For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நவராத்திரி, தீபாவளி ஐப்பசி மாதம் நிறைய விஷேச நாட்கள் - எந்த நாளில் என்ன பண்டிகை

ஐப்பசி மாதம் பிறக்கப் போகிறது. ஐப்பசி மாதத்தில் நவராத்திரி, அன்னாபிஷேகம், தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை தினங்கள் உள்ளன. எந்த நாளில் என்ன பண்டிகை கொண்டாடப்படுகிறது என்று பார்க்கலாம்.

Google Oneindia Tamil News

சென்னை: ஐப்பசி மாதம் ஐப்பசி மாதம் துலாம் மாதம் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம். இந்த மாதத்தில் துலா ஸ்நானம் முக்கியமானது. தமிழ் மாதத்தில் ஐப்பசி மாதம் ஏழாவது மாதம். இந்த மாதத்தில் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி மாதத்தில் நவராத்திரி பண்டிகை, ஐப்பசி அன்னாபிஷேகம், தீபாவளி, போன்றவை முக்கியமானவை. இந்த நாட்களில் என்ன செய்யலாம் விரதமுறைகளை பார்க்கலாம்.

ஐப்பசி பௌர்ணமி அன்று கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாம் உண்ணுவதற்கு உணவளித்த சிவனுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

Navarathiri and Deepavali Aippasi month Important pooja days

ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் பல்வேறு சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. பலவிதமான பண்டிகைகள் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன வாழ்க்கையில் உயர்வையையும் மேன்மையையும் கொடுக்கின்றன என்பது நம்பிக்கை. துலாம் மாதமான ஐப்பசி மாதத்தில் என்னென்ன விஷேசங்கள் இருக்கின்றன என்று பார்க்கலாம்.

ஐப்பசி 1 அக்டோபர் 17 நவராத்திரி பண்டிகை ஆரம்பம். துலா ஸ்நானம் ஆரம்பம். காவிரியில் குளித்து ஸ்ரீரங்கநாதரை வழிபடலாம்.

ஐப்பசி 9 அக்டோபர் 25,2020 ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை செய்து வழிபடலாம்.

ஐப்பசி 10 அக்டோபர் விஜயதசமி தொழில் தொடங்க, கல்வி, கலைகள் கற்க ரொம்ப நல்ல நாள்.

ஐப்பசி 15 அக்டோபர் 31 சனி கௌமாதி ஜாகரா விரதம் இன்று இரவு கண் விழித்து லட்சுமி பூஜை செய்யலாம். வருடம் முழுவதும் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 57 பேர் பலி- கோவையில் உயிரிழப்பு 500-ஐ தாண்டியது! தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 57 பேர் பலி- கோவையில் உயிரிழப்பு 500-ஐ தாண்டியது!

ஐப்பசி 15 பௌர்ணமி இன்று அன்னாபிஷேகம் சிவ ஆலயங்களில் அன்னத்தினால் அலங்கரித்து இருக்கும் சிவபெருமானை தரிசனம் செய்ய உணவு பஞ்சம் நீங்கும். தலைமுறைகளும் பசி பட்டினி இன்றி வாழலாம்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12 முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

ஐப்பசி 27 நவம்பர் 12, 2020 வியாழக்கிழமை கோவத்ஸ துவாதசி இன்று பசுவையும் கன்றையும் வணங்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும். பெண்கள், குழந்தைகள் நலமும் வளமும் பெற்று சிறப்புடன் வாழ்வார்கள்.

ஐப்பசி 28 நவம்பர் 13 வெள்ளிக்கிழமை யமதீபம் இன்று மாலை பிரதோஷ காலத்தில் வீட்டிற்கு வெளியில் கோலம் போட்டு மறைந்த முன்னோர்களுக்கு விளக்கு ஏற்றி வழிபடலாம். நம் வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் நொடிகள் நீங்கி ஆயுள் அதிகரிக்கும்.

ஐப்பசி 29 நவம்பர் 14 சனிக்கிழமை தீபாவளி இன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து லட்சுமி பூஜை செய்யலாம்.

Navarathiri and Deepavali Aippasi month Important pooja days

இன்று கேதார கௌரி பூஜை செய்யலாம் 21 பாக்கு 21 வெற்றிலை வைத்து கௌரி பூஜை செய்யலாம். லட்சும் குபேர பூஜை செய்ய உகந்த நாளாகும்.

ஐப்பசி 30 ஆம் தேதி ஞாயிறு கிழமை குரு பகவான் நேர்கதியில் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

English summary
Here is the list of important days mukurtham days for the Aippasi month 2020.Sevan of the Tamil solar month Aippasi is called the month for Thula Matham. Navaratiri and Deepavali Skanda sasti All Viratham celebration in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X