For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லையப்ப கோவில் தைப்பூச விழா ஜனவரி 30ல் கொடியேற்றம்- பிப்.10ல் தெப்பத்திருவிழா

நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூச தெப்ப திருவிழாவாகும். ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா இங்கு வெகு விமரிசையாக நடைபெறும்.

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா ஜனவரி 30ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதை முன்னிட்டு, அன்றைய தினம் அதிகாலை 5 மணியளவில், சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரமும், தீபாராதனையும நடைபெறும். அதைத் தொடர்ந்து காலை 7:30 மணியளவில் சுவாமி சன்னதி முன்பு கொடியேற்ற வைபவமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெறும்.

தென் தமிழகத்தில் தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டு திருத்தலங்களில முக்கியமானது நெல்லையப்பர் கோவில். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான,நெல்லைச் சீமையில் புகழ்பெற்ற சிவாலயமாகும். அதோடு, சிவபெருமான் நாட்டியமாடிய பஞ்ச சபைளில் ஒன்றான தாமிர சபையை கொண்ட கோவில் என்ற பெருமையும் வாய்ந்தது இக்கோவில்.

Nellaiappar Temple Thai Poosam Festival begins with Flag Hoist on January 30

நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூச தெப்ப திருவிழாவாகும். ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா இங்கு வெகு விமரிசையாக நடைபெறும். அதேபோல், இந்த ஆண்டு தைப்பூச திருவிழா ஜனவரி 30ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கொடியேற்ற வைபவத்தை முன்னிட்டு, அன்று அதிகாலை 5 மணியளவில் நெல்லையப்பருக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரமும், தீபாராதனையும் நடைபெறும். அதைத் தொடர்ந்து காலை 7:30 மணியளவில், சுவாமி சந்நிதி முன்பு கொடியேற்ற வைபவம் நடைபெற்று, சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெறும்.

தைப்பூச திருவிழாவில், வரும் பிப்ரவரி 4ஆம் தேதியன்று நண்பகல் 12 மணிக்கு சிவபெருமான் நெல்லையப்பர் நெல்லுக்கு வேலியிட்ட திருவிழாவும், இரவு 8 மணியளவில் சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் திருவீதியுலா வைபவமும் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் பிப்ரவரி 8ஆம் தேதியன்று நண்பகல் 12 மணிக்கு சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அகத்தியர், தாமிரபரணி, நாயன்மார்களில் ஒருவரான குங்களியநாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், அஸ்திரதேவி ஆகியோர் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புறப்பட்டு நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றிலுள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளுவர்.

குரு சனியால் உயிரை குடிக்கும் புதிய வைரஸ் மக்களை தாக்கும் - எச்சரித்த ஆற்காடு பஞ்சாங்கம்குரு சனியால் உயிரை குடிக்கும் புதிய வைரஸ் மக்களை தாக்கும் - எச்சரித்த ஆற்காடு பஞ்சாங்கம்

அன்று மாலை 4 மணியளவில், தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி வைபவமும், அதைத் தொடர்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடைபெறும். மாலை 6 மணியளவில் தைப்பூச மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, மீண்டும் கோவிலை வந்தடைகிறார்கள். அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

பிப்ரவரி 9ஆம் தேதியன்று, சௌந்திர சபா மண்டபத்தில் வைத்து பிருங்கி முனி சிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்டியருளும் சௌந்திரசபா நடராஜர் திருநடனக் காட்சியும், பிப்ரவரி 10ஆம் தேதியன்று, இரவு 7 மணியளவில், புஷ்கரணி வெளித்தெப்பத்தில் தைப்பூச தெப்பத்திருவிழா வைபவமும் நடைபெறும்.

English summary
The Thai Poosa Festival at Nellaiappar Temple begins on January 30 with the flag. In front of it, around 5 o'clock in the early morning, there will be a special anointing ceremony and Deeparadhana for Swami and Ambal. Thereafter, at 7:30 AM, there will be a Flag Hoist and a special liturgical celebration in front of the Swami shrine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X