For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாணிக்க வீணை ஏந்தும் கலைவாணி..சரஸ்வதியை எந்த ராசிக்காரர்கள் எப்படி வணங்க வேண்டும்?

Google Oneindia Tamil News

சென்னை: சரஸ்வதி, நான்முகன் பிரம்மாவின் மனைவி. கல்விக்கு அதிபதி. வெண் பட்டுடுத்தி, கையில் வீணையும்,ஏட்டுச் சுவடியும் வைத்து வெண் தாமரையில் வீற்றிருப்பாள். அள்ள அள்ள குறையாத செல்வம் கல்வி செல்வம் அதை வழங்குவது சரஸ்வதி அன்னைதான். மூலம் நட்சத்திரத்தில் பிறந்த சரஸ்வதி தேவியை தேவியை எந்த ராசிக்காரர்கள் எப்படி வணங்கினால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

சரஸ்வதி தேவி பிறந்த நட்சத்திரம் மூலம் ஆகும். மூலத்தின் நட்சத்திர வடிவங்கள் என்பது அங்குசம், சிங்கத்தின் வால், யானையின் துதிக்கை. சரஸ்வதி தேவியின் கையில் அங்குசம் வைத்திருக்கிறார். இது மூல நட்சத்திர வடிவமாகும். மேலும் யானையின் துதிக்கை வடிவான வீணை அவரது கையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வீணையை தலைகீழாக செங்குத்தாக பிடித்தால் அது யானையின் தும்பிக்கை போல காட்சி தரும்.

கல்வி, ஞானம், கலை அனைத்தும் பெற சரஸ்வதி தாயாரை வணங்க வேண்டும். சரஸ்வதி தேவி மூல மந்திரம், அஷ்டோத்ர நாமம், நாமாவளி, சுலோகம் கூறி வழிபடலாம். இதையெல்லாம் சொல்ல தெரியாது என்பவர்கள் "ஓம் சரஸ்வதியே நம !"என 108 தடவை சொல்லலாம். சரஸ்வதிக்கு உரிய பாடல்கள் பாடியும் வணங்கலாம்.

படிப்பு நல்லா வரணுமா பட்டு குட்டீஸ்.. சரஸ்வதி பூஜை நாளில் மறக்காமல் இப்படி வணங்குங்கள்! படிப்பு நல்லா வரணுமா பட்டு குட்டீஸ்.. சரஸ்வதி பூஜை நாளில் மறக்காமல் இப்படி வணங்குங்கள்!

சரஸ்வதி தேவி

சரஸ்வதி தேவி

சரஸ் என்றால் பொய்கை என்று அர்த்தம் வதி என்றால் வசிப்பவள். மனம் என்னும் பொய்கையில் வசிப்பவள். சரஸ்வதி என்றால் பேச்சின் அதிபதி அல்லது பேச்சை தருபவள் என்று பொருள். சரஸ்வதி சரஸ் என்றால் சமஸ்கிருதத்தில் பேச்சு என்று பொருள். வதி என்றால் வாழ்பவள் அல்லது இருப்பிடமாக கொண்டவர் என்று பொருள். சரஸ்வதி என்பதன் இன்னொரு அர்த்தம் ஈரத்தன்மை கொண்டவர் என்பதாகும்.

 பேச்சு வளம் தரும் சரஸ்வதி

பேச்சு வளம் தரும் சரஸ்வதி

மூல நட்சத்திர வடிவத்தை சரஸ்வதி தேவியின் கையில் கொடுத்துள்ளனர். மேலும் தாமரை எனும் வடிவம் இவர் நீரில் நிலைகளில் இருப்பவர் என்று கூறப்படுகிறது. ஆதாவது நமது பேச்சுக்கு காரணம் நாவில் இருக்கும் ஈர தன்மையே ஆகும். அந்த ஈர தன்மை குறைந்தால் அல்லது இல்லாமல் போனால் நமக்கு பேச்சு வராது.

வெண்மை நிறம்

வெண்மை நிறம்

சரஸ்வதி அணிந்துள்ள ஆடையின் நிறம் வெள்ளை. வானவில்லின் 7வண்ணங்களில் சேராத வெள்ளையை சரஸ்வதிக்கு மட்டும் சாத்துவர். தூய வெள்ளை ஆடை அணிபவர்களுக்கு தனிமரியாதை உண்டு. கற்றவர், மரியாதைக்குரியவர் என்பதை எடுத்துகாட்டவே, கல்வி தெய்வமான சரஸ்வதியும் வெள்ளைஆடை அணிந்திருக்கிறாள்.

தூய்மையான கல்வி

தூய்மையான கல்வி

வெள்ளை என்பது மாசுமருவற்றது. ஒருவன் கற்ற கல்வியும்,மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது. மலம் என்றால் அழுக்கு. உடலிலுள்ள அழுக்கை மலம் என்கிறோம். நிர்மலம் என்றால் அழுக்கற்றது தெளிவானது. நன்மையும் தீமையும் கலந்து இருக்கும் இந்த உலகத்தில் அழுக்கே இல்லாத கல்வியைத் தேர்ந்தெடுத்து,கற்க வேண்டும் என்பதையே அவளுக்குரிய வெள்ளை நிறம் உணர்த்துகிறது.

கலைகளின் வடிவம்

கலைகளின் வடிவம்

வெள்ளை நிறத்தில் மட்டும் ஒளி ஊடுருவும்.இதனால்தான் சரஸ்வதி தேவி நிர்மலமான ஸ்படிகத்தால் ஆன மாலையை அணிந்திருக்கிறாள். சரஸ்வதிக்கு கலைமகள் என்ற பெயர் உண்டு. கலை என்றால் வளர்வது. கல்வியும் படிக்க படிக்க வளர்ந்து கொண்டே போகும். தன் வாழ்நாளுக்குள்,ஒருவன் எல்லாக் கலைகளையும் கற்று விட முடியாது.இதைத் தான் கற்றது கைம்மண்ணளவு, உலகளவு என்பர். படிப்பு தவிர பாடல், நாடகம், இசை போன்ற கலைகளையும் சரஸ்வதி தேவி நமக்கு சிறப்புற கிடைக்க அருள்பாவிக்கிறாள்.

 தாமரை வடிவம்

தாமரை வடிவம்

நீர் நிலையில் இருக்கும் கடவுள்களுக்கு தாமரை வடிவம் கொடுப்பது முன்னோர்கள் மரபு. உதாரணமாக லஷ்மி தேவி நீரில் உறைபவர் என்பதால் அவருக்கு தாமரை இருப்பிடமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிரம்ம தேவருக்கு திறமை வடிவ இருப்பிடம் கொடுத்ததற்கு இதுவே காரணம்.

எந்த ராசிக்காரர்கள் வணங்கலாம்

எந்த ராசிக்காரர்கள் வணங்கலாம்

கடக ராசியில் உள்ள ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், விருச்சிக ராசியில் உள்ள கேட்டை, மீன ராசியில் உள்ள ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சரஸ்வதி தேவியை வழிபட கல்வி நிலையில் மேன்மை பெறலாம் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

குரு ராகவேந்திரர்

குரு ராகவேந்திரர்

விசாகம், பூரட்டாதி மற்றும் புனர்பூசத்திற்கு சேமம் எனும் நலம் அளிப்பவர் அளிப்பவர் சரஸ்வதி தேவி ஆவார். சித்திரை, அவிட்டம் மற்றும் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு தோஷம் போக்கும் தெய்வம் சரஸ்வதி தேவி ஆவார். குரு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர். ராகவேந்திர ஸ்வாமிகள் வீணை வாசிப்பதில் அபார திறமை கொண்டவர். இவரது வறுமை காலத்தில் வீணை இசை சொல்லிக்கொடுத்தே இவரது ஜீவனம் நகர்ந்தது. மேலும் மனவிரக்தி அடைந்து குளத்தில் தற்கொலைக்கு முயன்ற போது இவரது சாதக நட்சத்திர தெய்வம் சரஸ்வதி தேவி குளத்தில் வீணையுடன் தோன்றி இவரது முற்பிறவி ரகசியத்தை கூறி ஞானம் கொடுத்தார். அதன் பிறகே வேங்கடநாதன் எனும் நாமம் மாறி ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் என்ற நாமம் நிலைபெற்றது.

கல்வி வளம் தரும் சரஸ்வதி

கல்வி வளம் தரும் சரஸ்வதி

புதன் கிழமை காலையில் கிழக்கு நோக்கி அமர்ந்து, சரஸ்வதியை வணங்கினால், கல்வி முன்னேற்றம் ,நல்ல வாக்கு வன்மை கிடைக்கும். மாணவர்கள், பணி புரிபவர்கள்.கலை துறையில் உள்ளவர்கள் இதை சொன்னால் கல்வியில் உயரவும், இருக்கும் நிலை தக்க வைத்து கொள்ளலாம். சரஸ்வதிக்கு கொண்டைக் கடலை சுண்டல், வடை, பாயாசம் செய்து வழிப்படலாம். இவையெல்லாம் செய்ய முடியாதவர்கள் கல்கண்டு, பேரீச்சம் பழம் படைத்து வணங்கலாம். பள்ளி, கல்லூரியில் படிக்கும் குழந்தைகள் சரஸ்வதியை வணங்க அருள் கிடைக்கும்.

English summary
Saraswathi, Nanmukhan Brahma's wife. Lord of education. She is seated on a white lotus, dressed in white, holding a veena and a lute. It is Mother Saraswati who provides the undiminished wealth of education and wealth. By which, we can see the benefits of worshiping the Goddess Saraswathi born in the Nakshatra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X