• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செவ்வாய் பெயர்ச்சி 2019: கன்னி ராசியில் சூரியன்,சுக்கிரன் உடன் இணைவதால் எந்த ராசிக்கு நன்மை

|
  25-09-2019 இன்றைய ராசி பலன் | Astrology | Rasipalan | Oneindia Tamil

  சென்னை: செவ்வாய் ராஜ கிரகம் செப்டம்பர் 25ஆம் தேதியன்று சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். நவம்பர் 10ஆம் தேதி வரை கன்னி ராசியில் சஞ்சாரம் செய்கிறார். மேஷத்திற்கு ஆறாம் வீட்டிலும் விருச்சிகத்திற்கு லாப ஸ்தானத்திலும் செவ்வாய் அமர்கிறார். சனியோட பார்வை செவ்வாயின் மீது விழுகிறது. செவ்வாய் நான்காம் பார்வை தனுசு ராசியில் உள்ள கன்னி ராசியின் மீது விழுகிறது. செவ்வாய் ஏழாம் பார்வையாக மீனம் ராசியை பார்க்கிறார். எட்டாம் பார்வையாக தனது ராசியான மேஷத்தை பார்க்கிறார். இந்த பெயர்ச்சியாலும் செவ்வாயின் பார்வையாலும் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

  மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்கு அதிபதி செவ்வாய். மகரத்தில் உச்சமடையும் செவ்வாய் கடகம் ராசியில் நீசமடைகிறார். காலபுருஷ தத்துவத்தில் செவ்வாய் முதல் மற்றும் எட்டாம் அதிபதி. நவகிரகங்களில் செவ்வாய் பூமிக்கு அதிபதி. செவ்வாய் சகோதர காரகன். சகோதர, சகோதரிகள், சகோதர வழி உறவுகள், தந்தைவழி உறவுகள். செவ்வாய் ரத்தக்காரகன். செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் வலிமையாக இருந்தால் அவருக்கு காவல்துறை , தீயணைப்புத்துறை போன்ற யூனிபார்ம் சர்வீஸ் வேலை அமையும்.

  செவ்வாய் சிவந்த நிறம் கொண்டவர் என்பதால் சிகப்பு நிறத்திற்கு இவரே அதிபதி ஆகிறார். பவளம், துவரம் பருப்பு, பூமி காரகன் என்பதால் மண்ணில் செய்யக் கூடிய விஷயங்கள் மண்ணால் செய்யக் கூடிய மண் பாண்டங்கள், நெருப்பு சம்பந்தமான வேலைகளுக்கு காரகர். செவ்வாய் ரத்தகாரகர் என்பதால் ரத்தம் சம்பந்தப்பட்ட மருத்துவ விஷயங்கள், ஆயுதம் சம்பந்தப்பட்டவைகள், ராணுவம், வீரியம், ராணுவத் தலைமை, கிரானைட், கிரஷர், ஜல்லி, அதிகாரம், ஆணவம், சகோதர, சகோதரிகள், சகோதர வழி உறவுகள், தந்தைவழி உறவுகள். போர், கலகம், தைரியம் பொய்,வன்முறை,உற்சாகம்,திடீர் மரணம்,ரண நோய் ஆகியவற்றிற்கு செவ்வாயே காரகர்.

  மேஷம்

  மேஷம்

  உங்க ராசி அதிபதி ஆறாம் வீட்டில் அமர்வது நன்மை. நீங்கள் எதிரிகளை தைரியமாக எதிர்கொண்டு வெல்வீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை. நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். காதலில் வெல்வீர்கள் பாஸ். சட்ட போராட்டங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம் சற்று பலவீனமடையும். சேர்த்து வைத்த பணத்தை பத்திரப்படுத்துங்கள். கடன் நோய்கள் தொல்லை தீரும். உங்களின் முகப்பொலிவு அதிகரிக்கும். கடன்கள் கேட்ட இடத்தில் கிடைக்கும். எதிரிகளை அடையாளம் கண்டு ஓட ஓட விரட்டுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்த தொல்லைகள் தீரும். செவ்வாய்கிழமை முருகனை வணங்க நன்மைகள் நடக்கும்.

  ரிஷபம்

  ரிஷபம்

  செவ்வாய் உங்கள் ராசிக்கு 5வது இடத்தில் அமர்ந்துள்ளார். எதிர்ப்புகள் வலுக்கும். ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் உடல் நலனில் பிரச்சினை வரலாம். மனசு அமைதியை இழக்கும். நிதானம் அவசியம். பங்குச் சந்தையில் உங்களுக்கு சந்தோஷ செய்தி கிடைக்கலாம். அமைதியா இருங்க. பொறுமையாக எதையும் கையாளுங்கள். பிள்ளைகளின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். செவ்வாய் சுக்கிரன் இணைவு கவனமாக இருக்கவும். உங்களுக்கு இந்த பெயர்ச்சியால் டென்சன் கூடும். பிள்ளைகள் விசயத்தில் கவனமாக இருங்க. உங்க காதல் விசயத்தில் கவனமாக இருங்க. எதிரிகள் தொல்லை கூடும். பொருளாதார நிலையில் கவனமாக இருங்க. செலவுகள் அதிகமாக இருக்கும். பணத்தை எண்ணி செலவுபண்ணுங்க. செவ்வாய்கிழமை தாமிரபாத்திரம் வாங்கி யாருக்காவது தானம் கொடுங்க.

   மிதுனம்

  மிதுனம்

  உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். எதிர்பாலினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வரை போகலாம். வாயைக் கட்டுவது நல்லது. திருமண வாழ்க்கையில் உரசல்கள் ஏற்படலாம். உடல் நலப் பிரச்சினைகளுக்கு வாய்ப்புண்டு. வேலையில் உயர்வு காணப்படும். மனைவி அல்லது கணவருக்கு பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். வீடு, மனைகளை வாங்கும் யோகம் கைகூடி வரும் கவனமாக பார்த்து வாங்கவும். வீட்டில் சின்னச் சின்ன சண்டைகள் வரலாம். பேச்சில் கவனமாக இருங்க. சுற்றுப்புற சூழ்நிலை கொதிநிலையாகவே இருக்கும். வண்டி வாகனத்தை கவனமாக பாத்துக்கங்க இல்லாட்டி முக்கியமான நேரத்தில காலை வாரி விடும். சின்ன சின்ன விபத்துகளும் ஏற்படும் மருத்துவ செலவுகளும் வரும். செவ்வாய்பகவானுக்கு சிவப்பு ஆடை சாற்றி வணங்க நன்மைகள் நடக்கும்.

  கடகம்

  கடகம்

  உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் நுழைந்திருக்கிறார் செவ்வாய். முயற்சிகள் வெற்றியடையும் உங்கள் உடல் நலம் மேம்படும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பொருளாதாரம் மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களுக்கு வாய்ப்புண்டு. வேலையில் உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும்.முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி தேடி வரும். செய்யும் தொழிலில் வெற்றி தேடி வரும் வியாபாரம் அபிவிருத்தி ஆகும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கவேண்டாம். உங்க சகோதரர் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். இளையசகோதரர்களிடம் வம்பு வழக்கு வேண்டாம், பேச்சுவார்த்தையில் கவனம் தேவை. விட்டுக்கொடுத்து போங்க இல்லாட்டி வீண் வாக்குவாதம் பிரிவினையை ஏற்படுத்தும், வேலை செய்யும் இடத்திலும் கவனமாக இருங்க. இந்த மாதம் செவ்வாய் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு நிறைய நேர்மறை சக்திகளை அதிகரிக்கும். தினசரியும் ஹனுமன் ஸ்லோகம் படிக்கவும்.

  சிம்மம்

  சிம்மம்


  உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் செவ்வாய் நுழைந்துள்ளார். ஏற்கனவே வாக்கு ஸ்தானத்தில் உள்ள சூரியனுடன் கூடவே செவ்வாய் இணைவதால் உஷ்ணமான பேச்சை ஏற்படுத்துவார். குடும்ப செவ்வாயினால் சில குழப்பங்கள் வரும் கணவன் மனைவிக்குள் மோதல் மூளும் வாய்ப்புகள் உள்ளன. பிசினஸில் ஈடுபட்டுள்ளோருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். குழந்தைகளின் உடல் நலனில் கவனம் தேவை. கணவர் அல்லது மனைவி அல்லது பெற்றோரில் யாராவது ஒருவருக்கு உடல் நலக் குறைபாடுகள் ஏற்படலாம் வேலையில் பிரச்சினை வர வாய்ப்புள்ளது. கவனமாக இருப்பது நல்லது.

  செவ்வாய்கிழமை சிவப்பு நிற ஆடைகளை தானமாகக் கொடுங்கள் நன்மைகள் நடக்கும்.

  கன்னி

  கன்னி

  செவ்வாய் உங்கள் ராசியில் நுழைந்திருக்கிறார். கோபம் அதிகரிக்கும். உடல்நலம் பாதிக்கப்படலாம். உங்களின் ஆளுமைத்திறனால் மற்றவர்களை அடக்கி ஆளுவீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு ராஜயோகம் வரப்போகிறது. உங்களின் செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். நான்காம் வீட்டை பார்ப்பதால் வீடு நிலம் வாங்குவதற்கு நல்ல தருணம். அதேசமயம் பத்திரங்களை வில்லங்கம் சரிபார்த்து வாங்கவும். இல்லாவிட்டால் யாருடனவாவது சண்டை மூள வாய்ப்புள்ளது. ஏழாம் பார்வையாக உங்கள் களத்திர ஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பதால் திருமணம் கைகூடி வரும் காலமாகும். காதல் வாழ்க்கையும் உற்சாகத்தை தரும். எட்டாம் வீட்டை எட்டாம் பார்வையாக பார்ப்பதால் மன அழுத்தம் ஏற்படலாம். வாகனங்களை ஓட்டும்போது கவனம் தேவை. மனைவியுடன் சண்டை வருமாம், கவனம் ப்ளீஸ். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழில் பார்ட்னர்களுடன் இருந்த சிக்கல்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். இந்த சூழ்நிலையில் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு கடல் பயணம், விமானம் பயணம் மேற்கொள்வீர்கள். நல்ல காலம் பிறந்து விட்டது வெள்ளி நடைபோடுங்கள். செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வர நன்மைகள் அதிகம் நடைபெறும்.

  துலாம்

  துலாம்

  செவ்வாய் உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் அமர்ந்துள்ளார். திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன சண்டை வரலாம். மனைவியுடன் வாக்குவாதத்திற்கு வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்லும் யோகம் கூடும். அல்சர் போன்ற உபாதைகளுக்கு வாய்ப்புண்டு. உறக்கம் கெடும் இதனால் மன அமைதி கெடும். காயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், கவனம் தேவை. செவ்வாய்கிழமை முருகனை வணங்குங்கள்.இது உங்களுக்கு விபரீத ராஜயோக காலமாகும். உங்கள் ராசிக்கு 12ஆம் அதிபதியும் ஏழாம் அதிபதியுமான செவ்வாய் உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் அமர்ந்து உள்ளதால் பணமழை பொழியப்போகிறது. கூடவே செலவுகளும் எட்டிப்பார்க்கும். மருத்துவ செலவுகள், வண்டி வாகனங்களினால் செலவுகள் வரும். உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தை நான்காம் பார்வையாக பார்க்கிறார் செவ்வாய். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டை ஏழாம் பார்வையாக பார்ப்பதால் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வங்கிகளில் லோன் கிடைக்கும்.

  விருச்சிகம்

  விருச்சிகம்

  உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளதால் நிறைய பலன்களை எதிர்பார்க்கலாம். கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பு உயரும். மனைவியுடன் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சொத்துப் பிரச்சினைகள் தீரலாம். அடுத்த 6 வாரங்களுக்கு உங்களுக்கு யோகம்தான். உங்கள் ராசிக்கு லாப ஸ்தான அதிபதியான செவ்வாய் லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் பிரச்சினைகள் தீரும். பணவரவு அதிகரிக்கும். செவ்வாய்கிழமையன்று சிவப்பு நிற மலர்களால் அனுமன் கோவிலுக்கு சென்று வணங்கி வரலாம். முன்னோர்கள் சொத்துக்களை விற்பனை செய்வதில் கவனம் தேவை. குழந்தைகளுக்கு நன்மைகள் நடைபெறும் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவும். செவ்வாய்கிழமையன்று துர்க்கா தேவியை செவ்வரளி பூக்களைக் கொண்டு வணங்க நன்மைகள் நடைபெறும்.

  தனுசு

  தனுசு

  உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு அதிகம். உயர் பதவிகளை அடைவீர்கள். பொறுப்புகள் கூடும். பிரச்சினைகளை விட்டு தள்ளியே நில்லுங்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. பத்தாம் வீட்டில் செவ்வாய் அமர்வது ராஜயோகம் வரும் காலம். நல்ல நேரம் வந்து விட்டது. அரசு பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினருக்கு நன்மைகள் நடைபெறும் காலம். உறவினர்களிடம் உற்சாகமாக இருப்பீர்கள். அம்மா வழி உறவினர்கள் அன்புடன் இருப்பார்கள். வீடு வாசல் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். செவ்வாய்கிழமைகளில் துவரை தானமாக கொடுக்க நன்மைகள் நடக்கும்.

  மகரம்

  மகரம்

  உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் அமர்வது நன்மைகள் நடைபெறும் காலமாகும். வேலையில் மாற்றம் ஏற்படலாம். பொருளாதாரம் வலுப்பெறும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் தேவை. பிசினஸில் பெரிய அளவில் லாபம் இருக்காது. வெளியூர் செல்லும் வாய்ப்பு வரும். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். அப்பாவின் சொத்துக்களால் அதிக லாபம் இருக்காது. செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமான வணங்க நன்மைகள் நடைபெறும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வணங்கி வரலாம்.

  கும்பம்

  கும்பம்

  செவ்வாய் இப்போது உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் அமர்ந்துள்ளார். எதிலும் திருப்தி இருக்காது. கடுமையாக உழைக்க நேரிடும். ரத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வாய்ப்புண்டு. கவனம் அதிகம் தேவை. மன அழுத்தம் கூடும். அடுத்த 6 வாரத்தில் எதிர்பாராத லாபம் ஒன்றை சந்திப்பீர்கள். எட்டாம் வீட்டில் செவ்வாய் அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். விபத்துகாரகர் எட்டில் அமர்வதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. சிறு சிறு விபத்துகள் ஏற்படும். இரண்டாம் வீட்டை செவ்வாய் ஏழாம் பார்வையாக பார்ப்பதால் பணம் வரும் வாய்ப்பு ஏற்படும். இளைய சகோதரர்களால் லாபம் ஏற்படும். வியாழக்கிழமைகளில் அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபடவும்.

  மீனம்

  மீனம்


  ராசிக்கு நேர் எதிரில் 7வது வீட்டில் அமர்ந்திருக்கிறார் செவ்வாய். உங்க ராசியை பார்க்கிறார். ஏற்கனவே உங்க ராசியை சனி பார்க்கிறார். கூடவே செவ்வாயும் பார்ப்பதால் மனைவியிடம் வாயைக் கொடுக்காதீர்கள். நேரம் சரியில்லை. சண்டை வரலாம். உடல் நலனில் அக்கறை தேவை. வயிறு உபாதைகளுக்கு வாய்ப்புண்டு. கவனம் தேவை. மன அழுத்தம் அதிகரிக்கலாம். புத்திசாலித்தனமாக நடப்பது உத்தமம். ராசிக்கு ஏழாம் வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளதால் இது ருசக ராஜயோகம். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். உங்களின் பெர்சனாலிட்டி அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். உங்களின் அப்பாவின் உடல் நலனில் அக்கறை செலுத்தவும்.

  செவ்வாய்கிழமை முருகனை வணங்க நண்மைகள் நடக்கும்.

  English summary
  Mars Transit to Kanni rasi conjuction with Sun,Sukhran from 25th September 25th 2019 to Novamber 10,2019.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X