For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புரட்டாசி மாத பத்மநாபா ஏகாதசி - விரதம் இருந்தால் என்ன பலன் தெரியுமா

புரட்டாசி மாதம் சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசிக்கு பாபங்குச ஏகாதசி எனப் பெயர். இந்த ஏகாதசி விரதம் இரு விதமான நன்மைகளை தர வல்லது. ஒன்று முக்தியாகும். மற்றொன்று இந்த உலக வாழ்வில் சுகமும் வளமும் ஆகும். பா

Google Oneindia Tamil News

Recommended Video

    புரட்டாசி மட்டும் அசைவ உணவுக்கு தடை ஏன் தெரியுமா?..அற்புத தகவல்! | Purattasi Month Special

    சென்னை: புரட்டாசி மாதம் சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசிக்கு பாபங்குச ஏகாதசி எனப் பெயர். இந்த ஏகாதசி விரதம் இரு விதமான நன்மைகளை தர வல்லது. ஒன்று முக்தியாகும். மற்றொன்று இந்த உலக வாழ்வில் சுகமும் வளமும் ஆகும். பாபங்குச ஏகாதசி விரதம் பத்மநாப ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த விரதம் இருப்பதன் மூலம் இந்திரன் மற்றும் வருணனின் வரத்தை பெறலாம். நமக்கு எந்த விதத்திலும் தண்ணீர் பற்றாக்குறை வராது. நமது வீட்டில் இருக்கும் கிணறு, ஆழ் குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும்.

    விரதங்களில் ஏகாதசி விரதம் மிகச்சிறந்தது. ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும். ஒரு சில வருடங்கள் மட்டும் 25 ஏகாதசிகள் வர வாய்ப்பு உண்டு. வருடம் முழுவதும் வரும் ஏகாதசிகளில் விரதம் இருந்து, இறைவனை வழிபடுபவர்கள் பிறவி துயர் நீங்கி, வைகுண்ட பதவியை அடைவார்கள் என்பது நம்பிக்கை.

    புதன்கிழமையும் ஏகாதசி இணைந்து வரக்கூடியது நன்மை தரக்கூடியது. இன்றைய தினம் ஏகாதசி திதி பெருமாளுக்கு உகந்த புதன்கிழமையில் வந்துள்ளது. பெருமாள் கோவில் சென்று கருடனை வணங்கினால் செல்வத்திற்கு உரிய தடை நீங்கும். ஏழுமலையானின் ஆசி கிடைக்கும். ஏகாதசி விரதம் இருப்பது நல்லது. புதன்கிழமை ஏகாதசி விரதம் இருப்பது பல அற்புதங்களை ஏற்படுத்தும். பெருமாளையும் கருடனையும் வணங்கி வழிபடுவது நல்லது. ஓம் நமோ நாராயணாய என்று சொல்ல நல்ல அதிர்வலைகள் உருவாகும். வாழ்வில் வளமும் நலமும் ஏற்படும். எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.

    புராணங்களில் ஏகாதசி

    புராணங்களில் ஏகாதசி

    தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப் படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

    ஏகாதசி பிறந்தது எப்படி

    ஏகாதசி பிறந்தது எப்படி

    அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, முரன் அசுரன் பகவான் விஷ்ணு கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது. விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு "ஏகாதசி" எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசிநாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.

    பெருமாளுக்கு உகந்த ஏகாதசி

    பெருமாளுக்கு உகந்த ஏகாதசி

    விரதங்களிலே சிறப்பு வாய்ந்து ஏகாதசி விரதம் என்று பெருமாளே கூறுவதாக புராணங்கள் கூறுகின்றன அதன்படி ஏகாதசி அன்று முழு உபவாசம் இருக்க வேண்டும். பால்,பழம்,கிழங்கு மட்டும் சாப்பிடலாம்.மறுநாள் அதாவது துவாதசி அன்று ஆரத்தி எடுத்து விட்டு துளசி தீர்த்தம் குடித்துவிட்டு பின்னர் சாப்பிடலாம். ஏகாதசி விரதம் பித்ரு சாபத்தை போக்குவதாகவும்,வைகுண்டத்தை அடைய எளிய வழி என்பது இன்றளவும் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த விரதத்தின் முலம் விஷ்ணுவின் அருள் கிடைப்பதோடு அதன் முலம் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது ஐதீகம்

    உபவாசம்

    உபவாசம்

    பெருமாளை எண்ணி இந்த விரதம் இருக்க விரும்புபவர்கள், ஏகாதசிக்கு முந்தின நாளான தசமியன்று விரதம் தொடங்க வேண்டும். அந்த நாளில் ஒரு வேளை சாப்பிடலாம் என்கின்றன ஆன்மிக நூல்கள். அதுவும் அதிக தாளிகை இல்லாத பத்திய உணவாக இருக்க வேண்டும். பகவான் திருநாமங்களை சொன்னபடி அந்த நாள் முழுக்க அமைதியான தியானத்தை மேற்கொள்ள வேண்டும். மறுநாள் ஏகாதசி தினத்தன்று, நீராடி, விரதம் தொடங்க வேண்டும்.

    உற்சாகம் தரும் துளசி

    உற்சாகம் தரும் துளசி

    அன்றைய தினம் துளசியை பறிக்கக் கூடாது என்பதால் முதல் நாளே துளசியை சேகரித்துக்கொள்ள வேண்டும். அன்று முழு நாள் உபவாசம் இருக்க வேண்டும். முதியவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். ஏகாதசி நாளில் பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.

    பத்மநாபா ஏகாதசி

    பத்மநாபா ஏகாதசி

    ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும். அந்த விதத்தில் புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி பாபாங்குச ஏகாதசி அல்லது பத்மநாபா' என்று அழைக்கபடுகிறது.

    வற்றாத தண்ணீர் வளம்

    வற்றாத தண்ணீர் வளம்

    இந்த பத்மநாபா ஏகாதசி அன்று விரதம் இருப்பதன் மூலம் இந்திரன் மற்றும் வருணனின் வரத்தை பெறலாம் . தண்ணீர் பற்றாகுறை வராது. நமது வீட்டில் இருக்கும் கிணறு, ஆழ் குழாய்களில தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். நமக்கு எந்த விதத்திலும் தண்ணீர் பற்றாக்குறை வராது. நமது வீட்டில் இருக்கும் கிணறு, ஆழ் குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். மேலும் அதிக மழையால் தண்ணீரினால் ஏற்படும் அழிவிலிருந்தும் நம்மை காக்கும். அடுத்து தமிழகத்தில் தொடர்ந்து மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் தமிழ்நாட்டில் வெள்ள சேதம் ஏற்படாமல் காக்கும்.

    விஷ்ணு சகஸ்ராநாமம் பாராயணம்

    விஷ்ணு சகஸ்ராநாமம் பாராயணம்

    ஏகாதசி விரதம் இருந்து விஷ்னு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விஷேஷமாகும். விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்ணுவை அதிதேவதையாக கொண்ட புத கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும். மேலும் திதி சூன்ய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும். எனவே பெருமாளுக்குகந்த மாதமான புரட்டாசியில் வரும் பரிவர்தனா ஏகாதசி, பத்மநாபா ஏகாதசி மற்றும் சயனி ஏகாதசியன்று விஷ்ணு சகஸ்ரநாமம் பாராணம் செய்து பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் அனுகிரஹத்தை பெருவதோடு நீரினால் ஏற்படும் துயரங்களில் இருந்து விடுபடலாம்.

    English summary
    Papankusha Ekadashi is considered to be one of the significant ekadashis as the person who keeps a fast on this day is bestowed with good health, wealth and all other worldly desires. It is also believed that without observing the Papankusha Ekadashi vrat, an individual can never be liberated from the sins and their evil action keeps chasing them throughout their life. The merits of this revered vrat are equivalent to performing 100 Surya Yagya or 1000 Ashwamedha Yagya.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X