• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காவியத்தலைவி ஆவாரா ஓவியா? சுவாதி நட்சத்திரம் சொல்லும் உண்மை!

By Mayura Akilan
|

சென்னை: பிக் பாஸ் வீட்டில் துள்ளலும் துடிப்புமாய் வலம் வரும் ஓவியாவிற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். ஓவியாவின் திடீர் பிரபலத்திற்குக் காரணம் அவரது ஜாதகம்தான் என்கின்றனர் பிரபல ஜோதிடர்கள்.

பிக் பாஸ் வீட்டை விட்டு அவர் வெளியே வந்த உடன் பல படங்களில் பரபரப்பாக நடிக்கத் தொடங்கி விடுவார் அந்த அளவிற்கு பட வாய்ப்புகள் குவிகின்றன.

கேரளத்தில் பிறந்த ஓவியா, பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து தமிழக ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டு விட்டார். என்னதான் சொல்கிறது அவரது ஜாதகம் பார்க்கலாம்.

 சுவாதி நட்சத்திரம்

சுவாதி நட்சத்திரம்

1991ஆம் ஆண்டு ஏப்ரல் 21ல் கேரளா மாநிலம் திரிச்சூரில் பிறந்த ஓவியா, துலாம் ராசி சுவாதி நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லோரிடமிருந்தும் வித்தியாசப்படுவார்கள். இவர்களை அறியாமலேயே ஒரு தெய்வீக சக்தி இவர்களை வழிநடத்தும்.

 இளமையான தோற்றம்

இளமையான தோற்றம்

சங்கீதம், நாட்டியம், இலக்கியம் இவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தோற்றத்தை வைத்து வயதைக் கணிக்க முடியாது. தோற்றம் அவ்வளவு இளமையாக இருக்கும். இரக்க குணம் அதிகம் உள்ளவர்கள். அறிவுக் கூர்மை பெற்றிருப்பார்கள். ஒழுக்கம், உண்மை பேசுதல் உள்ளிட்ட நற்பண்புகளைக் கொண்டிருப்பார்கள்.

 மதிக்கும் குணம்

மதிக்கும் குணம்

எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெறும் வரை அயராமல் உழைப்பார்கள் என்கிறது ஜோதிடம். சுயமரியாதையை விட்டுக் கொடுக்காத இயல்பும் உற்றார் உறவினர்களை மதிக்கும் குணமும் என்றும் இவர்களிடம் உண்டு.

 எளிமையான பேச்சு

எளிமையான பேச்சு

செய்த தவறுக்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுவிடுவார்கள். அதிக நட்பைப் பெற்றிருந்தாலும், அரிதாக சிலரைத்தான் உடன் வைத்துக் கொள்வார்கள். எது நல்லது, எது கெட்டது என்று உணர்ந்து அதன்படி செயல்படுவதில் அதிக வல்லவர்கள். மன வலிமையும் எளிமையான பேச்சும் பாகுபாடு பார்க்காமல் தர்மம் செய்யும் இளகிய மனமும் இவர்களிடம் உண்டு.

  Bigg Boss Tamil, Oviya was initially rejected in "Nadodigal" audition-Filmibeat Tamil
   சிம்ம லக்னம்

  சிம்ம லக்னம்

  ஓவியா ராசி துலாம் என்றாலும் லக்னம் சிம்மம். அரசியல், சினிமாவில் பிரபலமாக உள்ள பலரும் சிம்மலக்னக்காரர்கள்தான். ஆரம்பத்தில் இவர் திரை உலகில் பிரபலமாகவில்லை என்றாலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமானதில் இருந்தே பிரபலமாகிவிட்டார். இந்த 32 நாட்களில் பல ரசிகர்களை பெற்றுள்ளார்.

   வெற்றிக்கு வாய்ப்பு

  வெற்றிக்கு வாய்ப்பு

  பிக்பாஸ் வீட்டில் நுழைந்து லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்ற ஓவியாவிற்கு இதன் மூலம் திரைத்துறையில் இரண்டாம் சுற்றுக்கு வாய்ப்பு உள்ளது. பல இயக்குநர்களின் மனங்களை கவர்ந்து விட்டார் ஓவியா. இன்னும் சில மாதங்களில் நிகழ உள்ள குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி ஓவியாவிற்கு பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தும் என்கின்றனர் ஜோதிடர்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Actress oviya also called by name oviya helen born on april 29th 1991 at thrissur India is born in swati nakshatra the star of luck and fortune. Now, she is the heartthrob of many tamilians ever since she entered big boss show on june 25th 2017.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more