For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்- 2017- மீனம்

புத்தாண்டு ராசி பலன்கள் அனைத்தும் பொதுவானவை ஜன்ம லக்கின ராசியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள பலன்களாகும். 2017ம் ஆண்டிற்கான மீனம் ராசிக்கான பலன்களை தெரிந்து கொள்வோம்

Google Oneindia Tamil News

சென்னை: பொதுவாக நற்பலன் தரக்கூடிய குரு மற்றும் தீய பலன் தரக்கூடிய சனியின் கோசார நிலையைக் கொண்டு புத்தாண்டில் நிகழக்கூடிய நல்ல கெட்ட பலன்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

கோசார கிரகங்களின் நற்பலன்களை அதிகப்படுத்திக்கொள்ளவும் தீய பலன்களை குறைத்துக் கொள்ளவும் அன்பர்கள் அவரவர்களின் இஷ்ட தெய்வங்களை வழிபடுவது சிறப்பு.

மீன ராசி நேயர்களே! ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பத்தாமிடத்திற்கு வருவது தொழிலில் மேன்மையை உண்டாக்கும்.

New year Rasi palan 2017 - Meenam

இந்த ஆண்டு துவக்கத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் எல்லோரிடமும் நல்லுறவு இருக்கும் ஆண்டின் இறுதியில் குரு உங்கள் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்திற்கு வருகிறார் திடீர் பண வரவு உண்டாகும்.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி சுப பலன்களை கொடுக்கும். ராகு ஐந்தாமிடத்திற்கு வருவது கடன்கள் அனைத்தும் அடைபடும் உடல் ஆரோக்கியம் சிறப்பாகும் கேது பதினொன்றாமிடத்திற்கு வருவது தொழில் லாபம் அதிகரிக்கும் எண்ணங்கள் எல்லாம் நிறைவேறச் செய்யும்.

ஜனவரி - பணம், நகை சேரும்

ஆண்டின் துவக்கத்தில் பத்தாமிடத்தில் இருக்கும் சூரியன் உத்தியோக மேன்மையைத் தருவார் இம்மாதம் 14ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு பதினொன்றாமிடத்திற்கு சூரியன் வருகிறார் சம்பளம் அதிகரிக்கும். செவ்வாய் இம்மாதம் 20ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் மனதில் கோபம் அதிகரிக்கும். புதன் இம்மாதம் முழுவதும் பத்தாமிடத்தில் இருப்பது தொழில் வியாபாரத்தை சிறப்படையச் செய்யும் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருப்பது சீரான பண வரவையும் அனைவரிடமும் நல்லுறவை பேணும் குணத்தையும் கொடுக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்மராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது பொன்னகைகளின் சேர்க்கையை அதிகரிக்கச் செய்யும் இம்மாதம் 27ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் முக வசீகரம் அதிகரிக்கும். சனி வருட ஆரம்பத்தில் ஒன்பதாமிடத்தில் இருந்தாலும் இம்மாதம் 26ம் தேதி பத்தாமிடத்திற்கு வருவது தொழிலில் சிறப்படையச் செய்யும். ராகு ஆறாமிடத்தில் இருப்பது மனதில் தைரியத்தை அதிகரிக்கச் செய்யும் கேது பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது அலைச்சல் அதிகமாக இருக்கும்.

பிப்ரவரி - வெளிநாடு யோகம்

சூரியன் இம்மாதம் 13ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உருவாகும். புதன் இம்மாதம்03ம் தேதி உங்கள் ஜென்மராசிக்கு பதினொன்றாமிடத்திற்கு வருவது தொழிலில் லாபம் அதிகரிக்கும் 22ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது வெளிநாடு செல்லும் யோகத்தை கொடுக்கும். செவ்வாய், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி கிடையாது கடந்த மாத பலன்களையே இம்மாதமும் தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச் - காரிய மேன்மை

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். செவ்வாய் 02ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் கோபமான வார்த்தைகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. புதன் 11ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருவது புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்யும் 27ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பேச்சினாலேயே காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.
குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல் - சகோதரர்களால் நன்மை

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி இரண்டாம் இடத்திற்கு வருகிறார் அரசு பணியாளர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும் செவ்வாய் இந்த மாதம் 13ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் சகோதரர்களினால் நன்மை உண்டாகும். புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே - குடும்பத்தில் சந்தோஷம்

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் வெளியூர் செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் இந்த மாதம் 27ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். சுக்கிரன் இந்த மாதம் 27ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். இந்த மாதம் புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன் - கல்வியில் மேன்மை

இந்த மாதம் சூரியன் 15ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும். புதன் இந்த மாதம் 03ம் தேதி மூன்றாம் இடத்திற்கு வருகிறார் நல்ல தகவல் கிடைக்கும் 18ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் கல்வியில் மேன்மை உண்டாகும். சுக்கிரன் இம்மாதம் 29ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் இடமாற்றம் உண்டாகும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை - லாபம் அதிகரிக்கும்

சூரியன் இந்த மாதம் 17ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் செவ்வாய் 11ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும். புதன் இந்த மாதம் 03ம் தேதி ஐந்தாம் இடத்திற்கு வருகிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் லாபம் உண்டாகும் 21ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் பங்காளிகளுடன் பகைமை உண்டாகும் சுக்கிரன் 26ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிதாக சொகுசு வாகனம் வாங்குவீர்கள்.
இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட் - நினைத்தது நடக்கும்

சூரியன் 17ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு ஆறாமிடத்திற்கு வருகிறார் தொழிலில் தொல்லை உண்டாகும் செவ்வாய் 27ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் நெருப்பால் காயம் உண்டாகும். சுக்கிரன் 21ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் நன்மை உண்டாகும் ராகு இம்மாதம் 18ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் கடன்கள் எல்லாம் தீர்வாகும் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் கேது 18ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் மனதில் நினைப்பவை எல்லாம் நடக்கும் லாபம் அதிகரிக்கும். இந்த மாதம் புதன், குரு, சனி, பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர் - திடீர் பணவரவு

சூரியன் 17ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் அரசாங்கத்துடன் தொழில் ரீதியாக ஒப்பந்தம் உண்டாகும். செவ்வாய் 13ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வியாபாரம் சிறப்படையும். புதன் 27ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் வியாபாரம் விருத்தியாகும். குரு 12ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்திற்கு வருகிறார் எதிர்பாராமல் திடீர் பண வரவு கிடைக்கும். சுக்கிரன் 15ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் தொல்லை உண்டாகும். இந்த மாதம் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர் - கவனம் தேவை

சூரியன் 18ம் தேதி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்திற்கு வருகிறார் தொழிலில் மன உளைச்சல் உண்டாகும் செவ்வாய் 30ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் வாகனங்களை கையாளும்பொழுது கவனம் தேவை. புதன் 30ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். சுக்கிரன் 15ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர் - தொழில் சிறப்பு

சூரியன் 17ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் பரம்பரையாக செய்து வரும் வியாபாரம் நன்றாக இருக்கும். புதன் 02ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் உயர் கல்வி மேன்மையடையும் 24ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் வியாபாரம் சிறப்படையும். சுக்கிரன் 03ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் தொல்லை உண்டாகும் 26ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர் - பதவி உயர்வு

சூரியன் 16ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் பதவி உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சுக்கிரன் 20ம் தேதி உங்கள் பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் உத்தியோகத்தில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

English summary
Here is the New year Rasi Palan for 2017 horoscope of Meenam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X