India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்பிபிஸ், பி.இ, பிடெக் படிக்கும் யோகம் யாருக்கு கிடைக்கும் - உங்க ஜாதகத்தில் அந்த அம்சம் இருக்கா?

Google Oneindia Tamil News

சென்னை: ஒருவரின் ஜாதகத்தில் ராகு உள்ள நிலை ராகு எந்த கிரகத்துடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளது என்பதைப் பார்த்து அதற்கேற்ப படிப்புகளை தேர்வு செய்யலாம். பிள்ளைகளின் ஜாதகக் கட்டத்தில் உள்ள கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி ஆகியவைகளைப் பொறுத்து அதற்கேற்ப படிக்க வைத்தால் பிள்ளைகள் சாதனையாளராகத் திகழ்வார்கள்.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோர் பிளஸ் 2 தேர்வு எழுதி பாஸ் செய்தாலும் இன்றைக்கு சில ஆயிரம் பேர் மட்டுமே மருத்துவம் படிப்பு படிக்க முடிகிறது. இதற்குக் காரணம் அவர்களின் ஜாதக அமைப்புதான்.

ஆனி திருமஞ்சனம்..ஆடி அமாவாசை.. ஜூலை மாதத்தில் என்னென்ன விஷேசங்கள் தெரியுமா? ஆனி திருமஞ்சனம்..ஆடி அமாவாசை.. ஜூலை மாதத்தில் என்னென்ன விஷேசங்கள் தெரியுமா?

இப்போது நீட் தேர்வு வேறு பலரது டாக்டர் கனவை பாதித்துள்ளது. எனவே டாக்டராகும் அம்சத்தோடு உங்களின் குழந்தை பிறந்துள்ளார்களா என்பதை அறிந்து அந்த படிப்பில் வழி நடத்தலாம்.

 உயர்கல்வி யோகம்

உயர்கல்வி யோகம்

மறைந்த புதன் நிறைந்த செல்வம் என்று சொல்வார்கள். லக்னம், லக்னாதிபதி பலம் முக்கியம். உயர்நிலைக் கல்வி வரை நான்காம் இடம், சிந்தனை, யோகத்தை தரக்கூடிய ஐந்தாம் இடம், மேல்படிப்பு, ஆராய்ச்சித்துறை ஒன்பதாம் இடம், பேச்சு, வாக்கு செயல்திறனைக் குறிக்கும் இரண்டாம் இடம் என பல பிரிவுகள் உள்ளன. இந்த வீடுகள் அதன் அதிபதிகள் பலம் பெறுவது முதல்தர கல்வி யோகமாகும்.

பொறியியல் படிப்பு

பொறியியல் படிப்பு

பொறியியல் கல்லூரிகள் நூற்றுக்கணக்கில் பெருகி உள்ளன. லட்சக்கணக்கான மாணவர்கள் இன்ஜினியருக்கு படித்து வெளியே வந்தாலும் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்து பொறியாளராக சாதிக்க எல்லோராலும் முடிவதில்லை எனவே பொறியியல் துறைக்கு ஏற்ற ஜாதக அமைப்பு உள்ளதா என்பதை அறிந்து படிக்க வைக்க வேண்டியது அவசியம்.

இன்ஜினியர் ஆகும் யோகம்

இன்ஜினியர் ஆகும் யோகம்

பொறியியல் பட்டதாரி ஆவதற்கு பிரகாசமான தேதி, கூட்டு எண்கள் 5,14,23, 8,17,26, 9,18,27 ஆகியவை. மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி, பரணி, பூரம், பூராடம் ஆகியவை பொறியியல் படிக்க சாதகமான நட்சத்திரங்கள்.

பி.இ, பி டெக் ஐடி துறை

பி.இ, பி டெக் ஐடி துறை

கம்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி படித்து தகவல் தொழில் நுட்பத்துறையில் சாதிக்க லக்னாதிபதி பலம் மிகவும் அவசியம். லக்னம், 4,9,10 ஆகிய இடங்களில் ராகு இருப்பது நலம் தரும். அஸ்வினி, மகம், மூலம், திருவாதிரை, சுவாதி, சதயம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் சாதகமானவை. நான்காம் அதிபதியுடன் புதன் - ராகு சேர்க்கை பெறுவது நல்ல அம்சமாகும்.

ராகு கேது தரும் மருத்துவ யோகம்

ராகு கேது தரும் மருத்துவ யோகம்

மருத்துவராக, மருத்துவ சம்பந்தப்பட்ட துறையில் சேர்ந்து படிப்பதற்கு மிகப்பெரிய யோக அமைப்பு வேண்டும். இந்த படிப்பில் நுழைய முதலில் நீட் நுழைவுத்தேர்வில் ஜெயிக்க வேண்டும். அடிப்படை மருத்துவ கல்வி பயில எம்பிபிஎஸ் படிப்பில் தேர்ச்சி அடைய வேண்டும். இதற்கு பிறகு நமது உடலில் உள்ள பாகங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக சிறப்பு படிப்புகள் உள்ளன. ஒரு மருத்துவர் ஆக, ஜாதகத்தில் மிக முக்கிய அம்சமாக ராகு/கேது ஆகிய இரு சாயா கிரகங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ராகுகேதுவுடன் மற்ற கிரகங்கள் தொடர்பு பெறும் போது மருத்துவத்துறையில் நுழையும் யோகம் கிடைக்கிறது.

டாக்டர் ஆகும் யோகம்

டாக்டர் ஆகும் யோகம்

அஸ்வினி, மகம், மூலம், திருவாதிரை, சுவாதி, சதயம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறப்பது மருத்துவர் ஆகும் யோகத்தை அளிக்கும்

 டாக்டர் படிக்க உதவும் கிரகங்கள்

டாக்டர் படிக்க உதவும் கிரகங்கள்

டாக்டருக்கு படிக்கவும், மருத்துவராக தொழில்கள் செய்யவும் மருத்துவ கிரகமான கேது பகவான் அருள் வேண்டும். லக்னத்துக்கு 4,9,10 ஆகிய இடங்களில் மருத்துவ கிரகமான கேது இருப்பது நல்ல யோகம். கேதுவுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் தொடர்பு இருப்பது முதல்தர யோகம். எண் கணித அமைப்பில் பிறந்த தேதி அல்லது கூட்டு எண் 1,2,7,9 என அமைவது சிறப்பு.

அறுவை சிகிச்சை மருத்துவர்

அறுவை சிகிச்சை மருத்துவர்

மருத்துவராக தொழில் புரிய லக்னம் இரண்டாமிடம் ஆறாமிடம் பத்தாமிடம் ஆகியவை முக்கிய பாவங்களாகும். 4. மருத்துவராகும் கிரக அமைப்பை பெற்று ஆறாம் பாவத்தோடு தொடர்பு கொள்ளும் கிரகத்தை கொண்டு அவர் எந்த பிரிவில் சேவை செய்வார் என்பதை அறியலாம். ஜாதகத்தில் மருத்துவ அறிவை தரும் கிரகம் செவ்வாயும்,சூரியனும். இவை ஒன்றுடன் ஒன்று இணைந்தோ தொடர்போ பெறும் போதோ மருத்துவத் துறை சார்ந்த அறிவு கிடைக்கும். அத்துடன் சனியும் சேர்ந்தால் அறுவை சிகிச்சை மருத்தவராவார். ஜாதகத்தில் அமைப்பிருந்துவிட்டாலும் மருத்துவ படிப்பிற்க்கு தெய்வ அருளும் வேண்டுமல்லவா? வைத்தீஸ்வரன் கோயில் சென்று வணங்கினால் வைத்தியராகும் யோகம் வரும்.

English summary
Vedic Astrology Yogas For Becoming Doctor and Engineer.( ஜாதக ரீதியாக டாக்டர், பொறியாளர் ஆகும் யோகம் யாருக்கு இருக்கும்) Sun, Jupiter, Moon, Saturn and Mars is strong in the birth chart, the person will have the capability to become a successful doctor
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X