For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நரக வேதனையில் இருந்து விடுபட்டு எம பயத்தை போக்கும் பாபாங்குசா ஏகாதசி

நம்முடைய எம பயத்தை நீக்கி நரக வேதனையில் இருந்து விடுவித்து, பாவங்கள் அனைத்தையும் போக்கும் பாபங்குச ஏகாதசி திதி நாளை வருகிறது. பெருமாளுக்கு மிகவும் சிறந்த விரதம் ஏகாதசி விரதமாகும். 15 நாட்களுக்கு ஒரு

Google Oneindia Tamil News

சென்னை: நம்முடைய எம பயத்தை நீக்கி நரக வேதனையில் இருந்து விடுவித்து, பாவங்கள் அனைத்தையும் போக்கும் பாபங்குச ஏகாதசி திதி நாளை வருகிறது. இதனை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி, பாபாங்குசா ஏகாதசியை முன்னிட்டு உலக மக்களின் பல வகையான நோய்கள் தீர, வருகிற 08.11.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை வைத்திய ராஜன் ஆன மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு தன்வந்திரி ஹோமத்துடன் நவகலச திருமஞ்சனம் நெல்லிப் பொடியுடன் நடைபெற உள்ளது.

Pabangusa Ekadasi Special Pooja will be held at Sri Dhanvantri Temple Walajapet

பெருமாளுக்கு மிகவும் சிறந்த விரதம் ஏகாதசி விரதமாகும்

பெருமாளுக்கு மிகவும் சிறந்த விரதம் ஏகாதசி விரதமாகும். 15 நாட்களுக்கு ஒரு முறை வருவது ஏகாதசி திதியாகும். இத் திதியை புண்யகாலமாக போற்றுவார். ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஏகாதசியை ஒவ்வொரு பெயருடன் அழைக்கப்படுகிறது. இவற்றில் மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்பர்.

ஓராண்டில் 25 ஏகாதசிகள் வருகின்றன இந்த நாட்களில் விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் செல்வச்செழிப்பும், ஆரோக்யமும், மகிழ்ச்சியான வாழ்வும், வாழ்விற்கு பின் மோட்சமும் கிடைக்கும். ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்தது ஏகாதசி திதியாகும். வருகிற 08.11.2019 வெள்ளிக்கிழமை ஐப்பசி வளர்பிறை ஏகாதசியை பாபாங்குசா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

Pabangusa Ekadasi Special Pooja will be held at Sri Dhanvantri Temple Walajapet

பாபாங்குசா ஏகாதசி

ஐப்பசி வளர்பிறையில் வரும் ஏகாதசி பாபாங்குசா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. பாபாங்குசா ஏகாதசியானது, நம்முடைய பாவங்களை அகற்றும் அங்குசம் போன்றது. கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்கள், யாகங்கள், உயர்ந்த தான-தர்மங்கள் முதலானவற்றால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த பலன்கள் அனைத்தும் இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதால் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஏகாதசி தினத்தில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் காக்கும் கடவுளான தன்வந்திரி பகவானுக்கு நடைபெறும் ஹோமத்திலும், நவகலச திருமஞ்சனத்திலும் கலந்து கொண்டு பிரார்த்தனையில் பங்கேற்பவர்களுக்கு எம பயத்தில் இருந்து விடுபடுவார்கள், நரக வேதனை அவர்களை வாட்டாது, ஆரோக்யத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்: மேஷம் ராசிக்கு 2020 புத்தாண்டு எப்படி2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்: மேஷம் ராசிக்கு 2020 புத்தாண்டு எப்படி

பக்தர்கள் அனைவரும் இவ்வைபவத்தில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற்று ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யத்துடன் வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

English summary
Tomorrow comes the sinful Ekadasi Didi, which removes our fears and frees us from the agony of hell and alleviates all sins. Prior to this, with the blessing of the founder and Dean of the Sri Danvantri Arogya Peedam, Vellore District, Dr. Yagnasri Kailai Gnanaguru, Dr. Sri Muralithara Swamy, Babangusa Ekadasi, a variety of diseases of the world will come to the fore on Friday 08.11.2019 at 10.00 am Sri Danvantri Perumal to Danvantri Homam Ton Navagalasa Thirumanganam is to be held with Nelli powder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X