For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோடீஸ்வர யோகம் தரும் கோ பூஜை - மாட்டுப்பொங்கல் நாளில் கோ பூஜை செய்ய நல்ல நேரம்

சார்வரி வருடம் ஜனவரி 15ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமையில் மாட்டு பொங்கல் வருகிறது. அன்றைய நாள் சுக்கிர ஓரை நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரை கோ பூஜையை செய்யலாம்.

Google Oneindia Tamil News

சென்னை: சார்வரி வருடம் ஜனவரி 15ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமையில் மாட்டு பொங்கல் வருகிறது. அன்றைய நாள் சுக்கிர ஓரை நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரை கோ பூஜையை செய்யலாம். பசுமாடு இல்லாதவர்கள் வீட்டில் கோ சிலைக்கு பூஜை செய்தால் மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும். மாட்டுப் பொங்கல் முதல் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள் நிச்சயம் நல்ல பலன்கள் படிப்படியாக கிடைப்பதையும் நீங்களே உணர்வீர்கள்.

நம்முடைய வீட்டிலோ, ஆலயங்களுக்குச் சென்றோ கோ பூஜை என்று சொல்லக்கூடிய, பசுவிற்கான பூஜையைச் செய்தால் சகல சவுபாக்கியங்களும் உருவாகும். பசுவின் உடம்பில் அனைத்து விதமான தெய்வங்களும், தேவர்களும், முனிவர்களும், நவக்கிரகங்களும் குடியிருப்பதால், கோபூஜை செய்யும் பொழுது அனைவருடைய பரிபூரணமான அருளும் நமக்கும் கிடைப்பதோடு, அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியடைகின்றன.

Mattu Pongal 2021: Gomatha Poojai for Mattu Pongal day important benefits

மகாலக்ஷ்மியின் ஸ்வரூபம் கோமாதாவின் பின்புறத்தில் இருக்கிறது. அதனால் தான் பசுவின் பின்புறத்தை தொட்டு பக்தர்கள் வணங்குகிறார்கள். கோமாதாவின் எல்லா இடங்களிலும் எல்லா தெய்வங்களும் நிறைந்து காணப்படுகிறார்கள். நீங்கள் எந்த இடத்தை தொட்டு வணங்கினாலும், உங்களுக்கு கடவுளின் அருள் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரையில் கோமாதா வழிபாடு செய்து வந்தால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும். பசுவிற்கு அகத்திக்கீரை தானம் கொடுத்து பித்ரு தோஷ நிவர்த்தி செய்வது போல, சகல பாக்கியங்களும் கிடைக்க, பசுவை சேயாய் பாவித்து, நீங்கள் அருகம்புல் கட்டு கொடுத்து வரலாம். பசு மாடுக்கு நாங்கள் எங்கே செல்வது? என்று கேட்கவே வேண்டாம். அனைத்து கோவில்களிலும் வெள்ளிக் கிழமையில் கோபூஜை நடக்கும். கோவில்களில் இருக்கும் பசுக்களுக்கு அருகம்புல் தானம் செய்யுங்கள்.

Mattu Pongal 2021: Gomatha Poojai for Mattu Pongal day important benefits

நம்முடைய வீட்டில் வெள்ளி அல்லது தங்கத்தால் செய்த கோமாதா சிலைக்கு மஞ்சள் தண்ணீரால் அபிஷேகம் செய்து, சந்தன, குங்கும பொட்டு வைத்து மலரால் அலங்காரம் செய்யுங்கள். இப்படி ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் சுக்கிர ஓரையில் இதை செய்வதால் எல்லா நன்மைகளும் வாழ்க்கையில் கிடைக்கும். வெள்ளி வாங்கும் அளவிற்கு எங்களிடம் காசு இல்லை என்று கூறுபவர்களுக்கு வெள்ளிக்கூட வேண்டாம், மண்ணால் செய்யப்பட்ட பசுவின் சிலைக்கு வழிபாடு செய்தால் கூட, உயிருள்ள பசுமாட்டிற்கு செய்யும் பலன்கள் கிடைக்கும்.

மனிதன் தாய்ப்பால் குடித்து வளர்ந்ததை விட, பசும்பால் குடித்து வளர்வது தான் அதிகம். எனவே தான் தாய்க்கு இணையாக கருத வேண்டிய கோமாதாவை வழிபட்டு வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். மாட்டுப் பொங்கல் முதல் தொடர்ந்து கோமாதாவை வாருங்கள் நிச்சயம் நல்ல பலன்கள் கிடைக்கும்.

English summary
Mattu Pongal falls on Friday, January 15, the year of Sarvari. On that day, Gomatha Puja can be performed from 6 am to 7 pm, which is the half time of Venus. Those who do not have a cow will get huge benefits if they worship the Go idol at home. Do this remedy regularly from Cow Pongal and you will definitely feel the good benefits gradually.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X