For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக தண்ணீர் தினத்தில் இயற்கை விடும் கண்ணீர்!

Google Oneindia Tamil News

உலக தண்ணீர் தினத்தில் இயற்கை விடும் கண்ணீர்!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: இன்று சர்வ தேச தண்ணீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டின் தீர்மாணத்திற்கிணங்க 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22ம் நாளும் உலக நீர் வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பது என்பது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும். அதேவேளையில் மக்களிடையே விரிவாக பிரச்சாரம் செய்து மக்களிடையே அந்தந்த நாட்டின் நீர் வளப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வளர்த்தி ஏற்படுத்தவும் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.

இயற்கையின் எச்சரிக்கைகளை கவனிக்காததால் பல்வேறு இயற்க்கை பேரிடர்கள் ஏற்பட்டவண்ணம் இருக்கின்றன. இந்த சர்வ தேச தண்ணீர் தினத்தில் இயற்க்கையின் கண்ணீரை கவனித்து அழுகுரலுக்கு செவிசாய்ப்போம் வாருங்கள்!

Natures Warning On World Water Day

மனித சமூகத்தினரே! நான்தான் இயற்க்கை பேசுகிறேன். எங்க குடும்ப நபர்களை தெரிந்துக்கொள்ளுங்கள். எங்கள் குடும்பத்தில் நிலம், நீர், ஆகாயம், நெருப்பு, காற்று என ஐந்துபேர் இருக்கிறோம். எங்களை பஞ்சபூதங்கள் என்பார்கள். நாங்கள் இல்லாத இடமே இல்லை. உண்மையை சொன்னால் எங்களிடம்தான் நீங்கள் தஞ்சமடைந்திருக்கிறீர்கள்.

ஒரு ஆண்டின் 365 நாட்களிலும் 24/7 எனும் கணக்கில் நீரை உபயோகிக்கும் நீங்கள் எனது சகோதரி நீருக்கும் ஒரு நாளை ஒதுக்கியதை கண்டு மகிழ்ச்சி அடைவதா அல்லது உங்கள் மதியீணத்தை கண்டு அழுவதா என தெரியவில்லை!

Natures Warning On World Water Day

எங்களில் ஆகாயம் பிரம்ம தேவருக்கும் நிலமும் நீரும் ஸ்ரீ விஷ்னு பகவானுக்கும் நெருப்பும் காற்றும் சிவ பகவானுக்கும் பிறந்தவர்கள். எங்களுக்கு உதவும் நவக்ரஹ சகோதரர்களில் சூரியனும் செவ்வாயும் நெருப்பு தத்துவம். சந்திரனும் சுக்கிரனும் நீர் தத்துவம். புதன் நில தத்துவம். குரு ஆகாய தத்துவம். சனி காற்று தத்துவம். எங்களை மனித குலத்திற்க்கு உதவுவதற்க்காக கடவுள்கள் படைத்திருக்கிறார்கள். ஆனால் எங்களின் மதிப்பும் மகத்துவமும் தெரியாமல் மனிதகுலம் எங்களை பாழ்படுத்திவருகிறார்கள்.

எங்களை அழிக்கும் சிலர் இங்கு நடப்பது எல்லாம் தங்கள் திட்டப்படி நடக்கிறதாக கொக்கரித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவற்றை நீங்களே பாருங்களேன்!

Natures Warning On World Water Day

1.இரசாயன உரங்களை தெளிக்க சொல்லி,இயற்கை விவசாயத்தை ஒழித்து மண்ணை மலடாக்கினார்களாம்.

2.நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் சோம்பேறிகளாக்கி விவசாயத்திற்கு ஆள் பற்றாக்குறை ஏற்ப்படுத்தினார்களாம்.

3.பாரம்பரிய விதைகளை அழித்து, விதை,உரம்.பூச்சி மருந்துகளை விலை கொடுத்து கம்பனிகளிடம் வாங்க வைத்து விவசாயிகளை கடன் காரனாக்கினார்களாம்.

4.மாநிலங்களிடையே தண்ணீர் பிரச்சனையை பூதாகரமாக்கி, விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் பார்த்துக்கொண்டார்களாம்.

5.ஏரி குளங்களை தூர் வாராமல்,மழை நீரை சேமிக்க வழி இல்லாம பார்த்துக்கொணடார்களாம்.

6.தோல் தொழிற்சாலை,சாயப்பட்டறை கழிவுகளை ஆற்றில் கலக்கவிட்டு ஆற்று நீரை விவசாயத்திற்கு பயன்ப்படுத்த முடியாத நிலை உருவாக்கினார்களாம்.

7.நிலத்தடி நீரை பன்னாட்டு கம்பனிகளுக்கு உறிஞ்ச அனுமதி அளித்து விவசாயத்துக்கு தண்ணி கிடைக்காம பண்ணினார்களாம்.

8. வளங்களை சுரண்டி,அழித்து இயற்கையை மாசுப்படுத்தி பருவ நிலையில் மாற்றத்தை ஏற்ப்படுத்திட்டார்களாம்.

9.விவசாய விளை நிலங்களை, விலை நிலங்களாக மாற்றி விவசாயிகளை தின கூலியாக ஆக்கினார்களாம். மேலும் விவசாயிகளை தற்கொலை செய்துக்கொள்ள செய்தார்களாம்.

10.இப்படியாக படி படியா , விவசாயத்தை முதுகு எலும்பாக கொண்ட நாட்டில் 60% விவசாயிகள் உள்ள நாட்டில், விவசாயத்தையும் விவசாயியையும் அழித்து, முழுமையாக விவசாயத்தை அண்டை நாடுகளுக்கு தாரை வார்க்க நாம் எடுத்த முயற்சி வெற்றி அடைய தொடங்கிவிட்டார்களாம்.

Natures Warning On World Water Day

உழைக்காத சோம்பேறிகளின் கூட்டத்தை அதிகரித்து கூடவே குடிகாரர்களின் எண்ணிக்கையை அதிகரித்து நமது நாட்டின் பெரும்சொத்தான மனித ஆற்றலை வீணடித்து,இயற்கை வளங்களை கூடிய மட்டும் சுரண்டி,மண்ணை மலடாக்கி, அபிவிருத்தி என்ற பெயரில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி தடைசெய்யப்பட்ட அத்தனை இரசாயனங்களையும் இறக்குமதி செய்து மனிதர்களை முடமாக்கி மலட்டு விதைகளை மும்முரமாக பரப்பி கொஞ்சம் நஞ்சம் விவசாயத்தையும் பாழ்படுத்தி இப்படி அத்தனையிலும் அரசியல்வாதிகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் கைகோர்த்து நாட்டை பாலைவனமாக்கி வருகிறார்கள்!!

இவர்களுக்கு நாங்களும் அவ்வப்போது திருப்பாச்சி படத்தில் "பட்டாசு பாலு" தூது அனுப்பியதைபோல எச்சரிக்கைகள் செய்தவண்ணம்தான் இருக்கிறோம். எங்களுக்கு உதவி செய்யவே நவக்கிரஹங்களும் இருக்கிறார்கள்.

கடந்த மூன்று வருடங்களில் எங்கள் அண்ணா ஸ்ரீ சனைஸ்வரன் அவர்கள் காலபுருஷனுக்கு எட்டாம் வீடாகிய விருச்சிகத்தில் நின்று எச்சரிக்கைக்குமேல் எச்சரிக்கை செய்துக்கொண்டே இருந்தார்.

Natures Warning On World Water Day

ஒருவருடத்திற்க்கு முன் முன்வருடம் மிகபயங்கரமாண புயல்காற்றை உருவாக்கி சென்னை மற்றும் பல ஊர்களை நீரில் முழ்க வைத்தார்.

போன வருடம் முழுவதும் விருச்சிகதில் பயனம் செய்த எங்கள் சனியண்ணா சூரியனோடு சேர்ந்து பலரின் கௌரவத்தை குலைத்தார்.பிரபல அரசியல்வாதி மரணத்தை தந்து அரசியலில் பிரச்சனை ஏற்படுத்தியது இன்னமும் ஓய்ந்தபாடில்லை. சந்திரனோடு சேர்ந்து நாடா புயலையும் உணவுப்பொருட்களுக்கு நெருக்கடி தந்து பார்த்தார்.

சனியண்ணா சுக்கிரனோடு சேர்ந்து ரூபாய் நோட்டுக்களை முடக்கினார். புதனோடு சேர்ந்து வியாபாரத்தையும் வங்கிகளையும் முடக்கினார்.

Natures Warning On World Water Day

செவ்வாயோடு சேர்ந்து வர்தா புயலை உருவாக்கி பல கட்டிடங்களை கரகரவென சுற்ற வைத்தார். அப்படியும் புத்திவரவில்லை.

கடந்த வருட ஆரம்பத்திலேயே கடும் தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்தி தெருவிற்க்கு தெரு லாரிகளில் குடிநீருக்காக அலைய வைத்தார். ஒரு கேன் தண்ணீர் நூறு ரூபாய் வரை விற்க செய்தார்.

இந்த வருடம் எங்கள் சனியண்ண இந்தியாவின் ஜாதகத்தில் அஷ்டமஸ்தானத்தில் நின்று இயற்க்கையை மாசு படுத்த துணை போன பல ஊழல் பெரிச்சாளிகளை வருமாண வரி சோதனை மூலம் எச்சரிக்கை விடுத்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் எங்கள் சகோதரர் நெருப்பின் தந்தை செவ்வாயோடு கூட்டு சேர்ந்து மலை காட்டில் தீ விபத்தை ஏற்படுத்தினார்,

எங்கள் சனியண்ணா சிறிது மந்தமாணவர்தான். ஆனால் அவருடைய பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. வரும் விளம்பியாண்டின் ராஜா எங்கள் சனியண்ணாவின் தந்தை சூரிய பகவான் தான். அவர் மிகவும் கண்டிப்பும் கராரும் மிகுந்தவர். கோபம் வந்தால் பொசுக்கிவிடுவார். அவ்வளவு டெரரான ஆளு.

Natures Warning On World Water Day

விளம்பி ஆண்டின் மந்திரி யாரு தெரியுமுங்களா? எங்கள் சனியண்ணாவேதான்! கண்டிப்பான ராஜாவும் கண்ணியமான மந்திரியும் சேர்ந்து வரும் சித்திரை மாதத்தில் சூரிய பகவான் உச்சம் அடையும் சமயத்திலும் அக்னி நக்‌ஷத்திர நேரத்திலும் காட்டுவார், காத்திருங்கள்.

எழுந்திரு மனிதா! இயற்க்கையை காக்க புறப்படு! நீரை சேமிக்க உறுதிகொள். இல்லைன்னா இந்த ஊழல் மகராசாக்கள் உன் ட்ரெளசரையும் உருவிவிடுவார்கள். நீ புத்திசாலியா இருந்து பிழைச்சிகிட்டேன்னா அடுத்த ஆண்டு நீர் நாளில் உன்னை காண வருவேன். இப்போது கிளம்புகிறேன் ராசா!

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு

English summary
World Water Day, on 22 March every year, is about focusing attention on the importance of water. The theme for World Water Day 2018 is ‘Nature for Water’ – exploring nature-based solutions to the water challenges we face in the 21st century. Damaged ecosystems affect the quantity and quality of water available for human consumption. Today, 2.1 billion people live without safe drinking water at home; affecting their health, education and livelihoods.Sustainable Development Goal 6 commits the world to ensuring that everyone has access to safe water by 2030, and includes targets on protecting the natural environment and reducing pollution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X