• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மேஷம் ராசிக்காரங்களுக்கு மூக்குக்கு மேல கோபம் வருமாம் ஏன் தெரியுமா?

|

சென்னை: நவ கிரகங்களும் 12 ராசிகளை ஆள்கின்றன. 12 ராசிகளில் நவகிரகங்கள் ஆட்சி உச்சம் நீச மடைகின்றன. ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணங்கள் உள்ளன. 12 ராசிகளும் நிலம், நீர், நெருப்பு, காற்று என பஞ்ச பூத தத்துவங்களை உள்ளடக்கியுள்ளது. 12 ராசிகளில் முதல் ராசி மேஷம் ராசி நெருப்பு தத்துவம் கொண்ட சர ராசி. நெருப்பு ராசியாக இருப்பவர்கள் கோபமாகவும், முரட்டுத்தனமாகவும், தைரியமாகவும் தலைமைப் பொறுப்புடன் இருப்பார்கள்.

இந்த ராசியில் பிறந்தவர்கள் பயமறியாதவர்கள், எதையும் தன்னம்பிக்கையுடன் தைரியமாக எதிர்கொள்பவர்கள். பிடிவாத குணம் கொண்டவர்கள். கொஞ்சமாக பணம் வந்தால் கூட ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள். இந்த ராசியில் செவ்வாய் ஆட்சி பெறுகிறார். சூரியன் உச்சமடைகிறார், சனி நீச்சமடைகிறார்.

மேஷம் அதிபதி செவ்வாய் இதன் உருவம் ஆடு ஒற்றை ராசி சர ராசி நிறம் சிவப்பு உறுப்பு தலை, ராசியின் கடவுள் முருகன். இந்த ராசிக்குரிய இடங்கள் மலை மற்றும் சிறுகாட்டுப்பகுதி, முட்செடிகள் கரடு முரடான கற்கள் பாறைகள்,வெப்பம் அதிகமாக உள்ள இடம்,போர்க்களம்,ஆட்டு மந்தை.

இந்த ராசியில் பிறந்தவர்கள் செயலில் சரமாகவும் தத்துவத்தில் அக்னியாகவும் செயல்படும் செயல்களில் இது ஆரம்ப காலத்தையும் பொழுது பருவத்தில் இது விடியலையும் சர ராசியாகவும் இது உள்ளது ஆண் ராசி நான்கு கால் உடைய ராசி முதல் மாதமான சித்திரை மாதம் துவங்கும் ராசி.

அழகானவர்கள்

அழகானவர்கள்

அசுவினி நான்கு பாதம், பரணி 4 பாதம், கார்த்திகை 1 பாதம் என மொத்தம் ஒன்பது பாதங்கள் உள்ளன. சுறுசுறுப்பானவர்கள். நிறைய புத்திசாலித்தனமும், சிற்றின்ப பிரியராகவும் இருப்பார்கள். ஆணவம், தலைக்கணம் கொண்டவர்களாக இருப்பார்கள். நடுத்தர உயரமும், கம்பீரமான தோற்றமும், நிமிர்த்த நடையும், நீண்ட புருவமும், அழகான பல்வரிசையும், அடர்த்தியான தலைமுடியும் கொண்டவர்கள். கோபம் தலைக்கு மேல் வரும். தலையிலேயே முட்டி காயப்படுத்தி கொள்வார்கள்.

நிதி நிலைமை

நிதி நிலைமை

நிறைய பணம் சம்பாதிப்பார்கள். கட்டிய மனைவியை கண் கலங்க வைக்கக் கூடாது. வாழ்க்கை துணையின் மூலம் வசதி வாய்ப்புகள் பெருகும். அறுசுவை உணவு பிரியர். கூட்டுக்குடும்பமாக இருப்பார்கள். பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்வார்கள். தகவல் தொடர்புத்துறையில் சிறந்து விளங்குவார்கள். விட்டுக் கொடுத்து வாழ்வார்கள். வேகம் இருக்கும் அளவிற்கு விவேகம் இருக்காது. நிறைய பணம் சம்பாதித்தாலும் சேமிக்க மாட்டார்கள்.

பிடிவாத குணம்

பிடிவாத குணம்

ஐந்தாம் அதிபதி சூரியன் சூரியன் மேஷத்தில் உச்சம் பெறுவதால் பெரும்பாலும் ஆண்குழந்தை பிறக்கும் இந்த இடம் நெருப்பு ராசி ஆகவே முதல் குழந்தை கருச்சிதைவு ஏற்படும். இவர்களின் குழந்தைகள் பிடிவாத குணம் கொண்டவர்கள். குழந்தைகளிடம் கண்டிப்பாக இருப்பார்கள், வேலை செய்பவர்களுடன் தோழமையாக இருப்பார்கள். அதிகாரம் செலுத்தமாட்டார்கள்.

வேலை வாய்ப்பு எப்படி

வேலை வாய்ப்பு எப்படி

காவல்துறை, ராணுவம், விளையாட்டுத்தறை, பொறியியல் துறை, இரும்பு தொடர்பான தொழிற்சாலைகளில் பணிபுரிபவர். செங்கல்சூளை, மண்பாண்டம், சுரங்கத்தொழில், ஆயுதம் தயாரித்து விற்பனை செய்தல், சமையல் கலை, பூமி தொழில், விவசாயம் செய்பவர். பூர்வீக சொத்து கிடைத்தாலும் அதை மறுத்து விடுவார்கள்.

ஆலய தரிசனம் செய்வார்கள்

ஆலய தரிசனம் செய்வார்கள்

மாடி வீட்டில் வசிப்பார்கள். வீட்டினை தூய்மையாக பராமரிப்பார்கள். தனக்கு வரும் வருமானத்தை கொண்டு தர்மம் செய்வார்கள். விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றி அடைவார். அடிக்கடி புண்ணிய யாத்திரை செல்வார்கள். குருவின் ஆசி இருக்கும். நிறைய பாக்கியங்கள் பெற்றவர்கள். தீர்க்க ஆயுள் கொண்டவர்கள்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம்

மேஷ ராசியில் பிறந்தவர்களை நரம்பு பிரச்சினை அதிகம் தாக்கும். தண்ணீரில் கண்டம் ஏற்படும். வெளிநாடு வெளியூர் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அடிக்கடி மரண பயம் வரும். மான ரோசம் அதிகம் கொண்டவர்கள். இவர்களின் ஆசைகள் காலம் கடந்துதான் நிறைவேறும்.கீரை வகைகள், வெங்காயம், உருளை கிழங்கு, பரங்கி காய், வெள்ளரிக்காய், கோஸ், பீன்ஸ், அவரைக்காய், எலுமிச்சம், வால்நெட், ஆப்பிள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
Mesha Rasi Persons born in Ashwini 1st, 2nd, 3rd and 4th charanams, Bharani 1st, 2nd, 3rd and 4th charanam and Kritika 1st charan comes under Aries sign or Mesha raasi.These persons are self respectable and short tempered persons.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more