• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜாதகத்தில் மாளவியா யோகம் இருக்கா? இசைத்துறையில் சாதிக்கபோறீங்க!

By Staff
|

-அஸ்ட்ரோ சுந்தர ராஜன்

சென்னை: மார்கழி மாதம் பிறந்து ஒருவாரம் ஆகிவிட்டது. மார்கழி மாதத்தில் மயிலாப்பூர், ஆழ்வார்ப்பேட்டை பகுதிகளிலுள்ள அனைத்து சங்கீத சபாக்களிலும் படு பிஸியாக கச்சேரி கலை கட்டுகிறது. ஒரு மினி திருவையாராகவே காட்சியளிக்கிறது. கச்சேரிக்கு சென்றால் மனம் நிறைவதோடு வயிரும் நிறைந்து விடுவதால் அனைவரும் குடும்பத்தோடு வந்து இடம் பிடித்துவிடுகிறார்கள்.

ஜோதிடத்தில் "குணப்படுத்துதல்" என்ற வார்த்தையின் அதிபதி சுக்கிரன் தான். நாம் படும் பிரச்சனை அனைத்திலிருந்தும் விடுதலை தருபவர் சுக்கிரன் தானாம். கருவரை முதல் கல்லரை வரை நமக்கு பணம் தேவைபடுகிறது. பணப்புழக்கத்தை தரும் கிரகம் சுக்கிரன் என்பது நமக்கல்லாம் தெரியும்தானே! எந்தொரு பிரச்சனையின் தீர்வை உற்று நோக்கினாலும் அதில் சுக்கிரனின் பங்கு இருப்பது புரியும். நோயாளிகளின் நோயை குணப்படுத்தி் சுகமளிப்பவர் சுக்கிரன். இருட்டிற்க்கு வெளிச்சமளிப்பவர் சுக்கிரன். மனவருத்தில் இருப்பவருக்கு மகிழ்ச்சியை தருபவர் சுக்கிரன். சுகத்தினை தரும் பெண்களும் சுக்கிரன். படுக்கையும் சுக்கிரன்.

ரோமானியர்களும்கூட வீனஸ் தேவதையை (அதாங்க நம்ம ஊர் சுக்கிரன்) குணமளிக்கும் கடவுளாக போற்றுகின்றனர். அவர்களும் வீனஸ் தேவதையை தாய் மற்றும் திருமணத்திற்க்கான பெண்தெய்வமாக போற்றி வணங்குகின்றனர். வீனஸ் தேவதை கடல் நுரையில் தோன்றியதாக கூறுகின்றனர். நமது சுக்கிரனின் அதிதேவதையான ஸ்ரீ மகாலகக்ஷமி தாயார் பார்கடலில் உதித்ததும் பொருத்தமே அல்லவா?

margazi kutcheri season in chennai

துயரத்தில் இருப்பவரை இசையின் மூலமும் குணப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள். மனதிற்க்கு சுகமளிக்கும் இசைக்கும் சுக்கிரன்தான் காரகனாம்.

ராகங்களின் பயன்கள்:

அதிகாலையில் கேட்க வேண்டிய ராகம் – பூபாளம்

அந்தி மாலையில் கேட்கவேண்டிய ராகம் – மலையமாருதம், சக்கரவாகம்

சிறுநீரகப் பிரச்சனை தீரவும், மழை வேண்டியும்- அமிர்தவர்ஷினி

கடின மனம் இளக கல்நெஞ்சம் கரைய – அரிகாம் போதி

மனதை வாட்டும் பல துன்பங்களின் தாக்கம் குறைந்து அமைதி ஏற்பட – ஆனந்த பைரவி, ஸ்ரீ ரஞ்சனி, கமாஸ், நாயகி,சகானா, நீலாம்பரி

மனம் சார்ந்த பிரச்சனை தீர – அம்சத்வனி, பீம்பிளாஸ்

இதய நோய் தீர கேட்க வேண்டிய ராகம் – சந்திரக கூன்ஸ்

நீரிழிவு நோய் தீர கேட்க வேண்டிய ராகம் – பகாடி,ஜகன் மோகினி

பெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய ராகம்-அடான

மனதை வசீகரிக்க, மயக்க – ஆனந்த பைரவி , உசேனி, கரகரப்பிரியா

சோகத்தை சுகமாக்க – முகாரி , நாதநாமக்கிரியா

பாம்புகளை அடக்குவதற்கு – அசாவேரி ராகம்

வாயுத்தொல்லை தீர – ஜெயஜெயந்தி ராகம்

வயிற்றுவலி தீர – நாஜீவதாரா

இசைக்கும் ஜோதிடத்திற்க்கும் உள்ள தொடர்பு:

ஜோதிடத்திற்க்கும் இசைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என கூறுகிறார்கள். கர்நாடக சஙகீதத்தில் 12 ஸ்வரங்களை 12 ராசிகளோடு இணைத்து பார்க்கின்றனர். நவகிரகங்களில் சூரியனும் சந்திரனும் ஒரே சீரான வேகத்தில் செல்லும் கிரகங்களாகும் அதேபோல சங்கீதத்தில் ஸட்ஜா மற்றும் பஞ்சம ஸ்வரங்கள் ஒரே சீரான தாளகதியை கொண்ட ஸ்வரங்கள் என்று கூறுவதோடு அதை கடக சிம்ம ராசிகளோடு இணைக்கின்றனர்.

நாதம் என்றால் ஒலி அதாவது ஒழுங்கு ஒழுங்கற்ற இரண்டும் நாதம் தான் ஒழுங்கான முறையில் எழுப்பப்படும் ஒலியின் காரணமாக மனத்திற்கு பலவித உணர்ச்சிகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது, நாதம் தான் உலக உயிர்களும் தோன்ற காரணமாக உள்ளது என்பது வேத தத்துவம் அதனால் தான் இறைவனுக்கு விஸ்வநாதன், ராமநாதன் என்றெல்லாம் பெயர்கள் சூட்ட பெற்றன மீதியுள்ள பத்து ஸ்வரங்களை இரண்டிரண்டாக பிரித்து ஐந்து குழுக்களாக சவ்விய அபசவ்விய முறையில் தொகுத்து ஐந்து கிரகங்களோடு பின்வருமாரு ஒப்பிடுகின்றனர்

கன்னி ராசி - சுத்த ரிஷபம்

துலா ராசி - சதுஸ்ருதி ரிஷபம்

விருச்சிக ராசி - சாதாரண காந்தாரம்

தனுசு ராசி - அந்தர காந்தாரம்

மிதுன ராசி - காகளி நிஷாதம்

ரிஷபராசி - கைசிக நிஷாதம்

மேஷ ராசி - சதுஸ்ருதி தேவதம்

மீன ராசி - சுத்த தேவதம்

மகர ராசி - சுத்த மத்யமம்

கும்ப ராசி - ப்ரதி மத்யமம்

மழைக்கும் காரண கிரகம் சுக்கிரனை. அம்ருத வர்ஷினி ராகத்தை இசைத்து மழையை கூட வரவைத்துள்ளனர் நமது முன்னோர்கள். மார்கழி மாததில் விடியலில் பாடும் திருப்பாவையில் நான்காம் பாசுரமாக வரும் ”ஆழி மழைக்கண்ணா” எனத்தொடங்கும் பாசுரத்தை அமிர்தவர்ஷினி அல்லது மேக ரஞ்சனி ராகத்தில் பக்தியுடன் பாட மழை வர்ஷிக்கும் என்பது நிதர்சனம்.

எட்டயபுரம் பகுதியில் வறட்சி நிலவியதைப் பார்த்து வருத்தம் அடைந்த முத்து சுவாமி தீட்சிதர், அமிர்த வர்ஷினி ராகத்தில் “ஆனந்த அம்ருதகர்ஷினி” என்ற பாடலைப் பாடியவுடன் மழை கொட்டியது என்பது செவிவழிச்செய்தியாகும்.

ஒருவர் இசையில் சிறந்து விளங்க சுக்கிரனின் பலம் ஜாதகத்தில் மிக அவசியமாகும். ஜாதகத்தில் இசையில் சிறந்துவிளங்க தொடர்புள்ள பாவங்கள் காலபுருஷனுக்கு வாக்கு ஸ்தானமான ரிஷபம், தொண்டையை குறிக்கும் மிதுனம் மக்களிடையே பிரபலமாக ஏழாம் பாவம் மற்றும் ஜென வசிய ராசியான துலாம் ஆகிய வீடு மற்றும் அதிபதிகள் சுப பலத்துடன் விளங்க வேண்டும்.

இரண்டாம் வீடு மூன்றாம் வீடு, ஏழாம் வீடு,சுக்கிரன் புதன் பலம் பெற்று இருக்க வேண்டும். சாதாரன பேச்சிற்க்கு வாக்கு ஸ்தான பலமும் புதபலமும் போதும். ஆனால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் இசையில் சிறந்து விளங்க லக்கினம் சுக்கிரனின் வீடாக அமைவது அல்லது வாக்கு ஸ்தானம் சுக்கிரனின் வீடுகளாக அமைவது முக்கியம்.

பொதுவாகவே மனோகாரகன் சந்திரன், புதன் மற்றும் சுக்கிரனின் இணைவு ஒருவரை கலைத்துறையில் பிரபலமடைய செய்யும்.

இசையில் சிறந்து விளங்கும் கிரக அமைப்பு:

1. ஜெனரஞ்சக சுக்கிரனின் ராசிகளான ரிஷபம் மற்றும் துலா ராசிகளை லக்னம், ராசி அல்லது வாக்கு ஸ்தானமாக கொண்டிருப்பது.

2. லக்னத்திலோ, ராசியிலோ அல்லது வாக்கு ஸ்தானத்திலோ சுக்கிரனை கொண்டிருப்பது

3. காற்று ராசியான மிதுனத்தில் சுக்கிரன் புதனுடன் சேர்க்கை பெற்று நிற்பது.

4. மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று பஞ்சமகா புருஷ யோகங்களில் சுக்கிரனால் ஏற்படும் மாளவியா யோகத்தை பெற்று புதனுடன் தொடர்பு கொண்டிருப்பது.

5. மிதுனம்/கன்னியில் புதன் நின்று லக்னம் மற்றும் சந்திர கேந்திரம் பெற்று பஞ்ச மகா புருஷ யோகத்தில் புதனால் ஏற்படும் பத்ர யோகம் பெற்று சுக்கிரன் மற்றும் சந்திரனுடன் தொடர்பில் நிற்பது.

6. மீன லக்னமாகி நான்காம் வீடு மிதுனமாகி சுக்கிரன் திக் பலம் சுப பலம் பெற்று நிற்பது.

செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் ஜாதகம்:

புகழ்பெற்ற இசை மேதையான செம்மங்குடி திரு ஸ்ரீனிவாச ஐயர் அவர்களின் ஜாதகத்தில் மீன லக்னமாகி லக்னத்தில் காற்று ராசியான சனைச்சர பகவான் நின்று நான்காம் பாவமான மிதுனத்தில் சந்திரன், ஆட்சி பலம் மற்றும் பத்ர யோகம் பெற்ற புதன், திக்பலம் பெற்ற சுக்கிரன் இவர்களோடு ராகுவும் சேர்ந்து நின்று பத்தாம் பாவத்தோடு தொடர்பு பெற்றதால் இசைத்துறையில் புகழ்பெறச்செய்ததோடு 1947ல் இளம்வயதிலேயே மியுசிக் அகாதமியின் சிறப்பு மிக்க “சங்கீத கலாநிதி” பட்டத்தை பெறச்செய்தது. மேலும் மத்திய அரசிடமிருந்து பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற சிறந்த அவார்டுகளை பெற்றது மட்டுமல்லாமல் சங்கீத நாடக அகாதமி அவார்டு, தமிழக அரசின் இசை பேரறிஞர் அவார்டு, மத்திய பிரதேச அரசின் காளிதாஸ் சம்மான் அவார்டு போன்ற புகழ்மிக்க பல பட்டங்களை பெறச்செய்தது.

சங்கீதத்தில் புகழ்பெற வணங்கவேண்டிய பரிகாரஸ்தலங்கள்:

சங்கீதத்தில் சிறந்துவிளங்க விரும்புபவர்கள் வணங்க வேண்டிய திருத்தலம் திருமரைக்காடு எனப்படும் வேதாரன்யம் ஆகும் இங்குள்ள அம்பாளின் திருநாமம் வீணா வாதவிதூஷனி எனும் வேதநாயகியாகும். இந்த அம்பிகையின் குரல் சரசுவதியின் வீணைநாதத்தை தோற்கடிக்குபடி இனிமையாக இருந்ததால் இந்த பெயர் ஏற்பட்டது.

மேலும் சுக்கிர ஸ்தலங்களையும், ஸ்ரீ மகாலக்ஷமி வழிபாடும்,சப்த கன்னியரில் இந்திரானி வழிபாடும் இசையில் சிறந்த தேர்ச்சியும் புகழும் அடைய செய்யும்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Through December and a good part of January every year, the city’s performance venues (known as ‘sabhas’ in Tamil) come alive to the ragas and rhythms of music as vocalists, instrumentalists and dancers invoke Gods, Goddesses and Saints through myriad compositions. And thousands of people turn out in their ethnic best to partake of the superb fare being dished out.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X