For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய பிரதேசத்தில் கமல்நாத் கரையேற மாட்டார் - எண் கணித நிபுணர் டாக்டர் JNS செல்வன் கணிப்பு

மத்திய பிரதேச அரசியல் களம் கலவரமாகவே உள்ளது. பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி தப்பும். கமல்நாத் ஆட்சியை காப்பாற்றி முதல்வர் நாற்காலியில் நீடிக்க வாய்ப்பு இல்லை எ

Google Oneindia Tamil News

போபால்:மத்திய பிரதேச மாநிலத்தில் அரசியல் கலவரம் உருவாகியுள்ளது. அந்த கலவரத்தை உருவாக்கியவர் ஜோதிராதித்ய சிந்தியா. அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் மத்திய பிரதேச அரசியல் களம் கலவரமாகவே உள்ளது. பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி தப்பும். கமல்நாத் ஆட்சியை காப்பாற்றி முதல்வர் நாற்காலியில் நீடிக்க வாய்ப்பு இல்லை என கணித்துள்ளார் எண் கணித நிபுணர் டாக்டர் JNS செல்வன்.

Recommended Video

    மத்திய பிரதேசத்தில் கமல்நாத் கரையேற மாட்டார் - எண் கணித நிபுணர் டாக்டர் JNS செல்வன் கணிப்பு - வீடியோ

    காங்கிரஸ் கட்சியில் இருந்த மிக மிக்க தலைவரான ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து மொத்தம் 22 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். சிந்தியாவின் ஆதரவு மாநில அமைச்சர்கள் 6 பேர் உள்ளிட்ட 22 எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தனர்.

    numerology prediction Dr JNS Chelvan

    மத்திய பிரதேச அரசியல் கொரோனா வைரஸ் அச்சத்தையும் மீறி பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த அரசியல் கலவரத்திற்கு இடையே இன்று கமல்நாத் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன். கமல்நாத் தனது பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்கவைப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில் தற்போதைய அரசியல் சூழ்நிலையும் எண்களும் கமல்நாத்திற்கு சாதகமாக இல்லை என்றே கூறியுள்ளார் எண் கணித நிபுணர் டாக்டர் JNS செல்வன்.

    மத்தியபிரதேசத்தை எண் கணித கணக்குப்படி கூட்டினால் 44 கூட்டுத்தொகை 8 மத்திய பிரதேசம் உருவான நாள் 1 - 11 - 1956 இந்த மாநிலத்தின் முதல் முதல்வராக ரவிசங்கர் சுக்லா பதவியேற்றார். இந்த மாநிலத்தில் மொத்தம் 230 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி உள்ளது. இப்போது 222 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதில் 114 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.

    பாஜகவிற்கு 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 113 வேண்டும் காங்கிரஸ் கட்சியில் இருந்து 22 பேர் எஸ்கேப் ஆகிவிட்டனர். அந்த கலவரத்தை செய்தவர் ஜோதிர்ஆதித்யா சிந்தியா.

    numerology prediction Dr JNS Chelvan

    மத்திய பிரதேச மாநிலத்தின் 18வது முதல்வர் கமல்நாத் பெயர் எண் கூட்டுத்தொகை 8. கமல்நாத் பிறந்த தேதி 18 - 11 - 1946 இதன் கூட்டுத்தொகை 9 எல்லாத்தையும் சேர்த்து கூட்டினால் 4 வருகிறது. பெரும் முயற்சிக்குப் பின்னர் முதல்வர் ஆகி விட்டார். இவர் முதல்வராக பதவியேற்ற நாள் 17. இதன் கூட்டுத்தொகை 8 இது கமல்நாத்துக்கு ஒத்து வராத எண்.

    இவருக்கு 2 மற்றும் 8ஆம் எண் ஆகாது. இவர் முதல்வரானதே தவறான தேதியில் பதவியேற்றார். முதல்வராக பதவியேற்ற நாளும் சரியில்லை. நித்திய கண்டம்தான் கமல்நாத்துக்கு. இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டுத்தொகை 3 அதற்கு இணக்கமான எண் 9. கமல்நாத்திற்கு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயிக்க வேண்டும். ஆனால் இன்றைய தினம் 17-03-2020. 17 கூட்டுத்தொகை 8 மொத்தமாக கூட்டினால் 6. இந்த இரண்டு எண்களுமே கமல்நாத்துக்கு சாதகமாக இல்லை எனவேதான் கமல்நாத் கலங்கிப்போயிருக்கிறார். கமல்நாத் ஆட்சி நீடிக்க வாய்ப்பு இல்லை என்று கணித்துள்ளார் எண் கணித நிபுணர் டாக்டர் JNS செல்வன்.

    English summary
    Numerologist Dr JNS Selvan predicts no chance of staying in CM's chair to save Kamal Nath rule. Amid high political drama in Madhya Pradesh which has pushed the Kamal Nath-led Congress government into a crisis
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X