
வாழ்க்கை வாழத்தான்... சூரிய நமஸ்காரம் பண்ணுங்க...தற்கொலை எண்ணமே தலைதூக்காது
சென்னை: ஒவ்வொரு நாற்பது செகண்டிற்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. தற்கொலைகளை தடுக்கவே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செப்டம்பர் 10ஆம் தேதி சர்வதேச தற்கொலை தடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஜோதிடத்தில் அனைத்திற்கும் காரணம் உள்ளது தற்கொலை செய்ய எந்த கிரகங்கள் தூண்டுகின்றன என்று பார்க்கலாம்.
சென்னை: வாழ்க்கை என்பது போராடி ஜெயிக்கத்தான் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியுள்ள நிலையில் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்று எண்ணி இன்று மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் நம் நாட்டில் ஆண்டுதோறும் 2 லட்சம் தற்கொலைகள் நிகழ்வதாக சிநேகா அமைப்பினர் கூறியுள்ளனர்.
நாற்பது செகண்டிற்கு ஒருவர் உலகின் எங்கோ ஒருமூலையில் யாரோ ஒருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். தற்கொலைகளை தடுக்க வேண்டும் என்பதற்காகவே ஆண்டுதோறும் செப்டம்பர் 10ம் தேதி சர்வதேச தற்கொலை விழிப்பு உணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
தற்கொலை தடுப்புக்கான தீர்வு முதலில் குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும். அதன் நீட்சியாக பள்ளி, கல்லூரிகளில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அதையும் தாண்டி மனச்சிக்கல் வரும்போதே மனநல மருத்துவரின் தேவை முக்கியத்துவம் பெறுகிறது. பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள் கூட மேற்கொண்டு படித்து தேர்வில் வெற்றி பெற்று உயர்நீதிமன்றத்தில் தலைமைநீதிபதி பதவி வரை உயர்ந்துள்ளனர். ஒரு நொடி யோசித்தால் போதும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து மீண்டு விடலாம்.
கலங்கடிக்கும் நிலவரம்.. 6 லட்சம் கடனுக்கு 3 கோடி கந்து வட்டி! கோவில்பட்டி பெண்ணின் பரபரப்பு வீடியோ
தற்கொலை என்பது மிகப்பெரிய சமூக பிரச்சினை கொலைகள், விபத்துக்கள் மூலம் நிகழும் மரணங்களை விட தற்கொலை மூலம் நிகழும் மரணங்கள் அதிகரித்து வருகிறது. ஒருவருக்குத் தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் முதலில் அது குறித்து யாரிடமாவது பேச வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் எந்த கிரகங்கள் கூட்டணி சேர்ந்தால் எந்த கிரகங்கள் பாதிக்கப்பட்டதால் தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது என்று ஜோதிட ரீதியாகப் பார்க்கலாம். இது யாரையும் அச்சுறுத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல. ஒரு விழிப்புணர்வு பதிவுதான். படிப்பு விசயத்தில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுக்காமல் அவர்களின் போக்கில் விட்டுப் பிடித்தாலே தற்கொலைகள் தடுக்கப்படும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

தற்கொலைக்கு தூண்டும்
பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 8ஆம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். இது ஆயுள் ஸ்தானமாகும். 8ஆம் வீட்டில் கிரகம் அமர்ந்தால் அந்த தசைகளில் மரணத்துக்கு ஒப்பான கண்டங்களை நஷ்டங்களை ஏற்படுத்தும், எனவே அதற்கான பரிகாரங்களைச் செய்து கொண்டால் அட்டமாதிபதியாக உள்ள கிரகத்தால் தாக்கம் வராது. லக்னத்துக்கு 8ஆம் வீட்டில் செவ்வாய் வந்தால் ரத்தக் கொதிப்பு ஏற்படும். புதன் வந்தால் தண்ணீரில் கண்டம் வரும். சுக்கிரன் அமர்ந்தால் கோழை மனதோடு,தற்கொலைக்குத் தூண்டும்.

தற்கொலை செய்யும் மனநிலை
ராகு கேது பாம்பு கிரகங்கள் இவை புத்திநாதன் புதனோடு சேரும் போது தற்கொலை எண்ணங்கள் ஏற்படுகிறது. புதனுடன் ராகு சேர்ந்து வலுவில்லாத நிலையில் இருக்கும் ஜாதகக் காரகர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வார்கள். சிலர் விஷ ஊசி போட்டும் உயரமான மாடியில் இருந்து குதித்தும் தற்கொலை செய்து கொள்கின்றனர். புதனோடு கேது சேர்ந்திருக்கும் ஜாதகக் காரகர்கள் ரசாயனங்களை குடித்து தற்கொலை செய்து கொள்வார்களாம். பொட்டாசியம் சயனைடு, தூக்கமாத்திரை குடித்தும் தற்கொலை கொள்வார்கள்.

தற்கொலை மனநிலை
சந்திரன் மனோகாரகன், புதன் புத்திநாதன். சந்திரனும் புதனும் வலிமையற்ற நிலையில் இணைந்தால் தற்கொலை எண்ணம் மேலோங்குகிறது. கிணற்றில் குதித்தும், கடலில் குதித்தும், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குதித்தும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்குக் காரணம் சந்திரன் நீர் காரகன். சந்திரனின் மீது ராகுவின் நிழல் படரும்போது, அதாவது ராகுவின் தாக்கம் உடையவர்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றுகிறது. சந்திரன், ராகுவோடு சூரியனின் தாக்கமும் இணையும்போது அவமானம் அல்லது கௌரவக் குறைபாடு ஏற்படுகிறது. அதோடு சந்திரன், ராகுவோடு செவ்வாயின் தாக்கம் சேரும்போது கோபம், புதனின் தாக்கத்தினால் இயலாமை, குருவின் தாக்கத்தினால் ஆற்றாமை, சுக்கிரனின் தாக்கத்தினால் வெறி, சனியின் தாக்கத்தினால் பயம், கேதுவின் தாக்கத்தினால் விரக்தி ஆகிய எண்ணங்கள் தற்கொலையைத் தூண்டுவதாக ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

கொடூர தற்கொலைகள்
சனி ஆயுள்காரகன் ஒருவரின் ஆயுளை தீர்மானிப்பவர் சனிதான். ஒருவரின் மரணம் எப்படி இருக்கவேண்டும் என்று முடிவு செய்பவரும் சனிதான். சனியோடு புதன் சேர்ந்து வலிமையற்ற நிலையில் இருந்தால் வண்டி வாகனங்களில் மோதி தற்கொலை செய்து கொள்வார். ஓடும் கார் அல்லது பேருந்தில் விழுந்தும், ரயிலில் விழுந்தும் கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொள்வார்களாம். புதனோடு கூட்டணி சேரும் சுக்கிரன் வலிமை குன்றியிருந்தால் அமைதியான முறையில் தற்கொலை செய்து கொள்வார்களாம். மாத்திரையை போட்டுக்கொண்டு அமைதியாக படுத்துக்கொள்வார்கள். அதே போல புதனோடு குரு சேர்ந்து வலிமை குன்றியிருந்தால் அவர்கள் ஜீவ சமாதி நிலையில் அமைதியாக மரணத்தை தழுவுவார்களாம்.

மரணம் எப்படி
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயும் புதனும் வலிமையற்ற நிலையில் இணைந்திருந்தால் தீக்குளித்து தற்கொலை செய்வார்களாம். கையை, கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டும் தன்னைத்தானே சித்திரவதை செய்து கொண்டும் தற்கொலை செய்து கொள்வார்கள். துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும், மின்சார சாதனங்களாலும் தற்கொலை செய்து கொள்வார்களாம்.

தற்கொலை எண்ணம் கட்டுப்படும்
ஜாதகத்தில் லக்னாதிபதி பாதிக்கப்படுவது, 6, 8, 12 ஆம் இடங்களில் மறைவதால் தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது. சந்திரனை மனோகாரகன் ஜாதகத்தில் சந்திரனின் பலம் குறைந்தவர்களுக்கு, லக்னாதிபதி வலிமையாக இருக்கும் பட்சத்தில் தற்கொலை எண்ணம் ஏற்படாது. லக்னாதிபதியும், சந்திரனும் வலிமை இழந்திருக்கும் பட்சத்தில் லக்னத்தில் அமர்ந்திருக்கும் கோள் தற்கொலை எண்ணத்தைக் கட்டுப்படுத்தும். சூரியனும் பலமாக இருந்தால் தற்கொலை எண்ணம் தடுக்கப்படும்.

சிந்தனையில் தெளிவு தேவை
கிரகங்கள் வலிமையான நிலையில் இருந்தால் தற்கொலை எண்ணங்கள் வருவதில்லை. இல்லாவிட்டால் கோடி கோடியாக பணம் இருந்து கோடீஸ்வரர்களாக வாழ்ந்தவர்கள் கூட நொடியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். எனவே கிரகங்கள் வலிமையற்ற நிலையில் இருந்தால் அதற்கேற்ப பரிகாரங்கள் செய்யலாம். சந்திரனால் உண்டாகும் பாதிப்பினை சரிசெய்யும் திறமை சூரியனுக்கு உண்டு. அதேபோல புதனால் பாதிப்பு இருந்தால் அதையும் சூரிய பகவான் சரி செய்வார். அதிகாலைச் சூரியனின் ஒளிக்கதிர்களுக்கு மனிதனின் மூளையைச் சரிசெய்யும் திறன் உண்டு. அதனால்தான் நம் முன்னோர்கள் தினசரி சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தினை ஏற்படுத்தினர். சூரிய நமஸ்காரம் செய்வது உடல்நலத்திற்காக மட்டுமின்றி, மனநலத்திற்கும் மிகவும் நல்லது. இது தற்கொலை எண்ணத்தை தடுக்கும் என்கின்றனர் முன்னோர்கள்.