• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீரமும் சொந்த வீடும் அமைய பூமி புத்திரன் செவ்வாயின் அருள் அவசியம் - உங்க ஜாதகம் எப்படி

|

சென்னை: சரித்திரத்தில் அழியாப் புகழ் பெற்ற பல மாமன்னர்கள், சர்வாதிகாரிகள், மாவீரர்கள் ஆகியோர் செவ்வாயின் தீவிர ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தான். செவ்வாய் வீரமான கிரகம். ரத்தகாரகன். அண்ணன் தம்பிகள், சகோதர சகோதரிகளின் பாசத்திற்குக் காரணம் இந்த செவ்வாய்தான்.

ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்ற நபருக்கு, உயிரைக் கொடுக்கும் அளவுக்கு விசுவாசிகள் கிடைப்பார்கள். மனத் துணிவு மிகுந்தவராக இருப்பார். ராணுவம், போலீஸ் துறையில் இருப்பவர்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்கக்கூடும். அரசாள்பவர்களையே, அஞ்சாமல் கேள்வி கேட்கும் மனதைரியம் கொண்டவர்களாக இருப்பர். அரசியலில் பெரிய பதவிகள் தேடி வரும். சகோதரர் மற்றும் பங்காளிகளின் ஆதரவு பக்கபலமாக இருக்கும். ஒருவர் மருத்துவத் துறையில் நற் பெயர் எடுப்பதற்கு காரணமும், செவ்வாய் கிரகம்தான்.

செவ்வாய்க்கு மங்களன் என்றும் ஒரு பெயர் உண்டு. செவ்வாய்க்கிழமையை சரியில்லாத நாள் என்று அறவே ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய்க்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் பூமாதேவியின் அம்சமாவார். ஆகையால்தான் இவரை பூமிகாரகன், அங்காரகன் என சாஸ்திரம் சொல்கிறது. செவ்வாயின் ஆதிக்கம் உள்ள நாட்களில் செவ்வாய்க்கிழமை, மிருகசீரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திர நாட்கள், 9, 18, 27 ஆகிய தேதிகளில் சில விஷயங்களை தாராளமாகச் செய்யலாம். சொத்து வாங்குவது, விற்பது பற்றி பேசலாம். நிலம், தோட்டம் போன்றவற்றை பார்வையிடலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம்.

செவ்வாய்க்கிழமை மங்களமான நாள். இந்த நாளை தவிர்க்க வேண்டும் என்று எந்த வேத சாஸ்திர, ஜோதிட, ஆன்மிக வழிகாட்டி நூல் எதிலும் குறிப்பு இல்லை. கிழமை என்ற சொல்லுக்கு உரிமை என்று பொருள். வடநாட்டில் மங்கல நிகழ்ச்சிகளை செவ்வாய்க்கிழமையில்தான் மேற்கொள்கிறார்கள். அவர்கள் இந்த நாளை மங்கள்வார் என்கின்றனர். இந்நாளில் சுபநிகழ்ச்சிகளைச் செய்வது, ஆரம்பிப்பது யோகத்தை விருத்தி செய்யும் என காலம் காலமாக கடைபிடிக்கிறார்கள்.

செவ்வாய் காரகம்

செவ்வாய் காரகம்

ஒருவருக்கு பூமி, நிலம், சொத்து, தோப்பு, எஸ்டேட், தோட்டம் போன்ற செல்வ செழிப்பு கிடைக்க வேண்டுமென்றால் அது செவ்வாயிடம்தான் இருக்கிறது. செவ்வாய் தசை நடைபெறும்போது சொத்து வாங்கினால் மூன்று தலைமுறைக்கு கைமாறாது என்று சொல்வார்கள். செவ்வாய், வருவாய் தரும் என்பது நிதர்சனமான உண்மை. திருமண விஷயத்தில் செவ்வாயின் பங்கு மிக முக்கியமானது. நம் உடம்பில் ரத்தம், வெப்பம், உணர்ச்சி, ஆண்மை ஆகியவற்றிற்கு செவ்வாயே அதிபதி. பெண்கள் பூப்படைதல், மாதவிடாய், கருமுட்டை வளர்ச்சி, சகோதரம், உத்தியோகம் போன்றவற்றிற்கெல்லாமும் செவ்வாயே அடிப்படை காரணம்.

யுத்தக்கடவுள் செவ்வாய்

யுத்தக்கடவுள் செவ்வாய்

சகோதரர்களிடையே மனவருத்தங்கள், பிரச்னைகள் இருந்தால் சமாதான பேச்சு தொடங்கலாம். புதிய வேலையில் சேரலாம். வீடு மாறி, பால் காய்ச்சலாம், வாங்கிய கடனை அடைக்கலாம், காலையில் விநாயகரையும், மாலையில் முருகப்பெருமானையும் வழிபடலாம். செவ்வாய்க்கிழமை செய்கின்ற காரியங்கள் நிலைத்து நின்று பலன் தரும் என்பது அனுபவபூர்வ உண்மையாகும். புராதன யுத்தக் கடவுள் என செவ்வாயைப் போற்றி வணங்குகிறார்.

நவகிரகங்களில் செவ்வாய்

நவகிரகங்களில் செவ்வாய்

செவ்வாய் பகவான் பரத்வாஜ முனிவரின் மகனாகப் பிறந்து பூமாதேவியால் வளர்க்கப்பட்டதால் அங்ககாரகன் என்றும், அதுவே சுருக்கமாக அங்காரகன் என்றும் அழைக்கின்றனர். நவக்கிரகங்களில் மூன்றாவதாக குறிப்பிடப்படுபவர். இவருக்கு சக்திதரன், குமாரன், மகாகாயன், மங்கலன், தனப்பிரதன், லோகிதாங்கன், ரத்தாயதேஷணன், ரத்தர்ணன், ஹோமகுண்டலி, ரோகநாசனை, ரக்தவஸ்ரன் என்ற பிற பெயர்களும் உண்டு. செவ்வாய் கிரகத்துக்கு மாலினி, சுசீலின் என்று இரண்டு மனைவிகள் உண்டு.

செவ்வாய் வழிபட்ட தலங்கள்

செவ்வாய் வழிபட்ட தலங்கள்

செவ்வாய் கிரகத்தை பலரும் கடவுளாக வணங்குகின்றனர். அவ்வாறு வணங்கினால் தைரியமும், அரச சபையில் பேசும் ஆற்றலும், தோள் வலிமையும், போரில் வெற்றியும் கிடைக்கும். செவ்வாய் என்று நாம் குறிப்பிடும் அங்காரக பகவான் பூசித்த தலங்கள் பல. அவற்றுள் திருச்சிறுகுடி, வைத்தீஸ்வரன் கோவில், பழனி முக்கியமானவை. வைத்தீஸ்வரன்கோயில் சென்று செவ்வாயை வழிபட செவ்வாயின் தீய தசாபுத்தி நடப்பவர்கள் அது நீங்கி சுகம் பெறலாம். மயிலாடுதுறையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. செவ்வாய்க்கிழமை தோறும் அங்காரகன் இரவில் ஆடு வாகனத்தில் வலம் வந்து ஆண்டவனை வணங்குவதாக கூறப்படுகிறது.

செவ்வாய் தோஷ பாதிப்பு

செவ்வாய் தோஷ பாதிப்பு

ஜாதகத்தில் செவ்வாய் நல்ல இடத்தில் அமைந்திருந்தால், அங்காரகன் கடன் தொல்லையின்றி, பூமியையும், செல்வத்தையும், வாகன யோகம் மற்றும் புகழையும் அள்ளிக்கொடுப்பார். செவ்வாய் தோசம் வந்தால் சகோதர, சகோதரிகளின் வெறுப்புக்கு ஆளாகுதல், வேலைக்காரர்களால் அவமானப் படுதல், பூர்வீக பூமியை விற்று, குடி, சூது, பெண் என்று அலைதல் போன்றவைகளுக்கும் காரணமாகி விடும். குடியிருக்க வசதியான வீடு கூட, செவ்வாய் தோசம் வந்தால் அமையாது.

 தோஷம் நீங்க பதிகாரம்

தோஷம் நீங்க பதிகாரம்

செவ்வாய் தோஷத்தை நீக்குவதற்கு செவ்வாய்க் கிழமைகளில் வள்ளலாரின் ‘தெய்வமணிமாலை', குமர குருபர சுவாமிகள் எழுதிய திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, அருணகிரி நாதரின் திருப்புகழ், குறிப்பாக கந்தரலங்காரம், பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம், கவிதேவராயன் எழுதிய கந்தர்சஷ்டி கவசம் போன்றவைகளை பாராயணம் செய்யலாம். நவக்கிரகங்களின் சன்னதியில் செவ்வாய் ‘காயத்ரி' மந்திரத்தை 36 முறை உச்சரித்து 9 முறை வலம் வருதலும் செவ்வாய் தோஷத்தின் கடுமையைக் குறைக்கும். துர்க்கையை வழிபட்டு வந்தாலும் செவ்வாயின் அருள் பெறலாம். விஷ்ணு சகஸ்ரநாமம் ஞாயிறு நண்பகல் பாராயணம் செய்து சர்க்கரை பொங்கல் விநியோகம் செய்தால் செவ்வாய் தோஷம் விலகும்.

விபத்தினால் மரணம்

விபத்தினால் மரணம்

செவ்வாய் தான் ஒரு நபரின் உடலில் ஏற்படும் ரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் காரணம். பிறரின் ரத்தம் மூலம் வரக்கூடிய நோய்களுக்கும் இவரே மூலகாரணம். ஒருவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே இல்லாமல் போவதற்கு முக்கிய காரணம் செவ்வாய். ஒருவரது நோய் தன்மை, அதன் வீரியம் பற்றி உணர வைப்பது செவ்வாய் கிரகம் தான். இவர் தான் விபத்து நடப்பதற்கும், விபத்தால் ரத்தம் வெளியேறி மரணம் ஏற்படவும் காரணமானவர்.

ரத்தத்தினால் நோய்கள்

ரத்தத்தினால் நோய்கள்

ரத்தசோகை, ரத்த புற்றுநோய், மஞ்சள் காமாலை, காரசாரமான உணவுகளால் உண்டாகும் நோய்கள், உடல் மெலிவு, கல்லீரல் மூலம் உண்டாகும் நோய், கெட்டுப்போன உணவால் ஏற்படும் நோய்கள், மருந்துப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு, தவறான சிகிச்சையால் மரணிப்பது போன்ற நோய்களுக்கும் செவ்வாயே காரணகர்த்தாவாக திகழ்கிறார். செவ்வாய் பகை ராசியான மிதுனம், கன்னி ஆகிய ராசிகளில் நின்றிருந்தால், ரத்த சோகை, உடலில் போதுமான ரத்தம் இல்லாமல் இருப்பது, உடல் சோர்வு போன்ற நோய்கள் உண்டாகும். தோல் அரிப்புகள் இருக்கும். இந்த ஜாதகர் சகோதர்களிடம் இணக்கம் இல்லாமல் இருப்பார்.

புற்றுநோய் தாக்கும்

புற்றுநோய் தாக்கும்

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் கடகத்தில் நீச்சம் பெற்று நின்று இருந்தால், பல நோய்களுக்கு ஜாதகரே மூலக்காரணமாக இருப்பார். மூச்சுக் கோளாறுகள் வரலாம். புதன், ராகுவோடு இணைந்து இருந்தால், புற்று நோய்கள் வரலாம். ரத்தத்தில் விஷக் கிருமிகள் உண்டாகும். நரம்புகளில் ரத்த அடைப்பு வரலாம். இவர்களது சகோதரர்களுடன் சண்டை சச்சரவுகள் வைத்துக் கொண்டே இருப்பார்கள். செவ்வாய் பகைக் கிரகமான புதன், ராகு ஆகிய கிரங்களின் நட்சத்திர பாதத்தில் நின்றிருந்தால், தோல் நோய்கள் வரலாம்.

நம்பிக்கை துரோகம்

நம்பிக்கை துரோகம்

செவ்வாய் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடத்தில் இருந்தால், அந்த ஜாதகர் செய்யும் கெட்ட பழக்க வழக்கத்தால் நோய்கள் வரக்கூடும். தெரிந்தோ தெரியாமலோ பிறரது தொற்று நோய் தாக்கக்கூடும். பூமி, மனை, காடு, தோட்டம் சிக்கல் தரக்கூடும்.

செவ்வாய் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங் களுக்கான அதிபதியுடன் இணைந்து இருந்தாலோ அல்லது இதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ அந்த ஜாதகருக்கு நரம்பு தளர்ச்சி வரும். ஜாதகரின் சகோதரர்கள் நம்பிக்கை துரோகம் செய்வார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
The aggressive planet of Mars is ruled by Fire, and is also called as the Agni Soochak. In many references in Vedic Astrology, Mars is also addressed as the Bhoomi Putra the son of the mother Earth.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more