For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீபாவளி: மகனாக இருந்தாலும் நரகாசூரனை கொன்ற சத்யபாமா - நரக சதுர்த்தசி புராண கதை

விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர், கொடிய நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் நாளே தீபாவளி. இந்த நாள் நரக சதுர்த்தசியாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

Google Oneindia Tamil News

மதுரை: நரகாசுரன் சம்ஹாரம் செய்யப்பட்ட நாளைத்தான் தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகிறோம். நரகனை சம்ஹாரம் செய்த நாளானதால், நரக சதுர்த்தசி என்றும் தீபாவளி அழைக்கப்படுகிறது. தனது தாயினால் மரணம் நேர வேண்டும் என்று பிரம்மாவிடம் நரகாசூரன் வேண்டிக்கொள்ள அந்த வரத்தை கொடுத்தார் பிரம்மா. ஆணவத்தில் ஆடிய நரகாசூரனை சத்யபாமா மூலம் வதம் செய்தார் கிருஷ்ணர் என்கிறது புராண கதை.

திருமாலின் வராக அவதாரத்திற்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர் நரகாசுரன் . இவர் தன்னுடைய தாயினால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரம் வாங்கியதாகவும், அதன் காரணமாக திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் பூமாதேவி சத்தியபாமாவாக பிறந்து நரகாசுரனை வதம் செய்ததாகவும் கூறுகிறது புராண கதை.

நரகாசுரனின் மரணத்தினை தேவர்கள் கொண்டாடியது போல மக்களும் கொண்டாட வேண்டும் என்று சத்யபாமா கிருஷ்ணரிடம் வரம் வாங்கியதால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

நரகாசூரன்

நரகாசூரன்

பூதேவியின் மகனான நரகாசுரன், பிரம்மாவை வேண்டி கடும் தவம் இருந்து, தனது தாயைத் தவிர வேறு யார் கையாலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தைப் பெற்றவன். நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், தேவர்களும், கடவுள்களும் கிருஷ்ணரைச் சந்தித்து முறையிட்டனர். நரகாசுரனை அழிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.

கிருஷ்ணாவதாரம்

கிருஷ்ணாவதாரம்

பகவான் மகா விஷ்ணு தனது எட்டாவது அவதாரமான கிருஷ்ணா அவதாரத்தின் போது நரகாசூரனை வதம் செய்வதாக வாக்களித்தார். பகவான் மகாவிஷ்ணு. பூமா தேவி சத்யபாமாவாக அவதாரம் எடுத்து கிருஷ்ணரை மணந்து கொள்கிறார்.
நரகாசூரனுக்கும் பகவான் கிருஷ்ணருக்கும் இடையே போர் நடக்கிறது.

நரகாசூரனை சம்ஹாரம் செய்த தாய்

நரகாசூரனை சம்ஹாரம் செய்த தாய்

போர்களத்தில் சத்யபாமாதான் தேரை ஓட்டிக்கொண்டிருக்கிறார். நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணர் மயக்கமடைகிறார். இதுவும் கிருஷ்ணரின் லீலைதான். இதைப்பார்த்து கோபமடைந்த சத்யபாமா, நரகாசூரனை வதம் செய்தார்.
பகவான் கிருஷ்ணர் நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும் தேவர்களிடம் ஒப்படைத்தார்.

நரக சதுர்த்தசி

நரக சதுர்த்தசி

நரகாசுரன் சம்ஹாரம் செய்யப்பட்ட அந்த நாளைத்தான் ‘தீபாவளி' என்று கொண்டாடுகிறோம். நரகனை சம்ஹாரம் செய்த நாளானதால், ‘நரக சதுர்த்தசி' என்றும் தீபாவளி அழைக்கப்படுகிறது. நரகாசூரன் வதம் செய்ய நாளினை மக்கள் சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்று பகவான் கிருஷ்ணரிடம் வரம் கேட்கிறார் சத்யபாமா.

நன்மை நிலைக்கட்டும்

நன்மை நிலைக்கட்டும்

உலகில் உள்ளவர்களுக்கு எவ்வித துக்கமும் இருக்கக் கூடாது. அன்று எல்லோரும் மங்கல நீராடி, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள அவ்வாறே ஆகட்டும் என்று வரம் அளித்தார் கிருஷ்ணர். நமக்கு ஏற்படும் தீமைகள் அழிந்து நன்மைகள் ஏற்பட வேண்டும் என்றும் கொரோனா அசுரனை அழிக்க வேண்டும் என்று பகவான் கிருஷ்ணரை

English summary
We celebrate Deepavali on the day of Narakasuran Samharam. Deepavali is also known as Naraka Chaturdasi as it is the day on which the hell is slaughtered. Brahma gave the gift to Narakasuran to pray to Brahma that he would have time to die by his mother. Legend has it that Krishna killed the arrogant Narakasura by Satyabhama.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X