For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாலை பாதுகாப்பு வாரம் - பரஸ்தானம் தரும் பாதுகாப்பான பயணம்!

Google Oneindia Tamil News

சென்னை: 30ம் தேதி வரை தமிழகத்தில் சாலை பாதுகாப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு வினாடியும் சாலைகளில் பல விபத்துக்கள் ஏற்படும் நிலையில் பாதுகாப்பான பயணத்திற்க்கு ஜோதிடம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம். பிரயாணத்தை துவங்கும் முன் நல்ல நேரத்தில் துவங்க திட்டமிட வேண்டும். அவ்வாறு செயுய இயலாவிட்டால் பரஸ்தான வைத்து பிரயாணத்தை துவங்கலாம்

பிரயாணம்:

பிரயாணம் என்பது எல்லா காலங்களிலுமே இன்றியமையாததும் தவிர்க்க முடியாததும் ஆகும். பிரயாணத்தை திட்டமிட்டு மேற்கொண்டால் வெற்றிகிட்டுவதோடு பலவித இன்னல்களையும் சேதங்களையும் தவிர்க்க முடியும். சிலர் பிரயாணத்திற்க்கு முறையாக திட்டமிடுவதில்லை. ஆனால் பலருக்கு திட்டமிட அவகாசம் இருப்பதில்லை. திடீர் பிரயாணமாக அமைந்துவிடும்

திட்டமிடுதல்:

எல்லா நேரங்களிலும் திட்டமிட்டு செல்வது என்பது இயலாத காரியம். அவசர கால அரசாணை, உடல்நிலைக் கோளாறு போன்ற விஷயங்களில் மேற்படி விஷயங்களைப் பின்பற்ற இயலாது. இதைத்தான் நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை என்பர். பஸ், ரயில், விமானம் போன்றவை ராகுகாலம், எமகண்டத்திற்காக காத்திருப்பது இல்லை. தற்போது பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து போக்குவரத்து வருவதால் விமானங்கள், ரயில்கள்,பேருந்துகள் மூலம் பயணம் செய்ய வேண்டுமானால் நாம் நினைத்தபோது டிக்கெட் கிடைப்பதில்லை. ஆகவே முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Observing Parasthana Is Very Important For Successful Travel

ஆனால் டிக்கெட் கிடைத்து நாம் பயணம் மேற்கொள்ள வேண்டிய நாள் வாரசூலை,யோகிணி, தாரா பலம் சந்திர பலம் இல்லாத நிலை முதலிய தோஷங்கள் நிறைந்ததாக வரலாம். தோஷங்கள் உள்ள நாளில் பயணம் செய்தால் பலவித சிரமங்கள் ஏற்படலாம். "நாள் செய்வதை நல்லோர் செய்யார்" என எடுத்துக்கூறுகிறது பாரம்பரிய ஜோதிட சாஸ்திரம்.

பயணமும் சந்திரனும்:

பயணத்தின் காரகர் சந்திரன் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மேலும் சந்திரனை மனோகாரகன் என்றும் கூறுகிறது. அதனால்தான் பலர் பயணத்தின்போது ஒருவித பதட்டத்துடன் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது போலும். பயணத்தை தொடங்கும் முன் தாராபலம், சந்திரபலம் உள்ள நாளில் பிரயாணம் அமையுமாறு திட்டமிடவேண்டும். மேலும் பயணம் ஆரம்பிக்கும்போது அதாவது வீட்டை விட்டு புறப்படும்போது ராகு காலம், எம கண்டம், சந்திராஷ்டமம், மற்றும் சந்திரன் லக்னத்திற்க்கு ஆறு எட்டு பன்னிரெண்டாமிடங்களில் மறையாமலும் நீசமடையாமலும் இருக்குமாறு கவனமாக பார்த்து திட்டமிட வேண்டும்.

கிரகநிலை சரியில்லாத காலத்தில் பயணம் செய்வதால்தான் மரணத்திற்க்கொப்பான இன்னல்களும் சேதங்களும் ஏற்படுகின்றன என்பதை ஜோதிட சாஸ்திர அறிஞர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். பத்திரிகைகளில் ஆகாய விமானம்,ரயில், பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகளைப் பற்றி பிரசுரமாகாத நாட்களே இல்லை எனலாம். இத்தகைய விபத்துகள் எல்லாம் கால பலத்தைப் பற்றி பரஸ்தானம் என்ற நமது புராதன முறை பாதுகாப்பாகப் பயணம் செய்வது பற்றி நமக்கு அறிவுறுத்துகிறது.

Observing Parasthana Is Very Important For Successful Travel

இது போன்ற சமயங்களில் நாம் "பரஸ்தானம்' என்ற ஒன்றைச் செய்து கொள்ளலாம். அதாவது ராகுகாலம், எமகண்டம் துவங்குவதற்கு முன்பே பயணப்பைகளுடன் வேறு இடத்திற்குச் சென்று விட வேண்டும். பரஸ்தானம் என்றால் வேறு இடத்தில் தங்குதல் என்று பொருள்.

இந்த சங்கடமான நிலையில் என்ன செய்ய வேண்டும் என்றால் நாம் பயணம் புறப்பட வேண்டிய நாளுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள்ளாக, நல்ல சமயத்தில் தாம் இருக்கும் ஊரிலேயே வேறு வீட்டிற்கு தம் பொருட்களுடன் போயிருந்து மறுபடியும் தம் வீட்டிற்குத் திரும்பி வராமல்) குறிப்பிட்ட நாளில் பயணம் செய்தால் தோஷமுள்ள நாட்களில் பயணம் செய்வதால் ஏற்படக் கூடிய எந்த சிரமமும் ஏற்படாது.

"காலப்பரகாசிகா" எனும் ஜோதிடநூல் பரஸ்தானத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் யாத்திரா தானத்தின் சிறப்பையும் நமக்கு எடுத்துரைக்கிறது. பயணம் செய்ய இருப்போர் பயணத்தை துவங்க நல்ல நேரம் அமையவில்லையெனில் பயணத்திற்க்கு முன்பாக எப்போது நல்ல நேரம் இருக்கிறதோ அப்போது தங்கள் பயண உடைமைகளோடு அருகில் உள்ள உறவினர் அல்லது நண்பரின் வீடுகளுக்கோ அல்லது கோயில் மண்டபங்கள், பூங்காக்கள் போன்ற பொதுவிடங்களில் சென்றுவிடவேண்டும் என்றும் பயணம் செய்வோர் அடிக்கடி உபயோகிக்கும் கைத்தடி, செருப்பு, மூக்குகண்ணாடி, ஆடைகள் போன்ற ஏதாவது ஒன்றை அங்கு வைத்துவிட்டு பிறகு பயணம் தொடங்கும்வரை மற்ற வேலைகளை கவனிக்கலாம் என்கிறது காலப்ரகாசிகை.

ஆனால் பயணம் தொடங்குவதற்க்கு முன் மழைபெய்துவிட்டால் மீண்டும் பரஸ்தானம் வைத்துதான் பயணத்தை துவங்கவேண்டும் என கூறுகிறது. மேலும் பயணம் துவங்கும்முன் தங்கள் ஆசிரியர்கள், மூத்தோர், ஜோதிடர்கள், பிராமணர்கள், புரோகிதர்கள் ஆகியவர்களுக்கு யாத்திரா தானம் செய்துவிட்டு ஆசிபெற்று கிளம்புவது பயணத்தை வெற்றிக்கரமா அமைவதோடு பயணத்தில் பிரச்சனைகள் நீங்கும் என்பது நிதர்சனம்.

பயணங்களை நல்ல நாட்களில் அதாவது சந்திர பலமுள்ள நாட்களில் தொடஙுகுவது வெற்றியை தருவதொடு இடையூறுகள் நேராமல் இருக்கும். பரஸ்தானம் என்பது புராதனமாக நமது முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்த பழக்கமாகும். பரஸ்தானத்தில் இருக்கும்போது இடையில் நமது வீட்டுக்கு வரக்கூடாது. பிரயாணம் முடிந்தபின் வருவதுதான் நல்லது.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
9498098786

English summary
Parasthan or parasthanam means Other place. When planning for a travel if there is no auspicious day on the day of travel we have to go to some other place with our travel baggage in a good time before travel. So that the bad effects will not affects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X