For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கந்த சஷ்டி: திருச்செந்தூரில் மாமரமே வளராது காரணம் தெரியுமா?

மாமரமாக மாறிய சூரபதுமனை வேலாயுதத்தால் முருகப் பெருமான் இரண்டாகப் பிளந்தார். அதன் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. மாமரத்தின் வடிவில் சூரன் நின்றதால் திருச்செந்தூர் பகுதிகளில் மாமரம்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: மாமரத்தின் உருவத்தில் மாறி நின்ற சூரனை இரண்டாக பிளந்து சம்ஹாரம் செய்தார் முருகப்பெருமான். ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி தினத்தில் இது நிகழ்ந்தது. முருகனுக்கு பிடித்த பழம் மாம்பழம் அந்த பழம் பழுக்கும் மரமான மாமரம் திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வளர்வதில்லை. இதற்கும் ஒரு காரணம் உண்டு.

முருகப்பெருமான் தன் தாய் பார்வதியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமர வடிவில் இருந்த அசுரன் மீது விட அந்த வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார்.

Murugan samkaram in Surapadma in Shasti day

சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார் முருகன். அப்போது சூரபத்மனோ, முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும், என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று.

வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது.

ஆதிசங்கரர் வட மாநிலத்திற்கு சென்றிருந்த போது அவருக்கு எதிராக அபிநவகுப்தன் என்பவன் அபிசார யாகம் செய்து, ஆதிசங்கரருக்குக் காச நோயை உண்டாக்கினான். பிறகு ஈசனின் கட்டளைப்படி ஆகாய மார்க்கமாக திருச்செந்தூர் வந்து சேர்ந்தார் ஆதிசங்கரர். இங்கு ஆதிசேஷனான பாம்பு முருகனை பூஜிப்பது கண்டு வியப்படைந்தார். பாம்பொன்று ஊர்ந்து செல்லும் விதமான நடையில் சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகங்களை இயற்றி முருகன் அருளால் நோய் நீங்கப் பெற்றார். இங்கு மகா மண்டபத்தில் ஆதிசங்கரரது சிலை உள்ளது.

தீராத வயிற்றுவலி உடையவர்கள் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் கந்தசஷ்டி கவசம் பாடினால் குணமாகும் என்று பால தேவராய சுவாமிகள் கூறியிருக்கிறார். சஷ்டி விரதம் ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப் படுகிறது. சஷ்டி விரத காலத்தில் திருச்செந்தூர் முருகன் சந்நிதானத்தில் அமர்ந்து விரதம் இருந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும்.

சட்டி இருந்தால் அகப்பையில் வரும் என்பார்கள். அதாவது கந்த சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை வளரும் என்பதைத்தான் அப்படி கூறியுள்ளனர். சஷ்டி விரதம் இருந்து சூரசம்ஹார நாளில் சுப்ரமணியரை தரிசனம் செய்தால் அடுத்த கந்த சஷ்டிக்குள் குழந்தை இல்லாத பெண்களுக்கு மசக்கை ஏற்படும். மாங்காய் சாப்பிடுவார்கள். அழகன் முருகனைப் போல ஒரு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

English summary
Tiruchendur means a sacred and prosperous Town of Victory. Surapadma who got himself transformed into a frightful mango tree, and broke it into two.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X