For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நவராத்திரி 2017 : கொலு பூஜைகள், ஆயுத பூஜை, விஜயதசமி பூஜைக்கு நல்ல நேரங்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன்

சென்னை : முப்பெரும் தேவிகளின் அருளை வேண்டி இந்துக்களால் முறைப்படி விரதமிருந்து அனுஷ்ட்டிக்கப்படுகின்ற நவராத்திரி விரதம் இன்று ஆரம்பமாவதுடன் ஒன்பது நாட்கள் விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இவ்வாண்டு (ஹேவிளம்பி வருடம்) புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமை இன்று தொடங்குகிறது. பூஜை செய்வதற்கான நல்ல நேரங்கள் கணிக்கப்பட்டுள்ளன.

Navarathri 2017 :Dates, Significance Pooja times

பரப்பிரம்ம ஸ்வரூபிணியான பராசக்தி உலக நன்மைக்காக ஐந்து முறை அவதரித்திருக்கிறாள்.

முதலாவதாக மஹாவிஷ்ணு பாற்கடலில் ஸ்யனித்திருக்கும் பொழுது நாபியிலிருந்த பிரம்மாவிற்குப் பிரசன்னமாகி அவருக்குத் தெளிவையும் சிருஷ்டிக்கும் வல்லமையையும் கொடுத்தாள்.

இரண்டாவதாக மஹாவிஷ்ணுவின் மூலமாக மோகினியாக அவதரித்தாள். மூன்றாவதாக தட்சனின் புதல்வியாக தாட்சாயணி என்னும் பெயருடன் அவதரித்தாள்.

நான்காவதாக ஈஸ்வரனை மணக்க பார்வதி தேவியாக அவதரித்தாள். ஐந்தாவதாக பண்டாசுரனை அழிக்க லலிதாம்பாள் என்னும் பெயருடன் ஸ்ரீசக்கரம் என்ற ரதத்தில் அவதரித்தாள்.

நவராத்திரி பூஜைக்கு நல்ல நேரம்:

நவராத்திரி விரதம் விரதம் இன்று புரட்டாசி மாதம் 05ம் நாள் (21-09-2017) தேதி தொடங்கி புரட்டாசி 13ம் தேதி (29-09-2017) வரை அனுஷ்டிக்கப்படும்.

நவராத்திரி ஒன்பது நாட்களிலும் ஒன்பது வகையான புஷ்பம் கொண்டு ஒன்பது வகையான அலங்காரம் செய்வது வழக்கம்.

நவராத்திரியில் சுமங்கலிகளையும் பத்து வயதிற்க்குட்பட்ட கன்னிப் பெண்களையும் பூஜிப்பது நன்மையைத் தரும் சரஸ்வதிக்குரிய நாளில் ஆரம்பித்து திருவோண நட்சத்திர நாளில் நிறைவு செய்ய வேண்டும் என்று விரத நிர்ணய விதி இருப்பதால் இவ்வாண்டு சரஸ்வதி பூசை 29-09-2017 வெள்ளிக் கிழமை நிறைவுபெறுகின்றது.

Navarathri 2017 :Dates, Significance Pooja times

மஹா நவமி என்னும் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜையன்று சரஸ்வதி கடாட்சம் வேண்டி தங்கள் ஜீவனத்திற்க்கு ஆதாரமான ஆயுதங்கள், கருவிகள், இசைக் கருவிகள் இவைகளுடன் புத்தகங்களையும் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.

மறுநாள் விஜய தசமி அன்று மறு பூஜை செய்து தொழில் தொடங்கினால் அவ்வருடம் முழுவதும் நல்ல செல்வச் செழிப்பு ஏற்படும்.

நவராத்திரி பூஜை தொடக்கம்:

புரட்டாசி 05 - செப்டம்பர் வியாழக் கிழமை காலை 06-00 முதல் 09-00 வரை பகல் 10-30 முதல் 01-30 வரை நல்ல நேரம்.

Navarathri 2017 :Dates, Significance Pooja times

சாமி கும்பிட நல்ல நேரம்

ஆயுத பூஜை - சரஸ்வதி சாமி கும்பிட நல்ல நேரம்: புரட்டாசி 13 செப்டம்பர் 29 வெள்ளிக் கிழமை மாலை 05-00 மணி முதல் 06-00 வரை நல்ல நேரம்.

Navarathri 2017 :Dates, Significance Pooja times

விஜய தசமி சாமி கும்பிட நல்ல நேரம் : புரட்டாசி 14 நவம்பர் 30ம் தேதி சனிக் கிழமை மறு பூஜை செய்வதற்க்கு நல்ல நேரம் அதிகாலை 5-00 மணி முதல் 6-00 மணிவரை அல்லது பகல் 11-00 மணி முதல் 12-00 மணி வரை நல்ல நேரம்.

English summary
Navratri that will start on 21st September, 2017 and end on 30th September, 2017.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X