For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்க வீடு சிதம்பரமா? மதுரையா? ஏழாம் இடம் சொல்வதென்ன?

வீட்டில் கணவன் மனைவி இடையே ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதால் தாம்பத்யம் இனிக்கும். அதுவே ஆதிக்கம் செலுத்த நினைத்தால் பிரச்சினை அதிகமாகும். வீட்டில் மனைவி ஆட்சியா, கணவன் ஆட்சியா என்று ஒருவரி

Google Oneindia Tamil News

சென்னை: ஒருவர் நாட்டிற்கே ராஜாவாக இருந்தாலும் வீட்டில் 'மனைவி சொல்லே மந்திரம்' என்று கேட்டுக்கொண்டு இருப்பார். இதற்குக் காரணம் லக்னாதிபதியைக் காட்டிலும், ஏழாம் அதிபதி அதிக வலுவாக இருக்கும். அப்படியிருந்தால் வீட்டில் மனைவியின் கையே ஓங்கியிருக்கும். ஏழாம் அதிபதி வலுக்குறைந்து லக்னாதிபதி அதிக பலம் பெற்றிருந்தால் மனைவி ஜாதகனின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பார்.

ஒரு சிலர் பார்க்கும் போதே கேட்பார்கள் உங்க வீட்ல சிதம்பரமா? மதுரையா என்று அதற்குக் காரணம் வீட்டில் மனைவி ஆதிக்கம் செலுத்துகிறாரா என்பதை அறிந்து கொள்ளவே. ஆணின் ஜாதகத்தில் ஏழாமிடம் எப்படியிருக்கிறது என்பதை வைத்து வரப்போகும் லைஃப் பார்ட்னர் என்று சொல்லப்படும் மனைவியை பற்றியும், பிசினஸ் பார்ட்னர் என்று சொல்லப்படும் சுயதொழில் கூட்டாளிகளைப் பற்றியும், திருமண வழக்கு வியாஜ்ஜியங்களை பற்றியும், உள்நாட்டு பயணங்களை பற்றியும், மாரகம், உறவு முறைகள் திருமணம் நடக்கும் காலங்கள்,மனைவியின் குணங்கள், திருமணம் நடக்குமா நடக்காதா போன்ற விசயங்களை நிர்ணயம் செய்ய முடியும்.

Partnership and Marriage 7th House in Astrology

ஏழாமிடமானது சிற்றின்பத்தைக் குறிப்பிடும் பாவகம். எனவேதான் இந்த ஸ்தானத்தை ஆயுள் ஸ்தானத்திற்கு விரைய ஸ்தானமாக நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள்.

ஜாதகத்தில் 2,7,8சுத்தமாக இருக்கனும். 2,7,8 போன்ற இடங்களில் சனி,ராகு,கேது,செவ்வாய், சூரியன் போன்றபாவர்கள் பாவத்தன்மை பெற்று அமர திருமணம் தாமதமாகும். வளர்பிறை சந்திரன்,சுபர்களோடு சேர்ந்த புதன் அல்லது தனித்த புதன்,சுக்கிரன், குரு போன்ற சுபக்கிரகங்கள் இருக்கலாம். அங்கேயும் ஒரு சிக்கல் இருக்குது.

சுபர்கள் கேந்திரங்களில் கேந்திராதிபத்திய தோசத்தை அடைவார்கள். எனவே ஏழில் சுபர்கள் இருப்பது கேந்திராதிபத்திய தோசத்தை ஏற்படுத்தும். லக்னத்தில் குரு திக்பலம் பெறுபவர் என்பதால் அவர் ஏழில் நிற்கும் போது நிஷ்பலம் என்னும் பலம் குறைந்த நிலையை அடைவார். சுக்கிரன் ஏழில் காரகோபாவநாஸ்தியை அடைவார். எனவே ஏழில் யாரும் இல்லாமல் சுத்தமாக இருப்பதே உத்தமம். பாவக்கிரகங்கள் இருந்தால் சுபத்தன்மை அடையவேண்டும்.

ஒருவருக்கு நல்ல மனைவி அமைய ஏழாமிடமும்,ஏழாம்பாவமும்,களத்திர காரகன் சுக்கிரனும் ,சுக்கிரனின் வீடுகளான ரிஷபம், துலாம் வலுப்பெற வேண்டும்.ரிஷப, துலாத்தில் பாவிகள் இருந்தால் நல்ல மனைவி அமைய தடை ஏற்படும்.

ஒருவர் ஜாதகத்தில் ஏழாமிடம் சுத்தமாக இருந்து, ஏழாமாதிபதியும், சுக்கிரனும் நல்ல முறையில் ஆட்சி, உச்சமாக அமைய ஒருவருக்கு நல்ல மனைவி மற்றும் ஏழாமிட காரகத்துவங்கள் அனைத்தும் நல்ல முறையில் ஜாதகருக்கு கிடைக்க பெறும்.

சுக்கிரன் களத்திரஸ்தானமான ஏழாவது வீட்டில் அமர்ந்தால் களத்திர தோஷம் ஏற்படும். சுக்கிரனுக்கு ஏழில் பாபிகள் இருந்தால் தாமத திருமணம் ஏற்படும். சுக்கிரனுக்கு இருபுறமும் பாபிகள் இருப்பின் களத்திர தோஷம் ஏற்படும். சுக்கிரன் 6,8,12 போன்ற இடத்தில் இருப்பின் களத்திர தோஷம் ஏற்படும். சுக்கிரன் நீசம் (அ)பகை கிரகத்தோடு இருப்பின் களத்திர தோஷம் ஏற்படும். லக்னாதிபதி கேந்திரத்தில் அமைந்து சுக்கிரன் 2ல் இருந்தால் உரிய காலத்தில் திருமணம் நடைபெறும். சுக்கிரனுக்கு ஏழாம் வீட்டில் செவ் வாய்- ராகு இருப்பின் கலப்பு திருமணம் ஏற்படும் அல்லது மற்றொரு பெண்ணுடன் உறவு வைத்திருப்பார்.

இந்த ஏழாம் இடம், ஏழாமிடத்ததிபதி வலுக்குறைந்து,ஒன்பதாம் இடம் ஒன்பதாம் அதிபதி அதிக வலுப்பெற ஜாதகனுக்கு இருதார அமைப்பு ஏற்படும். பெண்கள் ஜாதகத்தில் ஏழாமிடம், ஏழாமிடத்து அதிபதி வலுத்து ,லக்னாதிபதி,ஏழாம் அதிபதியை காட்டிலும் வலுக்குறைந்து காணப்பட்டால் மனைவியை கண்கலங்காது காப்பாற்றும் கணவன் அமைவார். ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன்+செவ்வாய் சேர்ந்து ஏழாம் பாவத்தில் பாவ ராசியில் இருந்து பாவத்தன்மை அடைய, அந்த ஜாதகன் விதவையை மணம் புரிந்து கொள்வான்.

சுக்கிரனுடன் இணையும் கிரகத்தைக் கொண்டு, வரும் மனைவியின் குணத்தை அறியலாம். ஜாதகத்தில் சுக்கிரன் – குரு, இணைந்திருந்தால் மனைவி பக்திமான், தயாள குணமுடையவள். சுக்கிரன் – புதன் சேர்ந்திருப்பின், புத்திசாலி, கல்விமான், திறமைசாலியாக இருப்பாள்.

சுக்கிரன் – சந்திரன் சேர்க்கை, குணவதி, காம உணர்ச்சி மிக்கவள், தாம்பத்தியத்தில் அதிக ஈடு உடையவள். சுக்கிரன் – சூரியன் இணைவு, கோப குணமுள்ளவள், மூர்க்கத்தனமுள்ளவள், சதா சர்வகாலமும் குற்றம் கண்டு பிடிப்பவள். சுக்கிரன் – செவ்வாய் சேர்க்கை, பிடிவாதக்காரி, காம உணர்ச்சி மிக்கவள்.

லக்னாதிபதியைக் காட்டிலும், ஏழாம் அதிபதி அதிக வலுப்பெற்றால் ,வீட்டில் மனைவியின் கையே ஓங்கியிருக்கும்.ஜாதகன் நாட்டிற்கே ராஜாவானாலும்,வீட்டில் மனைவியிடம் இவரது அதிகாரம் செல்லுபடியாகாது.ஏழாம் அதிபதி வலுக்குறைந்து லக்னாதிபதி அதிபலம் பெற மனைவி ஜாதகனின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பார். என்ன உடனே உங்க ஜாதகத்தில 7ஆம் இடம் எப்படியிருக்கு பார்க்க கிளம்பிட்டீங்களா?.

English summary
There are many aspects of life that are predicted by 7th house. They choose partners who are well placed and have a position in society.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X