For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எந்த கல்லூரியில் இடம் கிடைக்கும் எனும் டென்ஷனா? உங்க ஜாதகத்தில் புதனின் பலத்தை பாருங்க!

Google Oneindia Tamil News

சென்னை: இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 எனப்படும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் கடந்த மாா்ச் 1 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சோியில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதியுள்ளனா். தனித்தோ்வா்கள் உள்பட மொத்தமாக 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 போ் தோ்வு எழுதியுள்ளனா். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நமது வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டு கட்டுரையை தொடர்வோம்.

இன்று பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பலரிடமும் பலவிதமான டென்ஷன் நிலவுவதை காணமுடிகிறது. தேர்ச்சியடையாதவர்களுக்கு தோல்வியினால் ஏற்படும் டென்ஷன், குறைந்த மதிப்பெண்ணோடு தேர்ச்சியடைந்தவர்களுக்கு எந்த கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற டென்ஷன், சுமாரான மதிப்பெண் பெற்றவர்களுக்கு விரும்பிய பாடபிரிவில் இடம் கிடைக்குமா என்ற டென்ஷன், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கோ மருத்துவமா பொறியியலா என்ற குழப்பத்தினால் வரும் டென்ஷன், பெண்களுக்கு உள்ளூர் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா அல்லது பெற்றோரை விட்டு பிரிந்து ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டுமா என்ற டென்ஷன், பெற்றோர்களுக்கு பணத்திற்க்கு என்ன செய்வது என்ற டென்ஷன். காதலிப்பவர்களுக்கோ இப்போதே திருமணமா அல்லது உயர்கல்வி முடித்து திருமணமா என்ற டென்ஷன். இப்படி பலரிடமும் பலவிதமான டென்ஷன்!

Mercury Is The God And Rulership For Brain Help Us To Succeed In Higher Education And Overcome From Tension

டென்ஷனுக்கு ஜோதிட காணங்கள்:

நமக்கு எப்போதும் நற்சிந்தனை தைரியமாகவும் கவலைகள் ஏதும் இல்லாமல் இருக்க லக்னம் லக்னாதிபதி சந்திரன் ஆகியவர்களின் நிலை முக்கியமானதாகும். என்றாலும் ஒருவருக்கு புத்தி ஒழுங்காக செயல்பட புதன் ஜாதகத்தில் பலமாக இருக்க வேண்டும்.

Mercury Is The God And Rulership For Brain Help Us To Succeed In Higher Education And Overcome From Tension

1. ஜோதிடத்தில் புதனுக்கும் புத்திக்கும் தொடர்பு உள்ளது. புத பகவான் அறிவு, ஆற்றல், வித்தைக்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். அவர் 'வித்யாகாரகன்' என அழைக்கப்படுகிறார். புத்திதாதா என்றும், தனப்ரதன் என்றும் சிறப்பிக்கப்படுகிறார். எண்ணங்களின் சேர்க்கையே மனம். மனத்தை ஆள்பவன் சந்திரன். அந்த சந்திரனின் புத்திரன்தான் புதன். எனவேதான் மனத்தின் எண்ண ஓட்டத்துக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

2. குழந்தைகள் ஜாதகத்தில் புதன் பலமாக 6/8/12 மற்றும் அசுபர்கள் தொடர்பு இல்லாமல் இருந்தால் நல்ல புத்திசாலிகளாக விளங்கிடுவார்கள். மிதுனம் அல்லது கன்னியை லக்னமாக கொண்டு ஆட்சி உச்சம் பெற்றுவிட்டாலும் மிகசிறந்த கல்விமான்களாக விளங்குவர்.

Mercury Is The God And Rulership For Brain Help Us To Succeed In Higher Education And Overcome From Tension

3.ஜாதகத்தில் புதன் பலம் இருந்தால்தான் கணிதத்தில் தேர்ச்சியும், நிபுணத்துவமும் ஏற்படும். சகல கணிதங்களுக்கும் மூலகர்த்தா புதன் ஆவர். இதை வைத்தே பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அதாவது, புதனின் அருளாசி இருந்தால் பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டாகும் என்பது பொருள். மேலும் கல்வித்தடையின்றி விரும்பிய உயர்கல்வி படிக்க இயலும்.

4. கல்விகாரகன், அறிவுகாரகன் எனப் போற்றப்படும் புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சிமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது. பத்திர யோகம் அமைந்துள்ள ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை யாவும் அமையும் புதன பகவான் பலம் பெற்று பத்திர யோகம் உண்டாகி இருந்தால் நல்ல உடல் ஆரோக்கியமும், ரத்த ஓட்டமும் உண்டாகி உடல் நிலை சிறப்பாக இருக்கும்.

Mercury Is The God And Rulership For Brain Help Us To Succeed In Higher Education And Overcome From Tension

5.டென்ஷனுக்கு காரக பாவமாக ஐந்தாமிடத்தை பாரம்பரிய ஜோதிடம் கூறுகிறது. ஆழ்மனதில் ஏற்படும் அழுத்தமே டென்ஷன் என அறிவியல் கூறுவது, ஆழ்மனதிற்க்கான ஜோதிட பாவம் ஐந்தாம் பாவம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவருக்கு ஜாதகத்தில் புத பகவான் தனித்து சுப பலத்துடன் திரிகோண பாவங்களில் முக்கியமாக ஐந்தாமிடத்தில் நின்றுவிட்டால் அவர்களுக்கு புத்தி சிறந்த முறையில் செயல்படுவதோடு டென்ஷன் என்பதே ஏற்படாது.

6.டென்ஷனை ஏற்படுத்துவதில் சனைச்சர பகவானுக்கும் பங்கிருக்கிறது. சனைச்சர பகவான் புதனை அசுப நிலையில் தொடர்பு கொண்டால் புத்தி தடுமாற்றம் மற்றும் டென்ஷன் ஏற்படும் நிலை உண்டாகிறது. மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் புத பகவான் செவ்வாயி வீட்டிலோ, செவ்வாயோடு சேர்க்கை பெற்றோ நின்றால் அவர் எப்போதும் டென்ஷனோடு காணப்படுவார்.

Mercury Is The God And Rulership For Brain Help Us To Succeed In Higher Education And Overcome From Tension

விரும்பிய உயர்கல்வி கிட்டவும் டென்ஷனில் இருந்து விடுபடவும் ஜோதிட பரிகாரங்கள்:

1.புதபகவானை வணங்குவதன் மூலம் புத்தி கூர்மை பெருகும். மேலும் கல்வித்தடை நீங்குவதோடு பல வித நோய்களில் இருந்து விடுபடலாம். கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் இருக்கும் திருவெண்காடு புதன் ஸ்தலமாகும். தனி சன்னதியில் புத பகவான் அருள்புரிகிறார். மற்றும் மதுரையில் மீனாட்சி அம்மன் புதன் அம்சமாகவே இருக்கிறார்.

2.புதனின் அதிதேவதை விஷ்னு பகவானாவார். அசுரர்களிடமிருந்து வேதத்தை காக்க மகாவிஷ்னு எடுத்த அவதாரங்களில் ஸ்ரீ ஹயக்ரீவர் அவதாரம் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ லக்ஷமி ஹயக்ரிவர் கல்விக்கதிபதியான சரஸ்வதியன் குரு என புரானங்கள் போற்றுகின்றன. ஸ்ரீ லக்ஷமி ஹயக்ரிவ மூர்த்தியை செங்கல்பட்டுக்கருகே இருக்கும் செட்டிபுண்ணியம், கடலூர் திருவஹிந்திபுரம் போன்ற ஸ்தலங்களில் வணங்குவது கல்வியறிவையும் பெருக்குவதோடு புத்திக்கூர்மையையும் அளிக்கும். மேலும் கல்வித்தடை நீங்கும்.

Mercury Is The God And Rulership For Brain Help Us To Succeed In Higher Education And Overcome From Tension

3. புதனுக்குகந்த தானியமான பச்சை பயறு சுண்டல், பயத்தலாடு போன்றவை செய்து நவக்கிரக புதனுக்கு அல்லது ஸ்ரீலக்ஷமி ஹயக்ரீவ மூர்த்திக்கு நிவேதனம் செய்து குழந்தைகளையும் சாப்பிட செய்து அவர்களையே பல குழந்தைகளுக்கு வினியோகம் செய்யவிடுவது குழந்தைகளின் கல்வி தடை நீங்கும் சிறந்த பரிகாரமாகும்.

4. "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்" எனும் பழமொழி எதற்க்கு பொருந்துமோ தெரியாது. ஆனால் கல்விக்கு பொருந்தும். கல்வி கற்க்க வசதியற்ற குழந்தைஎளின் கல்வி செலவை நாம் ஏற்றால் நம் குழந்தை நன்றாக படிக்கும் என்பது உறுதி.

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
9498098786

English summary
Depression can be caused due to over ambition, failure in the love life, failure in examination, relationship trouble, bad marriages and financial constraints. Astrological remedies are very useful in removing and curing depression because depression can be easily identified in a horoscope, but before that, we must be aware of various signs and symptoms can help to diagnose this severe mental disorder. Praying Mercury will help us to overcome from stress, tension and depression.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X