For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மார்கழி சோமவார பிரதோஷம் - இன்று சிவ தரிசனம் செய்தால் என்ன புண்ணியம் தெரியுமா

மார்கழி சோம வாரப் பிரதோஷமான இன்றைய தினத்தில், மாலையில் சிவாலயம் செல்லுங்கள். நந்திதேவருக்கு சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதைக் கண்ணாரத் தரிசியுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். முடிந்தால், அ

Google Oneindia Tamil News

மதுரை: மார்கழி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு சிவன் கோவில்களில் அமைந்துள்ள நந்தி தேவனுக்கு, இன்று மாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. மார்கழி சோம வாரப் பிரதோஷமான இன்றைய தினத்தில், மாலையில் சிவாலயம் செல்லுங்கள். நந்திதேவருக்கு சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதைக் கண்ணாரத் தரிசியுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.
நன்மைகள் நடைபெறும்.

சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிக விசேசம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு வந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் வழிபாடும் செய்தல் பல்கோடி புண்ணியத்தை தரவல்லது. குறிப்பாக ஜாதகத்தில் மதி சந்திரன் நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி மட்டுமல்ல உங்கள் மதியும், புத்தியும் நன்றாகும். பிரதோஷ வழிபாட்டிற்கு சென்று சிவ ஆலயத்தில் நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சார்த்துங்கள். சிவ பெருமானுக்கு வில்வம் சார்த்துங்கள். தயிர்சாதம் நைவேத்தியம் செய்து அந்த பிரசாதத்தை பக்தர்களுக்கு கொடுத்தால் நன்மைகள் நடைபெறும்.

பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய் பயம் போன்றவை விலகும். சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். சோம வாரப் பிரதோஷ விரதமும் சிவ தரிசனமும் வாழ்வில் ஒளியேற்றும். நம்முடைய வம்சத்தை விருத்தியாக்கும். வளமும் நலமும் தந்து வாழச் செய்யும்.

சிவ வழிபாடு

சிவ வழிபாடு

மார்கழி மாதம் என்பது சைவ மற்றும் வைணவ சம்பிரதாயத்தை பின்பற்றும் மக்களுக்கு ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட ஒரு மாதமாகும். மார்கழி மாதம் முழுவதும் இறைவனின் சிந்தனையிலும், வழிபாடுகளிலும் ஈடுபடுவதால் நாம் செய்த பாவங்கள் நீங்கப்பெற்று, நமக்கு வாழ்வில் பல இன்பமான நிகழ்வுகள் உண்டாகும். இந்த மாதத்தில் வரும் பிரதோஷ தினங்கள் மிகவும் சிறப்பானது.

பிரதோஷ வழிபாடு

பிரதோஷ வழிபாடு

14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் முறையாக சிவாலய தரிசனம் செய்பவர்கள், சாரூப்ய பதவி பெற்று, சிவகணங்களாகிவிடுவார்கள். தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில், அந்த விடமுண்ட கண்டனை வழிபட்டால், அத்தனை தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள்.

புண்ணியம் தரும் பிரதோஷ மகிமை

புண்ணியம் தரும் பிரதோஷ மகிமை

சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில், அந்த விடமுண்ட கண்டனை வழிபட்டால், அத்தனை தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள்.

சிவ தாண்டவ தரிசனம்

சிவ தாண்டவ தரிசனம்

பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. சிவபெருமான் தாண்டவமாடியதைப் பார்த்த நந்திதேவரின் உடல் ஆனந்த மிகுதியால் பருத்தது இதனால் கயிலாயமே மறைந்ததாம். அதனால்தான், பிரதோஷ காலத்தில் நந்தி பகவானின் கொம்புகளின் ஊடாக சிவதரிசனம் செய்ய வேண்டும் என்கிறார்கள் பெரியோர்கள்.

நந்திக்கு காப்பரிசி

நந்திக்கு காப்பரிசி

பிரதோஷ காலத்தில் காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது. பச்சரிசி, பாசிப் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்வது சிறப்பு.

தோஷம் நீக்கும் பிரதோஷ விரதம்

தோஷம் நீக்கும் பிரதோஷ விரதம்

சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை. இன்று மாலை நேரத்தில் சிவன் கோவில் சென்று ஒரு கைப்பிடி காப்பரிசி ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் வைத்து விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.

English summary
Margazhi Somavara Pradhosam Viratham 2019,Pradhosha pooja is one of the most important among the poojas performed to the Graceful Lord Shiva. In Shukla Paksha and Krishna Paksha the evening of the trayodasi.For the Lord someshvara Who wears the soma, the moon crescent on the matted hair, on the somavara day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X