For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையை பலமாக தாக்கும் புயல்... தாழ்வான பகுதிகள் மிதக்கும் - பஞ்சாங்கம் எச்சரிக்கை

கிரகங்களின் சஞ்சாரத்தினாலும் கூட்டணியினாலும் இந்த கார்த்திகை மாதத்தில் கடுமையான மழையை எதிர்பார்க்கலாம் என்று தமிழ் பஞ்சாங்கம் கணித்துள்ளது. இதில் போட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தாலும்

Google Oneindia Tamil News

Recommended Video

    டிசம்பரில் கன மழை?.. எதுவா இருந்தாலும் நாம கவனமா இருப்போம்!- வீடியோ

    சென்னை: புயல், மழை பற்றி வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுப்பது ஒரு பக்கம் இருந்தாலும் நவகிரகங்களின் சஞ்சாரம், கிரகங்களின் கூட்டணி ராசிகளில் இணையும் கிரகங்களை வைத்து பல மாதங்களுக்கு முன்பே மழை, புயல் வெள்ளத்தை தமிழ் பஞ்சாங்கம் கணித்துள்ளது.

    கார்த்திகை மாதத்தில் சூரியனுக்கு முன்பாக குரு இருக்கிறார். விருச்சிக ராசியில் குருவும் சூரியனும் இணைந்திருக்க அமாவாசை நாளில் சந்திரன் குரு உடன் இணைகிறார். விருச்சிகம் நீர் ராசியாகும். நீர் ராசியில் கிரகங்கள் இணைவதால் பெருமழையை எதிர்பார்க்கலாம்.

    பருவமழை நன்றாக பெய்வதால் நீர் நிலைகள் நிரம்பி வழியும், காய்கறிகள், உணவு தானியங்களின் விளைச்சல் அதிகரிக்கும் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

     சென்னையை தாக்கிய வெள்ளம்

    சென்னையை தாக்கிய வெள்ளம்

    2015 ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த பெருமழையும் அதனைத் தொடர்ந்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஏரிகள் நிரம்பின. திடீரென நள்ளிரவில் திறந்து விடப்பட்ட செம்பரம்பாக்கம், புழல் ஏரி தண்ணீரினால் சென்னை நகரமே வெள்ளத்தில் தத்தத்தளித்தது. இதனை சென்னைவாசிகள் யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. இந்த மழை வெள்ளத்தைப் பற்றி வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கும் முன்பே பஞ்சாங்கத்தில் கணித்திருந்தது.

    புயலை கணித்த பஞ்சாங்கம்

    புயலை கணித்த பஞ்சாங்கம்

    2016 ஆம் ஆண்டு சென்னையை தாக்கிய வர்தா புயலையும், 2017ஆம் ஆண்டு கன்னியாகுமரியை தாக்கிய ஓக்கி புயலைப் பற்றியும் பஞ்சாங்கம் முன்பே கணித்திருந்தது. ஆனாலும் வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையும் தாண்டி கடலுக்குள் சென்ற மீனவர்கள் பலரும் கரை திரும்பவில்லை.

     கஜா புயல்

    கஜா புயல்


    விளம்பி வருடத்தில் தாக்கிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சின்னாபின்னமாகியுள்ளது. மொத்தம் எத்தனை புயல்கள் உருவாகும், எத்தனை புயல்கள் தாக்கும் என்று திருக்கணித பஞ்சாங்கத்திலும், ஆற்காடு வாக்கிய பஞ்சாங்கத்திலும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு எத்தனை புயல் கரையை கடக்கும் எத்தனை புயல் பலவீனமடையும் சென்னையில் மழை எப்படி இருக்கும் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

    கார்த்திகையில் கடும் மழை

    கார்த்திகையில் கடும் மழை


    ஐப்பசி கடைசியில் புயல் தாக்கியது. கார்த்திகையிலும் கடும் மழை இருக்கும் என்று பஞ்சாங்கம் எச்சரிக்கிறது. இதற்குக் காரணம் கிரகங்களின் சேர்க்கைதான். நீர் ராசியான விருச்சிகத்தில் தற்போது குரு பகவானும், சூரியனும் சஞ்சரிக்கின்றனர். அமாவாசை நாளில் சந்திரனும் கூட்டணி சேர்வதால் பலத்த மழை பெய்யும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

     சென்னை மிதக்கும்

    சென்னை மிதக்கும்

    விளம்பி ஆண்டில் எந்தெந்த மாதத்தில் எந்த நாளில் மழை பெய்யும் என பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும். சரணாலயத்தில் வாழும் உயிரினங்கள் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழக்க நேரிடும் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது. மழை வெள்ளத்தினால் போக்குவரத்து பாதிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    மழை வெள்ளம்

    மழை வெள்ளம்

    இந்த ஆண்டு தை அமாவாசை திங்கட்கிழமை வருவதால் பெண்கள் ஏற்றம் பெறுவார்கள். நல்ல மழை பொழியும். தானிய உற்பத்தி அதிகரிக்கும். மக்கள் சுபிட்சமாக இருப்பார்கள் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் எனவே மக்கள் அச்சப்படத் தேவையில் நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

    English summary
    Tamil month of Karthigai in a Tamil panchangam Chennai will have heavy rains for a week in November and would also be battered by a cyclonic storm.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X