For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெய்வீக திருமணங்கள் நிறைந்த பங்குனி மாத ராசி பலன்கள்

Google Oneindia Tamil News

பார்வதி - பரமேஸ்வரன், மீனாட்சி - சுந்தரேஸ்வரர், ஆண்டாள் - ரங்கமன்னார், தெய்வானை - முருகன் என தெய்வத் திருமணங்கள் அனைத்தும் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அன்னை காமாக்ஷி ஊசி முனையில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரரோடு ஐக்கியமானதும் இந்தப் பங்குனி மாதத்தில்தான்.

நவகிரகங்களின் தலைவனான சூரியன், ஆசிரியராகிய குருவின் வீட்டில் அதாவது, மீனத்தில் சஞ்சரிக்கும் மாதம் இது. அரசன் முதல் ஆண்டி வரை நாம் அனைவரும் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மாதமாக குரு பகவானின் ஆதிக்கம் நிறைந்த இந்த பங்குனி மாதம் விளங்குகிறது. இதனை மெய்ப்பிக்கும் விதமாக ஞானகுரு வாகிய ஐயப்பன் உதித்ததும் இந்த பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில்தான்.

அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ்ஞானம் பெற விரும்புவோர் உத்திரத்தில் உதித்த ஐயனை தரிசிக்கச் செல்வர். சாமானிய மனிதர்களாகிய நமக்கு மட்டுமல்ல, சிவனேசச் செல்வர்களான அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் இறைவன் காட்சியளித்து மெய்ஞ்ஞானத்தைப் போதிப்பதும் இந்தப் பங்குனி மாதத்தில்தான்.

இன்றைக்கும் சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் இந்த அறுபத்துமூவர் திருவிழா பங்குனி மாதத்தில் மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகிறது.

இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பங்குனிமாதத்தில் 12 ராசிகாரர்களுக்கும் பலன்கள் எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.

கிரகங்களின் ராசி மாற்றம்

கிரகங்களின் ராசி மாற்றம்

சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - ராசி மாற்றம் இல்லை
புதன் - 05ம் தேதி மீனம் ராசிக்கும் 20ம் தேதி மேஷம் ராசிக்கும் மாறுகிறார்.
குரு - ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் - 18ம் தேதி மீனம் ராசிக்கு மாறுகிறார்
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு - ராசி மாற்றம் இல்லை
கேது - ராசி மாற்றம் இல்லை

மேஷம்

மேஷம்

சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கத்திற்க்கு செலுத்தவேண்டிய கட்டணங்களை செலுத்திவிடுவது பிரச்சினைகளை தவிர்க்க உதவும். அப்பாவுக்காக செலவுகள் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடுகளை தவிர்க்கவும் அண்ணன் தம்பிகளுக்கிடையே சச்சரவுகளை தவிர்க்கவும். புதன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும். கல்விக்காக வெளியூர் செல்வீர்கள். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பெண்கள் உபயோகப்படுத்தும் பொருட்களின் வியாபாரம் சிறப்படையும் பெண்களால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத பணவரவு கிடைக்கும் உழைப்பு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப்பயணம் செல்வீர்கள் படிப்பில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நினைப்பதெல்லாம் நிறைவேறும்

ரிஷபம்

ரிஷபம்

சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும் வீடு கட்டும் யோகம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழில் தொழில் சிறப்படையும். சகோதரர்களுடன் நல்லுறவு உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் தொழில் சிறப்படையும் பண வரவு அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள், கல்வியில் மேன்மை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் பெண் தெய்வத்தின் அருள் கிடைக்கும் தொழிலில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் சிறப்படையும் தொழில் கூட்டாளிகளின் உதவி கிடைக்கும். ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் பழைய வீடு வாங்கி புதுப்பீர்கள் அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் சிறப்படையும் சிறிய வகை இயந்திரங்கள் வாங்குவீர்கள்.

மிதுனம்

மிதுனம்

சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும் அப்பாவின் தொழில் சிறப்படையும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார். இயந்திரங்களைக் கையாளும் பொழுது கவனம் தேவை உடன் பிறப்புகளுடன் சச்சரவு வேண்டாம். உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குலதெய்வ கோயிலுக்கு செல்வீர்கள் தொழில் விருத்தியடையும். குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இட மாற்றம் உண்டாகும் மனதில் இருக்கும் குழப்பம் நீங்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குலதெய்வ கோயிலுக்கு செல்லும் நிலை உண்டாகும். தொழிலுக்காக அபிவிருத்தி உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உழைப்பு அதிகரிக்கும் திடீர் யோகம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் செல்லும் நிலை உண்டாகும் சகோதரர்களின் உதவி கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் நீண்டதூரம் பயணம் செய்யும் நிலை உண்டாகும்.

கடகம்

கடகம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும் சிவாலய வழிபாடு நல்ல பலனைக் கொடுக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்து மூலம் பண வருமானம் வரும். புதன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் கடன் கொடுப்பதில் கவனமாக இருக்கவும் கல்வியில் மேன்மை நிலை உருவாகும். குரு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் எல்லா விஷயங்களிலும் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை. சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் மனதில் உருவாகும் சஞ்சலத்தை தவிர்க்கவும் விவசாயத் தொழில் மேன்மை நிலை அடையும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் கோபமான பேச்சை தவிர்க்கவும் பண வரவு சாதகமாக இருக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் போக்குவரத்தில் கவனம் தேவை வயதில் பெரியவர்களுடன் சச்சரவு வேண்டாம்

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் அதிகரிக்கும் உயர் அதிகாரிகளின் விஷயத்தில் கவனம் தேவை. செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களினால் நன்மை உண்டாகும் ரியல் எஸ்டேட் தொழில் நல்ல லாபத்தைத் தரும். புதன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு நன்றாக இருக்கும் தாய் மாமனுடன் கருத்து வேறுபாடு வேண்டாம். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உறவினர்களிடம் மரியாதை அதிகரிக்கும் மனதில் நிம்மதி அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவு வேண்டாம். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் தேவை விவசாயம் சிறப்படையும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் உண்டாகும் குழப்பத்தையும் சிந்தனையில் உண்டாகும் தடுமாற்றற்றத்தையும் தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியடையும் அனைவரின் ஆதரவும் கிடைக்கும்

கன்னி

கன்னி

சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க விஷயமாக பயணம் செய்யும் நிலை உண்டாகும் எல்லா விஷயங்களிலும் அப்பாவின் உதவி கிடைக்கும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும் உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும். உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் நலத்தில் கவனம் தேவை வியாபாரம் விருத்தியாகும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும் ஆன்மீக திருப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் பொன்நகைகளை யாருக்கும் இரவல் தரவேண்டாம் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவி கிடைக்கும் இட மாற்றம் உண்டாகும். ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெல்வீர்கள் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும்.

துலாம்

துலாம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை உயர் அதிகாரிகளிடம் விரோதம் வேண்டாம். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் பண வரவு அதிகரிக்கும் குதற்கமான பேச்சை தவிர்க்கவும் புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கமிஷன் தொழில் விருத்தியடையும் தாய் மாமனுடன் சச்சரவை தவிர்க்கவும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நினைப்பதெல்லாம் நிறைவேறும் தொழில் லாபம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள். வாழ்க்கைத்துணையுடன் சச்சரவைத் தவிர்க்கவும். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வருமானம் அதிகரிக்கும் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மூத்த சகோதரத்துடன் சச்சரவு வேண்டாம். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசு உத்தியோகம் தொடர்பான தேர்வில் வெற்றி கிடைக்கும் அரசு வாகன யோகம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் கோபமும் எரிச்சலும் உண்டாகும் அகங்காரத்தை தவிர்க்கவும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும் கமிஷன் வியாபாரம் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் சிறப்படையும் எல்லா செயல்களும் வெற்றியடையும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டை அழகுபடுத்துவீர்கள் உறவினர்களின் விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உழைப்பு அதிகரிக்கும் மனதில் மந்த நிலை உண்டாகும் ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிலை சிறப்படையும் காரியவெற்றி உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு வாங்கும் நிலை உண்டாகும் அம்மாவின் ஆரோக்கியம் சிறப்படையும்

தனுசு

தனுசு

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசு ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும் தொழில் முறை பயணம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுக்காகவும் வீடு பராமரிப்பதற்காகவும் செலவுகள் அதிகரிக்கும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும் வாகன யோகம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆலய வழிபாடு சிறப்பைத் தரும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடமாற்றம் உண்டாகும் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் வெளியூர் பயணம் உண்டாகும் ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களின் உதவி கிடைக்கும் வீடு மாறும் நிலை உண்டாகும்.

மகரம்

மகரம்

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் செல்வீர்கள் தகவல் தொடர்பு சிறப்படையும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் மனதில் நினைப்பதெல்லாம் நிறைவேறும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் வசீகரம் அதிகரிக்கும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும். குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் மனகஷ்டம் உண்டாகும். நெருங்கிய உறவினர்களுக்கு பணம் கடன் கொடுக்க வேண்டாம். சுக்கிரன் உங்கள் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் பெண்களால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பெரியவர்களால் நன்மை உண்டாகும். எல்லா செயல்களும் வெற்றிகரமாக நிறைவேறும் ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகன போக்குவரத்தில் கவனம் தேவை எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்

கும்பம்

கும்பம்

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சம்பள உயர்வு உண்டாகும் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில் நிலை சிறப்படையும் நிலம் வீடு வகைகளில் முதலீடுகள் அதிகரிக்கும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமயோசிதமாக செயல்பட்டு எல்லாவற்றிலும் வெற்றிபெறுவீர்கள். ஒப்பந்தத் தொழில் மூலம் பண வரவு அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் கௌரவம் அந்தஸ்து அதிகரிக்கும் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பொன்னகை சேர்க்கை அதிகரிக்கும் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியடையும் நண்பர்களின் உதவி கிடைக்கும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் புனித யாத்திரை செல்வீர்கள்

மீனம்

மீனம்

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குடும்ப வருமானம் அதிகரிக்கும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும் நிலை உண்டாகும், புத்திகூர்மை அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியம் சிறப்படையும், எதிகளை வெல்வீர்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையினால் செலவுகள் அதிகரிக்கும், ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக வீட்டில் பங்கு கிடைக்கும் பழைய வீட்டை புதுப்பீர்கள். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும் எதிரிகளை வெல்வீர்கள். கேது பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில் வழிபாடு சிறப்பைத் தரும் தான தர்மங்கள் செய்யும் நிலை உண்டாகும்.

English summary
Rasi Palan for the Tamil Month of Panguni.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X