For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ ஆசையா? நல்லெண்ணை குளியல் போடுங்க!

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த வாரம் சனிக்கிழமை சூரிய பகவான் மேஷத்தில் அடி எடுத்து வைத்ததை தொடர்ந்தும் இந்த வருட நாயகனாக அதாவது ராஜாவாக சூரிய பகவான் பொறுப்பேற்றுக்கொண்டதை தொடர்ந்தும் வெயில் மண்டையை பிளப்பது அனைவரும் அறிந்ததே. அதிக வெயில் மற்றும் உடல் சூட்டின் காரணமாக தோல் அறிப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க வாரத்தில் இரண்டு நாள் எண்ணை தேய்த்து குளிப்பது சிறந்தது என ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.

எண்ணெய் குளியல்

எண்ணெய் குளியல் என்றாலே, அது தீபாவளித் திருநாளன்று மட்டும் என்று மக்களின் மனதில் பதிந்துவிட்டது. தீபாவளி அன்று தலைக்கு மட்டும் எண்ணெய் வைத்து குளித்துவிட்டு அதை எண்ணெய் குளியல் என் சொல்லுவார்கள், ஆனால் எண்ணெய் குளியல் என்பது உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து பின் குளிப்பதாகவும். வாரத்துக்கு ரெண்டு முறை எண்ணெய் குளியல் செய்தல் பெரும்பாலான நோய்கள் அண்டாது, என்று சொன்னால் இன்றைய தலைமுறைகள் கண்டுகொள்வதில்லை, தீபாவளிக்கு எண்ணெய் தேய்ச்சு குளிப்பதே பெரிது என்று சலித்துக்கொள்வார்கள்.

oil bath is forgotten tradition which has religious and scientific values

அவ்வையார் இயற்றிய ஆத்திச்சூடியில் சனி நீராடு என குறிப்பிட்டிருக்கிறார். சனிக்கிழமைகளில் நல்ல எண்ணைய் என்று அழைக்கப்படும் எள்ளெண்ணையை உடல் முழுக்க தேய்த்து , வெந்நீரில் குளிப்பது, இதனால் அறிவியல் ரீதியாக உடலில் உள்ள எண்ணை பசை மற்றும் நமது தோல் பகுதிகள் புத்துணர்ச்சி அடையும் என்கிறார்கள்.

நாள்தோறும் செய்கிறோமோ இல்லையோ வாரத்தில் ஒருநாளாக சனிக்கிழமை அன்று கண்டிப்பாக தலைக்கு எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பதே இப் பாடலுக்குக் கூறப்படும் பெருவாரியான கருத்து ஆகும். ஒருசிலர் சனி என்பதற்கு மந்தமாக நடக்கிற அல்லது மெதுவாக ஓடுகிற என்று பொருள் கொண்டு மெல்ல ஓடும் ஆற்று நீரில் குளிக்க வேண்டும் என்று கருத்து கூறுகின்றனர். இன்னும் ஒருசிலர் சனி என்பதற்கு குளிர்ச்சி என்று பொருள் கொண்டு குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும் என்று கருத்து உரைக்கின்றனர்.

ஒருசிலர் அசனி நீராடு என்பதுதான் சரி என்கின்றனர். அசனி எனும் சொல்லுக்கு சாம்பிராணி இலை என்று பொருள் கூறுகின்றனர். அந்த சாம்பிரானி இலையை நீரில் ஊரவைத்து நீராடுவது பலவித உடல் மற்றும் சரும கோளாருகளுக்கு நல்லது என்றும் எனவே சாம்பிராணி இலை குளியலைதான் அவ்வாறு கூறப்படுகின்றது என்கின்றனர். இன்னும் ஒருசாரர் ஜனி நீராடு என்பதுதான் சரி என்கின்றனர். தினமும் புதிதாக உற்பத்தியாகும் ஊற்றுநீரைதான் ஜனி நீர் என்றும் ஊற்று நீரில் குளிப்பது உடலுக்கும் ஆரோக்கிய்த்திற்க்கும் நல்லது என்கின்றனர். சரி. மருத்துவம் என்ன கூறுகிறது என்பதையும் பார்ப்போமே.

நாளுக்கு இரண்டு

வாரத்துக்கு இரண்டு

மாசத்துக்கு இரண்டு

வருடத்திற்க்கு இரண்டு

என்கிறது ஆயுர்வேதம்.

நாளுக்கு இரண்டு என்பது ஒருநாளைக்கு இருமுறை மலம் கழிக்கவேண்டும் என்று பொருள்.

வாரத்திற்க்கு இரண்டு என்பது வாரத்தில் இரண்டுமுறை எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும் என்பதாகும்.

மாதத்திற்க்கு இரண்டு என்பது மாதத்தில் இரண்டு முறைதான் மனைவியுடன் உடலுறவு கொள்ளவேண்டடும் என்பதாபும்.

வருடத்திற்க்கு இரண்டு என்பது வருடத்தில் இரண்டு முறை பேதிக்கு சாப்பிட்டு வயிற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்பதாகும்.

என்றைக்கு குளிக்க வேண்டும்?

எந்த நாளில் தலை முழுகினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தேரையர் ஒரு பாடலில் விளக்குகிறார்.

"கேளு அருக்கன் பலன் தான் அழகை மாற்றும்

கெடியான திங்கள் பலன்தான் பொருளுண்டாகும்

பாலு செவ்வாய் பலன் தான் உயிரை மாய்க்கும்

பாங்கான புதன் பலன் தான் மதியுண்டாகும்

தாளு வியாழன் பலன் தான் கருத்தை போக்கும்

தப்பாது வெள்ளி பலன் கடனே செய்யும்

நாளு சனியின் பலன்தான் எண்ணெய் மூழ்க

நட பொருளும் சகதனமும் வரும் சாதிப்பாயே."

- தேரையர் -

ஞாயிற்று கிழமைகளில் தலை முழுகினால் உடல் அழகை மாற்றிவிடும், திங்கள் கிழமைகளில் தலை முழுகினால் பொருள் சேரும், செவ்வாயில் முழுகினால் உயிரை மாய்க்கும் நிலை ஏற்படலாம். புதன் கிழமைகளில் தலை முழுகினால் சிறந்த அறிவு வளர்ச்சி உண்டாகும். வியாழன் முழுகினால் அறிவு மந்தமாகும். வெள்ளிக்கிழமைகளில் தலை முழுகினால் கடன் உண்டாகும். சனிக்கிழமைகளில் தலை முழுகினால் நற் பெயரும் நல்ல நண்பர்களும் உண்டாகும் என்கிறார்.

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்களும், புதன், சனிக்கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் தேய்த்துத் தலை முழுக வேண்டும், காய்ச்சிய எண்ணெய் நல்ல பலன் அளிக்கும், அத்துடன் குளிக்க, வெந்நீரையே பயன்படுத்த வேண்டும். தேய்த்த எண்ணெயை போக்க சோப்பு ஷாம்பூ போட்டு உடலை சுத்தப்படுத்தக் கூடாது, சுத்தமான சிகைக்காய் தேய்த்து குளித்து தான் எண்ணையை போக்க வேண்டும்.

எண்ணை குளியளுக்கும் ஜோதிடத்திற்க்கும் உள்ள தொடர்பு:

எண்ணை குளியலில் என்னய்யா பெரிய ஜோதிடம் இருக்கிறது என கேட்பவர்களுக்கான விளக்கம். முதலில் சனி நீராடு என்பதின் விளக்கத்தினை பார்ப்போம். சனி நீராடு என்பது சனி கிரகத்தின் தானியமான எள்ளிலிருந்து பெறும் நல்லெண்ணை குளியலை தான் குறிக்கிறது.

அது ஏன் நல்லெண்ணை? அனைத்து என்னைகளுக்கும் சனி பகாவான் தான் காரகர் என்றாலும் நல்லெண்ணைதான் சனிக்கு உகந்த எள்ளிலிருந்து எடுக்கப்படுகிறது. உடல் கட்டு மற்றும் எலும்பிற்க்கு காரகன் சனி பகவான் ஆவார். . எனவே உடல் கட்டுகோப்பாக இருக்க நல்லெண்ணை குளியல் சிறந்தது என ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.

சனி பகவானும் புதபகவானும் வாத கிரகம் ஆவார். வெள்ளிக்கிழமைக்கு அதிபதியான சுக்கிரன் கப மற்றும் வாத கிரகமாவர். எலும்பு மற்றும் வாத நோய்களுக்கு நல்லெண்ணை மசாஜ் மற்றும் குளியல் சிறந்ததென்கிறது மருத்துவ ஜோதிடம். மேலும் சனைஸ்வர பகவானுக்கு புதனும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்ற அடிப்படையிலும் சனி புதன் கிழமைகளில் ஆண்களும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் எண்ணை தேய்து குளிப்பது சிறந்த பயனளிக்கும்.

நல்லெண்ணை குளியலால் ஏற்படும் நன்மைகள்:

1. சனி தோஷம் விலகும்.

2. சனியினால் ஏற்படும் வாத மற்றும் எலும்பு நோய்களான ஆர்த்ரைடிஸ், ஆஸ்டியோபோராஸிஸ் போன்ற நோய்கள் நீங்கும்.

3. புதனால் ஏற்படும் சரும நோய்கள் மற்றும் நரம்பு நோய்கள் நீங்கும்.

4. சுக்கிரனின் காரகமான முடி கொட்டுவது நின்று நன்கு வளரும்.

5. சூரியன் மற்றும் செவ்வாயால் ஏற்படும் உடல் உஷ்ணம் நீங்கும் மற்றும் கண் பார்வை பலம் பெறும்.

6. தோல் நோய்களுக்கு சனீஸ்வர பகவானும் காரகர் என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. வெயிலினால் தோலில் ஏற்படும் வரட்சியை போக்கி மினுமினுப்பு ஏற்படும்.

7. ஆயுள் காரகன் சனியின் ஆசி பெறுவதால் ஆயுள் கூடும். எம பயம் விலகும்

வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு என சும்மாவா கூறினார்கள் பெரியோர்கள். எது எப்படியோ! சனிக்கிழமைகளில் எண்ணை தேய்த்து குளித்துவிட்டு மிளகு ரசம் சாப்பிட்டு ஓய்வு எடுப்பது கூட சுகம்தானே. பிறகென்ன? குளித்துதான் வைப்போமே. என்ன நான் சொல்றது?

-ஜோதிட வாசஸ்பதி சுந்தரராஜன்

9498098786

English summary
In most of the Indian homes, during the time of festival parents insist their children to do oil bath. It is said for keeping our body clean before the rituals, also the heart should be pure. Few years back every week people will do oil bath compulsorily. But as years passed most of us forgot to do oil bath weekly and also during festivals too. Oil bath is a part of our tradition. It has some values, science behind oil bath which is why our ancestors, grandparents and our parents insisted us to do it. But currently our grandparents and parents are tired of insisting us and forgot about the tradition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X