For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆனிமாத நிர்ஜல ஏகாதசி... தண்ணீர் கூட குடிக்காமல் விரதமிருந்தால் என்ன பலன் தெரியுமா?

விஷ்ணுவைவிட உயர்ந்த தேவரில்லை. தாயிற் சிறந்ததோர் கோயிலுமில்லை. காயத்ரியை விட உயர்ந்த மந்திரமில்லை. ஏகாதசியைவிட சிறந்த விரதமில்லை

Google Oneindia Tamil News

சென்னை: ஏகாதசி விஷ்ணுவுக்கும் உகந்த திதி. ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி அன்று, தண்ணீர்கூட குடிக்காமல் விரதம் இருக்க வேண்டும். அதனாலேயே அது நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது. பீம ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி விரதம் மிகவும் விசேஷமானது. இந்தத் திதியில் பிரம்மா குபேரனைத் தோற்றுவித்தார் என்பது ஐதீகம். அவர் ஆணைப்படி குபேரன் நிதிக்கு அதிபதி ஆனார். ஏகாதசி விரதம் அன்று வெறும் பழம் மட்டும் உண்டு குபேரனைப் பூசை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஏகாதசி விஷ்ணுவுக்கும் உகந்த திதி. வைகுண்ட ஏகாதசி விரதம் மிகவும் விசேஷமானது.

Pandava Nirjala Ekadasi Pooja

ஏகாதசி என்பது ஓர் புண்ணியகாலம் ஆகும். பரமாத்மாவுக்குப் பிரியமான திதி அது. அதைப் போற்றாத புராணமில்லை. அதை துதிக்காத தர்ம நூலில்லை. ஆறு வயது முதல் அறுபது வயது வரையிலுள்ளோர் அனைவரும் அதை அவசியம் அனுஷ்டிக்க வேண்டுமென பகவான் ஆணையிட்டார். கங்கையைவிடச் சிறந்த தீர்த்தமில்லை.

மனிதன் பிறவி என்னும் சுழற்சியில் இருந்து விடுபட்டு பிறவா நிலையை அடைவதையே விரும்புகிறான். அந்த நோக்கத்தை அடைய செய்யக்கூடியது இந்த ஏகாதசி விரதம். விஷ்ணுவைவிட உயர்ந்த தேவரில்லை. தாயிற் சிறந்ததோர் கோயிலுமில்லை. காயத்ரியை விட உயர்ந்த மந்திரமில்லை. ஏகாதசியைவிட சிறந்த விரதமில்லை என ஒருமிக்கப் பதினென் புராணங்களும் அதைப் போற்றுகின்றன.

சந்திரன் பூமியை ஒருதடவை சுற்றிவர ஏறக்குறைய இருபத்து ஒன்பதறை நாட்கள் ஆகின்றன. ஒவ்வொருநாளும் ஒரு திதி எனப்படும்.

ஒரு சந்திரமாதத்தில் 30 திதிகள் உள்ளன. அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரையில் உள்ள 15 திதிகள் சுக்லபட்சம். பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரையில் உள்ள 15 திதிகள் கிருஷ்ணபட்சம். ஏகாதசியன்று விரதமிருந்தால், முதல் பத்து நாட்கள்

உணவு உட்கொண்டு, அதனால் உள்ளே சேர்ந்துள்ள கழிவுப் பொருட்கள் கரைந்து வெளியேறுகின்றன.

பதினோராவது நாளான ஏகாதசியன்று வயிறு சுத்தமாகிறது. அன்று ஜீரணக் கருவிகளுக்கும் ஓய்வு கிடைக்கிறது. பின் நமக்கு வைட்டமின்கள் தேவைப்படுகின்றன. முக்கியமாக வைட்டமின்"ஏ" யும், "சி" யும் தேவைப்படும். ஆகவேதான், துவாதசியன்று வைட்டமின் "ஏ" சத்து நிறைந்த அகத்திக் கீரையையும், வைட்டமின் "சி" சத்து நிறைந்த நெல்லிக்காயையும் உணவுடன் சேர்த்துக்

கொள்ளுகிறோம்.

வாயுவின் வேண்டுகோளை ஏற்று நாராயணன் விஷ்ணுவான நாள் துவாதசி. விஷ்ணு தன் நான்கு கரங்களில் சங்கு, சக்கரம், கதை, தாமரை மலர் கொண்டுள்ளார். தெய்வீகம் மிக்க ஜயந்தி மாலை அணிந்துள்ளார். துவாதசி அன்றுதான் லக்ஷ்மி விஷ்ணு பத்தினி ஆனாள்.

துவாதசி அன்று லக்ஷ்மியையும் நாராயணனையும் ஒன்றாகப் பூசிப்பது மிகவும் விசேஷ பலன் அளிக்கும். பூசை முடிந்தவுடன் பெரியவர்களுக்கு நெய், தேன் தானம் தரலாம்.

நிர்ஜல ஏகாதசி

ஒவ்வொரு மாதத்திலும் இரு ஏகாதசிகள் (சுக்ல-கிருஷ்ண) வருகின்றன. வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உள்ளன. ஆனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி நிர்ஜல ஏகாதசி என போற்றப்படுகிறது. பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்திரர் ஒரு முறை வியாசரை தரிசித்தபோது அவரை வணங்கி "குருதேவா, துன்பங்கள் பலப்பல. அவை எப்போது எப்படி மனிதர்களை பாதிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. கலியுகத்திலோ, கேட்கவே வேண்டாம். அடை மழை போல, நேரம் காலம் பாராமல் அனைவரையும் படுத்தும். இந்த துன்பங்கள் நீங்கும்படியான ஒரு சுலபமான வழியைச் சொல்லுங்கள்'' என வேண்டினார்.

"தர்மபுத்திரா, எல்லாத் துன்பங்களையும் நீக்கக் கூடியது ஏகாதசி விரதம் மட்டுமே. ஏகாதசியன்று, உபவாசம் இருந்து பெருமானை பூஜிப்பதைத் தவிர சுலபமான வழி வேறெதுவும் இல்லை. சகல விதமான சாஸ்திரங்களும் இதைத் தான் சொல்கின்றன'' என்று பதில் சொன்னார் வியாசர். அருகில் இருந்து இதைக் கேட்ட பீமன், "உத்தமரான முனிவரே, என்னுடன் பிறந்தவர்கள் எல்லாம் ஏகாதசி விரதம் இருக்கிறார்கள். என் தாயும் மனைவியும்கூட ஏகாதசி விரதம் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் என்னையும் ஏகாதசி விரதம் இருக்க சொல்கிறார்கள் என்னால் செய்ய கூடியதா அது?

ஒரு வேளை சாப்பிட்டுவிட்டு, அடுத்த வேளை சாப்பிடாமல் இருப்பதே என்னால் முடியாது. என்னைப் போய் முறையாக உபவாசம் இருந்து ஏகாதசி விரதம் இரு என்றால் நடக்கக் கூடியதா இது. விருகம் என்னும் ஒரு தீ என் வயிற்றில் இருக்கிறது. ஏராளமான உணவைப் போட்டால் ஒழிய, என் வயிற்றில் இருக்கும் நெருப்பு அடங்காது. வருடத்துக்கு ஒரே ஒரு நாள் என்னால் உபவாசம் இருக்க முடியும். எனவே எனக்குத் தகுந்தாற்போல நான் எல்லா விதமான ஏகாதசிகளின் பலனையும் பெரும் விதம் ஓர் ஏகாதசியை எனக்குச் சொல்லுங்கள் என வேண்டினான்.

"கவலைப்படாதே பீமா. உனக்காகவே அமைந்ததைப் போல ஒரு ஏகாதசி இருக்கிறது. ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி அன்று, தண்ணீர்கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். அதனாலேயே அது நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது. அந்த ஏகாதசி விரதத்தை நீ கடைப்பிடி'' என வழிகாட்டினார் வியாசர். வியாசரை வணங்கிய பீமன் நிர்ஜல ஏகாதசி அன்று தண்ணீர் கூடக் குடிக்காமல் விரதம் இருந்தான். மறுநாள் துவாதசி அன்று உணவு உண்டான். அன்று முதல் அந்த துவாதசி "பாண்டவ துவாதசி'' என்றும், பீமன் விரதம் இருந்த அந்த ஏகாதசி "பீம ஏகாதசி'' என்றும் அழைக்கப்படலாயிற்று. துன்பங்கள் அனைத்தையும் போக்கும் ஏகாதசி இது.

நிர்ஜல ஏகாதசி விரத பலன்

நிர்ஜல ஏகாதசி விரதம் இருந்தால் மற்றைய ஏகாதசி விரதமிருந்த பலனுண்டு. இந்த ஏகாதசி விரதமிருப்போரை வைகுண்டத்தின் தூதுவர்கள் இறப்பிற்கு பின் நேரடியாக வைகுண்டத்திற்கு அழைத்து செல்வார்கள். எம தர்ம ராஜாவின் கிடுக்கி பிடியிலிருந்து நாம் தப்பித்து விடலாம்.

புனித நதிகளில் நீராடிய பலனும், பலவிதமான தானங்களை அளித்த பலனும் இந்த ஏகாதசி விரதத்தின் மூலம் கிடைக்கும்.

வாழ்வில் வளமும் செல்வமும் பெருகும். பிறவி பிணி நீங்கும். நிர்ஜல ஏகாதசியை பற்றி கேட்பவருக்கு சூரிய கிரகணத்தில் வரும் அமாவாசை திதியில் சிரார்த்தம் செய்த பலன் கிட்டும்.

ஒரு பிராமணனை கொன்ற பாபம், தொடர்ந்து பொய் சொன்ன பாபம், மது அருந்திய பாபம், தன் குருவை மதிக்காமல் ஏளனம் செய்த பாபம் இவற்றிலிருந்து விடுபடலாம். இந்த ஏகாதசி விரதமிருப்போர் தங்கள் பாபத்திலிருந்து விடுபடுவார்கள்.அவர்களின் நூறு தலைமுறைக்கான மூதாதையர்களும் தங்கள் பாப சுமையிலிருந்து விடுபடுவார்கள்.

இன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் பெறுகிறார்கள். இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்பவர்கள் வைகுண்ட பதம் அடைவார்கள்.

English summary
Anyone who does not fast on this particular Ekadasi (nirjala Ekadasi), they should be understood to be sinful, corrupted and suicidal person without a doubt.Nirjala Ekadashi 23rd June, 2018 Saturday is the most important and significant of other Ekadashis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X