For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மே மாத ராசிபலன்கள் 2019 - மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு பலன்கள்

Google Oneindia Tamil News

மதுரை: மே மாதம் உழைப்பாளர்கள் மாதம். வசந்த மாதம். கோவில்களில் கொடை விழாக்கள் அதிகம் நடைபெறும் மாதம் முருகனின் விசாக திருவிழா நடைபெறும் மாதம் மே மாதம்தான். இந்த மாதத்தில் சூரியன் தனது உச்ச வீட்டில் இருந்து உழைப்பின் வீட்டிற்குள் நுழைகிறார். இந்த மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி பரிகாரங்கள் என்ன என்று பார்க்கலாம்.

சூரியனின் சொந்த வீடு சிம்ம ராசி. கால புருஷ தத்துவப்படி பத்தாம் வீடு என்பது தொழிலைக் குறிக்கும். சூரியன் தனது உச்ச ராசியிலும், சொந்த ராசிக்கு பத்தாம் வீடாகிய தொழில் ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் காலமே மே மாதம். அரசனுக்கு உரிய கோளாகக் கருதப்படும் சூரியன் உழைப்பிற்கு உரிய வீட்டில் அமர்வதால் அரசன் முதல் சாமானியன் வரை அனைவரும் உழைக்க வேண்டிய காலமாக அமைந்துள்ளது. சாமானியனையும் உழைப்பினால் சாதிக்க வைக்கும் மே மாதம்.

நவகிரகங்களில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் கிரகங்களின் இடப்பெயர்ச்சி மே மாதத்தில் நிகழ்கிறது. சூரியன் மேஷத்தில் இருந்து 15ஆம் தேதி ரிஷபத்திற்கு மாறுகிறார். ரிஷபத்தில் உள்ள செவ்வாய் மே 7ஆம் தேதி மிதுனம் ராசியில் ராகு உடன் கூட்டணி சேருகிறார். மீனம் ராசியில் உள்ள சுக்கிரன் புதன் மேஷம் ராசியில் உச்சம் பெற்ற சூரியனுடன் கூட்டணி சேருகின்றனர். கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து 12 ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

செவ்வாய் பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே இந்த மாதம் பணவரவு அதிகரிக்கும். கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்சினைகள் தீரும். கோபம் அதிகம் வரும். உஷ்ணம் தொடர்பான நோய்கள் ஏற்படும் கவனம் தேவை. புதன் சுக்கிரன் ராசிக்கு 12ஆம் வீட்டில் இருப்பதால் பொருள் விரையம் ஏற்படும். சுப விரையமாக மாற்றிவிடுங்கள். கல்வி முயற்சிகளில் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வெளிநாட்டு யோகம் வரும். மேஷ ராசி மாணவர்கள் தொழில் நுட்ப கல்வி படிக்கலாம். மருத்துவ கல்விக்கு முயற்சி செய்யலாம். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். 18ஆம் தேதிக்கு மேல் தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மே 7க்கு மேல் செவ்வாய் ராகு உடன் இணைவதால் சிறு பயணங்களில் கவனம் தேவை. அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் சகோதரர்களின் உறவில் பிரச்சினை ஏற்படாமல் கவனமாக இருக்கவும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை ஏற்படும். பேச்சில் கவனமாக இருங்கள். வாக்குவாதத்தை தவிருங்கள். மூன்றாம் நபரின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். செவ்வாய்கிழமைகளில் முருகப்பெருமானை வணங்குங்கள் கந்த சஷ்டி கவசம் படிக்க நன்மைகள் நடைபெறும்.

 ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை ஆட்சி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே சூரியன் உங்க ராசிக்கு 12ஆம் வீட்டில் இருந்து மாத பிற்பகுதியில் ராசிக்கு வருகிறார். ராசியில் உள்ள செவ்வாய் தன ஸ்தானத்திற்கு போய் ராகு உடன் சேருகிறார். ஏழாம் வீட்டில் குரு அஷ்டமத்தில் சனி, கேது லாப ஸ்தானத்தில் உள்ள ராசி அதிபதி சுக்கிரன், மே 11ஆம் தேதிக்கு மேல் விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாகவே உள்ளது. சுக்கிரன் சஞ்சாரத்தினால் பண தேவைகள் பூர்த்தியடையும். பணவரவும் அதிகரிக்கும். மே 11ஆம் தேதிக்கு மேல் பண செலவுகள் சுப விரையங்கள் அதிகரிக்கும். சுப நிகழ்வுகள் அதிகரிக்கும். பண சேமிக்க ஏற்ற மாதம். பிள்ளைகள் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கலாம். எதிர்காலம் சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாடு செல்வதற்கான நேரம் வருகிறது. சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும். சனியின் சஞ்சாரம் அஷ்டமத்தில் உள்ளதால் இருக்கும் இடத்தில் அமைதியாக இருங்கள் சங்கடங்களை சகித்துக்கொள்ளுங்கள். எட்டில் சனி கேது இருப்பதால் சிறு தடைகள் ஏற்பட்டு பின் வெற்றிகரமாக முடியும். புதிய வேலைக்கு மாறும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கொள்ளவும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடவும். காலபைரவரை வணங்க நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

மிதுனம்

உங்கள் ராசி நாதன் புதன் மீனத்தில் சுக்கிரன் உடன் இணைந்து நீசபங்க அமைப்பில் இருக்கிறார். விருச்சிகத்தில் இருந்து குருவின் பார்வை உங்கள் ராசி நாதன் மீது விழுவது ராஜயோகம் அமைப்பாகும். இதனால் நன்மைகள் அதிகம் நடைபெறும். மாத ஆரம்பத்தில் பத்தாம் வீட்டில் உள்ள புதன் பின்னர் மே 4ஆம் தேதி சூரியனுடன் 11ஆம் வீட்டில் இணைகிறார். மாத இறுதியில் ராசிக்கு 12ஆம் வீடான ரிஷபத்தில் சஞ்சரிப்பதால் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

லாப வீடான மேஷத்தில் சூரியன் உச்சம் பெற்று அமர்ந்துள்ளது நன்மை தரக்கூடியது. பெயர் புகழை கொடுக்கும். உச்சம் பெற்றுள்ள சுக்கிரன் 11ஆம் தேதி 11ஆம் வீட்டில் சூரியனுடன் இணைவதால் வெற்றி நடை போடுவீர்கள். இதுநாள் வரை திறமைக்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்ற மனக்குறையோடு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலர் வேலை விஷயமாக பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு வெகு தூரம் போக வேண்டி இருக்கும். கண்டச்சனி காலம் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. ராசியில் ராகு செவ்வாய் சேர்க்கை ஏழாம் வீட்டில் இருக்கும் சனி கேதுவின் நேரடி பார்வை சில தடங்களை ஏற்படுத்தும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யுங்கள். யாருடனும் அதிக வாக்குவாதம் செய்ய வேண்டாம். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று தாயாருக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் பாதிப்புகள் குறையும்.

கடகம்

கடகம்

சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே யோகங்கள் நிறைந்த ஆண்டாக உள்ளது. மீனத்தில் உள்ள புதன் மே 4ஆம் தேதி மேஷ ராசியில் உள்ள சூரியனுடன் இணைகிறார். சுக்கிரன் 11ஆம் தேதி மேஷம் ராசியில் புதன் சூரியனுடன் இணைவது சிறப்பம்சம். மே மாதம் யோகமான மாதமாகும். குரு சூரியனை பார்வையிடுவதால் நன்மைகள் அதிகம் நடைபெறுகிறது. சனி கேது இணைவு 6ஆம் வீட்டில் இருப்பதால் எதிரிகளை வெல்வீர்கள். சிலர் திடீர் எதிரிகளாக மாறலாம் கவனம். செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதால் வீடு வாங்கும் யோகம் வரும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு சாதகமான மாதம். செவ்வாய் ராகு விரைய ஸ்தானத்தில் இருப்பதால் நிலம் விற்பனை வகையில் லாபம் கிடைக்கும். 12ஆம் வீட்டில் செவ்வாய் ராகு உடன் இணைவதால் பணத்தை முதலீடு செய்வீர்கள். எச்சரிக்கையுடன் செய்யவும். வீடு கட்ட ஆரம்பிக்கலாம். வண்டி வாகனம் வாங்கலாம். காதல் கை கூடும். கணவன் மனைவி இடையே ரொமான்ஸ் அதிகரிக்கும் நல்ல வரன் அமையும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் அமையும். மேலும் நன்மைகள் நடைபெற திங்கட்கிழமைகளில் சிவ ஆலயம் சென்று வணங்க நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி நாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பண வரவு அற்புதமாக இருக்கும். செவ்வாய் வெற்றிகளை தருவார். சகோதர ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும் மனை வாங்கலாம், மனைவியின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். சுக்கிரன் எட்டாம் வீட்டில் இருப்பதால் பெண்கள் தங்களின் பணம், நகைகளை பத்திரமாக வைத்திருங்கள் 11ஆம் தேதிக்கு மேல் சுக்கிரன் மேஷம் ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்கு இடம் மாறுவதால் தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வெளிநாடுகளில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும், அரசு வழியில் நன்மை உண்டு. தடைகள் நீங்கும் காலம். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உயர்கல்வி யோகம் மாணவர்களுக்கு தேடி வரும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். கல்வி மற்றும் வியாபாரம் தொடர்பாக வெளிநாடு செல்வீர்கள். அனைத்து வகையிலும் உயர்வான மாதம் இது. மேலும் நன்மைகள் அதிகம் நடைபெற தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.

கன்னி

கன்னி

புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே... ஏழாம் வீட்டில் உள்ள உங்கள் ராசி அதிபதி 4ஆம் தேதிக்கு மேல் எட்டில் சஞ்சரிக்கும் காலம் இது. கூடவே சுக்கிரனும் 11ஆம் தேதிக்கு மேல் எட்டில் சஞ்சரிப்பதால் விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்திருங்கள். பணம் விசயத்தில் கூடுதல் கவனமாக இருங்கள். வியாபார தொழில் முயற்சிகளில் அக்கறை செலுத்துங்கள். திருமணம் நிச்சயமாகும். பாதுகாப்பாக இருங்கள். கல்வியில் கூடுதல் கவனம் தேவை. நல்ல தகவல்கள் வந்து சேரும். சொத்துக்கள் சேரும் மாதம். அர்த்தாஷ்டம சனி கூடவே கேது இணைந்திருப்பதால் பத்திரங்களை கவனமாக படித்து பார்த்து கையெழுத்து போடுங்கள். ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் உள்ள செவ்வாய் ஏழாம் தேதிக்கு மேல் மிதுனத்தில் ராகு உடன் இணைவதால் வேலைப்பளு ஏற்படும். புத்திசாலித்தனமாக சமாளியுங்கள். ராசிக்கு ஏழில் சுக்கிரன் இருப்பதால் வாழ்க்கைத்துணைவருக்கு வெளிநாடு யோகம் கைகூடி வருகிறது. அம்மாவின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை முறையாக பராமரிப்பு செய்யுங்கள். பாதிப்புகள் குறைய வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

துலாம்

துலாம்

சுக்கிரனை ஆட்சி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே உங்க ராசிக்கு 7ல் சூரியன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் சமுதாயத்தில் பெயர் புகழ் பெருவீர்கள். 2ஆம் வீட்டில் குரு இருப்பதால் உயர்வான காலம் தன, வாக்கு ஸ்தானத்தில் உள்ள குருவினால் நன்மைகள் நடைபெறும். பணவரவு அதிகரிக்கும். சுக்கிரன் ஆறாம் வீட்டில் உச்சம் பெற்று இருப்பதன் மூலம் கடன்கள் கிடைக்கும். சுப செலவுகளை உருவாக்குவார்கள். கலை விளையாட்டுத்துறையில் ஆர்வம் அதிகரிக்கும். கோடைகால பயிற்சி வகுப்பில் சேர்த்து விடுங்க. வெளிநாட்டு சுற்றுலா சென்று வருவீர்கள். வாழ்க்கையில் உயர்வடைவார்கள். மே 11ஆம் தேதி உங்க ராசி அதிபதி 7ஆம் வீட்டுக்கு மாறுகிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கும். மாத துவக்கத்தில் ஆறாம் வீட்டில் புதன் இருப்பதால் அதிக பலம் கிடைக்கும். மறைந்த புதன் நிறைந்த கல்விதான். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். சொத்து சேர்க்கைகள் ஏற்படும். சுப விரையங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் ஏற்படும். மேல்படிப்புக்கு சரியான வழியை தேர்வு செய்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் உயர்வும் வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் படிப்பும் கிடைக்கும். மருத்துவம் படிப்பவர்களுக்கு வாய்ப்புகள் கூடி வரும். வேலைமாற்றம், புரமோசன் கிடைக்கும். பெண்களுக்கு அற்புதமான மாதம் திருமண தடைகள் நீங்கும். மேலும் நன்மைகள் நடைபெற லட்சுமி நரசிம்மரை வணங்கலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே... சூரியன் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் இருக்கிறார். புதிய வேலைகள் கிடைக்கும். அரசு வேலைகள் கை கூடி வரும் சுக்கிரன் 5ஆம் வீட்டில் உச்சமாக இருப்பதால் சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். சிலர் வீட்டில் கெட்டிமேளச்சத்தம் கேட்கும் நேரம் வந்துவிட்டது. ராசி அதிபதி செவ்வாய் 7ஆம் வீட்டில் 7ஆம் தேதி வரை இக்கிறார் அற்புதம். செவ்வாய் 7ஆம் தேதிக்கு மேல் ராகு உடன் 8ஆம் வீட்டில் இணைவதால் வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. உடல் நலத்தில் அக்கறை தேவை காரணம் எட்டாம் வீட்டில் ராகு உடன் செவ்வாய் இணைகிறார். சனி, கேது இரண்டாம் வீட்டில் இருப்பதால் சண்டை சச்சரவுகள் அதிகமாகவே இருக்கும். பிரச்சினைகள் வீட்டில் கும்மியடிக்கும். கேது இரண்டாம் வீட்டில் அமரும் நேரத்தில் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்படும். யாரையும் நம்பி எந்த ஜாமீன் கையெழுத்தும் போட வேண்டாம்.

வியாழக்கிழமைகளில் குருபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

தனுசு

தனுசு

குருபகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்கள். உங்க ராசி அதிபதி குரு 12ஆம் வீட்டில் இருப்பதால் விரைய செலவுகள் ஏற்படும். சுப விரையமாக மாற்றுங்கள். சுக்கிரன் உச்சம் பெற்று 4ஆம் வீட்டில் இருக்கிறார். 5ஆம் வீட்டில் சூரியன் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். நன்மைகள் அதிகம் நடைபெறும். ஜென்மச்சனியால் மன அழுத்தம் ஏற்படும். இருப்பதை வைத்து பத்திரமாக இருங்கள் புதிய முயற்சிகளை தற்போதைக்கு செய்ய வேண்டாம் ஒத்திப்போடுங்கள். மனக்குழப்பம் கவலை சூழ்ந்திருக்கும் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும். இது பிரச்சினைகள் தீரும் மாதம். ராமேஸ்வரம் சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும். தொழில் வருமானம் நன்றாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி கிடைக்கும். செவ்வாய் ஏழாம் வீட்டிற்கு சென்று ராகு உடன் செல்வதால் திருமணம் கை கூடி வரும். கல்வி மீதான ஆர்வம் அதிகரிக்கும். முதியவர்களுக்கு உணவு கொடுங்க. முடிந்த வரை ஏழை மாணவர்கள் படிக்க உதவி செய்யுங்கள் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

மகரம்

மகரம்

சனி பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே மே மாதத்தில் புதன் சுக்கிரன் சாதகமாக உள்ளனர். மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வெளிநாட்டு யோகம் தேடி வரும். மே 11ஆம் தேதி மேஷத்தில் சுக்கிரன், புதன், சூரியன் இணைவு நல்ல அம்சத்தையும் சாதகமான பலனையும் தருகிறது. மே 15ஆம் தேதிக்கு மேல் சூரியன் ரிஷபத்திற்கு செல்வது நல்ல அமைப்பு. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் காரமான உணவுகளை சாப்பிடாதீங்க. செவ்வாய் 5ஆம் வீட்டில் சாதகமாக அமர்ந்திருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு சாதமான மாதம். ஆறாம் வீட்டில் ராகு உடன் செவ்வாய் இணையப்போவதால் எதிரிகள் தொல்லை ஒழியும். நோய்கள் குறைந்து மருத்துவ செலவுகள் தீரும். வண்டி வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையா இருங்க. கூடுதல் கவனம் தேவை. காதல் முயற்சிகள் கைகூடி வரும் திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கை கூடி வரும். விட்டுக்கொடுத்து சென்றால் நன்மைகள் அதிகம் நடைபெறும். சனி பகவானை சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

கும்பம்

சனிபகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட கும்ப ராசி நேயர்களே... இந்த மாதத்தில் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். 3ஆம் வீட்டில் சூரியன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் நன்மைகள் நடைபெறும். செல்வாக்கை நிலைநாட்டுவீர்கள். மேஷ ராசியில் சூரியன் புதன் சுக்கிரன் உடன் இணைவது நல்ல அம்சம். சூரியன் 4ஆம் வீட்டில் இருந்து உங்க ராசிக்கு பத்தாம் வீட்டினை பார்வையிடுகிறார். பத்தில் குரு இருப்பதால் சிறப்பான சாதகம். புரமோசன் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். செவ்வாய் சாதமான அம்சத்தில் இருக்கிறார். புது வீடு வாங்கலாம். 7ஆம் தேதி ராகு செவ்வாய் சேர்வதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சுக்கிரன் உச்சம் பெற்று எட்டாம் வீட்டின் மீது விழுவதால் உழைப்பிற்கு ஏற்ப உயர்வு கிடைக்கும். மேலும் நன்மைகள் நடைபெற குருபகவானை வியாழக்கிழமைகளில் வணங்க நன்மைகள் நடைபெறும்.

 மீனம்

மீனம்

குருபகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே... உங்கள் ராசி நாதன் குரு பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். உங்க ராசியில் சுக்கிரன் புதன் சேர்க்கை மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் சுக்கிரன் உச்சமடைந்திருப்பதால் அதிகமாக இன்ப சுற்றுலா செல்வீர்கள். வங்கிக்கடன்கள் கிடைக்கும். அரசு அப்ரூவல் கிடைக்கும். செவ்வாய் மூன்றாம் இருப்பது சாதகமான அம்சம். 7ஆம் தேதிக்கு மேல் நான்காம் வீட்டில் செவ்வாய் ராகு இணைவதால் கல்வியை தேர்வு செய்வதில் சிறிது மனக்குழப்பம் ஏற்படும். திருமண பேச்சு வார்த்தை சுபமாக முடியும். திருமணம் முடிந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கைகூடி வரும். பிரச்சினைகள் குறையும். ராசிக்கு பத்தாம் வீட்டில் சனி கேது இணைவினால் சில பாதிப்புகள் ஏற்படும். ஒருமுறைக்கு இருமுறை எதையும் யோசித்து செய்வது நல்லது பண விசயங்களில் எச்சரிக்கை தேவை. மகிழ்ச்சியான மன நிலை ஏற்படும். வெள்ளிக்கிழமைகளில் புற்றுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வணங்க நன்மைகள் நடைபெறும்.

English summary
May 2019 monthly horoscope love, career, health and money! Find out the full predictions for 12 Zodiac signs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X