For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னைக்கு தண்ணில கண்டம் இருக்கா? சிவகாமி கம்ப்யூட்டர் சொல்லும் ஜோதிடம்!

By Staff
Google Oneindia Tamil News

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதிலும், கடந்த ஒரு வாரமாக சென்னை உள்ளிட்ட 8 கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டுகளை போல் இந்த ஆண்டும் மழையால் சென்னை மற்றும் தமிழ்நாட்டிற்க்கும் பாதிப்பு வருமா என மக்கள் ஆர்வமுடன் ஜோதிடர்களை கேட்ட துவங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    ஆக்ரோஷமானது கனமழை..நாளை வரை நீடிக்கும்..வீடியோ
    சூரிய நீசம்:

    சூரிய நீசம்:

    சூரியனின் உச்ச நீச்சத்திற்க்கேற்ப தட்ப வெப்ப நிலைகள் அமைகின்றன. சூரியன் சித்திரை மாதத்தில் மேஷத்தில் பயனிக்கும் போது உச்ச ராசியில் நிற்பதாகவும் அதற்கு நேரெதிரான துலா ராசியில் ஐப்பசியில்

    பயனிக்கும்போது நீச நிலை அடைவதாகவும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

    அதனையொட்டி சித்திரையில் கடும் வெயில் மற்றும் அக்னி நக்‌ஷத்திரமும், ஐப்பசியில் அடைமழையும் பெய்கிறது. எனவே ஐப்பசி மாதம் முழுவதும் அதாவது (16/11/2017) வரை மழை தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

    கிரஹனங்கள்:

    கிரஹனங்கள்:

    கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சந்திர கிரஹனமும் சூரிய கிரஹனமும் ஏற்பட்டது அனை வரும் அறிந்ததே. பொதுவாக பதினைந்து நாட்களில் இரண்டு கிரஹணங்கள் ஏற்படுவது ராஜாங்க விஷயங்களில் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்தும் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இயற்க்கை பேரிடர்கள், உற்பாதங்கள், பிரபலமானவர்கள் மரணம் ஆகியவற்றையும் ஏற்படுத்த கூடும் என கூறுகின்றன. நீர் ராசிகளில் ராகு சுக்கிரன் வக்கிர சனி ஆகியவை நின்று கிரஹணம் ஏற்பட்டதால் கடல் சீற்றம், தொடர்மழை, வெள்ள சேதங்கள் ஆகியவையும் இந்த ஆண்டு இறுதி வரை ஏற்பட்ட வண்ணம் இருக்கும் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

    புதன் - சுக்கிரன் அருகாமை:

    புதன் - சுக்கிரன் அருகாமை:

    சுக்கிரனும் , புதனுக்கும் உள்ள இடைப்பட்ட தூரம் 8 டிகிரியிலிருந்து 30 டிகிரி வரை இருந்தால், அது புத சுக்கிர அருகாமை எனப்படும். இந்த நெருக்கம், ஜோதிடத்தில் பஹு வர்ஷம் எனப்படும்.

    சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் மூவரும் எப்போதும் ஒன்றாக (சில விதிகளுக்குட்பட்டு) பயணம் செய்வர். எனவே அவர்களை முக்கூட்டுகிரகங்கள் என்பர். சுக்கிரனும், புதனும் சூரியனுக்கு முன்னும், பின்னும் எப்பொழுதும் சுற்றி வரும். சூரியன், புதன், சுக்கிரன் மூன்றும் ஒரே இராசியில் இருந்தால் மழை பொழியும். அவை மூன்றும் ஒரே நவாம்சத்தில் இருந்தால், பலத்த மழை பெய்யும். இராசியும், நவாம்சமும் நீர் சம்பந்தப்பட்டதாக இருந்தால் (கடகம், விருச்சிகம், மீனம்) மிக பலத்த மழை பொழியும். அதற்கிணங்கவே மழையைத் தீர்மானிக்க வேண்டும்.

    சுக்கிரனும், புதனும் ஒரே இராசியிலும், ஒரே நவாம்சத்திலும் இருந்து, சுக்கிரன் செவ்வாய்க்குப் பின்னால் இருந்தால், அதிகமான மழை பொழியும். சூரியன், பூமி சம்பந்தப்பட்ட இராசியில் (ரிஷப, கன்னி இராசிகள்) இருந்தும், சந்திரன், புதன், சுக்கிரன் நீர் சம்பந்தப்பட்ட இராசி, நவாம்சதிலும் இருந்தும், அந்த சமயத்தில் மேற்கே வானவில் தென்பட்டாலும், நிறைய மழை பொழிவு இருக்கும்.

    சுக்கிரனும், புதனும் எவ்வளவு அருகாமையில் உள்ளனரோ அவ்வளவு மழை பொழியும். இவற்றுக்கிடையே அதிக பட்சமாக 30 டிகிரி தூரம் இருப்பது மழை பொழிய உகந்தது. இவை அடுத்தடுத்து சஞ்சரிக்கும் போது, சுக்கிரன், புதனுக்கு முன்னால் போவது நன்மை. புதன் சுக்கிரனுக்கு முன்னால் சென்றால், மழை மேகங்கள் வந்தாலும், அவை காற்றால் வீசப்பட்டு கலைந்து போகும்.

    நீர் ராசிகளில் நீர்கிரஹங்கள்:

    நீர் ராசிகளில் நீர்கிரஹங்கள்:

    மழைக்கான பருவமும் அமைந்து நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளில் நீர் கிரஹங்களான சந்திரன் மற்றும் சுக்கிரன் பயனிக்கும் போது மழை பெய்கிறது. மேலும் நீர்ராசிகளில் நீர் கிரஹங்கள் பயனிக்கும் நீர் ராசிகளில் ஸர்ப கிரஹங்கள் முக்கியமாக ராகு, காற்று கிரஹமான சனி ஆகியவை பயனித்தால் கடும் சூரவளி காற்று மற்றும் புயல் மழை போன்றவை ஏற்படுகிறது.

    கால புருஷ எட்டாவது ராசி:

    கால புருஷ எட்டாவது ராசி:

    கால புருஷ எட்டாவது ராசி மற்றும் நீர் ராசியான விருச்சிகத்தில் கிரஹங்கள் கடக்கும்போது அந்தந்த கிரஹங்களின் காரகத்திற்கேற்றார்போல் இயற்கை பேரிடர்கள் மற்றும் மக்களை பாதிக்கும் நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இதனையொட்டியே பல அசம்பாவிதங்கள் கார்த்திகை மாதத்தில் அரங்கேறிவிடுகின்றன.

    கடந்த மூன்று வருடங்களில் காற்று கிரஹமான சனைஸ்வரன் காலபுருஷனுக்கு எட்டாம் வீடாகிய விருச்சிகத்தில் நின்று 2015 ம் ஆண்டின் இறுதியில் மிகபயங்கரமாண புயல்காற்றை உருவாக்கி சென்னை மற்றும் பல ஊர்களை நீரில் முழ்க வைத்ததும் 2016ல் சூரியனோடு சேர்ந்து பலரின் கௌரவத்தை குலைத்தார். பிரபல அரசியல்வாதி மரணத்தை தந்து அரசியலில் பிரச்சனை ஏற்படுத்தியது இன்னமும் ஓய்ந்தபாடில்லை. சந்திரனோடு சேர்ந்து நாடா புயலையும் உணவுப்பொருட்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

    சனி சுக்கிரனோடு சேர்ந்து ரூபாய் நோட்டுக்களை முடக்கியதும், புதனோடு சேர்ந்து வியாபாரத்தையும் வங்கிகளையும் முடக்கியதையும், செவ்வாயோடு சேர்ந்து வர்தா புயலை உருவாக்கி பல கட்டிடங்களை கரகரவென சுற்ற வைத்ததையும் மறக்க முடியுமா?

    இந்த ஆண்டு ஐப்பசி மாதம் வரை சனி விருச்சிகத்தில் இருந்தார். . அவருக்கு துணையாக மற்றொரு நீர் ராசியில் ராகுவை கொண்டு நிறுத்திவிட்டார். "சனியைப்போல ராகு. செவ்வாயை போல கேது என்பார்கள்" இதிலிருந்தை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.

    இந்த வருடத்திற்க்கான மேகம் காள மேகம்:

    இந்த வருடத்திற்க்கான மேகம் காள மேகம்:

    இந்த ஹேவிளம்பி வருடத்திற்கான மேகம் காளமேகம் என்று பஞ்சாங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேகாதிபதி செவ்வாயாகி மேகங்கள் வடக்கில் உருவாகி காள மேகம் என்ற பெயருடன் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

    ஒன்பது விதமான மேகத்தின் தன்மைகள் அந்தந்த ஆண்டின் மழையை தீர்மாணிக்கிறது. அதன்படி இந்தாண்டு அதிக காற்று மற்றும் புயலுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கலாம். தற்போது வடகிழக்கு பருவநிலை தீவிரமடைந்து இதை உறுதி படுத்துவண்ண்ம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    1. தமோ மேகம் - அபரிமிதமான மழை தரும்.

    2. வாயு மேகம் - குறைந்த மழை. பஞ்சம் நிலவும்.

    3. வாருண மேகம் - பரவலான, மிக பலத்த மழை.

    4. நீல மேகம் - கலப்படமான நிலை. ஒரு இடத்தில் நல்ல மழையும், மற்றொரு இடத்தில் பொய்க்கும்.

    5. காள மேகம் - புயலுடன் கூடிய மழை.

    6. துரோண மேகம் - கடுமையான பேய் மழையும், வெள்ளமும்.

    7. புஷ்கல மேகம் - பலத்த மழை.

    8. சங்க வர்த்த மேகம் - குறைந்த மழையும், பலத்த காற்றும்.

    9. ஆவர்த்த மேகம் - பூமியை நனைக்கும் சொற்பமான மழை.

    கார்கடக சந்திரயோகம்:

    கார்கடக சந்திரயோகம்:

    கார்த்திகை மாதத்தில் கடகத்தில் சந்திரன் பயனிக்கும் காலத்தை கார்கடக சந்திர யோகம் எனப்படுகிறது. முக்கியமாக சந்திர பகவான சனியின் சாரமான பூச நக்‌ஷத்திரத்தில் பயனிக்கும்போது கல்லையும் துளைத்துவிடும் அளவு வேகம் கொண்ட மழை பெய்யும் என சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.

    இன்னும் மழை தொடருமா?

    இன்னும் மழை தொடருமா?

    மேற்கண்ட கிரஹ அமைப்புகளை கொண்டு பார்க்கும் போது இதுவரை இந்த ஆண்டின் 40 சதவித மழையே இதுவரை பெய்துள்ளது என கூறலாம். இந்த ஆண்டின் இறுதி வரை மழை தொடரும் என எதிர்பார்க்கலாம். மேலும் இந்த வருடம் செப்டம்பர் மாததில் இருந்து வரும் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அனைத்து கிரஹங்களும் ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தில் ராகு-கேதுவின் பிடியில் அடங்கிவிடும் அமைப்பில் இருக்கிறது. அதாவது கால ஸர்ப தோஷ அமைப்பில் கிரஹங்கள் நிற்கின்றன. எனவே இந்த கால கட்டங்களில் விருச்சிகத்தில் சுக்கிரன், சந்திரன் போன்ற கிரஹங்கள் பயனிப்பது மற்றும் பஹு வர்ஷம் எனப்படும் புத சுக்ர சமிபம் ஏற்படுவது போன்றவை எதிர்பாரத அளவில் கண மழை ஏற்பட வாய்ப்புள்ளதை தெரிவிக்கின்றது.

    இந்த ஆண்டின் இறுதி வரை அதிக மழை பொழிய வாய்ப்புள்ள நாட்கள்:

    10/11/2017 - சாவித்திரி கல்பாதி மற்றும் மஹாதேவாஷ்டமி

    17/11/2017 - கார்த்திகை மாத பிறப்பு மற்றும் முடவன் முழுக்கு

    27/11/2017 - பிரளய கல்பாதி பிரளயத்திற்கொப்பான மழை பெய்யும். முன்னும் பின்னும் மூன்று நாட்கள் வரை மழை பெய்யும்

    03/12/2017 - திருவண்ணாமலை கார்த்திகை தீபம்

    06/12/2017 - கார்கடக சந்திர யோகம்

    07/12/2017 - கார்கடக சந்திர யோகம்

    13/12/2017 முதல் 08/01/2018 வரை - பஹு வர்ஷம் (புத சுக்ர இணைவு)

    இவை தவிர திருவண்ணாமலை கார்த்திகை தீப கொடியேற்றம், கார்த்திகை சோம வாரங்களில் சங்காபிஷேகம் ஆகிய தினங்களில் மழை பெய்யும்.

    எனவே இந்த ஆண்டின் இறுதி வரை மழைக்காலங்களுக்கான முன்னேற்பாடுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். மேலும் தற்போது பெய்து வரும் கன மழையை சேமிக்கும் விதமாக நாமும் நமது சுற்றுச்சூழல்லை பேனிகாத்து நீராதரங்களை பெருக்கிக்கொள்வது வரும்

    ஆண்டின் நீர்தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அமையும்.

    English summary
    Northeast Monsoon continues to be vigorous over most parts of Coastal Tamil Nadu for several days now. In fact, rains have now picked up pace over interior parts of Tamil Nadu during the last 7 days. Year 2017 has Kaala Megha. This name is a popular one and very revealing. Kaala megha means dark clouds. Kaala Megha is a dark-cloud that suddenly bursts to give heavy rainfall. It also means unexpected heavy rains. The nature of this Megha is that it comes with heavy winds. Windiness and speed are the main features. This could mean rainfall from storms.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X