• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செவ்வாய் பெயர்ச்சி 2019: சிம்மத்தில் குடியேறும் செவ்வாய் 12 ராசிக்கும் பலன்கள்

|

சென்னை: கடகத்தில் நீச்சம் பெற்றிருக்கும் செவ்வாய் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் தனது நீச்ச நிலையில் இருந்து சிம்ம செவ்வாயாக சஞ்சரிக்கப் போகிறார். ராஜா சூரியன் வீட்டில் அவரது தளபதி செவ்வாய் அமரப்போகிறார். செப்டம்பர் 25ஆம் தேதி வரை சிம்மத்தில் சஞ்சரிப்பார் செவ்வாய். அப்போது சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களும் செவ்வாய் உடன் கூட்டணி அமைக்கும். இந்த சஞ்சாரம் கூட்டணியாலும் செவ்வாயின் பார்வையாலும் சில ராசிக்காரர்களுக்கு அதீத நன்மை ஏற்படும். செவ்வாய் சஞ்சரிக்கும் இடத்தைப் பொறுத்து சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பும் ஏற்படும்.

செவ்வாய் பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முதலானவற்றுக்கு காரகத்துவம் வாய்ந்தவராகத் திகழ்பவர். செவ்வாய் சிவந்த நிறம் கொண்டவர் என்பதால் சிகப்பு நிறத்திற்கு இவரே அதிபதி ஆகிறார். பூமி காரகன் என்பதால் மண்ணில் செய்யக் கூடிய விஷயங்கள் மண்ணால் செய்யக் கூடிய மண் பாண்டங்கள், நெருப்பு சம்பந்தமான வேலைகள், ரத்தம் சம்பந்தப்பட்ட மருத்துவ விஷயங்கள், ஆயுதம் சம்பந்தப்பட்டவைகள், ராணுவம், பவளம், துவரம் பருப்பு, வீரியம், ராணுவத் தலைமை, கிரானைட், கிரஷர், ஜல்லி, அதிகாரம், ஆணவம், சகோதர, சகோதரிகள், சகோதர வழி உறவுகள், தந்தைவழி உறவுகள். போர், கலகம், தைரியம் பொய்,வன்முறை,உற்சாகம்,திடீர் மரணம்,ரண நோய் ஆகியவற்றிற்கு செவ்வாயே காரகன் ஆவார்.

யுத்த கிரகம் செவ்வாய் தனக்கு பிடித்தமான ராசியான சிம்மத்தில் அமரப்போகிறார். சிம்மராசியில் பிற கிரகங்களுடனான இவரது சேர்க்கை, மிக முக்கியமான பலாபலன்களைத் தரவல்லது. செவ்வாய்பகவானையும் முருகப்பெருமானையும் கந்த சஷ்டி கவசத்தையும் படிக்க நன்மைகள் நடைபெறும்.

மேஷம்

மேஷம்

உங்கள் ராசிக்கு 5வது வீட்டில் நிற்பதால் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாகச் செயல்படுவது நல்லது. சில நாட்களில் சூரியனும் சுக்கிரனும் இணைவதால் கவனம் தேவை. சகோதரியின் கல்யாணத்தைப் போராடி முடிப்பீர்கள். சொத்து விற்பது, வாங்குவதில் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். சின்னச் சின்ன பயணங்கள் செல்வீர்கள். உடல் உபாதைகளும் எதிர்ப்புகளும் ஏற்படும் என்றாலும் அதனை சமாளிக்கும் தைரியம் பிறக்கும். அதிக செலவுகளினால் அவதிகள் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் அதிக எச்சரிக்கை தேவை. குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். குழந்தைகளில் உடல்நலனில் அக்கறை தேவை. வயிறு தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள். வெளி உணவுகளை சாப்பிட வேண்டாம். பிரச்சினைகள் தீர கணபதியை வணங்கவும். கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் செவ்வாய் பகவான் சஞ்சரிக்கிறார். அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள், சொத்து தகராறுகள் வந்து செல்லும். உங்கள் சுக ஸ்தானத்தில் அமர்ந்துள்ள செவ்வாய் பகவானால் வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். தாய் பத்திரங்களை சரிபார்த்து வாங்கவும். செவ்வாய் பகவான் உங்களுக்கு நன்மையே செய்வார். பணம் வரவு அதிகரிக்கும். ஆனால், வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். ஆஸ்துமா, ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். வீடு, நிலம் தொடர்பான பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உடல் உபாதைகள் ஏற்படும். மனதில் சஞ்சலம் பிறக்கும். கடன் தொல்லைகள் அதிகரிக்கும் என்பதால் இந்த கால கட்டத்தில் லட்சுமி நரசிம்மரை வணங்கி வர மனக்குழப்பங்களும், போராட்டங்களும் நீங்கும். ஹனுமன் சாலீசா படியுங்கள். செவ்வாய்கிழமை கந்த சஷ்டி கவசம் படிக்க கவலைகளும் துன்பங்களும் பறந்தோடும்.

மிதுனம்

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களே முயற்சி ஸ்தானமான 3ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கப்போவதால் தைரியமாகவும் தன்னிச்சையாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீட்டுமனை வாங்குவீர்கள். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைத்தும், நண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் வீட்டுக்கதவை தட்டும். மூன்றாம் வீட்டில் இணையப்போகும் கூட்டணியால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மூன்றாம் வீட்டில் செவ்வாய் இருக்க முயற்சிகள் வெற்றியடையும். தைரியம் கூடும். எங்கிருந்தாவது பணம் கொட்டும். பங்குச்சந்தைகள் மூலம் லாபம், மறைமுகமான வருமானம் கிடைக்கும் கால கட்டம் இதுவாகும். வருமானம் அதிகரித்து பாக்கெட்டில் பணம் நிறைய மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வீடு, வாகனம், நிலம் வாங்க ஏற்ற கால கட்டம் என்பதால் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவும். உங்கள் மனைவி நலனில் அக்கறை காட்டுங்கள். தேவையற்ற பேச்சுக்களை குறையுங்கள். இல்லாவிட்டால் திருமண வாழ்க்கையிலும் காதல் வாழ்க்கையிலும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிறுபயணங்கள் நன்மையை ஏற்படுத்தும்.

கடகம்

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் அமரப்போகிறார். இதுநாள் வரை உங்கள் ராசியில் இருந்த செவ்வாய் ராசிக்கு தனம் குடும்பம் வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் அமர்கிறார். பேசும் பேச்சுக்களில் கவனம் தேவை. பங்குச்சந்தை முதலீடுகளில் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்காதீங்க. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களிடமும், அலுவலகத்திலும் கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். உறவுகளிடம் சின்னச் சின்ன சண்டைகள், சச்சரவுகள் ஏற்படும். கலக்கமும், கலவரமும் அதிகரிக்கும். பணம், நகை போன்ற விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். யாரிடமும் கொடுத்து ஏமாந்து போக வேண்டாம். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். கண்களில் பாதிப்பு வரலாம் கவனமாக இருக்கவும். உஷ்ண கிரகங்கள் வாக்கு ஸ்தானத்தில் இணைவதால் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களிடமும், அலுவலகத்திலும் கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். சகோதரர், சகோதரிகளிடம் விட்டுக்கொடுத்து போங்கள். வீண் விவாதங்களை தவிருங்கள். தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும், சிலர் புதிய வீடு ஏன் ஊர் கூட மாற வேண்டிய நிர்பந்தம் கூட ஏற்படும். உறவினர்களுடன் அன்போடும், பாசத்துடனும் பழகுங்கள். அதிக செலவுகளைப் பார்த்து அஞ்ச வேண்டாம் திருப்பரங்குன்றம் முருகனுக்கு செவ்வாய்கிழமைகளில் பாலபிஷேகம் செய்ய நன்மைகள் நல்லதே நடக்கும். கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் நாயகன் சூரியனின் தளபதி செவ்வாய் உங்கள் ராசிக்குள் குடியேறியுள்ளார். உங்களுக்கு ஏதோ பெரிய நோய் இருப்பதைப் போல நீங்கள் உணருவீர்கள். உங்கள் ராசியில் செவ்வாய் அமர்கிறார். உங்களின் அழகு ஆரோக்கியம் அதிகரிக்கும். பேச்சில் உற்சாகம் பிறக்கும் கூடவே கோபமுடம் வரும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் நலத்தில் சிக்கல்கள் வரும் நோய்கள் தலைதூக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அதே போல வேலையிலும் பளு கூடும். அதைப்பற்றி கவலைப்படாமல் வேலையில் கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் உள்ளவர்கள் செய்யும் வேலையில் கவனமாக இருக்கவும். பிரச்சினைகள் வருவது சகஜம்தான் டென்சனாகாமல் இருப்பது நல்லது. செவ்வாய்கிழமைகளில் பயணத்தை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவும்.உங்கள் கருத்துக்கு மதிப்பு மரியாதை கூடும். அப்பா உடனான உறவில் பாசம் கூடும். பழனிமலை ஆண்டவரை படியேறி தரிசனம் செய்ய தீமைகள் விலகி நன்மைகள் அதிகம் நடைபெறும்.

கன்னி

கன்னி

செவ்வாய் உங்கள் ராசியில் 12 வது வீட்டில் சஞ்சரிக்கப்போகிறார். 12வது வீடு விரைய ஸ்தானம். செலவுகள் சும்மா பிச்சிக்கிட்டு போகும். லாப ஸ்தானத்தில் இருந்த செவ்வாய் விரைய ஸ்தானத்தில் அமர்வதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். என்றாலும் மூத்த சகோதரர்களால் ஆதாயமும் லாபமும் உண்டு. பாக்கெட் ஓட்டையாகும் பர்ஸ் காலியாகும் . கூடவே வருமானம் அதிகரிக்கும் பணத்தை பத்திரப்படுத்துங்கள். எதையும் சட்டப்பூர்மாக செய்யுங்கள். மருத்துவ செலவுகள் வரும். வெளிநாடு தொடர்புகள் மூலம் வருமானம் வரும். நீங்களும் வெளிநாடு செல்வதற்கான யோகம் கூடி வருது.

இந்த கால கட்டத்தில் சின்னச் சின்ன பயணங்கள் மேற்கொள்வீர்கள். சுப விரைய செலவுகளாக மாற்றிக்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணி செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் சொல்வதை கேட்டு செய்யுங்கள் எதிர்வாதம் செய்ய வேண்டாம்.

விரைய செலவுகள் அதிகரிக்கும். 17ஆம் தேதிக்கு மேல் சிம்ம ராசியில் சூரியன், சுக்கிரன், புதனுடன் ஜோடி சேர்வதால் வெளிநாடு செல்ல வேண்டிய யோகம் உண்டு. காமாட்சி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். வீணாக செலவுகள் ஏற்படும் கவனமாக இருக்கவும். சிவ ஆலயங்களில் துவரம் பருப்பு தானம் செய்யுங்கள். தினசரியும் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்.

துலாம்

துலாம்

லாப ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது நன்மை தரக்கூடியது. சூரியனுக்கு நண்பன் தளபதி செவ்வாய் லாபத்தில் அமர்வதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். வாக்கில் கடினம் இருக்கும். நிதானம் தேவை. பேச்சில் கோபம் வேண்டாம். பணவருமானம் அதிகரிக்கும். இறக்குமதி ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். சனி பார்வை பெறுவதால் உடல் நலத்தில் அக்கறை தேவை. ரத்தக்கொதிப்பு இருப்பவர்கள் முன்னெச்சரிக்கை சிகிச்சை தேவை. பேசும் பேச்சில் நிதானம் தேவை. பேச்சில் கோபம் வேண்டாம். பணவருமானம் அதிகரிக்கும். இறக்குமதி ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். ரத்தக்கொதிப்பு இருப்பவர்கள் முன்னெச்சரிக்கை சிகிச்சை தேவை. காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்று பாடக்கூடிய கால கட்டமாகும். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்கும். எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் துறைகளில் பணி செய்பவர்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும். செவ்வாய்கிழமை சிவப்பு நிற ஆடை அணிந்து முருகனை வணங்க பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்

விருச்சிகம்

பத்தாம் வீட்டில் செவ்வாய் அமர்வதால் திடீர் யோகம் அமையும். உங்கள் செயல்களே உங்களுக்கு நன்மையையும் தீமையையும் தீர்மானிக்கும். உங்களின் சிறப்பான பணிகளால் உத்யோக உயர்வை பெற்றுத்தரும். செய்யும் வேலையில் கவனம் தேவை. உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது நன்மையை தரும். பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். கூடவே செலவும் அதிகரிக்கும் என்பதால் சிக்கனமாக இருக்கவும். தம்பதியர் இடையே ரொமான்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும். கோபம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ஆலய வழிபாடு மன அமைதியை தரும். பழனி மலைமேல் இருக்கும் முருகனை வழிபட மேலும் நன்மைகள் கிடைக்கும். ஹனுமன் சாலிசா படிக்கவும்.

தனுசு

தனுசு

செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் இருந்து பல கஷ்டங்களை கொடுத்துக்கொண்டிருந்தார். ஒன்பதாம் வீட்டில் அமரப்போகிறார்.

தனுசு ராசிக்காரர்களே ஜென்மச்சனியின் கால கட்டம் உங்களை படுத்தி எடுத்து விட்டது. இந்த கஷ்டத்தையும் கடந்து விடுவீர்கள். வெளிநாடு போக வேண்டும் என்று நினைத்திருப்பவர்கள் தயவு செய்து ஒத்திப்போடுங்கள். ஆன்மீக பயணம் மேற்கொள்ளுங்கள் பாதிப்புகள் குறையும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தம்பதியர் ஒரே வண்டியில் செல்ல வேண்டாம். விபத்தில் சிக்காமல் தவிர்க்க ரத்த தானம் செய்யுங்கள். கையில் இருந்த பணம் கரையக்கூடும் என்பதால் கவனமாக செலவு செய்யவும். முதுகு பிரச்சினைகள் வரலாம். உடல் நலப்பிரச்சினைகள் தீரும். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள்.

மகரம்

மகரம்

செவ்வாய் உங்கள் ராசியில் உச்சமடைபவர். செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். எட்டாம் வீட்டில் அமரும் செவ்வாயினால் எதைக்கண்டாலும் பயம் உண்டாகும். தேவையற்ற கோபமும் எரிச்சலும் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் மீதே கோபப்பட்டு சண்டைக்கு செல்வீர்கள். சின்னச் சின்ன உடல் உபாதைகள் வந்து செல்லும். வண்டி வாகனங்களில் செல்லும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். நெருப்பு காயம் ஏற்படலாம் என்பதால் ஜாக்கிரதையாக இருக்கவும். சிரமமான கால கட்டம்தான் என்றாலும் பரிகாரம் செய்தால் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். வயிறு பிரச்சினைகள் வரும் என்பதால் சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். இது உங்களுக்கு சிறப்பானதல்ல வண்டி வாகனங்களில் செல்லும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். நெருப்பு காயம் ஏற்படலாம் என்பதால் ஜாக்கிரதையாக இருக்கவும். முருகன் கோவிலுக்கு செல்லுங்கள் செவ்வாய்கிழமை செவ்வாய் பகவானை வணங்கலாம் வெள்ளிக்கிழமை துர்க்கையை வணங்கலாம்.

கும்பம்

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு செவ்வாய் ஏழாம் பார்வையாக பார்ப்பதால் திருமண விசயங்கள் கை கூடி வரும். ஏழாம் வீட்டில் செவ்வாய் பகவான் அமர்ந்திருப்பதால் வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் பலரின் செயல்கள் எரிச்சலை தரும். வேலைப்பளு அதிகரிக்கும். கண்களில் எரிச்சலுடன் கூடிய வலி வந்து நீங்கும். உடல் சூட்டினால் வயிறு வலி வரும். வீட்டில் தம்பதியரிடையே பிரச்சினைகள் பழமுதிர்சோலை ஏற்படும். ஒரே வாகனத்தில் இருவரும் சேர்ந்து செல்வதை தவிர்க்கவும். கணவன் மனைவி சண்டை சச்சரவை தவிர்க்கவும். கோபம், எரிச்சல் தீரசோலைமலை முருகனை தரிசனம் செய்யுங்கள்.

 மீனம்

மீனம்

செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்வது நற்பலன்களை தரும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். ராசி அதிபதிக்கு அவர் பகை கிரகம் என்றாலும் ஆறில் செவ்வாய் அமர்வதால் எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். உங்களுக்கு மேன்மையும் யோகமும் கிடைக்கும். ஆறாம் வீட்டில் அமர்வது நற்பலன்களை தரும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களுக்கு மேன்மையும் யோகமும் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். புதிய உத்தியோகம் மாற வாய்ப்பு உள்ளது. சிலர் புதிய தொழில்களை தொடங்குவார்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். கடலோரத்தில் எழுந்தருளியிருக்கும் திருச்செந்தூர் முருகனை வியாழக்கிழமைகளில் வணங்க எண்ணற்ற நன்மைகள் நடைபெறும்.

 
 
 
English summary
Mars Transit to Simmam conjuction with Sun,Sukhran and Mercury from 9th August 2019 to September 25,2019.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X