• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசிக்காரங்களுக்கு 2020ல் கண்டிப்பா கல்யாணம் நடக்கும் - கொண்டாட தயாராகுங்க

|

சென்னை: எனக்கு எப்போ கல்யாணம் ஆகும் என்று ஏக்கத்தோடு பல ராசிக்காரங்களும் காத்திருக்கின்றனர். குரு பார்வை வந்தாச்சா? 2020ஆம் ஆண்டிலாவது திருமணம் நடக்கணுமே என்ற எதிர்பார்ப்பு பலருக்கு எழுந்துள்ளது. குரு பலம் வந்தாலும் சிலருக்கு கல்யாணம் நடப்பதில் தடைகள் இருக்கும் காரணம் அஷ்டமத்து சனி நடக்கலாம், அல்லது தசாபுத்தி சரியில்லாமல் இருக்கும். களத்திர தோஷம் இருந்தாலும் திருமணம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. ஆயிரம் காலத்து பயிர் என்றெல்லாம் சொல்வார்கள் சிலருக்கோ அது ஏழு கடல் ஏழுமலை தாண்டி சிறை வைக்கப்பட்டிருக்கும் பறவையின் வயிற்றில் இருக்கும் உயிரை போல அதிசயமானதாக மாறி விடுகிறது. கவலைப்படாதீங்க 80,90 கிட்ஸ் உங்களில் பலருக்கு 2020ஆம் ஆண்டு கல்யாணம் கட்டாயம் நடக்கும்னு சொல்றாங்க. எந்த ராசிக்காரங்களுக்கு கல்யாணம் நடக்கும் பார்க்கலாம்.

வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்னு சும்மாவா சொன்னாங்க. வீடு கட்ட வாஸ்து பூஜை போடுறதுல இருந்து வீடு கட்டி முடிச்சி கிரகப்பிரவேசம் செய்வது வரைக்கும் ஓயாத வேலைதான் பண செலவும் ஏற்படும். ஏதாவது சின்னச் சின்ன தடைகள் வந்து பின்னர் அதை நிவர்த்தி செய்வதற்குள் ஓய்ந்து போய் விடுவோம். அப்படித்தான் கல்யாணம் செய்வதும் வரன் பார்த்து பேசி முடித்து நிச்சயம் செய்து முகூர்த்தம் குறித்து கழுத்தில் தாலி ஏறும் வரைக்கும் பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவித படபடப்போடுதான் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.

சோசியல் மீடியாவில் இன்னமும் முரட்டு சிங்கிள் என்று ஸ்டேட்டஸ் போடும் இளம் காளையர்களும், கன்னிப்பெண்களும் 2020ஆம் ஆண்டில் கமிட்டட் என்று போடும் காலம் வந்து விட்டது. குருப்பெயர்ச்சி இப்போதுதான் நடந்திருக்கிறது. குரு பார்வையும் பலமா சில ராசிக்காரங்க மேல விழ ஆரம்பிச்சிருக்கு, அடுத்து நடக்கப் போற சனிப்பெயர்ச்சியும் சந்தோஷமான தகவலை சொல்லப்போகுது காரணம் குருவும் ஆட்சி, சனியும் ஆட்சி பெற்று அமரப்போவதால எல்லா ராசிக்காரங்களுக்கும் நல்லதுதான் நடக்கப்போகுது. சோகத்தோட ஸ்டேட்டஸ் போட்ட மக்களே 2020 ஆம் ஆண்டில் யாரெல்லாம் மணக்கோலம் காணப்போறீங்கன்னு பார்க்கலாம்.

கல்யாணம் நடக்கும்

கல்யாணம் நடக்கும்

கஷ்டப்பட்டு, அடி உதை பட்டு, பல வருஷமா பலமுறை பெண் பார்த்தும் முடியாமல் எப்போ கல்யாண சாப்பாடு போடப்போறே என்று பலரும் கேட்டு கேட்டு அதற்கு பதில் சொல்ல சங்கடப்பட்டு மறைந்து மறைந்து நடமாடிக்கொண்டிருந்த ராசிக்காரர்கள் சிலர் இருக்கிறார்கள் அவர்கள் வேறு யாருமல்ல விருச்சிகம், தனுசு ராசிக்காரர்கள்தான். இனி கவலையே படாதீங்க. குரு விருச்சிகத்திற்கு குடும்ப குருவாக இருக்கிறார். தனுசு ராசிக்கு ஜென்ம குருவாக அமர்ந்து களத்திர ஸ்தானத்தை பார்க்கிறார். இந்த குருபலன், பார்வையால் கல்யாண ராசி வந்தாச்சு கவலைப்படாதீங்க.

காதலும் கல்யாணமும்

காதலும் கல்யாணமும்

வாழ்த்துக்கள் விருச்சிக ராசிக்காரங்களே. என்ன நண்பா நமக்கெல்லாம் வாழ்க்கையில கல்யாணம்னு ஒண்ணு நடக்குமா? ஒரு பொண்ணு கூட ஜோடியா சுத்துவோமா என்று ஏக்கப்பெருமூச்சு விட்டுட்டு இருந்தீங்களே... இனி கவலை வேண்டாம். 2020ஆம் வருஷத்தில உங்களுக்கு காதல் மலரப்போகுது. உங்க வீட்டிலையும் பந்தல் போட்டு மேள தாளத்தோட நீங்க மணவறையில உட்காரப்போறீங்க. உங்களுக்கு இதுநாள் வரைக்கும் இருந்த தடைகள் நீங்கியாச்சு. அப்புறம் என்ன சட்டுபுட்டுன்னு ஒரு பொண்ணை பாருங்க தாலிய கட்டுங்க சந்தோஷமா ஹனிமூன் கிளம்புங்க மக்கா.

கெட்டி மேளச்சத்தம் கேட்கப்போகுது

கெட்டி மேளச்சத்தம் கேட்கப்போகுது

என்ன தனுசு ராசிக்காரங்களே.. ஏழரை சனி உங்களை ஆட்டி படைக்குதா? எந்த கிரகமும் நமக்கு சரியில்லாம இருக்கே. நம்ம ஜாதகம் மட்டும் ஏன் இப்படி நம்ம ராசி சரியில்லையோ அப்படின்னு நினைச்சிட்டு இருக்கீங்களா? கவலையை விடுங்க. நல்ல காலம் பிறந்துருச்சு. 2020 உங்களுக்கான ஆண்டு கல்யாணம் கை கூடி வரப்போகுது. மனம்போல வாழ்க்கைத்துணை அமையப்போகுது. உங்களை கேலி, கிண்டல் பண்ணியவங்க வாயை அடைக்கிற மாதிரி அம்சமான வரன் அமையப்போகுது. பொண்ணை பார்த்தோமா? மாப்பிள்ளையை நிச்சயம் செய்தோமா பிடிங்க வெத்தலை பாக்குன்னு விறுவிறுன்னு வேலை நடக்கும்.

கல்யாண வைபோகமே

கல்யாண வைபோகமே

மீன ராசிக்காரங்களே நீங்களும் அதிர்ஷ்ட காரங்கதான். காரணம் குரு பார்வை உங்க குடும்ப ஸ்தானத்தில விழுகுது சிங்கிள்ஸ் ஆக இருக்கிற மீன ராசிக்காரங்களுக்கு குடும்ப வாழ்க்கை கண்டிப்பா அமைஞ்சே ஆகணும். காதல் கல்யாணம்னாலும் சந்தோஷமா பெத்தவங்க ஆசியோடவே நடக்கும். அப்புறம் என்ன கல்யாண மண்டபத்தை புக் பண்ற வேலையை பாருங்க தை பிறந்தா கண்டிப்பா வழி பிறக்கும் ஹனிமூன் எந்த ஊருக்கு போறதுன்னு நீங்க பிளான் பண்ணுங்க நல்லது கண்டிப்பா நடக்கும்.

 
 
 
English summary
Weddings are beautiful things and really are unforgettable experiences that mark us profoundly. 2020 Love horoscope is full of amazing surprises and each of the 12 zodiac signs should expect some changes in their love lives; some positive and others negative.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X