For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விபரீத ராஜ யோகம், நீசபங்க ராஜ யோகம் பெற்ற ஒருவன் ஜாதகம் எப்படி இருக்கும் தெரியுமா?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன்

வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் பலர் கடவுளை நாடுகின்றனர். அதே போல ஜாதகக்கட்டை எடுத்துக்கொண்டு ஜோதிடரிடம் செல்கின்றனர். உடல்நிலை சரியில்லை என்றால் கூட நேரம் எப்படியிருக்கு ஜாதகக்கட்டத்தில் எதுவும் பிரச்சினையா என்றுதான் பலரும் இன்றைக்கு நூற்றில் 50 சதவிகிதம் பேர் கேட்கின்றனர்.

எனக்கு மட்டும் ஏன் இப்படி இருக்கு? கடைசி வரைக்கும் இதே கஷ்டம்தானா? என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. நான் பணக்காரன் ஆக முடியாதா? எனக்கு எப்போது கோடீஸ்வன் ஆகும் யோகம் வரும் நான் எப்போ அம்பானி மாதிரி பணக்காரன் ஆவேன் என்றுதான் பலரது கேள்வியாக இருக்கிறது.

ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பு, அவை அமர்ந்திருக்கும் வீடுகள், உச்சத்தில் இருக்கிறதா? நீச்சமா? பகையா? நட்பா என்றெல்லாம் ஜோதிடர்கள் ஆராய்ந்து பலன் சொல்வார்கள்.

12 ராசிகளிலும் 9 கிரகங்கள் அமர்ந்து அவை பார்க்கும் வீடுகளைப் பொறுத்தும், இணைந்திருக்கும் கிரங்களைப் பொறுத்தும் ஒருவருக்கு யோகங்களும், பலன்களும், நன்மை தீமைகளும் நடைபெறும்.

நவக்கிரகங்கள் என்று சொல்லக் கூடிய சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது. அனைத்து கிரகங்களுக்கும் ஒளி ஊட்டக் கூடிய கிரகம் சூரியன். ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஆட்சி வீடுகள் இருக்கின்றன. சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஒரு ஆட்சி வீடுதான் இருக்கிறது. அதே நேரத்தில் பிற கிரகங்களான செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களுக்கு இரண்டு ஆட்சி வீடுகள் இருக்கின்றன.

ஒருவருக்கு சூரியன்தான் அப்பா. சிம்ம ராசியில் ஆட்சி, மூலத்திரிகோணம். மேஷம் ராசியில் உச்சம், துலாம் ராசியில் நீசம். சந்திரன் அம்மா ஸ்தானத்தில் இருக்கிறார். கடகம் ராசியில் சந்திரன் ஆட்சி,மூலத்திரிகோணம். ரிஷபம் ராசியில் உச்சம் விருட்சிகத்தில் நீசம். சந்திரனுக்கு பகை கிடையாது.

யாருக்கு எந்த வீடு

யாருக்கு எந்த வீடு

மேஷம்,விருச்சிகம் ராசிகளில் செவ்வாய் ஆட்சி. மகரம் ராசியில் உச்சம் ,கடகம் ராசியில் நீசம். ரிஷபம், துலாம் ராசியில் சுக்கிரன் ஆட்சி. மீனம் ராசியில் உச்சம். கன்னி ராசியில் நீசம். மிதுனம்,கன்னி ராசிகளில் புதன் ஆட்சி. கன்னி ராசியில் உச்சம். மீனம் ராசியில் புதன் நீசம்.

குரு, சனி

குரு, சனி

தனுசு ,மீனம் ராசிகளில் குருபகவான் ஆட்சி. கடகம் ராசியில் உச்சம். மகரம் ராசியில் நீசம். மகரம் ,கும்பம் ராசிகளில் சனி ஆட்சி. துலாம் ராசியில் சனி உச்சம். மேஷம் ராசியில் நீசம். ராகு- கேது நிழல் கிரகங்கள் என்றும் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும் . இவற்றிர்க்கு சொந்த வீடு கிடையாது.

திடீர் ராஜ யோகங்கள்

திடீர் ராஜ யோகங்கள்

வாழ்க்கையில் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் ஒருவருக்கு திடீர் ராஜயோகங்கள் ஏற்படும், விபரீத ராஜயோகம், நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு அதன் மூலம் திடீர் கோடீஸ்வரர் ஆகி விடுவார்.

கோடீஸ்வரர்கள்

கோடீஸ்வரர்கள்

கோடீஸ்வர குடும்பத்தில் வாரிசாகப் பிறந்து, கடைசி வரை கோடீஸ்வரராக வாழும் யோகம் வெகு சிலருக்கே அமையும். நான்காம் அதிபதி, செவ்வாய், ஒன்பது, பத்தாம் அதிபதிகள் பலம் பெற்ற ஜாதகர் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்திருப்பார். முன்னோர்கள் செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்களாக இருப்பர்.

தசா புத்தி யோகங்கள்

தசா புத்தி யோகங்கள்

ஒவ்வொருவருக்கும் ராசியைப் போல லக்னம் உண்டு. பிறந்த நாளில் உள்ள நட்சத்திரத்தின் அடிப்படையில் ராசியையும், பிறந்த நேரத்தைக் கொண்டு லக்னத்தையும் அறிந்துகொள்ளலாம். மேஷம் விருச்சிகத்துக்கு செவ்வாய் தசை, ரிஷபம் துலாமுக்கு சுக்கிர தசை, மிதுனம் கன்னிக்கு புதன் தசை, மீனம் தனுசுக்கு குரு தசை, மகரம் கும்பத்துக்கு சனி தசை, சிம்மத்துக்கு சூரிய தசை, கடகத்துக்கு சந்திர தசை என லக்னாதிபதி, ராசி அதிபதிகளின் தசை நடக்கும்போது ஜாதகர் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும். திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

விபரீத ராஜ யோகம்

விபரீத ராஜ யோகம்

'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்ற வகையில் விபரீத ராஜயோகத்தால் சிலர் கோடீஸ்வரராகிவிடுவர். விபரீத ராஜயோகம் பலர் ஜாதகத்தில் இருந்தலும் சிலருக்கு தான் யோகத்தின் பலனை முழுமையாக அனுபவிக்கும் யோகத்தை தருகிறது. அடிமட்ட நிலையில் இருக்கும் ஒருவனை கோபுரத்தில் வைக்கும் சக்தி பெற்ற பலமான யோகம்.

திடீர் அதிர்ஷ்டம்

திடீர் அதிர்ஷ்டம்

சாதாரண மட்டதில் அடிமை தொழில் செய்தும் கொண்டும்,ஜீவனத்துக்கு கூட கஷ்டம் அனுபவிக்கும் பலரும், சுகபோக வாழ்க்கை இந்த ஜென்மத்தில் கிடைக்காது என்று நாம் நினைக்கும் பலர் இந்த யோகத்தின் மூலம் சமூகத்தில் உச்ச நிலையை அடைகின்றனர். லாட்டரி சீட்டுக்கள் மூலம் யோகத்தை கொடுத்து திக்கு முக்காட வைத்து தகுதிக்கு மீறிய வாழ்வு தந்து அதை அனுபவிக்கும் யோகத்தை தந்து விடுகிறது.

மறைவு ஸ்தானங்கள்

மறைவு ஸ்தானங்கள்

ஜாதகத்தில் 3, 6, 8, 12ம் இடங்கள் மறைவு ஸ்தானம். 3ம் அதிபதி 6, 8, 12ம் இடத்திலோ, 6ம் அதிபதி 3, 8, 12ம் இடத்திலோ, 8ம் அதிபதி 3, 6, 12ம் இடத்திலோ, 12ம் அதிபதி 3, 6, 8ல் மாறி நின்றாலோ, 3, 6, 8, 12ம் அதிபதிகள் பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனியாக இருந்து மறைந்தால் புகழுடன் கோடீஸ்வரராக வாழ்க்கை கிடைத்துவிடும். பாதகாதிபதி நீசம், வக்ரம் போன்று வலுவிழந்து தசை நடந்தாலும், ஜாதகரை கோடீஸ்வரராக மாற்றிவிடும். சுபகிரக, கேந்திர, திரிகோண அதிபதிகள் ராசியில் நீசம் பெற்று அம்சத்தில் பலம் பெற்றாலும், சுபயோக பலன்களையே தருவர்.

நீச பங்க ராஜ யோகம்

நீச பங்க ராஜ யோகம்

ஒரு கிரகம் உச்சம் பெற்றால் 100 சதவிகித பலன் கிடைக்கும் என்றும் நீசம் பெற்றால் பூஜ்யம் பலன்தான் கிடைக்கும் என்பது விதி. எப்பொழுதுமே விதி என்று ஒன்று இருந்தால் விதி விலக்கு என்று ஒன்று உண்டு. நீசம் பெற்ற கிரகம் நீச பங்கம் பெறும் போது மிகவும் வலுவான நிலையை அடைந்து அபரிமிதமான பலனைத் தருகிறது. நீசம் பெற்ற கிரகத்திற்கு வீடு கொடுத்த ராசி அதிபதி ஆட்சி, உச்சம் பெற்றால் அது நீசபங்க ராஜ யோகம் என்ற அமைப்பைத் தருகிறது.

நீசனை நீசன் பார்த்தால்

நீசனை நீசன் பார்த்தால்

நீசம் பெற்ற ஒரு கிரகம் நீசம் பெற்ற மற்றொரு கிரகத்தை பார்ப்பது நீச பங்க ராஜ யோகம், உதாரணமாக மேஷத்தில் நீசம் பெற்ற சனி, துலாம் ராசியில் நீசம் பெற்ற சூரியனை பார்ப்பது நீசபங்க ராஜ யோக அமைப்பாகும். சூரியன் நீசம் பெற்றால் அரசு வேலை கிடைக்காது என்பார்கள். ஆனால் மாமன்னர் ராஜ ராஜ சோழன் ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் சூரியன் நீசமான நிலையில் பிறந்தவர். இவருக்கு நீசபங்க ராஜ யோகத்தால் நாடாளும் வாய்ப்பு கிடைத்தது.

English summary
Neecha bhanga Raja yoga, Vipareetha Raja yoga in Jathagam improves the significance of the Neecha grahas. When a certain planet is empowered in a chart by various sources of strength in astrology, it is said to produce the results of Rajayogas in a native’s life. By the term ‘Rajayoga’ in astrology means that the native will have all sorts of comforts and power that are meant to live a life easily.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X