For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராகு கேது தோஷம் போக்கும் நாக சதுர்த்தி வழிபாடு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நாக சதுர்த்தி வழிபாட்டைச் செய்தால், ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இன்று சனிக்கிழமை அன்று நாக சதுர்த்தி விரதம் துவங்குகிறது. எனவே அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று, நவக்கிரகங்களை வழிபடலாம். அதில் உள்ள ராகு மற்றும் கேது பகவான்களுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும்.

ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாகசதுர்த்தியும், மறுநாள் பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகின்றது. வரலட்சுமி விரதம் கொண்டாடுவதற்கு ஒரு வாரத்துக்குமுன், இப்பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

இந்த இரு பண்டிகைகளும், சகோதரர்களின் நலத்தை விரும்பி, சகோதரர்களும், சகோதரிகளும் கொண்டாடும் இரு முக்கிய பண்டிகைகள் என்பது குறிப்பிடத் தக்கது.

நாக சதுர்த்தி விரதம்

நாக சதுர்த்தி விரதம்

ஆடி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தியில் நாக சதுர்த்தி விரதம் தொடங்குகிறது. ஒவ்வொரு மாதமும் விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இதேபோல், சுக்ல பஞ்சமியில் கருட விரதத்தைத் தொடங்க வேண்டும்.

நாக வழிபாடு

நாக வழிபாடு

நாக வழிபாடு என்பது வேத காலத்தில் இருந்தே இருக்கிறது. மனிதரின் ஜாதக அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவது நவகிரகங்கள். இதில் ராகு, கேது கிரகங்கள் நாக வடிவுடையவை.

நாக தோஷம்

நாக தோஷம்

நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமலும், பிறந்த குழந்தைகள் ஊனமுற்றதாகவும், நோயால் அவதிப்படுவதும் குடும்பத்தினர் பிரிந்தும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவர்.

நாக தேவதைகள்

நாக தேவதைகள்

துன்பங்களிருந்து மீளவும், நல்ல பலன்களை பெறவும் நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும். நாக தேவதைகளின் அருளால் தோஷங்கள் விலகி நல்ல பலன்கள் பெறலாம் என்பது ஐதீகம்.

சர்ப்ப தோஷம் நீங்கும்

சர்ப்ப தோஷம் நீங்கும்

சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக இட்டுக் கொள்வார்கள். அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப் பூஜிப்பது நல்லது. அருகில் உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று, பால் மற்றும் முட்டைகள் வழங்கி வழிபட்டால், சர்ப்ப தோஷங்கள் யாவும் நீங்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.

English summary
Nag Panchami is the holy day to worship snakes or Nag Devta.Naga Chaturthi is for Ketu and Naga Panchami is for Rahu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X