For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செவ்வாய் தசையால் யாருக்கு நன்மை - செவ்வாய் தரும் ருச்சிக யோகம்

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் வலுவான நிலையில் இருந்தால் அது யோகத்தையும், தசா புத்தியில் நன்மையையும் தருகிறது. நவகிரகங்களில் செவ்வாய் பாவ கிரகமாக இருந்தாலும் சுப கிரகங்களின் பார்வை சேர்க்கை இருந்தால் அத

Google Oneindia Tamil News

சென்னை: செவ்வாய் சகோதர காரகன் சிவப்பு நிறத்தின் அதிபதி. ஆண் கிரகம் அதிலும் தைரியமான கிரகம். செவ்வாய் துடிப்பானவர். இளமையானவர். இள ரத்தம். வீரமான கோபமான இளைஞனைப் போன்றவர் செவ்வாய். எதற்கும் பயப்படமாட்டார். துடிப்பானவர். தைரியத்தையும் வீரத்தையும் குறிப்பவர் செவ்வாய். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் கேந்திர ஸ்தானங்களில் அமர்ந்து அவை ஆட்சி, உச்சம் பெற்ற வீடாக இருந்தால் அது ருச்சிக யோகத்தை தருகிறது.

ருச்சிக யோகம் பஞ்சமகா யோகம். அரசாலும் பெருமைக்குரியவர், தயாள குணம் மிக்கவர், உடல் பலம் மிக்கவர்கள். பெரும் புகழோடு விளங்குபவர்.
ஜாதகத்தில் சந்திரனும் செவ்வாயும் இணைவது சந்திர மங்கள யோகம். சந்திரன் வளர்பிறை சந்திரனோடு சேர்ந்து இருந்தால் செவ்வாய் தசை சந்தோசமாக போகும். செவ்வாய் பூமி காரகன். வீடு நிலம் வாங்கலாம். வீடு நிலம் கட்டிடம் கட்டலாம். வருமானம் லாபத்தை தரும்.

ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்து செவ்வாய் திசை ஒருவருக்கு நடந்தால் தைரியம் அதிகரிக்கும். சகோதரரால் நன்மைகள் நடக்கும். செவ்வாய் ரத்தத்திற்கு காரகம். சுபத்துவம் பெற்ற செவ்வாய் மருத்தவம், பொறியியல் படிக்க செவ்வாய் உதவி செய்வார். சீருடை அணியும் அதிகாரம் மிக்க பதவியை தருவார். ஐபிஎஸ், ஐஎப்எஸ் பணியை தருவார். செவ்வாய் வலிமை குன்றியிருந்தால் சாதாரண போலீஸ் வேலை செய்வார்.

உலக தற்கொலை விழிப்புணர்வு தினம்: தற்கொலையை தூண்டும் கிரகங்களை தடுக்கும் சூரியன்உலக தற்கொலை விழிப்புணர்வு தினம்: தற்கொலையை தூண்டும் கிரகங்களை தடுக்கும் சூரியன்

நன்மை தரும் செவ்வாய் தசை

நன்மை தரும் செவ்வாய் தசை

ஆண் தன்மையுள்ள கிரகமான செவ்வாய் யாருக்கெல்லாம் நன்மை தீமை செய்யலாம் என பார்க்கலாம். செவ்வாய் கடகம், சிம்மம், தனுசு, மீனம் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு நன்மையை மட்டுமே செய்வார். நட்பு கிரகங்கள் நன்மை மட்டுமே செய்யும். செவ்வாய் இவர்களுக்கு நண்பர். தன்னுடைய திசையில் நன்மை செய்வார்.

சாதகம் பாதகம் தரும் செவ்வாய்

சாதகம் பாதகம் தரும் செவ்வாய்

மேஷம், விருச்சிகம் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் கோபப்படுத்துவார். தனக்கு தானே எதிரியாகிறார். மேஷத்தில் பிறந்தவர்களுக்கு விருச்சிகம் எட்டாமிடம். விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு மேஷ லக்னம் ஆறாவது இடம் கடன் நோய் உள்ள இடம் எனவேதான் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏழு ஆண்டுகளில் சாதக பாதகங்களைத் தருவார் செவ்வாய் பகவான்.

இல்லறத்தில் செவ்வாய்

இல்லறத்தில் செவ்வாய்

திருமண பொருத்தத்தில் செவ்வாயின் பங்கு முக்கியமானது. ஆண் ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக அமைந்திருந்தால் இல்லற சுகத்தில் வீரியத்துடன் செயல்பட முடியும். பெண் ஜாதகத்தில் பூப்படைதல், மாதவிடாய், உறவில் இன்பம், பாலுணர்வு போன்றவற்றைத் தூண்டக்கூடியவர். ஆகையால்தான் மறைமுகமாக தோஷம் என்ற பெயரில் திருமணப் பொருத்தத்தில் செவ்வாய்க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமண பந்தத்தில் இருவரின் உடல் சேர்க்கையே வம்சம் விருத்தியடைய முக்கியமானது. இருவருக்கும் அந்த இச்சையை தருவதில் செவ்வாய் உதவுகிறார்.

பத்தாம் வீட்டில் செவ்வாய்

பத்தாம் வீட்டில் செவ்வாய்

ஒருவர் எந்த உத்யோகத்தில் இருந்தாலும் அவரை உயர்நிலைக்கு கொண்டுவரும் ஆற்றல் செவ்வாய்க்குரியதாகும். லக்னத்திற்கு பத்தாம் இடமான ஜீவன ஸ்தானத்திற்கு செவ்வாயின் தொடர்பு ஏற்பட்டால் அதாவது, பத்தாம் வீட்டில் செவ்வாய் இருப்பது அல்லது பார்ப்பது, பத்தாம் அதிபதியுடன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை பெற்று இருப்பது உத்யோகத்திற்கு பலம் தரும் அமைப்பாகும். காலாகாலத்தில், முயற்சி செய்த உடனேயே நல்ல வேலை கிடைத்துவிடும். அவரவர் கல்வித்தகுதி, அனுபவத்திற்கேற்ப அரசு அதிகாரியாக வரும் யோகம் உண்டு. தலைமைப் பொறுப்பு, கெஜட்டட் ஆபீஸர் அளவிற்கு உயர்வு உண்டாகும்.

செவ்வாய் தரும் நன்மை

செவ்வாய் தரும் நன்மை

மேஷம், கடகம், துலாம், மகரம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய எட்டு லக்கினங்களுக்கு மட்டுமே ருச்சிக யோகம் செயல்படும். செவ்வாய் பலம் பெறும் நிலையில், அவரது தசையில் அவரின் காரகத்துவங்கள் வெளிப்படும். உபய லக்கினங்களான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றுக்கு ருச்சிகயோகம் கிடையாது. பலம் பெற்ற செவ்வாய், ஒருவருக்கு உடல் ஆரோக்கியத்தையும், வலுவான உடலையும், உடற்பயிற்சி செய்யும் ஆர்வத்தையும் தருவார். விளையாட்டு, மருத்துவம் போன்ற துறைகளில் ஒருவருக்கு ஈடுபாடு வரக் காரணம் செவ்வாய்தான்.

ரொம்ப கோபக்காரர்

ரொம்ப கோபக்காரர்

பொதுவாக செவ்வாய் வலுப்பெற்று லக்கினத்தோடு சம்பந்தப்படும் நிலையில் ஜாதகர் மிகவும் கோபக்காரராக இருப்பார். லக்கினத்தில் வேறு பாபக் கிரகங்களும் சேர்ந்தால் மிகவும் கடுமையான வார்த்தைகளைப் பேசுவார். பலம் பெற்ற செவ்வாய் கோபப்படுத்துவார். வலுப் பெற்ற செவ்வாய், ஒருவரை அறுவைச் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற வைப்பார். இதே செவ்வாய் பகை, நீசம் பெற்றிருந்தால் அடிதடி செய்யும் ரவுடி தொழில் செய்ய வைப்பார்.

தொழில் ஸ்தானம்

தொழில் ஸ்தானம்

மேஷ லக்கினத்தில் ஆட்சி பெறும்போது நான்கு, ஏழு, மற்றும் எட்டாமிடங்களைத் தன் சிறப்புப் பார்வைகளால் பார்வையிட்டு நல்ல பலன்களைத் தருவார். லக்கினத்தில் சுப வலுவுடன் இருக்கும் செவ்வாய், ஜாதகருக்கு நல்ல ஆரோக்கியம், உடற்பயிற்சி செய்யும் ஆர்வம், உடலை நல்லமுறையில் பராமரித்தல் ஆகியவற்றை ஜாதகருக்குத் தருவார். மேஷத்துக்கு செவ்வாய் பத்தாமிடத்தில் உச்சம் பெறுகிறார். விருச்சிக லக்கினத்துக்கு ருசக யோகம் அமைந்தால் ஜாதகர் முன்கோபக்காரராகவும், நேர்மையானவராகவும் இருப்பார். செவ்வாய் தசையில் பூமி லாபம், மருத்துவம், விளையாட்டு, ராணுவம் போன்றவற்றில் பணிபுரிந்து பெயரும் புகழும் பெறுவார்.

யோகமும் தோஷமும்

யோகமும் தோஷமும்

ரிஷப லக்கினத்துக்கு செவ்வாய் ஏழாமிடத்துக்கு அதிபதியாகி விருச்சிகத்தில் ஆட்சி பெற்று செவ்வாய் தோஷம் ஏற்படும். இங்கு ஆட்சி பெறும் செவ்வாய், ஜீவன ஸ்தானமான பத்தாமிடம், லக்கினம், மற்றும் குடும்பஸ்தானமான இரண்டாமிடத்தை பார்வையிடுகிறார். துலாம் லக்கினத்துக்கு, அதன் லக்கினாதிபதி சுக்கிரனுக்கு எதிரி செவ்வாய். நான்கில் உச்சம் பெற்றும், ஏழாமிடத்தில் ஆட்சி பெற்றும் ருசக யோகத்தைத் தருவார். ஏழாமிடத்தில் ஆட்சி பெறும் நிலையில், அவர் பத்தாமிடத்தையும், லக்கினத்தையும், அவரது வீடான இரண்டாமிடத்தையும் பார்ப்பார். நல்ல தொழில் அமைத்துத் தருவார். பெரும்பாலும் சீருடை அணியும் துறைகளில் ஜாதகரை பணிபுரிய வைப்பார். இந்த அமைப்பால் ஜாதகருக்கு நிலையான பொருளாதார வசதி, வருமான வாய்ப்பு கிடைக்கும்.

பூரண ராஜயோகம்

பூரண ராஜயோகம்

கடகத்தின் பூரண ராஜ யோகாதிபதியான செவ்வாய், இந்த லக்கினத்துக்கு பத்தாமிடமான மேஷத்தில் திக்பலம் பெற்றும், ஏழாமிடத்தில் உச்சம் பெற்றும் இரண்டு இடங்களில் வலுப்பெற்று ருசக யோகம் அளிப்பார். தன் வீட்டில் ஆட்சி பெற்ற நிலையில், தனது இன்னொரு வீட்டையும் பார்க்கும் ஒரே கிரகம் செவ்வாய் மட்டுமே. மேலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது வீட்டைப் பார்க்கும் கிரகம் அந்த பாவத்தை வலுப்படுத்தும் என்பதால், செவ்வாயின் இரண்டு வீடுகளும் இதனால் பலம் பெறும். சிம்ம லக்னகாரர்களுக்கு செவ்வாய் ஏழாம் பாவத்தை பார்த்தாலும் கெடுதல் செய்யமாட்டார். காரணம் செவ்வாய் இந்த லக்கினத்துக்கு சுபர் என்பதால் இந்த லக்னத்தில் இருந்து ஏழாம் பாவத்தைப் பார்த்தாலும் திருமண வாழ்வைக் கெடுக்கமாட்டார். நன்மைகளையும் லாபத்தையும் தருவார்.

விருச்சிகம்

விருச்சிகம்

துலாம் லக்கினத்துக்கு, அதன் லக்கினாதிபதி சுக்கிரனுக்கு எதிரி செவ்வாய். நான்கில் உச்சம் பெற்றும், ஏழாமிடத்தில் ஆட்சி பெற்றும் ருச்சக யோகத்தைத் தருவார். ஏழாமிடத்தில் ஆட்சி பெறும் நிலையில், அவர் பத்தாமிடத்தையும், லக்கினத்தையும், அவரது வீடான இரண்டாமிடத்தையும் பார்ப்பார்.
தனது காரகத்துவங்களில் தொழில் அமைத்துத் தருவார். பெரும்பாலும் சீருடை அணியும் துறைகளில் ஜாதகரை பணிபுரிய வைப்பார். இந்த அமைப்பால் ஜாதகருக்கு நிலையான பொருளாதார வசதி, வருமான வாய்ப்பு கிடைக்கும்.

வெற்றி தரும் ருச்சிக யோகம்

வெற்றி தரும் ருச்சிக யோகம்

மகர லக்கினத்தில் உச்சம் பெறும் செவ்வாய் ருச்சிக யோகம் அமையப்பெற்றால் ஜாதகர் அவசர புத்திக்காரராக இருப்பார். பொறுமை என்பதே இருக்காது. கடுமையான போக்குடைய அதிகாரியாகத் திகழ்வார். உச்சம் பெற்ற செவ்வாய் சுபர் பார்வை பெறுவது நல்லது. இல்லாவிட்டால், ரொம்ப கடுமையாக சிடுசிடுப்பாக நடந்து கொள்வார். சுபர் பார்வை பெற்றிருந்தால் ஜாதகர் தானிருக்கும் இடத்தில் மற்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்வார். கும்ப லக்னத்திற்கு பத்தாமிடமான விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சி பலம் பெற்றிருந்தால் இந்த ருசக யோகம சிறப்பானதாக அமைந்திருக்கும். ஜாதகர் ஆளுமைத்திறமை கொண்டவராக புகழ் பெறுவார். காவல்துறை,ராணுவம், மருத்துவதுறையில் சாதனை படைத்தவர்கள் இந்த யோகம் பெற்றவர்கள்தான்.

English summary
Ruchaka Yoga – This is the first among Panch Mahapurush Yoga. This yoga takes place when the Mars is strong and placed in the Cardinal house of a vedic astrology birth chart. The Mars owns Aries and Scorpio zodiac sign and is exalted in Capricorn zodiac sign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X