For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நவம்பர் மாதத்தில் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா? - மிஸ் பண்ணாதீங்க

நவம்பர் முக்கிய பண்டிகை நாட்கள் உள்ளன. துலா ஸ்நானம், கந்த சஷ்டி, ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் உள்ளிட்ட முக்கிய விஷேச தினங்கள் உள்ளன.

Google Oneindia Tamil News

சென்னை: நவம்பர் மாதம் முதல் 15 நாட்கள் காவிரியில் புனித நீராடலாம். கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும். பௌர்ணமி அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. கார்த்திகையில் சிவ ஆலயங்களில் சோமவார சங்காபிஷேகம் நடைபெறும்.

கந்தன் சூரனை சம்ஹாரம் செய்த கந்த சஷ்டி விழாவும் நவம்பரில் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அசுவினி நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி நாளில் சிவபெருமான் ஆலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த நவம்பர் மாதத்தில் என்னென்ன பண்டிகைகள் உள்ளன என்று பார்க்கலாம்.

November month important festival Days

நவம்பர் மாத முக்கிய விசேஷ நாட்கள்:

நவம்பர் 2 சனிக்கிழமை ஸ்கந்த சஷ்டி விழாவின் முக்கிய அம்சமான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இன்று முருகப்பெருமான் ஆலயங்களுக்கு சென்று வழிபட தொழிலில் வெற்றி கிடைக்கும். கடன் தொல்லை, எதிரிகள் தொல்லை ஒழியும். நோய்கள் பிரச்சினை தீரும்.

நவம்பர் 3ஆம் தேதி பானு சப்தமி விரதம். இன்று சூரியனை விரதம் இருந்து வழிபட நன்மைகள் நடைபெறும், அரசு வேலை கிடைக்கும். முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

நவம்பர் 9ஆம் தேதி சனிப்பிரதோஷம். சிவ ஆலயங்களுக்கு சென்று வழிபட நன்மைகள் நடைபெறும்.

நவம்பர் 11 சந்திர ஜெயந்தி இன்று சந்திரனுக்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி வெள்ளை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். 2 நெய்தீபங்கள் ஏற்றி வழிபடலாம்.

நவம்பர் 12ஆம் தேதி பௌர்ணமி செவ்வாய்கிழமை அன்னாபிஷேகம். சிவன்கோவில்களில் இன்றைய தினம் அன்னாபிஷேகம் நடைபெறும்.

நவம்பர் 13 கிருத்திகை விரதம்

நவம்பர் 17 முடவன் முழுக்கு காவிரியில் நீராட புண்ணியம் சேரும்.

நவம்பர் 20 காலபைரவாஷ்டமி பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும்.

நவம்பர் 24 மிருத்யுஞ்சய பிரதோஷம் வாஸ்து நாள்

நவம்பர் 26 சர்வ அமாவாசை

English summary
Skanda sasti and Aippasi Annabisekam Here is the list of important days mukurtham days for the November month 2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X