• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சரஸ்வதி அவதரித்த மூலம் நட்சத்திரம் - எந்த நட்சத்திரகாரர்கள் எப்படி வணங்க வேண்டும்

|

சென்னை: சரஸ்வதி தேவி பிறந்த நட்சத்திரம் மூலம் ஆகும். மூலத்தின் நட்சத்திர வடிவங்கள் என்பது அங்குசம், சிங்கத்தின் வால், யானையின் துதிக்கை.
சரஸ்வதி தேவியின் கையில் அங்குசம் வைத்திருக்கிறார். இது மூல நட்சத்திர வடிவமாகும். மேலும் யானையின் துதிக்கை வடிவான வீணை அவரது கையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வீணையை தலைகீழாக செங்குத்தாக பிடித்தால் அது யானையின் தும்பிக்கை போல காட்சி தரும்.
சரஸ்வதி, நான்முகன் பிரம்மாவின் மனைவி. கல்விக்கு அதிபதி. வெண் பட்டுயுடுத்தி, கையில் வீணையும்,ஏட்டுச் சுவடியும் வைத்து வெண் தாமரையில் வீற்றிருப்பாள். அள்ள அள்ள குறையாத செல்வம் கல்வி செல்வம் அதை வழங்குவது சரஸ்வதி தாய்.

Moola nakshatra Janma Nakshatram of Saraswati Devi

கல்வி, ஞானம், கலை அனைத்தும் பெற சரஸ்வதி தாயாரை வணங்க வேண்டும். சரஸ்வதி தேவி மூல மந்திரம், அஷ்டோத்ர நாமம், நாமாவளி, சுலோகம் கூறி வழிபடலாம். இதையெல்லாம் சொல்ல தெரியாது என்பவர்கள் "ஓம் சரஸ்வதியே நம !"என 108 தடவை சொல்லலாம். சரஸ்வதிக்கு உரிய பாடல்கள் பாடியும் வணங்கலாம்.

சரஸ்வதி தேவி பிறந்த நட்சத்திரம் மூலம். மூலத்தின் நட்சத்திர வடிவங்கள் என்பது அங்குசம், சிங்கத்தின் வால், யானையின் துதிக்கை.
சரஸ்வதி தேவியின் கையில் அங்குசம் வைத்திருக்கிறார். இது மூல நட்சத்திர வடிவமாகும். மேலும் யானையின் துதிக்கை வடிவான வீணை அவரது கையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வீணையை தலைகீழாக செங்குத்தாக பிடித்தால் அது யானையின் தும்பிக்கை போல காட்சி தரும்.

மூல நட்சத்திர வடிவத்தை சரஸ்வதி தேவியின் கையில் கொடுத்துள்ளனர். மேலும் தாமரை எனும் வடிவம் இவர் நீரில் நிலைகளில் இருப்பவர் என்று கூறப்படுகிறது. ஆதாவது நமது பேச்சுக்கு காரணம் நாவில் இருக்கும் ஈர தன்மையே ஆகும். அந்த ஈர தன்மை குறைந்தால் அல்லது இல்லாமல் போனால் நமக்கு பேச்சு வராது.

நீர் நிலையில் இருக்கும் கடவுள்களுக்கு தாமரை வடிவம் கொடுப்பது முன்னோர்கள் மரபு. உதாரணமாக லஷ்மி தேவி நீரில் உறைபவர் என்பதால் அவருக்கு தாமரை இருப்பிடமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிரம்ம தேவருக்கு திறமை வடிவ இருப்பிடம் கொடுத்ததற்கு இதுவே காரணம்.

ஆயில்யம், கேட்டை, ரேவதி தமது ஜென்ம நட்சத்திரமாக கொண்ட நபர்கள் சரஸ்வதி தேவியை வழிபட கல்வி நிலையில் மேன்மை பெறலாம். விசாகம், பூரட்டாதி மற்றும் புனர்பூசத்திற்கு சேமம் எனும் நலம் அளிப்பவர் அளிப்பவர் சரஸ்வதி தேவி ஆவார். சித்திரை, அவிட்டம் மற்றும் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு தோஷம் போக்கும் தெய்வம் சரஸ்வதி தேவி ஆவார்.

குரு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர். இவர் தமது தந்தை இழந்து இருந்த காலத்தில், தனது அண்ணனிடம் கற்ற வீணை கலை இவருக்கு சாதகமான சூழலை உருவாக்கி பெரிதும் உதவியது. ஒரு காலத்தில் வீணை இசை கலைஞர் என்ற பெயரே அடையாளமாக இருந்தது. வீணை இவரது சாதக நட்சத்திரமான மூலத்தின் வடிவாகும்.

ராகவேந்திர ஸ்வாமிகள் வீணை வாசிப்பதில் அபார திறமை கொண்டவர். இவரது வறுமை காலத்தில் வீணை இசை சொல்லிக்கொடுத்தே இவரது ஜீவனம் நகர்ந்தது. மேலும் மனவிரக்தி அடைந்து குளத்தில் தற்கொலைக்கு முயன்ற போது இவரது சாதக நட்சத்திர தெய்வம் சரஸ்வதி தேவி குளத்தில் வீணையுடன் தோன்றி இவரது முற்பிறவி ரகசியத்தை கூறி ஞானம் கொடுத்தார். அதன் பிறகே வேங்கடநாதன் எனும் நாமம் மாறி ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் என்ற நாமம் நிலைபெற்றது

புதன் கிழமை காலையில் கிழக்கு நோக்கி அமர்ந்து, சரஸ்வதி தேவியின் 12 நாமங்களை சொன்னால், கல்வி முன்னேற்றம் ,நல்ல வாக்கு வன்மை கிடைக்கும். மாணவர்கள், பணி புரிபவர்கள்.கலை துறையில் உள்ளவர்கள் இதை சொன்னால் கல்வியில் உயரவும், இருக்கும் நிலை தக்க வைத்து கொள்ளலாம்.

சரஸ்வதிக்கு கொண்டைக் கடலை சுண்டல், வடை, பாயாசம் செய்து வழிப்படலாம். இவையெல்லாம் செய்ய முடியாதவர்கள் கல்கண்டு, பேரீச்சம் பழம் ஏதாவது வைத்து வணங்கலாம். படிக்கிற குழந்தைகள் சரஸ்வதியை வணங்க அம்மாவின் அனுக்கிரகம் கிடைக்கும். சகல நலங்கள் பெற இந்த சரஸ்வதி பூஜை நாளில் அன்னை சரஸ்வதியின் புகழ் பாடி போற்றுவோம்.

English summary
Moola nakshatram is the most auspicious nakshatram for Saraswati Pooja. It is also considered as the Janma Nakshatram of Saraswati Devi, Goddess of learning and knowledge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X