For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்சபா தேர்தல் 2019- மோடியை மீண்டும் பிரதமர் நாற்காலியில் அமர வைக்கப்போகும் யோகங்கள்

லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் களைகட்டியுள்ளன. அரசியல்வானில் தினசரியும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

Google Oneindia Tamil News

மதுரை: மோடி ஜாதகத்தில் எண்ணற்ற யோகங்கள் அமைந்துள்ளன. சந்திர மங்கள யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், மாளவிகா யோகம் என்று பல யோகங்கள் அணிவகுத்து நிற்கின்றன. கூடவே புதஆதித்ய யோகம், நீச்சபங்க ராஜயோகம், ரூசக யோகம், கஜகேசரி யோகம் போன்றவையும் உள்ளன. நடப்பு தசா புத்தியான சந்திரன் அவருக்கு அதிகப்படியான வெற்றிகளைத் தேடித்தந்து பிரதமர் நாற்காலியில் அமரவைக்கும் என்பது ஜோதிடர்களின் கணிப்பாகும்.

ஜோதிடத்தில் உள்ள யோகங்கள் ஒருவருக்கு வெற்றியை பெற்றுத்தருகின்றன. ராஜயோக ஜாதகம் அமைவது அரசாளும் தகுதியை தேடித்தருகிறது. சந்திரனுக்கு 1, 4, 7, 10 ஆகிய ஸ்தானங்களில் குரு இருந்தால் அது கஜகேச யோகமாகும். இந்த யோகம் தீர்க்காயுளையும், புகழையும், பண வருவாயையும், வாகன சுகத்தையும் கொடுக்கும். மோடி ஜாதகத்தில் இந்த யோகம் அமைந்துள்ளது. சூரியனுக்கு 12ல் ராகு, கேதுக்களைத் தவிர மற்ற கிரகங்கள் இருந்தால் அது வாசியோகமாகும். இந்த யோகம் பெரும் புகழை ஜாதகன் பெறும்படிச் செய்யும். மோடிக்கு இந்த யோகமும் அமைந்துள்ளது.

நரேந்திர மோடி ஜாதகத்தில் தற்போது சுக்கிரனும், சனியும் சேர்ந்து வலுவாக உள்ளன. சந்திரன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்களும் மோடிக்கு சாதகமான நிலையில் உள்ளன. இந்த 5 கிரகங்களும் சேர்ந்து நிச்சயம் அவரை மீண்டும் பிரதமர் பதவியில் உட்கார வைக்க 100 சதவிகித வாய்ப்புள்ளது என்பது ஜோதிடர்களின் கணிப்பாகும். ஆனால் மோடி ஜாதகத்தில் உள்ள சனி கிரகத்தின் அம்சம் காரணமாக அவரால் முழு மெஜாரிட்டி பெற்று பிரதமர் நாற்காலியில் அமர முடியாது. மற்றவர்களின் உதவி பெற்றுதான் அவரால் ஆட்சியில் அமர முடியும்.

மோடியின் ஜாதக அமைப்பு

மோடியின் ஜாதக அமைப்பு

நரேந்திர மோடி 1950ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம்தேதி பகல் 11 மணிக்கு பிறந்தார். அவரது ஜென்ம லக்னம் விருச்சிகம் ராசி விருச்சிகம் வளர்பிறை சஷ்டியில் அனுஷம் நட்சத்திரம் 2ஆம் பாதத்தில் பிறந்தவர். அவர் பிறந்த நேரத்தில் புதன் திசை நடந்தது.

சுக்கிரதிசை

சுக்கிரதிசை

1985ஆம் ஆண்டுதான் அவரது ஜாதக அமைப்பு அவருக்கு சாதகமான அம்சங்களுடன் உருவாகத் தொடங்கின. சுமார் 20 ஆண்டுகள் அவருக்கு சுக்கிர திசை இருந்தது. 1985ஆம் ஆண்டு தொடங்கி 2005ஆம் ஆண்டு வரை அவருக்கு ராஜ யோகம்தான். கடும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் அவரால் குஜராத்தில் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற முடிந்தது.

வெற்றியை கொடுத்த சூரியன்

வெற்றியை கொடுத்த சூரியன்

2005ஆம் ஆண்டு மோடியின் ஜாதகத்தில் 6 ஆண்டு சூரியதிசை தொடங்கியது. இதனால் 2011ஆம் ஆண்டு வரை அவர் பலவிதமான எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் சந்திக்க நேர்ந்தது. ஆனால் மற்ற கிரக அமைப்புகள் சாதகமாக இருந்ததால் மோடியால் தொடர் வெற்றிகளை பெற முடிந்தது. புதிய வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர முடிந்தது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

2011ஆம் ஆண்டில் அவருக்கு சூரிய திசை முடிந்து சந்திர திசை தொடங்கியுள்ளது. சந்திர திசை 10 ஆண்டுகள் இருக்கும். தற்போது மோடிக்கு சந்திர திசை நடக்கிறது. அதாவது 2021ஆம் ஆண்டு வரை மோடிக்கு சந்திர திசை நடைபெறும் சந்திரனுடன் செவ்வாயும் சேர்ந்துள்ளது. இந்த இரு கிரகங்களின் சேர்க்கைதான் இன்று நரேந்திர மோடியை பிரதமர் அந்தஸ்துக்கு உயர்த்தி இருக்கிறது. இந்த கிரக சேர்க்கை காரணமாக தற்போது நரேந்திர மோடிக்கு மகாராஜ யோகம் கிடைத்துள்ளது.

யோக ஜாதகம்

யோக ஜாதகம்

மோடி ஜாதகத்தில் சந்திர மங்கள யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், மாளவிகா யோகம் என்று பல யோகங்கள் அணிவகுத்து நிற்கின்றன. கூடவே புதஆதித்ய யோகம், நீச்சபங்க ராஜயோகம், ரூசக யோகம், கஜகேசரி யோகம் போன்றவையும் உள்ளன. நடப்பு தசா புத்தியான சந்திரன் அவருக்கு அதிகப்படியான வெற்றிகளைத் தேடித்தந்து பிரதமர் நாற்காலியில் அமரவைக்கும் என்பது ஜோதிடர்களின் கணிப்பாகும். மோடியின் ஜாதகத்தில் 10ஆம் இடத்தில் சனியும் சுக்கிரனும் சேர்ந்து அமைந்துள்ளன. இது 'சண்டாள யோகம்' அமைப்பாகும்.

இந்த யோகத்தைப் பெற்றவர்கள் என்ன செய்தாலும், அது வெற்றியாகவே முடியும். அவர்களை யாராலும் எந்த விதத்திலும் அசைக்க முடியாது.

மோடியின் நிர்வாகம்

மோடியின் நிர்வாகம்

பொதுவாக ஒருநபர், நாட்டின் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ மிக உயர்ந்த பதவிக்கு வர வேண்டுமானால், அந்த நபரின் ஜாதகத்தில் உள்ள 10ஆம் இடத்தின் ராசியும், லக்னமும் அவருக்கு உதவி செய்யும் வகையில் இருக்க வேண்டும். 10ஆம் இடம் பதவியைக் கொடுத்தாலும், அந்த பதவியை நிர்வகிக்கும் ஆற்றலும் திறமையும், அந்த ஜாதககாரருக்கு இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த ஆற்றல் நரேந்திர மோடியிடம் அபரிதமாக உள்ளது என்கின்றனர் ஜோதிடர்கள்.

2028வரை அசைக்க முடியாது

2028வரை அசைக்க முடியாது

மோடியின் ஜாதகப்படி அவருக்கு கற்ற கல்வி கை கொடுக்காது. சிறு வயதில் பெற்ற உலக நடப்பு ஞானமும், அரசியல் அனுபவங்களும்தான் அவரை உச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. 2021ஆம் ஆண்டு மோடிக்கு சந்திர திசை முடிந்து செவ்வாய் திசை பிறக்கும். செவ்வாய் திசை 7 ஆண்டுகள் அதாவது 2028ஆம் ஆண்டு வரை நீடிக்கும். இந்த 7 ஆண்டுகளும் மோடியின் வாழ்க்கையில் பொற்காலமாக இருக்கும். நாட்டில் நிறைய மாற்றங்களை செய்வார். அவர் நினைத்தது எல்லாமே வளர்ச்சித் திட்டங்களாகி, சாதனைகளாக மாறும். இந்த 7 வருடமும் அவர் ஓய்வே இல்லாமல் உழைப்பார்.

வெற்றி தரும் ஜாதகம்

வெற்றி தரும் ஜாதகம்

மொத்தத்தில் மோடி ஜாதகத்தில் 10ஆம் இடத்து சனி சுப பார்வை பார்ப்பதால் அடுத்த சில ஆண்டுகளுக்கு அவரது ராஜ்ஜியம்தான் என்று சொல்லலாம். நடப்பு தசா புத்தியான சந்திரன் அவருக்கு அதிகப்படியான வெற்றிகளைத் தரும். மேலும் இந்த ஆண்டு வர உள்ள குரு பெயர்ச்சியும் மோடிக்கு நன்மை தருவதாக உள்ளது. குரு புத்தியால் மோடிக்கு அதிக வெற்றி தேடி வரும். இன்னும் 9 ஆண்டுகளுக்கு மோடி தொடர்ந்து உச்சத்தில்தான் இருப்பார் என்றும் அவரது ஜாதகத்தில் அதற்கான அமைப்புகள் உள்ளது என்றும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

English summary
Modi will win the 2019 Lok Sabha elections and will continue as the prime minister of India, opined many astrologers who read his horoscope. Modi’s stars are moving in the right direction giving clear indication that he would win the 2019 general elections and form the government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X