திருப்பாவை, திருவெம்பாவை சொல்லுங்க.... பரிசுகளை வெல்லுங்க
மதுரை : மார்கழி மாதத்தில் கோவில்களிலும் கிராமங்களிலும் அதிகாலையில் பஜனைகள் களைகட்டும். திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வழிபடுவார்கள். வீட்டு வாசல்களில் கோலமிட்டு அதில் பூசணிப்பூக்களை வைத்தும் அழகுப் படுத்துவார்கள். சபாக்களில் மார்கழி கச்சேரிகளும் களைகட்டும். ஒன் இந்தியா தமிழ் இணைய தளமும் மார்கழி மாதத்தை கொண்டாட தயாராகி விட்டது. திருப்பாவை, திருவெம்பாவை பாடல் போட்டியில் நீங்களும் பங்கு பெற்று பரிசுகளை வெல்லலாம்.

உங்கள் வீட்டு குட்டீஸ் அழகாக ஆண்டாளைப் போல அலங்கரித்து திருப்பாவை பாட வைத்து வீடியோவாக எங்களுக்கு அனுப்புங்கள். அதிக அளவில் திருப்பாவை பாடிய குழந்தைகளுக்கு அற்புதமான பரிசுகள் காத்திருக்கின்றன. 1000 ரூபாய்க்கான அமேசான் வவுச்சர் பரிசளிக்கப்படும். உங்களின் வீடியோவை இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்புங்கள்
மார்கழி மாதத்தில் 30 நாட்களும் திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடி இறைவனை பெண்கள் வழிபடுகின்றனர். இறைவன் கண்ணனை நினைத்து ஆண்டாள் பாடிய திருப்பாவை முப்பது பாடல்களைக்கொண்டது. சிவனை நினைத்து மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை இருபது பாடல்களைக்கொண்டது. இந்த இருபது பாடல்களுடன் திருப்பள்ளியெழுச்சியிலுள்ள பத்து பாடல்களுடன் சேர்த்து அதுவும் முப்பது பாடல்களாக மார்கழி மாதம் முப்பது நாட்களிலும் பாடப்படுகின்றது.

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் இயற்றிய திருப்பாவையும், மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய திருவெம்பாவையும் பாவைப்பாட்டுக்களில் சிறந்தவை. நீங்கும் திருப்பாவை, திருவெம்பாவை பாடி வீடியோவாக 9148926682 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்புங்கள் பரிசுகளை வெல்லுங்கள்