For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பரசுராமர் ஜெயந்தி - நீதியை நிலைநாட்ட அவதாரம் எடுத்த சிரஞ்சீவி

மஹாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் 6ஆவது அவதாரமாக தோன்றியவர் பரசுராமர். இன்றைக்கும் நம் பூமியில் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருபவர்கள் ஏழு பேர். ஆஞ்சநேயர், விபீசணன், வியாசர், அஸ்வத்தாமன், பரசுராமர், மகாபலி சக்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: தசாவதாரத்தில் மஹாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் மொத்தம் ஒன்பது. அதில் 6ஆவதாக எடுத்த அவதாரம் தான் பரசுராமர் அவதாரம். அதுவரை நிகழ்த்திய 5 அவதாரங்களிலும், எந்தவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்தாமல் அசுரர்களை அழித்த மஹாவிஷ்ணு, பரசுராமர் அவதாரத்தில் தான் முதன் முதலில் ஆயுதத்தை பயன்படுத்தினார். சிரஞ்சீவியான பரசுராமர் இன்றைக்கும் கன்னியாகுமரிக்கு அருகில் இருக்கும் மகேந்திரகிரி என்னும் மலையில் தவம் செய்துகொண்டிருப்பதாக ஐதீகம். டிசம்பர் 13ஆம் தேதியான இன்றைக்கு பரசுராமர் அவதார நாளானதால், பெருமாள் கோவிலுக்கு சென்று அவரை வணங்கி வாழ்வில் வளம் பெறுவோம்.

மஹாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் 6ஆவது அவதாரமாக தோன்றியவர் பரசுராமர். இன்றைக்கும் நம் பூமியில் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருபவர்கள் ஏழு பேர். ஆஞ்சநேயர், விபீசணன், வியாசர், அஸ்வத்தாமன், பரசுராமர், மகாபலி சக்ரவர்த்தி, மார்க்கண்டேயர் என ஏழு பேர்கள்.

இவர்களில், எங்கெல்லாம் ராம நாமம் கேட்கிறதோ, அங்கெல்லாம் நான் இருப்பேன் என்பதை உணர்த்துபவர் ஆஞ்சநேயர். அதே போல், எங்கெல்லாம் தர்மம் குறைந்து அநீதியும், அதர்மமும் கட்டுக்கடங்காமல் போகின்றதோ, அப்போது மக்கள் என்னை எளிதில் அடையாளம் காணக்கூடிய வகையில் நான் அவதாரம் எடுப்பேன். எளியோர்களை காப்பதற்காகவும், பாவிகளை அழிப்பதற்காகவும், தர்மத்தையும் நீதியையும் நிலைநாட்டவும், நான் யுகந்தோறும் அவதாரமெடுப்பேன், என்கிறார் பகவான் கிருஷ்ணர்.

மஹாவிஷ்ணுவின் அவதாரங்கள்

மஹாவிஷ்ணுவின் அவதாரங்கள்

பொதுவாக மஹாவிஷ்ணுவின் அவதாரங்கள் 10 என்ற போதிலும், வைணவ நெறியாக இருக்கும் பாஞ்சராத்ர ஆகமத்தில் அஹிர்புதந்யை சம்ஹிதையில், மஹாவிஷ்ணுவின் அவதாரங்கள் 39 என்று தெளிவுபடுத்தியுள்ளது. அதில் முதன்மையான குறிப்பிடத்தக்க அவதாரங்கள் தசாவதாரம் எனக் கூறப்படுகிறது.

முதலில் ஆயுதத்தை பயன்படுத்தியவர்

முதலில் ஆயுதத்தை பயன்படுத்தியவர்

தசாவதாரத்தில் மஹாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் மொத்தம் ஒன்பது. அதில் 6ஆவதாக எடுத்த அவதாரம் தான் பரசுராமர் அவதாரம். இதில் மற்றொரு விஷயம், அதுவரை நிகழ்த்திய 5 அவதாரங்களிலும், எந்தவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்தாமல் அசுரர்களை அழித்த மஹாவிஷ்ணு, பரசுராமர் அவதாரத்தில் தான் முதன் முதலில் ஆயுதத்தை பயன்படுத்தினார். சிரஞ்சீவியான பரசுராமர் இன்றைக்கும் கன்னியாகுமரிக்கு அருகில் இருக்கும் மகேந்திரகிரி என்னும் மலையில் தவம் செய்துகொண்டிருப்பதாக ஐதீகம்.

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

சப்தரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவர் ரேணுகாதேவி தம்பதிகள் சிவபெருமான நோக்கி கடுந்தவம் இருந்தனர். அந்த தவத்தின் பயனாக அவர்களுக்கு நான்காவதாக மகனாக அவதரித்தவர் தான் பரசுராமர். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றும் நீதியை நிலை நாட்டி உலகை காக்கவும் அவதாரமெடுத்தவர். அதனால் தான் தன்னுடைய தந்தையால், என்றைக்கும் சிரஞ்சீவியாக வாழ ஆசி பெற்றவர்.

சிவன் வழங்கிய கோடாரி

சிவன் வழங்கிய கோடாரி

இவருடைய கதை ராமாயணம் மற்றும் மகாபாரதத்திலும் இடம்பெற்றுள்ளது. இவருடைய இயற்பெயர் ராமபத்ரா என்பதாகும். இவர் சிவனை நோக்கி கடுந்தவம் இருந்ததால், அந்த தவத்தை மெச்சிய சிவன் இவர் முன் தோன்றி தெய்வீக கோடாரியை ராமபத்ராவுக்கு வழங்கினார். கோடாரியை கையில் ஏந்தியவர் என்பதால் அன்று முதல் அவருக்கு பரசுராமர் என்ற பெயர் நிலைத்து நின்றது.

கற்புக்கரசி ரேணுகாதேவி

கற்புக்கரசி ரேணுகாதேவி

பரசுராமரின் தாயார் ரேணுகாதேவி, தன் கணவரைத் தவிர உலகில் வேறு தெய்வம் கிடையாது என்று வாழும் கற்புக்கரசி. அவர் வழக்கம் போல் ஒரு நாள், ஆற்றுக்கு சென்று மண்ணை எடுக்க குனிந்தார். அப்போது ஆற்று நீரில் அழகிய கந்தர்வனின் உருவம் நிழலாடுவதைக் கண்டார். உடனே அவரைப் பார்க்கும் ஆசையில் அன்னாந்து வானத்தை பார்த்தார். அடுத்த விநாடியே அவருடய கற்பு நெறி வழுவியது.

ஞானதிருஷ்டியால் அறிந்த ஜமதக்னி

ஞானதிருஷ்டியால் அறிந்த ஜமதக்னி

பின்னர், தன்னுடைய கையில் மண்ணை எடுத்து பிசைய மண் குடமாக மாறவில்லை. இதனால் வெறும் கையுடன் ஆசிரமத்திற்கு திரும்பியவரைக் கண்டதும் ஜமதக்னி முனிவருக்கு நடந்த அனைத்தும் ஞானதிருஷ்டியில் தெரிந்துவிட்டது. தன்னுடைய மனைவியானவள் தடம் மாறவில்லை. ஆனால், மனம் தடுமாறியதால், கற்பு நெறி தவறி விட்டாய் பெண்ணே, என்று வருத்தத்துடன் கூறினார்.

தலையை வெட்டிய பரசுராமர்

தலையை வெட்டிய பரசுராமர்

உடனே, தன்னுடைய நான்கு மகன்களையும் அழைத்து, ரேணுகாதேவியின் தலையை வெட்டச்சொன்னார். ஆனால் மற்ற மூன்று மகன்களும் பெற்ற தாயின் தலையை வெட்டமாட்டோம். மகாபாவம் என்று தயங்கி ஒதுங்கி நின்றனர். நான்காவது மகனான பரசுராமரை ஜமதக்னி முனிவர் அழைக்க, பரசுராமர், தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதற்கேற்ப சற்றும் தயங்காமல், தன்னுடைய தாயின் தலையை வெட்டி வீசினார்.

பரசுராமர் கேட்ட வரம்

பரசுராமர் கேட்ட வரம்

இதனைக் கண்டு மனம் மகிழ்ந்த ஜமதக்னி முனிவர், பரசுராமரைப் பார்த்து வேண்டிய வரம் கேள் என்று சொல்ல, அதை தனக்கான வாய்ப்பாக எண்ணிய பரசுராமர், என்னுடைய தாயை மீண்டும் உயிர் பிழைக்க செய்ய வேண்டும். அதோடு இப்பொழுது நடந்த எதுவும் என் தாயின் நினைவில் இல்லாமல், அவரை குற்றமற்றவராக கற்புநெறி தவறாதவராக விளங்கச் செய்யவேண்டும் என்று வரம் கேட்டார். ஜமதக்னி முனிவரும் அப்படியே தந்தருளினார்.

பாவத்திற்கு பிராயசித்தம்

பாவத்திற்கு பிராயசித்தம்

இருந்தாலும், தன்னுடைய தாயை கொன்றதால், பரசுராமருக்கு குற்ற உணர்ச்சி மேலிட்டது. உடனே காட்டிற்கு சென்று அங்குள்ள முனிவர்களை சந்தித்து தன்னுடைய தவிப்பை கூறி, பிராயசித்தம் வேண்டுமென சொன்னார். பிராயசித்தம் சொல்லாவிட்டால் இவரது மனது அமைதி அடையாது என்பதை உணர்ந்த முனிவர்களும், கடுமையான பிராயசித்தத்தை சொன்னார்கள்.

ஒரு ஆண்டு பூஜை

ஒரு ஆண்டு பூஜை

அதாவது, ஒரு வருடத்திற்கு தினமும் பூஜை செய்ய வேண்டும், அதே சமயத்தில் முந்தைய நாட்களில் பூஜைக்கு பயன்படுத்திய பூக்களை மீண்டும் பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது என்று நிபந்தனை விதித்தனர். அதாவது முதல் நாள் பூஜைக்கு மல்லைகையையோ, அரளிப்பூவையோ பயன்படுத்தி இருந்தால், மீண்டும் அந்த பூக்களை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பூக்களைக் கொண்டு தான் பூஜிக்க வேண்டும்.
அதே போல், பூஜைக்கான நிவேதனப் பொருட்களையும், பூஜைக்கான முத்திரைகளையும், மந்திரங்களையும், தினமும் புதிதாக ஹோமம் செய்ய வேண்டும், ஹோமத்திற்கு முன்பு பயன்படுத்திய திரவியத்தையும் கூட மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்று நிபந்தனையோடு பிராயசித்தத்திற்கு வழி சொன்னார்கள்.

ஓர் ஆண்டு பூஜை நிறைவு

ஓர் ஆண்டு பூஜை நிறைவு

பரசுராமரும், முனிவர்கள் சொன்ன பிராயசித்த முறைகளை கேட்டுக்கொண்டு, பூஜையை செய்ய ஆரம்பித்தார். தொடக்கத்தில் உற்சாகமாக செய்ய ஆரம்பித்தார். ஆனால் நாளடைவில் சிக்கல் எழ ஆரம்பித்தது தினமும் புதிதாக இருக்க வேண்டும் என்பதால், மிகுந்த சிரமப்பட்டு ஒரு வருடம் பூஜையை முடித்துவிட்டு, மீண்டும் முனிவர்களிடம் சென்று பூஜையை முடித்துவிட்டதாக கூறினார்.

உள்வாங்கிய கடல்

உள்வாங்கிய கடல்

அதைக் கேட்ட முனிவர்களும், தாயைக் கொன்ற பாவம் தீர்ந்ததாக கூற, சந்தோசப்பட்டு கிளம்பினார் பரசுராமர். அங்கிருந்து கிளம்பிய பரசுராமர் மேற்கு கடற்கரை பகுதிக்கு சென்றார். கரையில் நின்று தான் வைத்திருந்த கோடாரியை கடலில் வீசி எறிந்தார். கோடாரியின் தாக்குதலுக்கு பயந்து கடல் பின்வாங்கியது. அப்படி உருவான இடத்தை செம்மைப்படுத்தி தன்னுடையதாக ஆக்கிக் கொண்டார்.

மகேந்திரகிரி மலையில் தவம்

மகேந்திரகிரி மலையில் தவம்


அப்படி பரசுராமர் உருவாக்கிய புண்ணியபூமியே இன்றை கேரளாவாகும். அதனால் தான் கேராளவை பரசுராமர் பூமி என்று கொண்டாடுகிறோம். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மகேந்திரகிரியை அடைந்து சிவபெருமானை நினைத்து தவம் இருக்கத் தொடங்கினார். இன்றைக்கும் பரசுராமர் மகேந்திரகிரி மலையில் தவமிருப்பதாக நம்பப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் உள்பட ஐந்து கோவில்களை பரசுராமர் கேரளாவில் உருவாக்கியுள்ளார்.
டிசம்பர் 13ஆம் தேதியான இன்றைக்கு பரசுராமர் அவதார நாள் என்பதால் பெருமாள் கோவிலுக்கு சென்று அவரை வணங்கி வாழ்வில் வளம் பெறுவோம்.

English summary
Mahavishnu's incarnations in Dasavatharam are nine in total. Parashurama incarnation is the 6th incarnation of it. In the 5 incarnations thus far, Mahavishnu, who destroyed the Asuras without using any weapons, was the first to use the weapon in the incarnation of Parasuramar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X