• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கணவன் மனைவி ஒற்றுமையை அதிகரிக்கும் மாசி பௌர்ணமி கிரிவலம் - வண்டுகள் பறப்பதை பாருங்க

|

மதுரை: மாதந்தோறும் மகம் நட்சத்திரம் வந்தாலும் சரி, பௌர்ணமி வந்தாலும், மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் இணைந்து வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்நாளில் நிலவானது முழுமையான தோற்றம் பெற்று தன்னுடைய முழு சக்தியையும் வெளிப்படுத்தும் பூரணசந்திரணாக ஜொலிக்கிறது. இது மக்களுக்கு வாழ்வில் எல்லா வளமும் நலனும் அளிக்கக்கூடிய நன்னாளாக அமைகிறது. இதன் காரணமாகவே மாசி மாத பௌர்ணமி அதிக சிறப்பு பெற்றதாக அமைந்துள்ளது. இந்த நாளில் திருண்ணாமலையில் கிரிவலம் வந்தால் பிரிந்த தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும். கிரிவலத்தின் போது பறக்கும் வண்டுகளை பார்த்தால் பிறவா பேரின்பம் கிடைக்கும். இன்று அதிகாலை 2 மணி முதல் நாளை அதிகாலை 12 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரமாகும்.

முருகப் பெருமான், தன்னுடைய தந்தை ஈசனுக்கு குருவாக இருந்து ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசித்த நாளும் மாசி மாத பௌர்ணமியும் மகம் நட்சத்திரமும் இணைந்த நாளில் தான். எனவே மந்திர உபதேசம் பெறவும், உபநயனம் பெறவும், கலைகளில் தேர்ச்சி பெறவும், புதிய கலைகளை கற்கவும், உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள், ஆராய்ச்சி படிப்புகளை படிக்க விரும்புபவர்கள் இந்நாளில் அவற்றை தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தினை ஆள்வார்கள் என்பது பழமொழி ஆகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் என்பதால், மகம் நட்சத்திரத்திற்கு தனக்கு கீழ் வேலை பார்ப்பவர்களை அடக்கி ஆளும் தன்மையை உடையவர்களாக இருப்பார்கள். மகம் நட்சத்திரத்திற்கு அதிபதி கேது பகவான் ஆவார். இவர் மனிதனுக்கு ஞானத்தையும், மோட்சத்தையும் அளிப்பதோடு, ஒருவருக்கு அளப்பரிய செல்வ வளத்தையும் வாரி வழங்கும் வள்ளலாக இருக்கிறார். இவ்வாறு பல்வேறு சிறப்புகளை கொண்ட கேது பகவானின் மகம் நட்சத்திரமும், முழு நிலவும் ஒன்றாக இணையும் நாளே மாசி மாத பௌர்ணமி நாள் ஆகும்.

சிவன் விஷ்ணு பிரம்மா

சிவன் விஷ்ணு பிரம்மா

பௌர்ணமி நாட்களில் சிவபெருமானுக்கு மட்டுமே அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆனால், மாசி மாத மகம் நட்சத்திரமும் பௌர்ணமியும் இணையும் நாளில் மட்டும் சிவன், விஷ்ணு மற்றும் முருகப்பெருமான் என மூவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், யாகங்கள், உற்சவ மூர்த்திகளின் திருவீதியுலா வைபவங்களும் நடைபெறும்.

சந்திர தரிசனம்

சந்திர தரிசனம்

பிறவி எனும் பெருங்கடலை கடந்து இனி இந்த பிறவி வேண்டாம் என பிறவா வரம் வேண்டி எம்பெருமான் இறைவனை வழிபட உகந்த நாள் இந்ம மாசி மாத பவுர்ணமி நாளாகும். ஆகவே இந்நாளில் விரதம் இருந்து சத்யநாராயணா பூஜை செய்வதும், மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு அம்மன் கோவில்களில் வழிபாடு செய்வது உரிய பலன்களை கொடுக்கும். சென்னை திருவெற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் அம்பாளை தரிசனம் செய்வதோடு, சந்திர தரிசனமும் செய்யலாம்.

சந்திர தரிசனம்

சந்திர தரிசனம்

பிறவி எனும் பெருங்கடலை கடந்து இனி இந்த பிறவி வேண்டாம் என பிறவா வரம் வேண்டி எம்பெருமான் இறைவனை வழிபட உகந்த நாள் இந்ம மாசி மாத பவுர்ணமி நாளாகும். ஆகவே இந்நாளில் விரதம் இருந்து சத்யநாராயணா பூஜை செய்வதும், மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு அம்மன் கோவில்களில் வழிபாடு செய்வது உரிய பலன்களை கொடுக்கும். சென்னை திருவெற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் அம்பாளை தரிசனம் செய்வதோடு, சந்திர தரிசனமும் செய்யலாம்.

கணவன் மனைவி ஒற்றுமை

கணவன் மனைவி ஒற்றுமை

மாசி பவுர்ணமி நாளில் அண்ணாமலையாரை கிரிவலம் வருவது அதிக பலன்களை கொடுக்கும். கொடுத்த கடன் திரும்ப வராமல் நொடித்துப் போனவர்கள் ,கிரிவலம் வந்தால் வாராக்கடனும் விரைவில் நம்மைத் தேடிவரும். கணவனைப் பிரிந்தவர்கள், மாசி பவுர்ணமி நாளில் அண்ணாமலையாரை கிரிவலம் வந்தால், வெகு விரைவில் கணவனின் அன்புக்கு பாத்திரமாவார்கள். மேலும், கிரிவலத்தின் போது வண்டுகள் மொத்தமாக பறக்கும் காட்சியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால், ஒருவருடைய ஒட்டுமொத்த மனிதப்பிறவியின் கர்மங்கள் அனைத்தும் அப்போதே கலைந்து பிறவா பேரின்பம் கிடைக்கும் என்பது ஐதீகம். இன்று அதிகாலை 2 மணி முதல் நாளை அதிகாலை 12 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரமாகும்.

சிவன் கொடுத்த சாப விமோசனம்

சிவன் கொடுத்த சாப விமோசனம்

அன்னை பார்வதி தேவி, தட்சனின் மகளாக அவதரித்த நாளும் இந்த மாசி மாத மகம் நட்சத்திரமும் பவுர்ணமியும் இணைந்த நன்னாள் என்பதால் இந்த நாள் சக்தி வழிபாட்டுக்கும் பெண்கள் விரதமிருக்கவும் மிகவும் உகந்த நாளாகும். மழை வளத்தை வழங்கும் வருண பகவானுக்கு சிவபெருமான் சாபவிமோசனம் அளித்த திருநாள் இந்த மாசி மாத பௌர்ணமி நாளாகும். இந்நாளில் சிவபெருமானை வணங்கினால் சாப விமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சிவன் கொடுத்த மந்திர உபதேசம்

சிவன் கொடுத்த மந்திர உபதேசம்

முருகப் பெருமான், தன்னுடைய தந்தை ஈசனுக்கு குருவாக இருந்து ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசித்த நாளும் மாசி மாத பௌர்ணமியும் மகம் நட்சத்திரமும் இணைந்த நாளில் தான். எனவே மந்திர உபதேசம் பெறவும், உபநயனம் பெறவும், கலைகளில் தேர்ச்சி பெறவும், புதிய கலைகளை கற்கவும், உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள், ஆராய்ச்சி படிப்புகளை படிக்க விரும்புபவர்கள் இந்நாளில் அவற்றை தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.

பித்ரு தோஷம் நீங்கும்

பித்ரு தோஷம் நீங்கும்

மாசி மாத மகம் நட்சத்திரமும் முழு நிலவும் இணையும் இந்நாள், சிவன், மகாவிஷ்ணு மற்றும் முருகன் என முப்பெரும் கடவுள்களுக்கும் உகந்த நாளாகவும் தோஷங்களை போக்கும் புண்ணிய நாளாகவும் கருதப்படுகிறது. மேலும் மகம் நட்சத்திரத்தின் அதிதேவதை பித்ருக்களாகும். இதனாலேயே மகம் நட்சத்திரத்தை பித்ருதேவ நட்சத்திரம் என்று அழைக்கின்றனர். எனவே இந்நாளில் பித்ருக்களை வழிபட்டால் முன்னோர்களின் பரிபூரண ஆசி கிட்டும். ராமேஸ்வரம், கும்பகோணம் ஆகிய இடங்களில் தர்ப்பணம் மற்றும் பிதுர் கடன் செய்வது மிகுந்த பலனைக் கொடுக்கும்.

 
 
 
English summary
Today Masi pournami is best day for Tiruvannamalai girivalam.It was on the day that Lord Muruga became a Guru to his father Lord Siva and preached the Pranava Mantra of OM, the full moon and the star of the month. So those who seek magical teaching, upanayana, mastery of the arts, learning new arts, higher studies and research courses can get better today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X