For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராகு காலம், எம கண்டத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது - பரிகாரம் என்ன

நல்ல நேரம் பார்த்தை எதையும் தொடங்கினால் நல்லதாக முடியும் அந்த காரியம் வெற்றியடையும் என்பார்கள். ராகு காலம் எமகண்டத்தில் எந்த செயலையும் செய்யக்கூடாது என்று சொல்வார்கள். ஜாதகத்தில் ராகு, கேது என்பது சர்

Google Oneindia Tamil News

சென்னை: காலங்கள் நல்லதையும் செய்யும் கெட்டதையும் செய்யும். அதனால்தான் எதையும் நேரம் காலம் பார்த்து செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். ராகு காலம், எம கண்டத்தில் எதையும் செய்யக்கூடாது என்று சொல்வார்கள். ராகுவும் கேதுவும் பாம்பு கிரகங்கள். விஷ நேரங்கள் ராகு ராகுவின் ஆதிக்கம் கொண்டது, கேது எமனின் ஆதிக்கம் கொண்டது எம கண்டம். ஜாதகத்தில் ராகு, கேது என்பது சர்ப்பங்களுக்கு சம்பந்தப்பட்டவை என்பதால், அது விஷ காலமாக கருதப்படுகிறது. ஆகவே, அது சுபகாரியங்களுக்கு சரியான நேரமில்லை என்பதால் ஒதுக்கி வைத்தனர்.

ராகுகாலம் எமகண்டம் பெரும்பாலானோருக்கு தெரியும். சுப காரியங்கள் செய்யக்கூடாது, பயணங்கள் கூடாது. புதிய பொருட்கள் வாங்குவது என எந்த விஷயத்தையும் செய்யக்கூடாது என்று சொல்வார்கள்.

Nallaneram and Ketta neram rahu kalam and yamagandam

அர்த்தபிரகணன், காலன் காலம் ஒரு சிலரை தவிர மற்றவர்களுக்கு தெரியாது. இதில் அர்த்தபிரகணன் என்னும் நேரத்தில் செய்யக்கூடாதவை என்ன என்றால் சுபகாரியங்கள் மட்டுமல்ல, கல்வி சம்பந்தபட்ட எந்தக் காரியமும் தொடங்கக்கூடாது. அதாவது முதன்முதலான பள்ளியில் குழந்தைகளின் சேர்க்கை, உயர்கல்வியில் சேருதல், புதிய பயிற்சி வகுப்பில் சேருதல், புதிய மொழி கற்றுக்கொள்ள ஆரம்பித்தல் போன்றவற்றை ஆரம்பிக்கக்கூடாது,

காலன் காலம் நேரத்திலும் எந்த சுப காரியங்களும் செய்யக்கூடாது, பயணங்கள் செய்யக்கூடாது, மருத்துவ சிகிச்சை ஆரம்பிக்கக்கூடாது, முதன் முதலாக மருந்துண்ண ஆரம்பிக்கக்கூடாது.

இந்த நால்வர் காலத்தோடு இணையாமல் தனித்து இருப்பது குளிகை நேரம் மட்டுமே. குளிகை நேரம் ரொம்ப கெட்ட நேரமல்ல இது சுப நேரம்தான். குளிகை நேரத்தில் செய்யப்படும் ஒரு காரியம் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும். கடன்கள் அடைக்கலாம். நகை வாங்கலாம். வீடு, நிலம் பத்திரம் பதியலாம். வீடு கிரகப்பிரவேசம் செய்யலாம் நிறைய வீடு வாங்குவீர்கள்,

புது வேலையில் சேருதலும், பதவி உயர்வு பெற்று பதவி ஏற்கும் போது குளிகை நேரத்தில் பதவி ஏற்றுக்கொண்டால் மீண்டும் மீண்டும் பதவி உயர்வு கிடைத்துக் கொண்டே இருக்கும். குழந்தைகள்பெயரில் வங்கியில் டெபாசிட் செய்தல், புது வங்கிக்கணக்கு ஆரம்பித்தல், புதிய தொழில் தொடங்குதல், நிறுவனங்கள் ஆரம்பித்தல், ஆடை ஆபரணங்கள் வாங்குதல், தங்கத்தில் முதலீடு செய்தல், விவசாய அறுவடை செய்தல் போன்றவை தாராளமாகச் செய்யலாம்.

அதே நேரத்தில் சவ அடக்கம், சவத்தை எடுக்கக் கூடாது. திருமணம் செய்யக்கூடாது, பெண் பார்ப்பது, மாப்பிள்ளை பார்ப்பது போன்றவைகள் செய்யக்கூடாது,அப்படி செய்தால் மீண்டும் மீண்டும் திருமணம் செய்கின்ற நிலை உண்டாகும். பெண் பார்ப்பது போன்றவை செய்தால் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். எதுவும் கைகூடி வராது. ஏதாவது காரணங்களால் தள்ளிக்கோண்டே போகும்.

தள்ளிப்போகிறதா 10ம் வகுப்பு பொதுதேர்வு? முதல்வருடன், செங்கோட்டையன் ஆலோசனை.. ஹேப்பி நியூஸ் வருகிறது?தள்ளிப்போகிறதா 10ம் வகுப்பு பொதுதேர்வு? முதல்வருடன், செங்கோட்டையன் ஆலோசனை.. ஹேப்பி நியூஸ் வருகிறது?

இந்த குளிகன் என்பவர் சனியின் மைந்தன். அவருக்கு இருக்கிற அவப்பெயரை நீக்க மகன் குளிகன் நல்ல விஷயங்களை நமக்கு வாரி வழங்குகிறார். இந்த குளிகன் தன் தாய் தந்தையோடும், தன் சகோதரன் மாந்தியோடும் கும்பகோணம், நாச்சியார்கோவில் அருகில் உள்ள திருநரையூர் தலத்தில் காட்சி தருகிறார். குடும்பத்தோடு சென்று வணங்குவதன் மூலம் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும் மகிழ்ச்சி தங்கும்.

English summary
Rahu Kalam is considered unlucky because it is associated with evil, Rahu.Rahu Kalam is the bad time of the day when you avoid trying to start.Any bad action that is done on Kethu kalam or Yamagandam time will bring bad. You might have noticed that all planets other than Rahu and Kethu rule rahu kalam yamagandam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X