For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதன் பெயர்ச்சி 2020: மாசி மாதத்தில் வக்ரமடையப்போகும் புதனால் 12 ராசிக்கும் பலன்கள்

புத்திக்கு அதிபதியான புதன் கிரகம் தற்போது கும்பம் ராசியில் சஞ்சரிக்கிறார். இன்னும் சில நாட்களில் புதன் உடன் சூரியன் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். மாசி மாதத்தில் புதன் வக்ரமடைகிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறும் அளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புத்திக்கு அதிபதியான புதன் கிரகம் தற்போது கும்பம் ராசியில் சஞ்சரிக்கிறார். இன்னும் சில நாட்களில் புதன் உடன் சூரியன் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். மாசி மாதத்தில் புதன் வக்ரமடைகிறார். இந்த இடப்பெயர்ச்சி வக்ர சஞ்சாரத்தினால் 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என அறிந்து கொள்வோம்.

புதன் கிரகம் மிதுனம் கன்னி இரு வீடுகளுக்கு சொந்தமாகும் கன்னியில் புதன் கிரகம் உச்ச பலம் பெறுகிறது மிதுனத்தில் புதன் கிரகம் ஆட்சி பலம் பெறுகிறது. புதன் மீனத்தில் நீச்சமாகிறது. புதன் கிரகத்திற்கு நண்பா்கள் சூாியன் சுக்கிரன். புதன் கிரகத்திற்கு நன்மை தீமை கலந்து தரும் சம கிரகங்கள் சனி குரு செவ்வாய். புதன் கிரகத்திற்கு தீமை செய்யும் பகை கிரகம் சந்திரன்.

புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருக்கும் புதன் பகவான் அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குவதால்தான் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். புதன் நரம்பின் நாயகன். இவர் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். இப்போது புதன் தனது நண்பர் சூரியனுடனும், சம கிரகமான சனியோடும் கூடவே குரு, கேது உடனும் இணைந்து தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

புதன் வக்ரம்

புதன் வக்ரம்

சூரியன் மற்றும் சந்திர கிரகங்களுக்கு வக்ர கதியே கிடையாது. குரு,செவ்வாய்,சனி ஆகிய கிரகங்களுக்கு ஐந்தாமிடத்தில் சூரியன் வரும்பொழுது வக்ரகதி ஏற்படுகிறது. ஏழில் வரும்போது அதிவக்ரமும்,ஒன்பதாமிடத்தில் வரும்போது வக்ரகதி முடிவடைந்து நேர்கதி ஏற்படுகிறது. கிரகங்கள் சூரியனோடு கிரகங்கள் இணைந்திருப்பது அஸ்தங்க கதி. அஸ்தங்க கதியிலிருந்து விலகி வருவது உதயகதி. சூரியனுக்கு 2ல் கிரகங்கள் இருப்பது சீக்கிரகதி. சூரியனுக்கு 3ல் கிரகங்கள் இருப்பது சமகதி. சூரியனுக்கு 4 ஆம் வீட்டில் கிரகங்கள் இருப்பது மந்தகதி, சூரியனுக்கு 5,6 ஆம் இடத்தில் கிரகங்கள் வரும்போது வக்கிரகதி. சூரியனுக்கு 7,8ல் கிரகங்கள் வரும் போது அதிவக்கிரகதி. சூரியனுக்கு 9,10ல் வரும்போது வக்கிரநிவர்த்தி கதி. சூரியனுக்கு 11ல் கிரகங்கள் வரும்போது சீக்கிரகதி. சூரியனுக்கு 12- ல் கிரகங்கள் வரும்போது அதிசீக்கிரகதி உண்டாகிறது. புதன் தற்போது கும்பம் ராசியில் இருக்கிறார்.

புத பகவான் வக்ரகாலம்

புத பகவான் வக்ரகாலம்

புதன் பகவான் வரும் 17ஆம் தேதி திங்கட்கிழமையன்று காலை 6.23 மணிக்கு வக்ரமடைகிறார். மார்ச் 10ஆம் தேதி வரை வக்ரகதியில் சஞ்சரிக்கும் அவர் பின்னர் நேர்கதிக்கு திரும்புகிறார். இந்த வக்ர காலம் 23 நாட்கள் நிகழ்கிறது. இந்த கால கட்டத்தில் யாருக்கு எப்படி இருக்கும் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

சர்வம் புதன் மயம்

சர்வம் புதன் மயம்

புதன் பகவான் கல்விக்கும் அறிவிக்கும் காரணம். அறிவுத்திறனின் அதிபதியான புதன் வக்ரமடையும் போது முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். யோசித்து முடிவெடுங்கள், புதிய தொழில் தொடங்க வேண்டாம். நண்பர்களுடன் கூட்டுத்தொழில் தொடங்க வேண்டாம். புதிய படிப்புக்கு அட்மிசன் போடுவது, வெளிநாடு செல்ல விண்ணப்பம் செய்வது என எந்த முக்கியமான வேலைகளையும் செய்ய வேண்டாம்.

இதை எல்லாம் செய்யாதீங்க

இதை எல்லாம் செய்யாதீங்க

புதன் வக்ரமடைந்திருக்கும் போது முன்பின் தெரியாத நபர்களிடம் பேசி பழக வேண்டாம். புதன் வக்ரம் பெற்று சஞ்சரிக்கும் காலகட்டத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளக்கூடாது. ஆன்லைன் பரிமாற்றங்களில் எச்சரிக்கை தேவை. முதன் முதலாக பங்குச்சந்தை முதலீடுகள், இன்சூரன்ஸ் போன்றவைகளை செய்யாதீங்க. லேப்டாப், செல்போன் போன்றவைகளை புதிதாக வாங்காதீங்க.

புதன் பகவான்

புதன் பகவான்

எழுத்து துறையை சார்ந்தவர்கள் புதிதாக எதையும் முயற்சி செய்ய வேண்டாம். மாணவர்கள் உயர்கல்விக்காக விண்ணப்பிக்கும் போது வக்ர காலத்தில் எதையும் செய்ய வேண்டாம். புதிதாக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளில் எதையும் வாங்கவோ, விற்கவோ வேண்டாம், ஆன்லைன் பணபரிவர்த்தனைகளை தவிர்த்து விடுங்கள். விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டாம்.

English summary
Mercury becomes Retrograde On February 17, 2020, Monday at 06:23 AM,Mercury becomes Progressive On March 10, 2020, Tuesday at 09:18 AM. Duration of Mercury Retrograde motion 23 Days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X