்.

'மாதங்களில் நான் மார்கழி' என்று கீதையில் கண்ணன் சொன்னது பக்தி மார்க்கத்தால் என்னை அடைய முடியும் என்பதை சுட்டிக்காட்டவே என்பதை நாம் உணர வேண்டும். வீடுபேறு எனும் மோட்சத்தினை அடைய உதவும் மாதம் இது. பகவான் கண்ணனை கணவனாக அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டாள் விரதமிருந்த மாதம் இது. அதே போன்று ராம நாம ஜபத்தினையே தனது உயிராகக் கொண்டிருக்கும் ஆஞ்சநேயர் பிறந்ததும் மார்கழி மாத அமாவாசை நாளில்தான். மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி கொண்டாடுகிறோம். வைணவர்கள் மட்டுமின்றி இந்துக்கள் எல்லோருமே விரதம் இருக்கும் நாள் வைகுண்ட ஏகாதசி. அன்றைய தினத்தில் பெருமாளை தரிசிப்பவர்கள் சொர்க்கத்தை அடைவர் என்பது நம்பிக்கை. இதே போல மார்கழி பவுர்ணமியில் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனம் சிவ ஆலயங்களில் நடைபெறுகிறது. பக்தி சிந்தனைக்கு உரிய உயரிய மாதமான பெருமை மிகு மார்கழி மாதத்தில் இந்த நான்கு ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

கிரகங்களின் சஞ்சாரம்

சூரியன் - தனுசு ராசி

செவ்வாய் - விருச்சிக ராசி

புதன் - தனுசு 14ஆம் தேதி மகர ராசி

குரு - கும்ப ராசி

சுக்கிரன் - மகரம் வக்கிர கதி தனுசு ராசி

சனி - மகரம்

ராகு - ரிஷபம்

கேது - விருச்சிகம்

 மகத்துவம் நிறைந்த மார்கழி மாதம் - பாவை நோன்பிருந்தால் கல்யாண வாழ்க்கை கை கூடி வரும் மகத்துவம் நிறைந்த மார்கழி மாதம் - பாவை நோன்பிருந்தால் கல்யாண வாழ்க்கை கை கூடி வரும்

மேஷம்

மேஷம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியன் ஒன்பதாமிடத்தில் பயணம் செய்கிறார். தடை தாமதங்கள் விலகும். குரு பலன் கிடைப்பதால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். தடைகள் நீங்கும். அலுவலகத்தில் உள்ள பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சந்தோஷமும் நிம்மதியும் அதிகரிக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும். ராசி நாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் கேது உடன் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் கவனம் தேவை நெருப்பினால் காயம் உண்டாகும். நெருப்பு, இரும்பு பொருட்களில் கவனமாக இருக்கவும். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாம் வீட்டில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் லாபம் அதிகரிக்கும், நினைத்த காரியங்கள் யாவும் எளிதில் நிறைவேறும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். நண்பர்கள் மூலம் பெரிய தொகை கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் பயணம் செய்வதால் செய்யும் முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். சனி பகவான் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் பயணம் செய்கிறார். தொழில் உத்தியோகம் சிறப்படையும், செயல்கள் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் பயணம் செய்வதால் திடீர் பண வரவு உண்டாகும். இந்த மாதம் உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல மாதம் வேண்டிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கும். பண விசயங்களில் யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். சொந்த பந்தங்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பெருமாள் ஆலயத்திற்கு சென்று வணங்கலாம். பானுசப்தமி நாளில் சூரிய வழிபாடு செய்ய வேலையில் புரமோசன் கிடைக்கும். நிறைய நன்மைகள் நடைபெறும் மாதமாகும்.

ரிஷபம்

ரிஷபம்

சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். செய்யும் தொழிலில் டென்சன் உண்டாகும் அப்பாவிடம் மனஸ்தாபம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் போன்ற வகை தொழில்களில் விருத்தி உண்டாகும் உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும். வேலையில் கவனம் தேவை. கூடவே புதன் பயணம் செய்கிறார். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் தேவை வியாபாரம் விருத்தியாகும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் வரும் பணம் விவகாரங்களில் கவனம் தேவை. அதிக வருமானம் வரும். கூடவே செலவுகளும் அதிகரிக்கும். வாக்கு கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம். ஜாமீன் கையெழுத்துப் போட்டு பணம் வாங்கிக் கொடுக்க வேண்டாம். வழக்கு விசயங்களில் கவனம் நிதானம் தேவை. உயரதிகாரிகளால் பிரச்சினைகள் வரும் கவனம் தேவை. அவசரப்பட்டு வேலையை விட வேண்டாம். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும், ஆசிரியர் வேலைக்கு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் வெற்றியாக இருக்கும் 15 ஆம் தேதிக்குப் பின்னர் வேலைக்காக செய்யும் முயற்சிகளெல்லாம் வெற்றியடையும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்தான பழைய வீடு உங்கள் பங்குக்கு கிடைக்கும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களினால் நன்மை கிடைக்கும். திங்கட்கிழமைகளில் சிவ ஆலயங்களில் சென்று வழிபட நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

மிதுனம்

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசுமுறை பயணம் உண்டாகும் அரசாங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்த தொழில் சிறப்படையும். செவ்வாய் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடன் பிரச்சினை நீங்கும் மறைமுக எதிரிகள் தொல்லை முடிவுக்கு வரும். புதன் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருக்கிறார் கூட்டுத் தொழில் சிறப்படையும் வியாபாரம் விருத்தியாகும் தாய் மாமனால் நன்மை உண்டாகும் 14ஆம் தேதிக்குப் பின்னர் படிப்பில் கவனம் தேவை. குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் அன்னதானத்திற்கு நிதி உதவி செய்வீர்கள். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும், 15ஆம் தேதிக்குப் பின்னர் பெண்களால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத பண வரவு உண்டாகும் இருப்பினும் உத்தியோகத்தில் மன உளைச்சல் இருக்கும். ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும்.

கடகம்

கடகம்

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சச்சரவு உண்டாகும் தொழிலிலும் பிரச்சினை உண்டாகும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு அதிகாரப் பதவி கிடைக்கும் அரசாங்க விருது கிடைக்கலாம். வேலையில் முக்கிய திருப்பம் ஏற்படும். புதன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் பிரச்சினையை தவிர்க்கவும் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும் 14ஆம் தேதிக்குப் பின்னர் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருக்கிறார் தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். 15 ஆம் தேதிக்குப் பின்னர் பெண்கள் விசயத்தில் கவனம் தேவை. பொன்நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும், தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நீடிக்கும். ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும் கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும். உடல் நிலை பாதிப்பில் இருந்து தப்பிக்க புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.

English summary
Margazhi matha rasi palan for Mesham, Rishapam,Mithunam and Kadagam Rasipalan from December 16,2021to January 13,2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X