• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி அபார்ஷனா? உங்கள் ஜாதகத்தில் செவ்வாயின் நிலையை பாருங்க!

|

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

ஒருவர் எத்தனைதான் விதவிதமான செல்வங்களைப் பெற்றிருந்தாலும், குழந்தைச்செல்வம் இல்லையென்றால் பிறவிப் பயன் கிட்டுவதில்லை. திருமணமான ஒவ்வொரு தம்பதியும் திருமணம் ஆன நாளில் இருந்து தங்களுக்கு ஒரு வாரிசை எதிர்பார்த்து கனவு காண்பது இயற்கையே! அந்த கனவு நனவாகி பிள்ளைக் கனியமுது பிறக்கும்போது தாய் தந்தையர் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. வேத சாஸ்திரங்களும் புத்திர பாக்கியத்தின் பெருமையை எடுத்துச் சொல்கின்றன.

"ஸீக்ரமேவ ஸந்தான ப்ராப்தி ரஸ்து" என ஒரு திருமணமான பெண்னை பெரியவர்கள் வாழ்த்தும்போது அவள் அளவிடமுடியாத மகிழ்ச்சி அடைவாள். நீண்ட நாட்களாக குழந்தை வேண்டி காத்திருக்கும் ஒரு பெண்ணை ஏதோ ஒரு நிகழ்ச்சியில் ஒரு குழந்தை அறியாமல் "அம்மா!" என அழைத்துவிட்டால் அவள் அடையும் மகிழ்ச்சிக்கும் ஏக்கத்தையும் சொல்லில் கூறமுடியாது.

ஒரு பெண் தாயாகும் பேறு மிக அற்புதமானது. ஆனால் தவிர்க்க முடியாத பல சூழ்நிலைகளினால் கர்ப்பமாகும் எல்லா பெண்களுக்கும் குழந்தையைப் பெற்றெடுக்க முடிவதில்லை. அதற்கான காரணங்கள் பல இருந்தாலும், தாயின் உடல் நிலை, கருவின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு, கருப்பையில் ஏற்படும் உபாதைகள், வேண்டாத கர்ப்பம் என்பன முக்கியமானவைகளாகும்.

அபார்ஷன் என்னும் கருச்சிதைவு பொதுவாக இரண்டு சூழ்நிலைகளில் நிகழ்கின்றது. நாமாகவே சில சூழ்நிலை காரணமாக் செய்வித்துக் கொள்வது. அதாவது கணவன் மனைவி தமக்கு பிள்ளைகள் இப்போதைக்கு வேண்டாம் என்ற நிலையில், அல்லது பெற்ற பிள்ளைகள் போதும் எனியும் பிள்ளைகள் வேண்டாம் என்ற நிலையில், அல்லது கள்ளத் தொடர்பால் கர்ப்பமாகிவிட்ட சந்தற்பத்தில் தாமாகவே முன்வந்து கருச்சிதைவு செய்வித்துக் கொள்கின்றார்கள்.

பொதுவாக பெண்கள் கருத்தரிக்கும் போது, முதன் மூன்று மாதத்திற்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் சிசுவிற்கு உறுப்புகள் வளர ஆரம்பிப்பதால், மருத்துவர்கள் கர்ப்பிணிகளிடம் நன்கு ஓய்வு எடுப்பதுடன், கவனமாக இருக்குமாறு சொல்வார்கள். ஆனால் சிலருக்கு எவ்வளவு கவனமாக இருந்தாலும், கருச்சிதைவு ஏற்படும்.

கருத்தரிக்கும் ஆற்றல் உள்ள உயிரணுக்கள் குறைந்திருந்து நீங்கள் கருத்தரித்திருந்தால் முதல் மூன்று மாதங்களில் அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குதல், நீண்டதூரப் பயணம் மேற்கொள்தல், அளவுக்கதிக டென்ஷன் போன்றவற்றால். காரமான உணவுகளை அதிகம் உண்பதால். கோழி, பப்பாளி, அன்னாசி, பலா போன்றவற்றை முதல் 90 நாட்களுக்குத் தவிர்க்க வேண்டும். உணவில் காரத்தையும், புளிப்பையும் குறைத்து செயற்கை மணம் மற்றும் நிறத்தைத் தவிர்த்து உண்ணவும்.

அபார்ஷனுக்கான பொதுவான காரணங்கள்

அபார்ஷனுக்கான பொதுவான காரணங்கள்

1. கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில் அபார்ஷன் தானாகவே ஏற்பட்டு விடும்.

2. கருப்பையின் நிலை சில பெண்களுக்கு ஏடாகூடமாக அமைந்திருப்பதால் கருச்சிதைவு தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

3. இரட்டைக் கருப்பை இருப்பதனாலும் சில நேரங்களில் அபார்ஷன் ஏற்பட்டு விடுகிறது.

4.கருப்பையில் ஃபைபிராய்டு கட்டிகள் தோன்றுவதால் அபோர்ஷன் வலியுறுத்தப்படுகிறது.

5. தொற்று நோய்களால் பாதிக்கப்படும்போது கருச்சிதைவு கட்டாயமாகிறது.

6. சில குறிப்பிட்ட நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட அபார்ஷனை ஏற்படுத்துகிறது. முக்கியமாக ஆண்டிபாயடிக் மருந்துகள் கருசிதைவை ஏற்படுத்துகிறது.

7. நாகரிக மோகத்தால் பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் கருச்சிதைவுக்கு முக்கிய காரணங்களகிவிடுகிறது.

புத்திர பாவமும் புத்திர காரகனும்:

புத்திர பாவமும் புத்திர காரகனும்:

ஜாதகத்தில் ஐந்தாம் பாவம் அல்லது ஐந்தாம் வீடு புத்திர ப்ராப்தியை குறிக்கும் இடமாகும். குழந்தை,பாட்டன். வம்சா வழி அத்துனையும். பாட்டிகள். பூர்வ புண்யம். மனம். எண்ணம். காதல். சந்தோஷம். அதிர்ஷ்டம். யோகம். போட்டி. இஷ்ட தெய்வம். சிற்றின்பம். மந்திர உச்சாடனம். உபாசனை (இஷ்ட தெய்வம்) கற்பழிப்பு. வழிபாடு. திருவிழாக் கோலங்கள். மன திருப்தி ஆகிய பாவ காரகங்களை தன்னகத்தே கொண்டது ஐந்தாம் பாவமாகும். எனவேதான் இதனை திரிகோண ஸ்தானங்களில் ஒன்றாகவும் லக்ஷமி ஸ்தானம் எனவும் கூறப்படுகிறது.

ஜாதகத்தில் கருச்சிதைவு ஏற்படுத்தும் கிரஹ நிலை:

ஜாதகத்தில் கருச்சிதைவு ஏற்படுத்தும் கிரஹ நிலை:

1. ஜோதிடத்தில் கருக்கலைவு ஏற்பட முக்கிய காரகராகும். கருக்கலைவு என்பது மாதவிலக்கினை போன்ற தன்மை கொண்டதால் ரத்தத்தின் காரகராகிய செவ்வாய் மற்றும் மற்றும் நீச சந்திரன் ஆகியவை கருக்கலைவிற்க்கு முக்கிய காரணமாகிவிடுகிறது. மேலும் பெண்களின் சூதக கோளாருகளுக்கும் கால புருஷனுக்கு எட்டாம் வீடு மற்றும் அதன் அதிபதியாகிய செவ்வாயே முக்கிய காரகர் ஆகின்றார்.

2. புத்திர பாவம், புத்திர பாவாதிபதி, புத்திர காரகர் குரு, பாக்கிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானதிபதி ஆகியவர்கள் செவ்வாய், சனி, ராகு, கேது, போன்ற அசுப கிரஹங்களுக்கு இடையே பாப கர்த்தாரி யோகம் பெற்று நிற்பது மற்றும் வக்கிரம் அடைந்து நிற்பது.

3. புத்திர காரகர் வக்கிரம் பெற்று அசுப சேர்க்கை பெற்று நிற்பது. இந்த அமைப்புள்ளவர்களுக்கு B6 எனும் விட்டமின் குறைபாட்டின் காரணமாக கருச்சிதைவு ஏற்படுகிறது. புத்திர பாக்கிய விட்டமின் என செல்லமாக அழைக்கப்படும் B6 ன் காரகர் குரு பகவான் என்பது குறிப்பிடத்தக்கது.

4. ஐந்தாம் பாவம்/பாவாதிபதி இரண்டிற்க்கும் மேற்பட்ட அசுப கிரஹ சேர்க்கை பெறுவது.

5. ஐந்தாம் பாவம் மற்றும் பாவாதிபதி சுப தொடர்பின்றி செவ்வாயின் பார்வை/சேர்க்கை மற்றும் பெற்றும் நிற்பது மற்றும் ஐந்தாம் பாவத்தில் செவ்வாய் மட்டும் நிற்பது.

6. கடகம் மற்றும் தனுர் ராசிகளுக்கு செவ்வாய் ஐந்தாம்பாவாதிபதியாகி வக்ரம்/நீசம் பெற்று நிற்பது.

7. ஐந்தாம் வீட்டிற்க்கு சனி மற்றும் மாரக/பாதக/திதி சூன்ய அதிபதிகளின் தொடர்பு பெற்று நிற்பது.

8. சந்திரன் புத்திர ஸ்தானாதிபதியாகி ராகு/கேது தொடர்பு பெற்று நிற்பது அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுவதோடு கருப்பையில் சிறு சிறு கரும்புள்ளி போன்ற கொப்புளங்களை ஏற்படுத்தி கருதரிக்கும் தன்மையை கெடுத்துவிடுகிறது. இந்த அமைப்பு முக்கியமாக தாங்களாகவே கருக்கலைப்பு செய்பவர்களின் ஜாதகங்களில் காணலாம்.

கருச்சிதைவை தடுத்து புத்திர பாக்கியம் தரும் பரிகாரங்கள்:

கருச்சிதைவை தடுத்து புத்திர பாக்கியம் தரும் பரிகாரங்கள்:

1. எந்த காரணத்தால் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுபவர்களும் வணங்கவேண்டிய தெய்வம் அருள்மிகு கர்பரஷாம்பிகைதான்!! தஞ்சாவூர் அருகில் உள்ள பாபநாசம்என்ற ஊரில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருகருகாவூர்.இங்கு அம்மன் பெயர் .கர்பரக்ஷாம்பிகை .இறைவன் பெயர் முல்லைநாதர் . அம்மன் பெயரில் உள்ளது போல கர்ப்பிணி பெண்களின் கருவை காப்பதும் ,சுக பிரசவம் ஆவதற்கும் பெண்கள் இந்த அம்மனை மனம் உருகி வேண்டுவார்கள்.அதுமட்டுமல்ல குழந்தை வரம் வேண்டியும் அம்மனை வேண்டுவதும் உண்டு.

2. சென்னை சேத்பட்டில் உள்ள கருக்காத்தம்மன் கோயிலில் அம்மனுக்கு வேண்டிக்கொண்டு தொட்டில் கட்டுவது சிறந்த கண்கண்ட பலனாக அமைகிறது.

3. திருச்சி சமயபுரம் மாரியம்மன், சென்னை திருவேற்காடு மாரியம்மன், முண்டக கண்ணியம்மன் போன்ற மாரியம்மன் திருக்கோயில்களுக்கு செவ்வாய் கிழமைகளில் சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி வணங்கி வர அடிக்கடி கருக்கலைவது நின்று புத்திர பாக்கியம் ஏற்படும்.

4. சிதம்பரம் அருகே வைத்தீஸ்வரன் கோயிலுக்கு செவ்வாய் கிழமைகளில் சென்று அங்காரகனை வணங்கி வர கருக்கலைவு நின்று புத்திர பாக்கியம் ஏற்படும்.

5. புத்திர காரகனான குருவை வியாழக்கிழமைகளில் வணங்கி வர சற்புத்திர பாக்கியம் ஏற்படும். மேலும் மருத்துவர் ஆலோசனையின் பேரில் குருவின் காரகத்துவம் கொண்ட B6 விட்டமினை தொடர்ந்து உட்கொண்டு வர கருக்கலைவு பிரச்சனை தீரும்.

 
 
 
English summary
Recurrent pregnancy loss is one of the most frustrating problems in reproductive medicine medicine today because we still do not understand it well. The medical term for a miscarriage is an abortion. Most miscarriages start with vaginal bleeding which is initially slight and painless. This is called a threatened abortion, because the pregnancy is threatened by the bleeding. This bleeding is from the mother, and is not fetal blood. About half the time this stops spontaneously and results in no harm to the pregnancy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X