• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

பல்லவர்களின் கடிகாரம் மகா பெரியவர் சொன்ன சுவாரஸ்ய தகவல் - டாக்டர் தியாக. சத்தியமூர்த்தி

|

மாமல்லபுரம்: பாரத பிரதமர் மோடி சீன அதிபரி ஜின்பிங் சந்திப்பிற்கு பின் மாமல்லபுரம் உலக பிரசித்தி பெற்றதாகிவிட்டது. அங்குள்ள சிறப்புவாய்ந்த சிற்பங்கள் புது பொலிவு பெற்றுள்ளன. அந்த சிற்பங்களில் முக்கியமானது பல்லவர்கால கடிகாரம். மகா பெரியவர்தான் இதனை தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் தியாக. சத்தியமூர்த்தியிடம் கூறியுள்ளார். பிரதமர் மோடி சீன அதிபரி ஜின்பிங் சந்தித்திருக்கும் இந்த நேரத்தில் பல்லவர் கால கடிகாரம் பற்றியும் அறிந்து கொள்வோம்.

டாக்டர் தியாக. சத்தியமூர்த்தி, தமிழகத்தின் தலைசிறந்த தொல்லியல் ஆய்வாளர்களுள் ஒருவர். தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், குஜராத், டெல்லி, ராஜஸ்தானம் என இந்தியாவின் பல பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகளை நிகழ்த்தியவர். இந்தியத் தொல்பொருள் கள ஆய்வுத் துறை (Archaeological Survey of India) மூலம் இவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கன. தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், மகாபலிபுரம் போன்ற இடங்களில் இவர் செய்த ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆய்வு, பயிற்றல், கருத்தரங்கு எனப் பல வேலைகளில் இடையின்றி ஈடுபட்டிருப்பவரைத் தென்றலுக்காக அரவிந்த் சுவாமிநாதன் சந்தித்தார். அந்தச் சந்திப்பிலிருந்து

Pallava era Sculptures at Mamallapuram archaeologist T Satyamurthy

காஞ்சிபுரம் மகாபெரியவரை சந்தித்த போது சில சுவராஸ்ய அனுபவங்கள் ஏற்பட்டது அதை பகிர்ந்து கொண்டுள்ளார் சத்தியமூர்த்தி. பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

சிறு வயதிலிருந்தே அவரை தரிசித்திருக்கிறேன். தொல்லியலாளரான பின்னர் அவரைப் பார்க்கப் போனபோது, "நீ என்ன வேலை பார்க்கிறாய்?" என்று கேட்டார்.

Pallava era Sculptures at Mamallapuram archaeologist T Satyamurthy

அப்போது கோவில்கள் திட்டப்பணியில் தொல்லியல் துறையில் செய்யும் பணியைபற்றிச் சொன்னேன்.

"நீ மகாபலிபுரம் போயிருக்கிறாயா? அங்கு என்ன பார்த்தாய்?" என்று கேட்டார்.

நான் பஞ்சபாண்டவர் ரதம், மகிஷாசுரமர்த்தினி என்றெல்லாம் சொன்னேன்.

"அங்கு பல்லவர்களுடைய கடிகாரம் ஒன்று இருக்கிறதே, அதைப் பார்த்திருக்கிறாயா?" என்று கேட்டார்.

ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்து, "பல்லவா காலத்தில் ஏது பெரியவா கடிகாரம்?" என்று கேட்டேன்

"இருக்கு. இருக்கு. நீ அடுத்தவாட்டி போறப்போ நல்லா பார்த்துட்டு வா!" என்றார்.

மறுமுறை போனபோது, "கடிகாரம் பார்த்தாயா?" என்று கேட்டார்.

"இல்லை பெரியவா, எனக்குத் தெரியவில்லை" என்றேன்.

"அர்ஜுனன் தவம் பார்த்தியா?" என்று கேட்டார்.

"பார்த்தேன்" என்றேன்.

"அந்த அர்ஜுனன் தபஸ் சிற்பத்திற்குக் கீழே நதி ஒன்று ஓடிக் கொண்டிருக்கும். சின்ன விஷ்ணு கோயில் ஒன்று இருக்கும். பக்கத்தில் ரிஷி ஒருவர் உட்காந்து கொண்டிருப்பார். கீழே அமர்ந்து சிலர் வேதம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஒருவர் ஆற்றில் நனைத்த துணியைப் பிழிந்து கொண்டிருப்பார். மற்றொருவர் நின்று கொண்டு மாத்யான்னிஹ வந்தனை செய்து கொண்டிருப்பார்.

அதில் ஒருவர் இரண்டு கைகளையும் கோர்த்து விரலிடுக்கால் உச்சியிலிருக்கும் சூரியனைப் பார்க்கிறார் பனிரெண்டு மணிக்கு இந்த விஷயம் நடந்தது என்பதைச் சிற்பி தெரிவிக்கிறார். அதைத்தான் 'பல்லவ கடிகாரம்' என்று சொன்னேன்" என்று பெரியவர் சொன்னார். பெரியவரின் நுணுக்கமான பார்வையைக் கண்டு எனக்கு பிரமிப்பு ஏற்பட்டது. இப்படிப் பல அனுபவங்கள்.

Pallava era Sculptures at Mamallapuram archaeologist T Satyamurthy

இதேபோல விரிஞ்சிபுரம் கிராமத்தில் பல்லவர் கடிகாரம் உள்ளது. வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியாகும். இப்பகுதி மார்கமந்தீஸ்வரர் கோவிலுக்காக புகழ்பெற்றுள்ளது. பல்லவ மன்னர் ஆட்சியின் போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் வடக்குப் பகுதியில் தான் காலம் கட்டும் கல் உள்ளது. இக்கல்லின் மேற்குப் பகுதியில் சிறிய பள்ளமான பகுதியின் மேலே சிறு குச்சி பொருத்த வசதி உள்ளது. சூரிய ஒளியின் திசைக்கு ஏற்றவாறு குச்சியின் நிழல் நகர்வதைக் கொண்டு நேரம் கணக்கிடப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் இருந்து சென்னை - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே அமைந்துள்ளது விரிஞ்சிபுரம் கிராமம். தேவாரப்பாடல் பெற்ற தலம் என்ற சிறப்பினை பெற்ற மார்க்கபந்தீஷ்வரர் திருத்தலம் இக்கிராமத்தின் அடையாளமாக அமைந்துள்ளது. மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்றான இக்கோவிலிலேயே தமிழரின் முதல் கடிகாரம் உள்ளது என்பது பெருமைக்குரியது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
On the Mamallapuram monuments, noted archaeologist T Satyamurthy said "the Pallava artisans excelled all their counterparts anywhere else."In accordance with dharma sutra texts,this prayer has to be performed at noon. The sculptor created this scene within the frame to indicate that the event took place at noon... hence, this miniature carving at the lowermost part of the great relief became a clock of the Pallava period," he noted.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more