பங்குனி மாத ராசி பலன்கள் 2022 : மீன ராசிக்கு செல்லும் சூரியனால் யாருக்கு என்ன யோகம் தேடி வரும்
சென்னை: நவகிரகங்களின் தலைவனான சூரியன், ஆசிரியராகிய குரு பகவானின் வீட்டில் அதாவது, மீனத்தில் சஞ்சரிக்கும் மாதம் இது. பங்குனி மாதம் பணபலத்தையும் மனோபலத்தையும் தரும் மாதமாக அனைவருக்கும் அமையட்டும். மேஷம்,ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்கிறது என்ன பலன்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம்.
அரசன் முதல் ஆண்டி வரை நாம் அனைவரும் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மாதமாக குரு பகவானின் ஆதிக்கம் நிறைந்த இந்த பங்குனி மாதம் விளங்குகிறது.
பங்குனி மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சியைப் பார்த்தால் 10ஆம் தேதி புதன் மீன ராசிக்கு செல்கிறார். 17ஆம் தேதி கும்பராசிக்கு சுக்கிரன் செல்கிறார். செவ்வாய் கும்ப ராசிக்கு 24ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். 29ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது. குருபகவான் அதிசாரமாக மீன ராசிக்குச் செல்கிறார். இந்த கிரகப்பெயர்ச்சி கிரகங்களின் பார்வை பலத்தால் நவகிரகங்களின் கூட்டணியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
இவ்வளவு பெரிய போஸ்ட்டா! 5 மாநிலத்தில் 4ஐ தூக்கிய பாஜக! தமிழ்நாடு பெண்

மேஷம்
அரச கிரகமான சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பெரியவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கி கொடுப்பீர்கள், அப்பாவுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும், வேலையில் சுறுசுறுப்பு உண்டாகும்.
புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுக்காக செலவுகள் அதிகரிக்கும், ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். புதிய சொத்துக்களை பற்றி பேசுவதும் எதிலுமே வெற்றி கிடைப்பது அஷ்டலட்சுமி கடாட்சமும் திருமணத்தைப் பற்றிப் பேசுவதும் குடும்ப வாழ்க்கையில் குழந்தை பாக்கியம் ஏற்படும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும் 17ஆம் தேதிக்குப் பின்னர் லாபம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும், காரியங்கள் எல்லாம் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கியில் சேமிப்பு அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத வகையில் பண வரவு அதிகரிக்கும்.

ரிஷபம்
அரச கிரகமான சூரியன் ராசிக்கு சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் இந்த மாதம் தனியார் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அதிகரிக்கும், வீட்டு வாடகை மூலம் பண வரவு உண்டாகும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பிதுரார்ஜித சொத்திலிருந்து பங்கு கிடைக்கும், தொழில் நுட்ப கல்வியில் மேன்மை நிலை உருவாகும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும், குடும்ப வருமானம் அதிகரிக்கும். குரு பகவான் பத்தாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். இது நன்மை தரும் அமைப்பாகும். அலுவலகத்தில் பதவி உயர்வு தேடிவரும் அதன் மூலமாக வருமானம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமணபாக்கியம் புத்திர சந்தான பாக்கியம் கிடைக்கும்.
சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும், 17ஆம் தேதிக்குப் பின்னர் செயல்கள் சிறப்படையும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பா செய்து கொண்டிருக்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், தொழிலுக்காக வெளிநாடு செல்லும் அதிர்ஷ்டம் உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும்.

மிதுனம்
அரச கிரகமான சூரியன் தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் இருக்கிறார் இந்த மாதம் எக்கச்சமான பலன்களைத் தரும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். செல்வம், செல்வாக்கு புகழ் கூடும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களின் செயல்கள் மனகஷ்டத்தை கொடுக்கும், வாகன போக்குவரத்தில் மிகவும் கவனமாக இருக்கவும். உங்கள் ராசிநாதன் புதன் பத்தாமிடத்தில் செயல்கள் எல்லாம் வெற்றி பெறும், சொந்தமாக செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ராசியை குரு பார்ப்பதால் சுபிட்சம் கிடைக்கும் திருமணம் புத்திர பாக்கியமும் பதவி உயர்வு தருவார்கள். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும் 17ஆம் தேதி முதல் மனைவியினால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் சிரத்தை தேவை, செய் தொழிலில் விரக்தி உண்டாகும். அஷ்டமத்து சனி நடப்பதால் சுப விரைய செலவுகள் தேடி வரும். தொழில் தொடங்க வேண்டாம். வண்டி வாகனத்தில் கவனமாக செல்ல வேண்டும் வீடு பூமி யோகம் உண்டாகும் வாக்கில் கவனம் தேவை. கோபத்தை தவிர்க்க வேண்டும். சிவ வழிபாடும் சனீஸ்வர வழிபாடு செய்ய வேண்டும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மருத்துவ செலவுகள் ஏற்படும். தானம் தர்மம் செய்யவும் ஏழைக் குழந்தைகளுக்கு உணவு உடை வாங்கித் தரவும்

கடகம்
சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும், தொழில் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும், புதிதாக வீடு நிலம் வாங்குவீர்கள். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் நல்ல லாபத்தைக் கொடுக்கும், உயர் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் எதிர்பாராத வகையில் பண வரவு உண்டாகும், 29ஆம் தேதிக்கு மேல் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் பண வரவு அதிகரிக்கும். செலவுக்கு போக பணம் அதிகமாக மிச்சமாகும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும் 17ஆம் தேதிக்குப் பின்னர் பொன் நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். வருமானம் வருவதை யாரிடமும் சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் வருவதை தாமதப்படுத்தும் யாருக்கும் பணம் கடன் கொடுக்கக் கூடாது. ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும், வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டில் லட்சுமி கடாட்சம் யோகமும் மாணவர்கள் கல்வியில் விமானத்துறை மெக்கானிக்கல் ரயில்வே துறையிலும் அரசாங்க பதவி உயர்வும் கூட்டுறவுத்துறையில் சிறந்த வருவார்கள். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் எண்ணங்கள் எல்லாம் நிறைவேறும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள்

சிம்மம்
உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவினால் தொல்லை உண்டாகும், அலுவலகத்தில் வேலையில் மனம் ஈடுபாடு இருக்காது. எதிலும் வெற்றி கிடைக்கும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளுடன் சச்சரவு உண்டாகும், கூர்மையான பொருட்களால் காயம் ஏற்படும் கவனம் தேவை. புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும், குரு உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் இருக்கிறார். கணவன் மனைவி இடையே காதல் உணர்வு அதிகரிக்கும். குரு பகவான் ஏழாம் பார்வையாக ராசியை பார்ப்பதால் மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைவார்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். வாகனத்தில் கவனமாக செல்ல வேண்டும் மனைவி சொல்வதை கணவர் கேட்க வேண்டும். வேலை வாய்ப்பில் பதவி உயர்வு கிடைக்கும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் மனைவியுடன் சச்சரவு உண்டாகும் 17ஆம் தேதிக்குப் பின்னர் பெண்களால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடலில் வலி உண்டாகும், சோம்பல் உண்டாகும் மருத்துவ செலவுகள் எட்டிப்பார்க்கும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

கன்னி
அரசு கிரகமான சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசு வேலைக்காக வெளியூர் செல்லும் நிலை உண்டாகும், அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும். சிறு உல்லாசப் பயணம் செல்வீர்கள். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும், தாய் மாமனின் உதவி கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் இருந்து அதிசாரமாக ஏழாம் வீட்டிற்கு சென்று சில காலம் தங்கியிருப்பார் தம்பதியரிடையே நெருக்கம் கூடும். குருவின் பார்வையால் திருமணம் கை கூடி வரும் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் நீங்கும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களின் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள் 17ஆம் தேதிக்குப் பின்னர் பெண் எதிரிகளால் தொல்லை உண்டாகும். குடும்பத்தில் லட்சுமி கடாட்ச யோகம் உண்டாகும். வண்டி வாகனம் வாங்கும் போதும் தாயார் மனைவி பெயருக்கு வாங்க வேண்டும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் புத்தியில் கலக்கம் உண்டாகும்.