For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலக தற்கொலை விழிப்புணர்வு தினம்: தற்கொலையை தூண்டும் கிரகங்களை தடுக்கும் சூரியன்

Google Oneindia Tamil News

சென்னை: உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். நம் நாட்டில் ஆண்டுதோறும் 2 லட்சம் தற்கொலைகள் நிகழ்வதாக சிநேகா அமைப்பினர் கூறியுள்ளனர். நாற்பது செகண்டிற்கு ஒருவர் உலகின் எங்கோ ஒருமூலையில் யாரோ ஒருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். தற்கொலை நிகழ்வது கட்டுப்படுத்தப்பட வேண்டும்' என்பதே உலக சுகாதார நிறுவனத்தின் நோக்கமாக இருக்கிறது. இந்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் செப்டம்பர் 10ம் தேதி சர்வதேச தற்கொலை விழிப்பு உணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஜோதிட ரீதியாக எந்த கிரகங்கள் கூட்டணி சேர்ந்தால் எந்த கிரகங்கள் பாதிக்கப்பட்டதால் தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது என்று பார்க்கலாம்.

உலகளவில் தற்கொலை செய்துகொள்ளும் 100 பேரில் 17 பேர் இந்தியர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் 30 வயதிற்குட்பட்ட இளம் வயதினரே தற்கொலை முடிவை எடுப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. கிழக்காசிய நாடுகளில் ஒரு லட்சம் பேரில் ஐந்துக்கும் குறைவானவர்களே தற்கொலை மூலம் மரணிக்கிறார்கள். இந்தியா போன்ற வளரும் நாட்டில் இது மிகப்பெரிய அவலம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

ஒருவருக்குத் தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் முதலில் அது குறித்து யாரிடமாவது பேச வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. தற்கொலை என்பது மிகப்பெரிய சமூக பிரச்சினை கொலைகள், விபத்துக்கள் மூலம் நிகழும் மரணங்களை விட தற்கொலை மூலம் நிகழும் மரணங்கள் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர் 10 ஆம் தேதியை உலக தற்கொலை தடுப்பு தினமாக உலக சுகாதார நிறுவனம் கடந்த 16 ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது.

மரணம் ஸ்தானம்

மரணம் ஸ்தானம்

பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 8ஆம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். இது ஆயுள் ஸ்தானமாகும். 8ல் கிரகம் அமர்ந்தால் அந்த தசைகளில் மரணத்துக்கு ஒப்பான கண்டங்களை நஷ்டங்களை ஏற்படுத்தும், எனவே அதற்கான பரிகாரங்களைச் செய்து கொண்டால் அட்டமாதிபதியாக உள்ள கிரகத்தால் தாக்கம் வராது. லக்னத்துக்கு 8ல் செவ்வாய் வந்தால் ரத்தக் கொதிப்பு ஏற்படும். புதன் வந்தால் தண்ணீரில் கண்டம் வரும். சுக்கிரன் வந்தால் கோழை மனதோடு,தற்கொலைக்குத் தூண்டும்.

தற்கொலைக்கு காரணம்

தற்கொலைக்கு காரணம்

சந்திரனின் மீது ராகுவின் நிழல் படரும்போது, அதாவது ராகுவின் தாக்கம் உடையவர்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றுகிறது. சந்திரன், ராகுவோடு சூரியனின் தாக்கமும் இணையும்போது அவமானம் அல்லது கௌரவக் குறைபாடு ஏற்படுகிறது. அதோடு சந்திரன், ராகுவோடு செவ்வாயின் தாக்கம் சேரும்போது கோபம், புதனின் தாக்கத்தினால் இயலாமை, குருவின் தாக்கத்தினால் ஆற்றாமை, சுக்கிரனின் தாக்கத்தினால் வெறி, சனியின் தாக்கத்தினால் பயம், கேதுவின் தாக்கத்தினால் விரக்தி ஆகிய எண்ணங்கள் தற்கொலையைத் தூண்டுவதாக ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

புதனோடு சேரும் ராகு கேது

புதனோடு சேரும் ராகு கேது

ராகு கேது பாம்பு கிரகங்கள் இவை புத்திநாதன் புதனோடு சேரும் போது தற்கொலை எண்ணங்கள் ஏற்படுகிறது. புதனுடன் ராகு சேர்ந்து வலுவில்லாத நிலையில் இருக்கும் ஜாதகக் காரகர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வார்கள். சிலர் விஷ ஊசி போட்டும் உயரமான மாடியில் இருந்து குதித்தும் தற்கொலை செய்து கொள்கின்றனர். புதனோடு கேது சேர்ந்திருக்கும் ஜாதகக் காரகர்கள் ரசாயனங்களை குடித்து தற்கொலை செய்து கொள்வார்களாம். பொட்டாசியம் சயனைடு, தூக்கமாத்திரை குடித்தும் தற்கொலை கொள்வார்கள்.

மனோகாரகன் புத்திநாதன் கூட்டணி

மனோகாரகன் புத்திநாதன் கூட்டணி

சந்திரன் மனோகாரகன், புதன் புத்திநாதன். சந்திரனும் புதனும் வலிமையற்ற நிலையில் இணைந்தால் தற்கொலை எண்ணம் மேலோங்குகிறது. கிணற்றில் குதித்தும், கடலில் குதித்தும், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குதித்தும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்குக் காரணம் சந்திரன் நீர் காரகன்.

ஆயுள்காரகன் புத்திநாதன்

ஆயுள்காரகன் புத்திநாதன்

சனி ஆயுள்காரகன் ஒருவரின் ஆயுளை தீர்மானிப்பவர் சனிதான். ஒருவரின் மரணம் எப்படி இருக்கவேண்டும் என்று முடிவு செய்பவரும் சனிதான். சனியோடு புதன் சேர்ந்து வலிமையற்ற நிலையில் இருந்தால் வண்டி வாகனங்களில் மோதி தற்கொலை செய்து கொள்வார். ஓடும் கார் அல்லது பேருந்தில் விழுந்தும், ரயிலில் விழுந்தும் கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொள்வார்களாம்.

செவ்வாயுடன் சேரும் புதன்

செவ்வாயுடன் சேரும் புதன்

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயும் புதனும் வலிமையற்ற நிலையில் இணைந்திருந்தால் தீக்குளித்து தற்கொலை செய்வார்களாம். கையை, கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டும் தன்னைத்தானே சித்திரவதை செய்து கொண்டும் தற்கொலை செய்து கொள்வார்கள். துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும், மின்சார சாதனங்களாலும் தற்கொலை செய்து கொள்வார்களாம்.

புதன் சுக்கிரன் புதன் குரு

புதன் சுக்கிரன் புதன் குரு

புதனோடு கூட்டணி சேரும் சுக்கிரன் வலிமை குன்றியிருந்தால் அமைதியான முறையில் தற்கொலை செய்து கொள்வார்களாம். மாத்திரையை போட்டுக்கொண்டு அமைதியாக படுத்துக்கொள்வார்கள். அதே போல புதனோடு குரு சேர்ந்து வலிமை குன்றியிருந்தால் அவர்கள் ஜீவ சமாதி நிலையில் அமைதியாக மரணத்தை தழுவுவார்களாம்.

தற்கொலையை தடுக்கும் ஹோமம்

தற்கொலையை தடுக்கும் ஹோமம்

கிரகங்கள் வலிமையான நிலையில் இருந்தால் தற்கொலை எண்ணங்கள் வருவதில்லை. இல்லாவிட்டால் கோடி கோடியாக பணம் இருந்து கோடீஸ்வரர்களாக வாழ்ந்தவர்கள் கூட நொடியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். எனவே கிரகங்கள் வலிமையற்ற நிலையில் இருந்தால் அதற்கேற்ப பரிகாரங்கள் செய்யலாம். மிருத்யுஞ்ச ஹோமம் செய்யலாம். ருத்ர ஹோமம் செய்யலாம். விஷ்ணு சகஸ்ராநாமம் படிக்கலாம்.

வலிமையான சூரியன்

வலிமையான சூரியன்

ஜாதகத்தில் லக்னாதிபதி பாதிக்கப்படுவது, 6, 8, 12 ஆம் இடங்களில் மறைவதால் தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது. சந்திரனை மனோகாரகன் ஜாதகத்தில் சந்திரனின் பலம் குறைந்தவர்களுக்கு, லக்னாதிபதி வலிமையாக இருக்கும் பட்சத்தில் தற்கொலை எண்ணம் ஏற்படாது. லக்னாதிபதியும், சந்திரனும் வலிமை இழந்திருக்கும் பட்சத்தில் லக்னத்தில் அமர்ந்திருக்கும் கோள் தற்கொலை எண்ணத்தைக் கட்டுப்படுத்தும். சூரியனும் பலமாக இருந்தால் தற்கொலை எண்ணம் தடுக்கப்படும். அதேபோல கிரகங்களின் கூட்டணி வலிமையாக இருந்து சுப கிரகங்களின் பார்வை இருந்தாலும் தற்கொலை எண்ணம் ஏற்படாது.

தற்கொலையை தடுக்கும் சூரியன்

தற்கொலையை தடுக்கும் சூரியன்

சந்திரனால் உண்டாகும் பாதிப்பினை சரிசெய்யும் திறமை சூரியனுக்கு உண்டு. அதேபோல புதனால் பாதிப்பு இருந்தால் அதையும் சூரிய பகவான் சரி செய்வார். அதிகாலைச் சூரியனின் ஒளிக்கதிர்களுக்கு மனிதனின் மூளையைச் சரிசெய்யும் திறன் உண்டு. அதனால்தான் நம் முன்னோர்கள் தினசரி சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தினை ஏற்படுத்தினர். சூரிய நமஸ்காரம் செய்வது உடல்நலத்திற்காக மட்டுமின்றி, மனநலத்திற்கும் மிகவும் நல்லது. இது தற்கொலை எண்ணத்தை தடுக்கும் எனவே சூரியனை தினசரியும் வணங்குங்கள் ஆவணி ஞாயிறு விரதம் அற்புதமானது.

English summary
According to vedic astrology planet saturn has decide the person has die or not. The planet moon has control our thougts.The planet Mercury power the controlling our judgement. Mercury conjuction Rahu, Moon, Kethu, Saturn and mars conjuction type of deaths or Suicide.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X