For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில்கள்

ஒருவரின் நட்சத்திரங்களுக்குரிய ஆலயங்களை அறிந்து கொண்டு அங்கு சென்று வழிபட்டால், பெரிய விளைவுகளின் தாக்கத்தையும் குறைத்துக் கொள்ள வாய்ப்பு உண்டாகும். அதன்படி அவரவர் நட்சத்திரக்குரிய ஆலயங்களை இங்கே பார்

Google Oneindia Tamil News

சென்னை: எத்தனையோ ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டாலும் 12 ராசிக்காரர்களுக்கும் உகந்த தெய்வங்களை வழிபட்டால் நன்மைகள் பல நடக்கும். அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு உரிய இறைவனை வணங்கலாம்.

ராசி, நட்சத்திரத்திற்கு உரிய கடவுள்களை வணங்கினால் அதற்கேற்ப பலன்கள் கிடைக்கும். குறிப்பிட்ட ராசியில் பிறந்தவர்கள் தனித்தனியான குணநலன்களோடு இருப்பார்கள்.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் முருகன், சிவன், அம்மன் ஆலயங்களுக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்கும் சென்று வழிபடலாம். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன கோவில்கள் சென்று வழிபடலாம் என்பதை அறிந்து கொள்வோம்.

மேஷம்

மேஷம்

மேஷத்தில் பிறந்த நீங்கள் முருகன் அருளும் மலைத்தலங்களைத் தரிசித்து வந்தால், சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். பழநி திருத்தலம். மேஷ ராசிக்காரர்கள் இந்தத் தலத்துக்கு எப்போது சென்று வந்தாலும் ஒரு மாற்றமும் ஏற்றமும் நிச்சயம் உண்டு. அசுவினி நட்சத்திரக்காரர்கள் மகான்களின் ஜீவ சமாதிகளைத் தரிசித்து வரலாம். திருச்செந்தூர் தலமும் உகந்தது. பரணி நட்சத்திரக்காரர்கள் அழகர் மலைக்குச் சென்று கள்ளழகரைத் தரிசித்து வரலாம். கிருத்திகை முதல் பாதத்தில் பிறந்தவர்களான நீங்கள் நாகப் பட்டினம்-திருவாரூர் பாதையில் உள்ள சிக்கல் சிங்கார வேலனைத் தரிசித்து வழிபட்டால், நலன்கள் யாவும் கைகூடும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம் என்பது நந்திகேஸ்வரரைக் குறிப்பதால், பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் ஈசனை தரிசித்து வழிபடுவது விசேஷம். இதனால், உங்கள் வாழ்க்கை வளம் பெறும். திருவையாறு திருத்தலத்துக்கு ஒருமுறை சென்று அருள்மிகு ஐயாறப்பரையும் அறம்வளர்த்த நாயகியையும் தரிசனம் செய்து, வழிபட்டு வாருங்கள். கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில், திண்டிவனம் அருகில் உள்ள மயிலம் தலத்துக்குச் சென்று முருகனை வழிபடலாம். ரோகிணியில் பிறந்தவர்கள் மயிலாடுதுறை அருகில் உள்ளது குத்தாலம் அருகே உள்ள தேரழுந்தூர் சென்று ஆமருவியப்பனை வழிபடலாம்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுவாமிமலையில் அருளும் சுவாமிநாத ஸ்வாமியை வழிபட நன்மைகள் நடக்கும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் திருத்தொலைவில்லி மங்கலம் தலத்தை தரிசிக்கலாம். நூற்றெட்டு திவ்யதேசங்களில் இரண்டு திவ்யதேசங்கள் அருகருகே இருப்பது இங்கு மட்டும்தான். மிருகசீரிடம் 3, 4ஆம் பாதங்கள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை வணங்கலாம். திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் சிதம்பரம் நடராஜரை வணங்கலாம். புனர்பூசம் நட்சத்தில் பிறந்தவர்கள். கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் 3 கி.மீ. தொலைவிலுள்ள மணவாள நல்லூரில் அருளும் கொளஞ்சியப்பரைத் தரிசிக்கலாம்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் திருமீயச்சூர் லலிதா பரமேஸ்வரியை வழிபடலாம். மயிலாடுதுறை - திருவாரூர் சாலையிலுள்ள பேரளம் ஆகிய ஊரில் உள்ளது.

புனர்பூசம் 4ஆம் பாதத்தில் பிறந்தவர்கள் காஞ்சி காமாட்சியை வழிபடலாம். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குமரி பகவதியம்மனை தரிசிக்கலாம்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளையும் வடபத்ரசாயியையும் வணங்கலாம்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை வணங்கி வர எதிர்காலம் சிறக்க வழி பிறக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய ஸ்வாமி கோவிலுக்கு சென்று வரலாம். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலத்துக்குச் சென்று குற்றாலீஸ்வரரை வழிபடலாம். உத்திரம் 1ஆம் பாதத்தில் பிறந்த நீங்கள் அச்சிறுப்பாக்கம் திருத்தலம் சென்று திரிநேத்ர முனிவரை வழிபடலாம்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் செல்லவேண்டிய ஒரே தலம் திருவெண்காடு. உங்கள் ராசிநாதனான புதன் பகவான் தனிச் சந்நிதியில் கொண்டுள்ளார். உங்கள் முன்கோபம் குறைய, இந்தத் தலத்திலுள்ள அகோர மூர்த்தியை தரிசிக்கலாம். உத்திரத்தில் பிறந்த நீங்கள் சென்னை திருவலிதாயத்தில் ஸ்ரீதாயம்மை உடனுறை ஸ்ரீவல்லீசர் எனும் திருவலிதாயநாதரை வணங்கலாம். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் திருக்கோஷ்டியூரில் திருமாமகள் நாச்சியார் உடனுறை ஸ்ரீஉரகமெல்லணையானை வணங்கலாம். சித்திரையில் பிறந்த நீங்கள் சிக்கலில் உள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசிங்காரவேலரை கார்த்திகையில் வணங்கலாம்.

துலாம்

துலாம்

துலாம் ராசியில் பிறந்த நீங்கள் நூற்றெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோளூர் தலத்துக்குச் சென்று வணங்கி வர பெருமாளின் அருளுடன் செல்வ வளம் பெறுவர் என்பது உறுதி. சித்திரையில் பிறந்த நீங்கள்சிதம்பரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீநடராஜப் பெருமானை வணங்கலாம்.

சுவாதியில் பிறந்தவர்கள் சோளிங்கபுரத்தில் அருள்பாலிக்கும் சோளிங்கர் ஸ்ரீநரசிம்மப் பெருமாளை வணங்கினால் நன்மை உண்டாகும்.

விசாகத்தில் பிறந்த நீங்கள் திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள எட்டுக்குடியில் உள்ள ஸ்ரீமுருகப் பெருமானை வணங்க வாழ்க்கை வளம் பெறும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகத்தில் பிறந்த நீங்கள் பழைமையான தலங்களையும், அங்கிருக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிகளையும் தரிசித்து வழிபடலாம். ஜீவசமாதி நெரூர் தலத்தில் உள்ள சிவாலயத்துக்குப் பின்புறம்தான் சதாசிவ பிரம்மேந்திரர் என்னும் மகாஞானியின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.

அனுஷத்தில் பிறந்த நீங்கள் காரைக்குடிக்கு அருகிலுள்ள குன்றக்குடி முருகப்பெருமானை வணங்க வேண்டும். கேட்டையில் பிறந்த நீங்கள் திருவேற்காட்டில் வீற்றிருக்கும் கருமாரியம்மன் மற்றும் சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் வணங்கலாம்.

தனுசு

தனுசு

vதனுசு ராசிக்காரர்களுக்கு திருப்புட்குழி வழிபடும் தலமாகும். திருப்புட்குழி திருத்தலம் காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் செல்லும் வழியில் 13 கி.மீ. தூரத்திலுள்ள பாலுசெட்டிசத்திரத்தில் இருந்து செல்லலாம். மூலம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் சமயபுரத்தில் அருள்தரும் மாரியம்மனை பஞ்சமி திதியன்று வணங்க வாழ்க்கை நலமடையும். பூராடத்தில் பிறந்த நீங்கள் காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மனை வணங்கலாம். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் வயலூரில் வீற்றிருக்கும் ஸ்ரீமுருகப் பெருமானை வணங்கலாம்.

 மகரம்

மகரம்

மகரம் ராசிக்காரர்கள் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாளை வழிபட, சிறப்பான பலன்கள் உண்டாகும். உத்திராடம் 2, 3, 4ம் பாதங்களில் பிறந்தவர்கள் திருக்கோளூரில் அருள்புரியும் வைத்தமாநிதி பெருமாளை வழிபடலாம். திருவோணத்தில் பிறந்தவர்கள் திருப்பதி வேங்கடேசப் பெருமாளை வணங்கி வர நன்மைகள் நடக்கும்

 கும்பம்

கும்பம்

கும்பம் ராசியில் பிறந்த நீங்கள் கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபடலாம். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் மாயவரம்-கும்பகோணம் வழி தடத்தில் உள்ள ஸ்ரீபைரவரை தரிசிக்கலாம். சதயத்தில் பிறந்த நீங்கள் சங்கரன்கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீகோமதியம்மை உடனுறை ஸ்ரீசங்கரலிங்கரை வணங்கினால் நன்மை உண்டாகும். பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்களில் பிறந்த நீங்கள் கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள பேரூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமரகதவல்லி உடனுறை ஸ்ரீபட்டீஸ்வரரையும் ஸ்ரீநடராஜப் பெருமானையும் சென்று வழிபடலாம்.

English summary
Nakshatra Gods, This is a list of Natchathara Temples of Hindus. These temples are also called Nakshathiram Temples or Birth Star Temples.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X