• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புத்தாண்டு நாளில் தன்வந்திரி பீடத்தில் ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்

Google Oneindia Tamil News

வேலூர்: வாலாஜா பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி நாளை தேய்பிறை அஷ்டமி யாகமும், 30.12.2018 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ கிருஷ்ணர் யாகத்துடன் பகவத் கீதை நூல் வழங்கும் விழா நடைபெறுகிறது. உலக நலன் கருதி 01.01.2019 புத்தாண்டு தினத்தில் ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள் நடைபெறவுள்ளன.

கல்வியில் சிறந்து விளங்க ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், எதிரிகள் விலக மஹா சுதர்ஸன ஹோமம், ஆயுள் பயம் நீங்க ஆயுஷ்ய ஹோமம், நீண்ட ஆயுள் பெற மஹா தன்வந்திரி ஹோமம், வாழ்வில் வளம் பெற குபேர லட்சுமி ஹோமம் ஆகிய ஐந்து ஹோமங்கள் நடைபெறவுள்ளது.

New year 2019 Five homam in Sri Danvantri peedam

இதனை முன்னிட்டு காலை கோபூஜையும், கணபதி ஹோமமும், வேத பராயணமும், கலச பூஜையும் சிறப்பு அர்ச்சனையும். நடைபெறவுள்ளது.

யாகம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள்

ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள் எனப்படும் சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் (நியாயமான கோரிக்கைகள்) அவற்றை நமக்குத் தந்தருளத் தயங்க மாட்டார் . மேலும் தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், வியாபார அபிவிருத்தி என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.

முழுத்தேர்வு, 2019 புத்தாண்டு மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு நடைபெறும் இந்த யாகங்களில் ஏராளமான மாணவ, மாணவிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பங்கு கொண்டு பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லை, நோய்கள், நீங்கி ஆயுள் ஆரோக்யத்துடன் குபேர சம்பத்து, கல்வி சம்பத்து பெற்று வாழலாம். இந்த யாகத்தில் பிரபல திரைப்பட நடிகை நளினி, மருத்துவர்கள் பலர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.

ஸ்ரீ கிருஷ்ணர் யாகம்

30.12.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ கிருஷ்ணர் யாகத்துடன் பகவத் கீதை நூல் வழங்கும் விழா நடைபெறுகிறது. அறிவு மூலம் அறியாமை அகற்றும். உள் வலிமை. சமநிலையான வாழ்க்கை வாழ வழிகாட்டுதல்கள். நடவடிக்கை முக்கியத்துவம். பயம் மற்றும் துன்பத்திலிருந்து சுதந்திரம். கடந்த பிறப்புகளின் பாவங்கள் கூட அழிக்கப்படுகின்றன. வேலை வெற்றி. நல்ல செயல்களின் வெற்றி. துன்பத்தை நீக்குதல். நோய் நீக்கம். வறுமையை அகற்றுதல். கோளாறுகளால் ஏற்படும் பிரச்சினைகளை நீக்குதல். மனநல பிரச்சினைகள் மற்றும் துயரத்தை அகற்றும் போன்ற பல்வேறு கர்மவினைகளுக்கு துயர்த்துடக்கும் புனித நூல் தான் பக்வத் கீதையாகும்.

ஸ்ரீ கிருஷ்ண யாகம் பலன்கள்

பகவத் கீதையை வாசிப்பதுடன் ஸ்ரீ கிருஷ்ணரின் யாகத்தில் பங்கேற்பதின் மூலம் இரட்டிப்பு பலன்களை பெறலாம். இவற்றின் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும், மகிழ்ச்சி தங்கும், அகந்தை அகலும், மூர்க்க குணம் குழந்தைக்கு ஏற்படாது. தர்மசீலராக இளைஞர்கள் வருவார்கள். அரசியல் ஞானம் உண்டாகும். நிர்வாக திறன் அதிகரிக்கும். மாமனார் வழியில் சொத்துக்கள் கிடைக்கும். திருமணத் தடைகள் அகலும், செல்வம் பெருகும், வயல்களில் விளைச்சல் அதிகரிக்கும், ஆடு, மாடுகள் நன்கு செழிப்பாக வளரும், கடன் தீரும், பகைமை ஒழியும், நண்பர்கள் கூட்டு தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். புகழ் கூடும். அமைதி நிலவும், ஆற்றல் பெருகும், வறுமை இல்லா வாழ்வு அமையும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். ராஜதந்திரம் அதிகரிக்கும், அரசியல் சாணக்கியத் தன்மை அதிகரிக்கும். பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்திசாலித்தனம் கூடும். எளிமையாகவும், சுருக்கமாகவும், புரிந்து கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும். இச்சிறப்பு மிகுந்த யாகத்திலும் விழாவிலும் ஸ்வாமிகளின் ஆசிகள் பெற்ற திரைப்பட நடிகர் “கலைமாமணி” திரு. டெல்லி கணேஷ் மற்றும் பலர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். தொடர்புக்கு தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203.

English summary
Ashta Bhairava Yagam With Swarna Bhairava Yagam is Going to be Held on 29.12.2018 at Danvantri Peedam. Sri Krishna Yagam Bhagavad Gita Ceremony on 30th December. 2019 new year day five homam held at Danvantri peedam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X