For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நரசிம்மர் ஜெயந்தி 2019: கடன் பிரச்சினை தீர்க்கும் லட்சுமி நரசிம்மர் ஹோமம்

வைகாசி மாதம் 3ம் நாள் மே17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ கூர்ம லக்‌ஷ்மி நரசிம்மருக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, அரிசி மாவு போன்ற 16 வகையான

Google Oneindia Tamil News

வேலூர்: நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்வாதி நக்‌ஷத்திர ஹோமம், ஸ்ரீ மன்யு சூக்த ஹோமம், ஸ்ரீ புருஷ சூக்த ஹோமம், ஸ்ரீ விஷ்ணு சூக்த ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம் நடைபெறுகிறது. கடன்கள் தீரவும் ரோகம் என்கிற நோய்கள் அகலவும் சத்ரு என்கிற எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விலகவும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் வழிபாடு மிகவும் பலன் தரும்.

எம்பெருமான் ஸ்ரீ மஹாவிஷ்ணு எடுத்த பல அவதாரங்களில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் அவதார மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவரின் திருநட்சத்திரம் சுவாதியாகும். வேதத்திலும், ஜோதிட சாஸ்திரத்திலும் சுவாதி நட்சத்திரம் மிகவும் உயர்வாகக் கூறப்படுகிறது. கடலில் சிற்பிக்குள் முத்து தோன்றுவதும் இந்த நட்சத்திரத்தில் தான் என்று கூறுவர்.

Narasimha Jayanti 2019: Lakshmi Narasimha Homam

பெரிய பெரிய மகான்களுடனும், ஆசார்யர்களுடனும் தொடர்புடையது இந்த நட்சத்திரம். "வானில் ஸ்வாதி நட்சத்திரம் முன்னேறுவதைப்போல் நான் செல்வேன்' என்று அனுமன் கூறுவதாக வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

சப்தரிஷி மண்டலத்தின் தென்கிழக்கில் ஓர் அபூர்வ நட்சத்திரத் தொகுதி உள்ளது. அதில் அதிபிரகாசமாகத் தெரியும் சுவாதி இருளை தன் ஒளிக்கரணங்களால் அகற்றிவிடும் தன்மை படைத்தது. அராபியர்கள் இதை "சுவர்க்கத்தின் காவலன்' என வர்ணிக்கின்றனர். இவ்வாறெல்லாம் புகழுக்கும் பெருமைக்கும் உரித்தான சுவாதி நட்சத்திரம் கூடிய தினத்தில் செய்யப்படுவது ஸ்வாதி ஹோமம். ஸ்ரீ நரசிம்மசுவாமியை பிரார்த்தித்து செய்யப்படுவது மிகவும் சக்தி வாய்ந்தது ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் என்கிற ஸ்வாதி ஹோமமாகும். இந்த ஹோமத்தின் பலனாக எல்லாவிதமான துன்பங்களும், துயரங்களும், சோதனைகளும் நீங்கி நற்பலன்கள் கிடைக்கும்.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் ஸ்ரீ கூர்ம அவதாரத்தின மேல் ஸ்ரீலக்‌ஷ்மி நரசிம்மர் அருள்பாலிக்கும் சன்னதியை ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அமைத்துள்ளார். இந்த சன்னதியில் மே 17ஆம் தேதி ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு காலை 7.00 மணிக்கு கோ பூஜை, பகவத் பிரார்த்தனை, புண்யாஹவாசனம், வேத பாராயணம், 108 வகையான மூலிகளைகளால் மூல மந்திர ஹோமம், ஸ்வாதி நக்‌ஷத்திர ஹோமம், ஸ்ரீ மன்யு சூக்த ஹோமம், ஸ்ரீ புருஷ சூக்த ஹோமம், ஸ்ரீ விஷ்ணு சூக்த ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், மஹா பூர்னாஹுதி, தீபாராதனை நடைபெறுகிறது.

மூலவர் ஸ்ரீ கூர்ம லக்‌ஷ்மி நரசிம்மருக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, அரிசி மாவு போன்ற 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. இந்த யாகத்தில் ருண ரோக நிவர்த்திக்கான பழங்கள், புஷ்பங்கள், வாசனாதி திரவியங்கள், மூலிகைகள் சேர்க்கப்பட உள்ளன.

பக்தர்கள் ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி விழா மற்றும் ஸ்வாதி நக்‌ஷத்திர ஹோமத்தில் கலந்து கொண்டு ருண ரோக நிவர்த்திக்கு பிரார்த்தனை செய்தால் அஷ்ட, ஐஸ்வர்யம் பெற்று ஆரோக்கியத்துடன் வாழலாம். தொடர்புக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டைவேலூர் மாவட்டம், தொலைபேசி : 04172-230033, செல் : 9443330203

English summary
Sri Danvantri Arogya Peedam, Walajapet conducting Lord Narasimha Jayanthi special Sri Lakshmi Narasimha Yagam, Swathi Homam and special abhishekam for Sri Kurma Lakshmi Narasimhar on 17.05.2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X